ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Wed Jul 04, 2012 11:26 pm

2. "வேசித்தன ஆவி அல்லது இச்சையின் ஆவிகள்"

கீழே உள்ள வேத வசனங்கள் வேசித்தன ஆவிகளின் கிரியைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

"என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்கு செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள். வேசித்தன ஆவி அவர்களை வழி தப்பித் திரியப் பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோர மார்க்கம் போனார்கள்." (ஓசியா: 4:12).

"அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்த மாட்டார்கள். வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்..." (ஓசியா: 5:4).

வேசித்தன ஆவிகள் ஜனங்களை சரியான தேவனுடைய வழியிலிருந்து திசை திரப்பி, தவறான வழியில் நடக்கச் செய்வதால் மனிதர் முறைகேடாக அலைந்து திரிகின்றனர். இந்த வேசித்தன ஆவி மனிதரின் உள்ளத்திற்குள் குடிபுகுந்து வசிக்கும் தன்மையுடையதென்று மேலே உள்ள வேத வசனங்கள் தெரிவிக்கின்றன.

வேசித்தன ஆவியால் பீடிக்கப்பட்டோர் தேவனை அறிய விரும்புவதில்லை. இவர்களுக்கு தெய்வ பயம் ஏற்படுவதுமில்லை. தங்கள் மனதும் மாமிசமும் விரும்புவதுபோல் ஜீவிப்பார்கள்.

அசுத்தமம் - கேடானதுமான சிந்தைகளை மனதில் தூண்டி, அதன் பலனாக தவிர்க்க முடியாத சிற்றின்ப உணர்ச்சிகளையும், முறைகேடான நடத்தைகளையும், மிருகத்தனமான வெறிச் செயல்களையும் மனிதரில் உண்டாக்கி, அவர்களை அசுத்தமும் ஆபாசமுமான வழிகளில் நடக்கவும் - வார்த்தைகளைப் பேசவும் கேட்டு மகிழவும் செய்வது இவ்வித இச்சையின் ஆவிகளே ஆகும்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Wed Jul 04, 2012 11:49 pm

விபச்சாரம் - வேசித்தனம் - காம விகாரம் - மோகம் - துர் இச்சை ஆகியவைகளால் இவர்கள் மனம் நிரப்பப்படுவதால், தகாத விதங்களில் இன்பம் பெற இவர்கள் இரவு பகலாக ஓடித் திரிகின்றனர். இவர்களுக்குள்ளே இருக்கும் ஆவிகள் தங்கள் ஆசை இச்சைகளை நிறைவேற்ற இவர்களுடைய மனதையும் சரீரத்தையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தி உபயோகிக்கின்றன என்ற உண்மையை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் இந்த இச்சையின் ஆவிகள் மனிதருடைய சரீரத்திற்கு வெளியே இருந்து கொண்டு உணர்ச்சிகளின் மூலம் அநேக தகாத ஆசைகளை தூண்டுகின்றன. இவ்வித உணர்ச்சிகளை மனிதரில் தூண்டுவதற்கு அநெக மாயையான இன்பங்களை சாத்தான் உலகில் உண்டாக்கி வைத்திருக்கிறான். சினிமா, நாடகம், கூத்து, ஆடல், பாடல், குடிவெறி, லாகிரி போதை வஸ்துக்கள் இவைகளை உபயோகித்து இன்பம் அனுபவிக்கும்படி மனிதருடைய உணர்ச்சிகளை இச்சையின் ஆவிகள் தூண்டுகின்றன.

சாதாரணமாக இவைகளை அனுபவித்து , இவ்வித பழக்கவழக்கங்களை தங்கள் வாழ்ககையில் ஏற்படுத்தும்பொழுது, வெளியில் இருந்து கிரியை செய்த "இச்சையின் ஆவிகள்" அவர்களுக்குள்ளே புகுந்து விடுவதால் நாளடைவில் இந்த பொல்லாத இச்சையின் ஆவிகளின் விருப்பத்திற்கு முற்றிலும் அடிமைகளாக்கபடுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்கள் ஜீவியத்தில் அநேகவிதமான தகாத - தீமையான - முறைகேடான சம்பவங்கள் நிகழ ஏதுவாகிறது. பகை - விரோதம் - இச்சை ரோகங்கள் - கொடிய வியாதிகள் - கடன் - தரித்திரம் - கற்பழிப்பு - கொலை பாதகங்கள் ஆகிய இவை அனைத்தும் அதன் காரணமேயாகும்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 6:06 am

இவ்வித வேசித்தன ஆவிகளால் பயங்கரமான நிலைக்குள்ளானவர் பலர். தேவனை அறியாத மக்களின் வாழ்வில் கீழ்க்கண்ட வேத வசனங்கள் நிறைவேறுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள்அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?" (யாக்கோபு: 4:1).

"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் சிருஷ்டியை தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். ஆமென்."

"இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்."

"அப்படியே ஆண்களும் பெண்களை சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்." (ரோமர்: 1:25-27).

தேவ கோபத்திற்குள்ளாகி, அக்கினியாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்ட சோதோம் கொமாரா பட்டணங்களில் மேற்கூறிய முறைகேடான இச்சையினால் உண்டாகும் பாவங்கள் வாலிபர் முதல் வயோதிபர் வரை இருந்ததாக ஆதியாகமம்: 19:4,5 வசனங்களில் வாசிக்கிறோம்.

இன்றுள்ள இந்த உலகத்தின் கடைசி நாட்களிலும் இச்சையின் ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஜனங்கள் அதே விதமான பாவங்களில் நிறைந்திருப்பார்கள் என்று இயேசுவும் கூறியுள்ளார். (லூக்கா: 17:28,30).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 6:25 am

மனித வாழ்விற்கு இன்றியமையாத அநேக தெய்வீக ஆசீர்வாதங்களுண்டு. சரீர சுகம் - ஐசுவரியம் - ஆகாரம் - நல்ல உடை - கணவன் மனைவி - இல்லற வாழ்வு - இளைப்பாறுதல் ஆகிய இவைகள் அனைத்தும் அவசியமே. ஆனால், சுகபோகமாக ஜீவிப்பதும் - பண ஆசையும் - தகாத ஆண்பெண் உறவுகளும் - சோம்பேறித்தனமான ஜீவியமும் தேவனால் அனுமதிக்கப்பட்டவைகள் அல்ல என்பதையும் அவைகள் தகுதியானவைகள் அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தகாத முறையில் அனுபவிக்கப்படும் எந்த இன்பமும் வேசித்தன ஆவியின் கிரியையை வெளிப்படத்தும், ஒழுக்கக் குறைவுடன் நடக்கும் வழக்கமுடையவர்கள் இந்த இச்சையின் ஆவிகள் இலகுவாக ஆட்கொள்ள முடியும்.

ஜாதகம் - ஜோதிடம் - கைரேகை - குறி கேட்குதல் போன்ற பழக்கவழக்கங்களை உடையவர்கள் கூட இவ்வித இச்சையின் ஆவிகளால் பீடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த பொல்லாத வேசித்தன ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் தங்கள் பெற்றோரை - பிள்ளைகளை - மனைவியை - புருசரை விட்டுவிட்டு மதியீனமாக அலைந்து திரிந்து, அவமானத்தின் சின்னங்களாக காட்சியளிக்கிறார்கள்!

தேவனுக்குப் பயந்து, அவருக்குப் பிரியமாய் நடக்க விரும்பாதவர்களையும் இந்த ஆவிகள் இலகுவாக கவர்ந்து கொள்ளும்.

தங்கள் வேலைகளில், கடமைகளில், உண்மையற்ற தேவ பிள்ளைகளையும் - ஊழியர்களையும் கூட வேசித்தன அவி பற்றிக் கொண்டால் ஆச்சரியமில்லை!

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசி மார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டு கொள்ளும்படி அறிந்து..." (1தெசலோனிக்கேயர்: 4:3-5).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 6:44 am

கண்களை இச்சைக்கு அனுமதிக்கும்போது இச்சையின் ஆவிகள் உட்புகுந்து விடக்கூடும். அப்பொழுது அந்த மனிதரின் சரீரமும், ஜீவியமும் இருளடையும்.

"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்" (மத்தேயு: 5:28).

ஆதியில் ஏதேன் தோட்டத்தில். விலக்கப்பட்ட கனியை ஏவாள் பார்த்து, அது பார்வைக்கு இன்பமம்...இச்சிக்கப்பட தக்கதுமாயிருக்கிறதென்று கண்டு, இச்சித்து சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள்." (ஆதியாகமம்: 3:16; 2கொரிந்தியர்: 11:3).

பராக்கிரமசாலியாகிய சிம்சோன் தன்தகப்பன் வார்த்தைகளை மதியாமல் தன் இஷ்டம்போல் பெலிஸ்தியரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணை தன் கண்களுக்கு பிரியமானவள் என்று கண்டு அவளை விவாகம் பண்ண ஒழுங்கு செய்தான். ஆயினும் அவளோ வேறொருவனுக்கு கொடுக்கப்பட்டாள் (நியாயாதிபதிகள்: 14:1-3 - 3:20).

"பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்" (உபாகமம்: 28:30) என்ற வசனத்தின்படி சாபம் அவனைப் பிடித்தது!

அவ்விதமே, ஏசா தன் பசி நேரத்தில் தன் கண்களைக் கவர்ந்த சிவப்பான கூழை விரும்பி தன் சேஷ்ட புத்திர பாகத்தை இழந்தான்.

தங்களுக்குப் பிரியமானவைகளை எல்லாம் விரும்புவதும் தகுதியற்றவர்களை அடைய முயற்சி செய்வதும் தவறு. இவ்விதத் தவறுகளுக்கு இடங் கொடுக்கும்பொழுது இச்சையின் ஆவிகள் மோசம் போக்கும்.

கண்களுக்குப் பிரியமானதாகத் தோன்றினாலும், அவைகள் தேவனுக்குப் பிரியமானவைகள்தானா என்பதை சிந்தித்து பின்பு செயல்படுவது மனிதரின் கடமை.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 7:18 am

தகாத ஆசை இச்சைகளை மனிதரில் உண்டு பண்ணுவதற்கு திவிரமாக இச்சையின் ஆவிகள் உலகமெங்கும் இரவு பகலாக அலைந்து திரிகின்றன.

தன் சகோதரி என்றும் பாராமல் இச்சித்த அம்னோன் கொலையுண்டான் (2சாமுவேல்: 13:1-29).

முப்பது வெள்ளிக் காசை இச்சித்த யூதாஸ் நான்று கொண்டு செத்தான். (மத்தேயு: 27:3-5).

நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் இச்சித்த ஆகான் கல்லெறியுண்டு செத்தான். (யோசுவா: 7:21-26).

பிறனுடைய திராட்சை தோட்டத்தை இச்சித்து சொந்தமாக்க விரும்பிய ஆகாப் ராஜா அவனைக் கொன்று நிலத்தை எடுத்துக் கொண்டான். (1இராஜாக்கள்: 21:1-13).

மேற் கூறியவைகளை கவனித்து நொக்கினால் இச்சையின் ஆவிக்கு இடங் கொடுக்கிறவர்கள் அகால மரணம் அடைகிறவர்களாகவும் தற்கொலை செய்கிறவர்களாகவும் அல்லது கொலை பாதகராகவும் மாறிப் போனதைக் காணலாம். ஆகவே, இச்சையின் ஆவிகளால் பீடிக்கப்படும் மக்கள் பகை - விரோதம் - சண்டை - கொலை - தற்கொலை - விபத்து - ஆகியவைகளுக்கு ஆளாகிறார்கள்.

கர்த்தராகிய இயெசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதின் மூலம் மனிதரின் ஆசைகளும் இச்சைகளும் சிலுவையில் அறையப்படுவதை விசுவாசித்து இச்சையினால் உண்டாகும் கேட்டுக்கு தப்பி இயேசு கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்துக்கு பங்காளிகளாக முடிகிறது" (கலாத்தியர்: 5:24; 2பேதுரு: 1:3,4).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 9:04 am

வேசித்தன ஆவிகள் மனிதரின் விவாகத்துக்கடுத்த காரியங்களில் புகுந்து பலவிதப்பட்ட தாறுமாறுகளை உண்டாக்கி விடுகிறது. மனிதனை தேவன் சிருஷ்டித்த பொழுது, அவன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று கண்டு, ஆணும் பெண்ணுமாக அவர்களை உண்டாக்கினார். (ஆதியாகமம்: 1:27; 21:18).

தேவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒழுங்கு பரிசுத்தமும் கனமுமுள்ளது. (எபிரேயர்: 13:4).

விவாகத்தின் மூலம் புருஷனும் மனைவியுமாக இணைக்கப்படும் தம்பதிகள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக் கூடாதென்றும் (1கொரிந்தியர்: 7:2,5,11,12); ஒருவருக்கொருவர் துரோகம் பண்ணக் கூடாது (மல்கியா: 2:14,15); என்றும் தேவன் தமது வசனங்களின் மூலம் எச்சரித்திருக்கிறார். தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமான குடும்ப வாழ்வை குலைத்து, ஜனங்களை அசுத்தப்படுத்தி, கேட்டுக்குள் வழி நடத்தும் வேலையில் பல அசுத்த ஆவிகள் தீவிரமாக கிரியை செய்து வருகின்றன. வேசித்தன ஆவி, வஞ்சக அவி, அந்திக் கிறிஸ்துவின் ஆவி (ஓசியா: 5:4; 1தீமோத்தேயு: 4:12,2; தானியேல்: 11:37) போன்ற பொல்லாத ஆவிகள் ஒன்று சேர்ந்து இவ்வேலையில் செயல்படுகின்றன.

"மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல" (ஆதியாகமம்: 2:18) என்று தேவன் கூறுகின்றார். ஆனால், வஞ்சிக்கும் ஆவிகள் 'விவாகம் பண்ணாதே" - "விவாகம் பண்ணுவது பாவம்" என்று போதனை செய்யும் என்பதாக (1தீமோத்தேயு: 4:1,2) வசனங்களில் வாசிக்கிறோம்.

விவாகம் பண்ணுவது தவறு என்று கட்டளையிடுவது பிசாசின் உபதேசம். தன்னில் தானே பிரதிஷ்டையுடன் தேவனுக்கு முன்பாக விவாகமின்றி, கர்த்தருக்கென்று ஜீவிக்க முன் வருவது தவறல்ல, இருப்பினும், ஆழமான பிரதிஷ்டையின்றி 'விவாகம் பரிசுத்த ஜீவியத்திற்கு விரோதமானது' என்று போதிக்கிறவர்கள் வஞ்சக ஆவிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்திரிகளின் சிநேகத்தை வெறுப்பது அந்திக் கிறிஸ்துவின் குணாதிசயங்களில் ஒன்றாகும். (தானியேல்: 11:37).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 5:59 pm

விவாகம் செய்து கொண்டவர்களில் சிலர் தங்கள் கணவன் அல்லது மனைவி இரட்சிக்கப்படவில்லை என்று காரணம் கூறி தங்கள் மனைவி அல்லது புருசனை விட்டு பிரிந்து தனித்து ஜீவிக்கின்றனர். தங்களுடைய பரிசுத்த ஜீவியத்திற்காக அப்படி தனித்து வாழ விரும்புகிறார்கள். ஆனால், இதை தேவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அவர்கள் அறிய வேண்டும்.

"சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும் அவனுடனே வாசமாயிருக்க அவளுக்கு சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரியினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால், பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள்." (1கொரிந்தியர்: 7:12-14).

தன் புருஷன் அல்லது மனைவி இரட்சிக்கப்படவில்லை, அல்லது அவிசுவாசி என்ற காரணத்தினால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து தனித்து வாழ அவர்களுக்கு அனுமதியில்லை. (1கொரிந்தியர்: 7:10).

ஒருவேளை புருஷன் மனைவிக்குள் பிரிவினை நேரிட்டால், அவர்கள் தனித்து வாழ வேண்டுமேயன்றி விவாகம் பண்ணவோ வேறு ஒருவருடன் வாழ்க்கை நடத்தவோ அனுமதியில்லை. (1கொரிந்தியர்: 7:11).

தற்காலத்தில் புருஷன் மனைவிக்கிடையில் விவாகரத்து ஒரு சாதாரண காரியமாகிவிட்டது. விவாகரத்து செய்த கொண்டு உடனே வேறு ஒருவரை மணந்து கொள்ளுமளவுக்கு நாகரீகம் முதிர்ந்து விட்டது. இந்த பொல்லாத நாகரீகம் வேசித்தன ஆவியின் கிரியையாகும்.

"எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளை தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபச்சாரம் செய்கிறவனாயிருப்பான்; தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு கூறினார். (மத்தேயு: 19:9).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 6:31 pm

விவாக காரியங்களில் ஆத்திரமும், பதட்டமும் கூடாது. கண்களுக்குப் பிரியமானவைகளையும், உலக மேன்மைகளையும் முக்கியப்படுத்தி, விவாக ஏற்பாடுகளைச் செய்வது பின்பு கேடுண்டாக்கும். தங்கள் மனம்போல் காரியங்களை ஒழுங்கு செய்து விட்டு பின்பு தேவன் மீது பழி சுமத்தும் அநேகர் உண்டு. தேவசித்தம் தேவ ஆலோசனையின்றி தங்கள் விருப்பப்படி, காரியங்களை ஒழுங்கு செய்து விட்டு "இந்த காரியம் கர்த்தரால் வந்தது" என்று விவாக பத்திரிக்கையில் துணிவுடன் அச்சிடுபவர்கள் அநேகர்.

விவாக புருஷன் - மனைவியை, ஏற்ற துணையை ஒழுங்கு செய்யும் பொறுப்பை பெற்றோரும், பிள்ளைகளும் தேவனிடம் ஜெபத்துடன் ஒப்படைத்து முயற்சிக்க வேண்டும்.

"குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்?" (நீதிமொழிகள்: 31:10). "புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு" (நீதிமொழிகள்: 16:14) என்று வேதம் கூறுவதால் குணசாலியான ஒரு பெண்ணை தமது ஈவாக (பரிசாக) தேவன் தமக்குப் பிரியமானவர்களுக்குக் கொடுக்கிறார் என்ற உண்மையும் புலனாகிறது.

பிடிவாதமாக தங்கள் விருப்பம் போல் அழகு, குடும்பம், பணம், பதவி, பட்டம், அந்தஸ்து ஆகியவைகளை மனதில் வைத்து எல்லாம் ஒழுங்கு செய்து விட்டு, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று புகழ்ந்து கொள்வது சத்தியத்திற்கு புறம்பானதும், தன்னைத்தானே வஞ்சிக்கும் செயலுமாகும். இதன் காரணமாக இச்சையின் ஆவிகள் கிரியை செய்ய இடமுண்டாகிறது.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Fri Jul 06, 2012 5:38 pm

பரிசுத்தமும் கனமுமான விவாகத்தின் மூலம் தேவனுக்கு முன்பாக உடன்படிக்கை செய்து கொண்டு ஒருமித்து குடும்பம் நடத்துவதே தேவ ஒழுங்கு. இவ்விதம் ஒழுங்கும் கிரமுமாக தேவனுக்கு முன் உடன்படிக்கை செய்த ஸ்திரி புருசர் இணைந்து வாழ்க்கை நடத்துவதும், இல்லற வாழ்வின் இன்பங்களை அனுபவிப்பதும், தேவனால் அங்கீகரிக்கப்பட்ட பரிசுத்தமான ஏற்பாடாகும்.

ஆனால், இவ்வித முறைகேடான ஐக்கிய உறவுகளின் காரணமாக இன்றைய உலகில், அனாதைக் குழந்தைகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் பெருகி வருகிறது. இதுவும் வேசித்தன ஆவியின் மோசம் போக்கும் செயலாகும்.

தேவ ஒழுங்கிலிருந்து மனிதரை விலகச் செய்து அசுத்தப்படுத்தும் வகையில் வேசித்தன ஆவிகள் கிரியை செய்யும் விதத்தை வாசித்தீர்கள். இச்சையின் ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்வது கூடாத காரியம். அதற்கு பரிசுத்த அவியின் அபிஷேகம் நிறைவுள்ள ஆவிக்குரிய சபையும், பரிசுத்தஆவியின் அபிஷேகம் பெற்ற ஆவிக்குரிய போதகரும் தேவை. அருகாமையில் உள்ள பெந்தேகொஸ்தே சபைகளுக்கு சென்றால், பிரச்சினைகளுக்கு விசேஷித்த ஜெபத்துடன் தக்க ஆலோசனை வழங்குவார்கள்.

சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இயேசுவின் நாமத்தில் நீங்கள் முற்றிலும் விடுதலையாவீர்கள்.

"மேலும் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும் கூடாது." (எபேசியர்: 5:3).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 4 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum