ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Go down

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்) Empty உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Post by kirikasan Mon Jul 02, 2012 2:42 pm

ஆடுமுலகில் அரனே ஏனோ
அரவம் நீ படைத்தாய்
தேடும் அரவம் தீண்டத் தீங்காய்
தேகந்தான் படைத்தாய்
பாடும் குயிலும் படைத்தே ஏனோ
பருந்தும் நீசெய்தாய்
நாடும் வாழ்வில் நலிவும் கொள்ளப்
பொலிவும்நேர் வைத்தாய்

கூடும்வாழ்வும் கொண்டோர் நாட்டில்
குடிகள் பலசெய்தாய்
சூடும் குளிரும் உள்ளே வைத்தாய்
சுட்டும் அழி என்றாய்
வீடும் மனையும்இல்லா வாழும்
விளைவும் தந்தவனே
கேடும் துன்பம் செய்யச் சிலரில்
கொல்லும் குணமீந்தாய்

காடும் விலங்கும் படைத்தே போலக்
காண மாந்தரையும்
ஓடும் மானின் அழகும் துள்ளல்
உள்ளோர் தமையீந்து
நாடும் இச்சைகொண்டே கொல்ல
நரிகள் கொடுஞ்சிங்கம்
சாடும் வகையில் செய்தேஅதனால்
சாரும் துயரீந்தாய்

மலரும் பூவின் வாசம் தென்றல்
மழையின் தூறலென
புலரும் பொழுதும் பறவை, கீதம்
பகலும் வானிலெழ
விலகும் அனலும் விரையும் இருளும்
விண்ணில் நிலவென்றே
பலதும்செய்தாய் பாவத் தோற்றம்
மனிதம் ஏன் செய்தாய்?

உலகை மட்டும் படைத்தாலென்ன
உள்ளம் மகிழாதா
கலகம்காணாக் கண்கள் தூக்கம்
கொள்ளப் பெரும் பாடா
நலமொன்றாம் நல்லுலகில் பாவை
நளினச்சிலையாக
நரம்பும் சூடும் உயிரும் இல்லா
நரனைச் செய்தாலென்

ஆளும் வகையில் அறமும் இன்பம்
அதிகம் பெருத்தாலும்
வாழும் இயற்கைச் சூழல் கொண்டோர்
வனப்பில் சிறந்தாலே
தாழும் சொர்க்கம், தகமைகூடி
தரணிக் கெழில் வண்ணம்
மீழும் உயர்வைக்கொள்ளுமென்றே
மேனி படைத்தாய் நீ

பட்டுப் பூவும் பனிநீர் சிந்தப்
படரும் இளங் காற்றும்
தொட்டுச் செல்லச் செய்தாய்நீயே
தோன்றும் புயலென்று
வெட்டிக் கொலையும் வீரிட்டலற
வேறொர் இனம்செய்து
குட்டுப் பட்டே கதறும் பாவக்
குணமும் செய்தாயே

பாடும் துன்பப் பட்டே அழியப்
பாரில் ஓரினமாய்
பேடும் பிள்ளை பெரிதோர் இல்லம்
பேசும் தமிழ் என்றே
கோடும் எல்லை இல்லாக் கொலைகள்
கொள்ளும் வகை செய்தாய்
ஓடும் குருதி உடலும் சாகும்
உணர்வும் இனிதாமோ


Last edited by kirikasan on Mon Jul 02, 2012 3:05 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்) Empty Re: உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Post by kirikasan Mon Jul 02, 2012 2:48 pm

கவிதை 2
தமிழின் பெருமை

சிங்கார வண்ணத் தமிழமுதே எங்கள்
சிந்தை தனுக்கின்பம் தாரமுதே
சங்காய் மிளிர் வெண்மைத் தூய்மையதே- நினைச்
சார்ந்தோர் கவித்துவம் மேலெழவே
எங்கும் புகழ்மணம் வாசமெழ - வந்த
எங்களின் பொங்கும் தமிழ் அமுதாம்
தொங்கும் மணிச்சுடர் தீபமென்றே நீயும்
திக்கெங்கும் பொன்னொளி காட்டிநிற்க

மங்காப் புகழ் உனை மாவுலகில் - என்றும்
மாறாக் கதிரென ஆக்கிவைக்கும்
செங்காய் பழுத்துக் கனிவதன்ன - கவி
சொல்வார் மனங்கள் கனிந்திருக்க
தங்காய் என்றும்நல்ல பாவலர்கள் - நின
தாக்கிப் பெரும் மணி மாகவிஞர்
பொங்காய் எனப் பல பாப் புனைந்து - என்றும்
பாலொடுதேனினி பாகு தர

மங்கை மடிகொண்ட மாதேவனின் -முடி
மேலிருக்கும் பொன்னை நேர்நிலவை
எங்கே தொடுவே னென்றே உயர்ந்த - மலை
என்றே உயர்ந்திட வாழ்த்து கின்றோம்
கங்கை குளித்த குளிரு ணர்வும் - அலை
கொண்டே தெளிக்கும் கடல்விரிவும்
தெங்கின் குணத்தொடு கொண்டதாகம் - தனை
தீர்க்கும் கவிவண்ணத் தாய் நீயன்றோ
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்) Empty Re: உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Post by kirikasan Mon Jul 02, 2012 3:04 pm

உதை பந்தாட்டம்

ஒருபந்தை ஈர்பத்துப் பேர்கள் சூழ்ந்து
ஓடிக்கால் கொண்டேதான் உதைத்துத் தள்ள
’விர்’ரென்று பந்ததோடி வானில் ஏறும்
வேகத்திலோடிப் பின்வீழும்போதில்
திரும்பிடத் தலைகொண்டு இடித்து வீழ்த்தி
தானும்வீழ்ந் துருண்டான் அக்கருமவீரன்
கருங்கல்லா யிருப்பின்கால் கொண்டே பந்தை
கணமேனும் உதைபோடக் கருதுவாரோ**

**** (இது கூறுவது.)
- (தருமமோ மென்பந்தைபோலே நின்றால்
- தம்பிபார் உன்னையும் உதைப்பர் வாழ்வில்
- இருந்தவன் எதிரியும் வெறுங்கை யானால்
- இன்றுபோய் நாளைவா என்றே கூறி
- அருந்துவா விருந்தென்று அழிவின் எதிரி
- அகம்வந்தால் கூடத்தான் கருணைகாட்டி
- இருந்துபோ என்கின்ற இதயம்தன்னை
- இல்லையென் றாக்கவும் எதிரிக் கெளிதே)
****
ஒருபந்துக் காகத்தான் ஆசைப்பட்டு
உன்மத்தம் கொண்டோடி மோதுகின்றார்
வருந்தியே ஒருமன்னன் வாங்கித்தந்தான்
வசதிக்குப் பிடியொருவர்க் கொருபந் தென்று!
இருந்தே நான் இதுபோலும் காட்சி கண்டே
இத்தனையோர் ஆவேசம் மோதிக்கொண்டார்
மருமம் தானறியேன் இம்மனிதர் சண்டை
மாவுலகும் கண்டுவியந்தாடும் ஒன்றாம்

அடியென்றார் இடியென்றார் ஆகா என்றார்
அத்தனையும் சரியில்லை அடடா என்றார்
கொடிகொண்டார் கூத்தாடிக் கொட்டும் மேளம்
குறிவண்ணம் முகமீதில் பூசிக்கொண்டார்
நடிப்பென்றார் நாடென்றார் மைதானத்தில்
நடைப்பெற்ற மோதல்கண் டொருவன்வீழ
துடித்தங்கே பட்ட அவன் துன்பம் நோக்கி
துவண்டனன் யான் பின்னே சே..விளையாட்டென்றே

ஓடித்தான் பறித்தனர் ஒருவன்பொருளை
ஒடுங்கத்தான் உதைத்தனராம்உரிமைகொள்ள
நாடித்தான் ஏய்த்தொருவன் பந்தை மீட்டும்
நால்வர்க்கு இடையூடே நெளிந்துஓடி
தேடித்தான் அலைந்தனன் திரும்பிவீழ்ந்து
தலையைத்தான் பிடித்திடத் தகுமோ என்று
பாடித்தான் ஆட்டங்கள் போடுமந்தப்
பரிதாப விளையாட்டைப் பார்த்துகொண்டேன்

கூடித்தான் கும்மாளம் போட்டே நாட்டில்
கொன்றேதான் உயிரென்னும் பந்தைவானில்
வேடிக்கை விதிஎன்னும் கால்கள் கொண்டு
விளையாடி உதைக்கின்ற தேசமொன்றை
தேடித்தான் பிறவியிது கொண்டேனன்றோ
தெருவீதி தெரியாத உலகப் பந்தில்
வாடித்தான் கிடக்கின்ற வாழ்வுகாணீர்
வலிகொண்டு உதைவாங்கும் வாழ்வும்போமோ

***************************

வருந்தியே ஒருமன்னன் வாங்கித்தந்தான்
வசதிக்குப் பிடியொருவர்க் கொருபந் தென்று!

என்பது ஒரு நகைச்சுவை கதையை குறிப்பிடுவது. அது
உதைபந்தாட்டம் என்பது என்னவென்று தெரியாத ஒருநாட்டின் அரசனை விருந்தாளியாக இன்னொரு நாட்டு மன்னன் அழைத்தான். இரண்டு அரசர்களும் அன்று நடக்கும் உதைபந்தட்டப் போட்டிக்கு அரச பார்வையாளராக பார்க்கச்சென்றார்கள்.

விளையாட்டு நடந்துகொண்டிருக்கும் பொது இந்த முதல் முறையாக பார்வையிடும் அரசனை மற்ற அரசன் பார்த்து, “ எப்படி எங்கள் நாட்டு உதைபந்தாட்ட விளையாட்டு. நன்றயிருகிறதா” என்றாராம். பதில் சொன்னான் மற்றைய அரசன்.
”விளையாட்டு நன்றாக இருக்கிறதுதான் ஆனால் ஏன் ஒரு பந்துக்காக எல்லோரும் சண்டை பிடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பந்து வீதம் வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?
சண்டை பிடிக்காமல் விளையாடுவார்களே! அதுதான் புரியவில்லை” என்றானாம்


Last edited by kirikasan on Mon Jul 02, 2012 3:12 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்) Empty Re: உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Post by kirikasan Mon Jul 02, 2012 3:06 pm

கவிதை 4
கண்ணீர்

நான் என்பதேனிங்கு வந்துது - இந்த
நாளில் ஏன் பூமியைக் கண்டது
தானே எதை யெண்ணி வாடுது - அது
தண்ணீரில் மீனென ஆகுது
வானெண்ணி நீரிடை துள்ளுது - அலை
வாரிக் கரையினில் போடுது
தானோ அலை விட்டுப்போகுது - மீனும்
தண்ணீரை எண்ணித் தவிக்குது

வானரமாய் உள்ளம் ஆகுதோ - அது
வாலைவிட் டாப் பிழுத்ததோ
கூனென்பதா யுள்ளம் நோகுமோ - அது
கொள்கையில் கொப்புகள் தாவுமோ
தேனெனத் தின்ன இனிக்குமோ - இல்லை
தின்னத் திகட்டிக் கசக்குமோ
ஏன் இன்று எட்டாப்பழமிதோ - வாழ்வு
இப்படித்தானும் புளிக்குமோ

வான்நிறைந்த விண்ணின் மீன்களாம் -அவை
வந்து ஜொலித்திடக் காத்திட
கானக மின்மினி யாவதேன் - அதைக்
கண்ட மனம் ஏங்கலாவதேன்
மானின் விழிகொண்டு காணவா - உளம்
மல்லிகையாய் வாடிப் போகவா
தானெனத் தந்தன ஆடவா - இல்லை
தந்ததை மீண்டும் கொண்டோடுமா

மேன்மையில் என்னைப் படுத்துமோ - இல்லை
மேனியைத் தள்ளி கிடத்துமோ
ஊனுடையுள்ள உணர்வுகள் - என்னை
ஊர்வலம் கொண்டு நடத்துமோ
வானவில்லின் நிறம்கொள்ளுமோ - அன்றி
வாசலில் குப்புற வீழ்த்துமோ
ஆனவிதி சொல்வதென்னடா - அந்த
ஆனை மிதிக்குமோர் புல்லடா

வீணென்ப தெல்லை கடக்குது - அது
வீழ்த்திட மண்ணிடை தேயுது
காணெனக் கூறிக் கலங்குது - அதன்
காட்சியெல்லாம் கண் மறைக்குது
பெண்ணெனின் பேயும் இரங்குமோ - விலை
பேசிப் பொய்தன்னையும் விற்குமோ
பூணும் பொன்னாடையும் போகட்டும் - மீண்டும்
புன்னகை யைஇதழ் காணட்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்) Empty Re: உயிரில்லா மனிதம்??? (4 கவிதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum