ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

+2
யினியவன்
சார்லஸ் mc
6 posters

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 1:09 am

தேவனுக்கு உழியம் செய்கிறவர்கள் தங்கள் ஊழியத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் மட்டும் கண்டு திருப்தியடைந்து விடாமல், தன்னில் தேவனால் அங்கீகரிக்கப்படக்கூடிய பரிசுத்தம் காணப்படுகிறதா என்பதைப் பரிசோதித்து, மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். பரிசுத்தத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படாத ஊழியங்கள் மூலம் வஞ்சக ஆவிகள் கிரியை செய்ய முடியும்.

ஜனங்கள் தேவனிடம் திரும்பவும், இருளின் அதிகாரத்தை விட்டு ஒளியின் ராஜ்யத்துக்குட்படுத்தவும், தேவ நாமம் மகிமைப்படவுமே தேவனுடைய கிருபையின் வரங்களை நாம் உபயோகிக்க வேண்டும்.

ஜனங்களை தங்கள் வசமாக திருப்பும் நோக்கத்துடனும், தேவனுடைய ஊழியத்தை ஆதாயத் தொழிலாக்கும் நோக்கத்துடனும் செயல்படும் ஊழியங்கள் முடிவில் ஆபத்துக்கும், தேவ கோபத்துக்கும் ஆளாகும்.

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் கண்ட ஜனங்கள், 'தேவனை மகிமைப்படுத்தினார்கள்' என்பதாக மாற்கு: 7:14-16; லூக்கா: 18:42,43 வசனங்களில் வாசிக்கிறோம்.

பிசாசின் சக்தியும், அவனுடைய பொய்யான அற்புதங்களும் தேவாதி தேவனுடைய சர்வ வல்லமைக்கு முன்பாக ஒன்றுமில்லாதவைகளே!

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 1:19 am

பவுல் அப்போஸ்தலன் மூலமாக நடந்த அற்புதங்களை அங்கிருந்த மந்திரவாதிகள் கண்டபோது, தங்களுடைய மந்திர சக்திகள் ஒன்றுமில்லை என்று அறிந்து, தங்கள் விலையுயர்ந்த புத்தகங்கள் அனைத்தையும் சுட்டெரித்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.

"மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டு வந்து, எல்லாருக்கும் முன்பாக அவைகளைச் சுட்டெரித்தார்கள். அவைகளின் கிரயத்தை தொகை பார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ிக்காசாகக் கண்டார்கள்" (அப்போஸ்தலர்: 19:19).

அவ்விதமே, எகிப்து தேசத்தில் இருந்த மந்திரவாதிகளும், தேவனுடைய மனிதனாகிய மோசே என்பவரால் செய்யப்பட்ட மெய்யான அற்புதங்களைக் கண்டு, பிரமித்து, பயந்து, 'இது தேவனுடைய விரல்' (யாத்திராகமம்: 8:16-19) என்றார்கள்.

அதுமட்டுமல்ல, எகிப்தின் "மந்திரவாதிகள் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது" (யாத்திராகமம்: 9:11) என்று வேதம் கூறுகிறது.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 6:54 am

இந்தக் கடைசி நாட்களில், இவ்வித வஞ்சக ஆவிகள் மிக வல்லமையாகச் செயல்படும் என்று, இயேசு கிறிஸ்து எச்சரித்திருக்கிறார்.

"ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைக் கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" (மாற்கு: 13:56).

"அப்பொழுது, இதோ இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். இதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்" (மத்தேயு: 24:23-25).

தேவனுடைய மகத்துவமான சேவை செய்யும்படி, தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள் , மேய்ப்பர்கள், விசுவாச சகோதரர்கள் ஆகியவர்களுக்குப் பதில் வெட்டாக (Counterfeit), கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள போதகர்கள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளச் சகோதரர்களை சாத்தான் ஏற்படுத்துவான்! அவர்களைக் கொண்டு, கள்ளத் தீர்க்தரிசனம், கள்ளப் போதகம், பொய்யான அற்புதங்களைச் செய்து ஜனங்களை மோசம் போக்குவான்.

தேவனுடைய அன்பை உணராமலும், அறிந்து கொள்ள விரும்பாமலும், சத்திய வேதத்தின் ஆரோக்கியமான உபதேசங்களுக்கு செவிகொடுக்கவும், கீழ்படியவும் மனமற்றுப் போகிறவர்கள், இவ்வித வஞ்சக ஆவிகளின் நசல் கொண்ட உபதேசங்களால் பிடிபட்டு, வஞ்சிக்கப்படுவார்கள்.

இவர்கள் சாத்தானின் ஆவிகளால் செய்யப்படும் பொய்யான அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டு, மதிமயங்கி, அவைகளை நம்பி, மோசம் போக்கப்பட்டு, முடிவில் நித்திய தண்டனைக்குள்ளாவார்கள்.

இனிவரும் நாட்களில், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட விசுவாசிகளையும் வஞ்சிக்கத்தக்கதான பொய்யான அற்புதங்களைச் செய்யும் ஆவிகளைக் கொண்டு ஊழியம் செய்யும் கள்ள ஊழியர்கள் எழும்புவார்கள். அப்படிப்பட்டவர்களை உலகம் "தெய்வீக அவதாரம்" என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்படிப்பட்டவர்களைப் பார்க்க முதலாய் நீங்கள் புறப்படாதிருங்கள் (மத்தேயு: 27:29) என்று இயேசு எச்சரித்திருக்கிறார்.

ஆகையால், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், "ஆரோக்கியமான உபதேசத்தில்" நிலைத்திருப்பது மிகமிக அவசியம். (1தீமோத்தேயு: 4:3; 6:3-5).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 8:06 am

"ஜாதகமும் உங்கள் எதிர்காலமும்"

இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்வில், போராட்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படும்போது, வரும் காலம் குறித்த கவலைகளால் பாதிக்கப்படுவோர், தங்கள் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

குழந்தை பிறந்தவுடனே தானே அக்குழந்தையின் பலாபலன்களை ஜோதிடர் மூலம் ஜாதகமாகக் கணிதம் செய்து, எழுதிப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஜாதக பலாபலன்களை அறிந்து, செயல்படுவது, நம் மக்களிடையே வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்வித நம்பிக்கையின் காரணத்தால், சிறுவர்களை பள்ளியில் சேர்க்கும்பொழுதும், தொழில் விஷயங்களில் ஈடுபடும்பொழுதும், வியாபார ஒப்பந்தங்கள் செய்கையிலும், திருமண ஒழுங்குகளைச் செய்யும் போதும், வீட்டு மனை துவக்கம், கிணறு தோண்டுதல், வீடு பிரதிஷ்டை சமயங்களிலும் மற்றும் குடும்பத்தில் தொல்லைகள், போராட்டங்கள், கஷ்டங்கள், வியாதிகள் ஏற்படும் பொழுதும், தங்கள் எதிர்காலம் குறித்த நிலவரங்கள் அறிந்து கொள்ள மக்கள் தீவிரிக்கின்றனர்.

எதிர்காலம் குறித்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள பலவித முறைகள் கையாளப்படுகின்றன.

"ஜோதிடம் - கை ரேகை - பட்சி சாஸ்திரம் - குறிகேட்டல் - நாடி ஜோதிடம் - அஞ்சனம் பார்க்குதல்" இவை போன்ற முறைகளை பலர் நாடுகின்றனர். இவை தவிர ஆரூடம் - சாமுத்திரிகாலட்சணம் - பெயர் ராசி - அதிர்ஷ்ட எண்கள் - நாள், நேரம் பார்க்குதல் - சகுனம் பார்க்குதல் - தொடு குறி சாஸ்திரம் - பல்லி சொல்லின் பலாபலன்களை அறிதல் ஆகிய முறைகளும் நடைமுறையில் சாதாரணமாக அனுசரிக்கப்படுகிறது.

சிலர் தூங்கி விழித்தவுடன் பத்திரிக்கைகளில் வெளியாகும் அனுதின ஜோதிட பலன்களைப் பார்க்காமல் வேறு வேலைகளைச் செய்வதில்லை!

பத்திரிக்கைகளும்கூட, பத்திரிக்கை விற்பனையைப் பெருக்கும்படி, ராசிபலன் - ஜோதிட பலன்களை தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கின்றனர். தொலைக்காட்சிகளும் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி வியாபாரத்தை பெருக்க இதே நிலையை பின்பற்றுகின்றனர்.

இவைதவிர, தினமும் எந்தெந்த நேரங்களில் எவைகளைச் செய்யலாம், எவைகளைச் செய்யக் கூடாதென்றும் எந்தெந்த திசைகளில் பிரயாணம் செய்யலாம் அல்லது செய்யக் கூடாதென்றும், நாட்காட்டிகளில் குறிப்பிடப்படுவதால், பெரும்பாலோர் அனுதினமும் இவைகளை அனுசரித்தே செயல்படுகின்றனர்.

இவைகளோடு அதிர்ஷ்ட நிறங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட கற்கள் இவைகளையும் பலர் உபயோகிக்கின்றனர்.

இன்னும் சிலர் தகடுகள், தாயத்துகள், உலோக வளையங்கள், கறுப்பு நூல்கள் ஆகியவைகளையும் அணிந்து கொள்கின்றனர்.

மனிதனை உருவாக்கினவர் தேவன். தாயின் கர்ப்பத்தில் உருவாகு முன்பே தேவன் மனிதனின் சகல காரியங்களையும் அறிவார். நம் மனதில் எழும்பும் எண்ணங்கள் சிந்தைகள், நினைவுகளையும் கூட அவர் அறிய முடியும். நாம் வாய் திறந்து பேசுமுன்பே, நாம் சொல்லப் போவது இன்னதென்பது அவருக்குத் தெரியும். (சங்கீதம்: 139:4). நமது போக்கு, வரத்து, உட்காருதல், எழுந்திருத்தல், மனதில் உள்ள இரகசியங்களையும் தேவன் அறிகிறார். (சங்கீதம்: 139:2).

"தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இரதயத்தை அறிகிறவர்" (2நாளாகமம்: 6:31).

மனித இருதயத்தின் அந்தரங்க நினைவுகளையோ இரகசியங்களையோ, மேற்கூறிய சாஸ்திரங்களைக் கொண்டு யாரும் கூறிவிட முடியாது.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 8:19 am

நேபுகாத் நேச்சார் என்ற அரசன் ஒரு நாள் ஒரு சொப்பனம் கண்டு கலக்கம் அடைந்தான். சொப்பனத்தின் அர்த்தத்தை அறிவிக்கக்கூடிய உண்மையான மனிதரைக் கண்டு பிடிக்கும்படிக்கு, ராஜா தன் நாட்டில் உள்ள ஞானிகளைத் தன்னிடம் வரவழைத்தான்.

அவர்களுக்குள் சாஸ்திரிகள், ஜோதிடர்கள், கல்தேயர், குறி சொல்லுகிறவர்கள் ஆகியோர் இருந்தனர். ராஜா அவர்களைப் பார்த்து, "சொப்பனத்தின் அர்த்தத்தை மட்டுமல்ல, தான் கண்ட சொப்பனத்தையும் நீங்கள் சொல்ல வேண்டும்".

பொய்யும் புரட்டுமான விசேஷத்தை நீங்கள் என்னிடம் கூறாதபடிக்கு சொப்பனத்தை முதலில் எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதன் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக் கூடுமென்று அறிந்து கொள்வேன்" (தானியேல்: 2:2-9).

"சொப்பனத்தை அறிவிக்காமல் போனால், துண்டித்துப் போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களமாக்கப்படும் என்றான்" (தானியேல்: 2:5).

"இதைக் கேட்ட சாஸ்திரிகள், ஜோதிடர், குறி சொல்லுவோர் அனைவரும், 'ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாமிசமாயிருக்கிறவர்களோடே வாசம் பண்ணாத தேவர்களே ஒழிய, இராஜா சமுகத்தில் அதை அறிந்தவர்கள் ஒருவரும் இல்லை' என்றார்கள்". (தானியேல்: 2:11).

இவர்கனுக்கு கொலை தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த தேவனுடைய மனிதனாகிய தானியேல், தன் தோழரோடு தேவனை நோக்கி விண்ணப்பித்தபோது, சர்வ வல்லமையுள்ள தேவன், அன்று இரவு தானியேலுக்கு இராஜாவின் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்தினார்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 8:35 am

ஆகவே, தானியேல் தேவனைப் புகழ்ந்து கூறியதாவது:

"தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும், அவருக்கே உரியது" (தானியேல்: 2:20).

"அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர். இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்" (தானியேல்: 2:21).

"அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர், இரளில் இரக்கிறதை அவர் அறிவர்; அவர் வெளிச்சம் அவரிடத்தில் தங்கும் என்றான்" (தானியேல்: 2:22).

பின்பு தானியேல், இராஜாவிடம் சென்று அவருடைய சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் விவரித்துச் சொன்னபோது:

அப்பொழுது இராஜாவாகிய நேபுகாத் நேச்சார் முகம் குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்கு காணிக்கை செலுத்தவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான் (தானியேல்: 2:46).

"இராஜா தானியேலை நோக்கி, நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்திபடியால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், இராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்" (தானியேல்: 2:47).

மேற் கூறிய நிகழ்ச்சிகளிலிருந்து, மனித உள்ளத்திலுள்ள இரகசியங்களை எந்த சாஸ்திரமும், எந்தக் கணிதமும் எந்த ஆவியும், எந்த விஞ்ஞானமும் வெளிப்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

மனிதருடைய மனதில் இருப்பவைகளை வெளிப்படுத்த முடியாவிட்டால், தேவனுடைய உள்ளத்தில் இருக்கும் வருங்கால சம்பவங்களை இவர்கள் அறிவிப்பது எப்படி?

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Thu Jul 19, 2012 8:47 am

மனிதரின் வாழ்க்கை - தேவனின் திரச் சித்தமாம். ஆகையால், மனித வாழ்வின் எதிர்காலங்களை பிசாசின் ஆவிகளோ, சாஸ்திரங்களோ, ஜாதகக் கணிதங்களோ அறிந்து கூறுவது கூடாத காரியம்.

மனித வாழ்வின் வருங்காலம் குறித்த உண்மைகளையும் மனித உள்ளத்தில் இருப்பவைகளையும், சர்வ வல்லமையுள்ள தேவனாலும் அவருடைய ஆவியின் வரங்களைப் பெற்ற தேவ பிள்ளைகளாலுமேயன்றி, மற்ற எவராலும் தெரிவிக்க முடியாது என்பது உண்மை.

"வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்" (ஏசாயா: 45:11).

"அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற் கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் புர்வ கால முதற் கொண்டு அறிவிக்கிறேன்" (ஏசாயா: 46:10).

உங்களுக்குத் தேவையான எல்லா ஆலோசனைகளையும் தர தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.

"ஆலோசனை கர்த்தர்" என்பது அவருடைய நாமம் (ஏசாயா: 9:6).

"நான் உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம்: 32:8) என்று தேவன் வாக்குப் பண்ணியிருப்பதால், தேவ ஆலொசனைகளை அறிய விரும்புவோர், தேவனிடம் காத்திருப்பதன் மூலம் அறிய முடியும்.

குறி சொல்லும் ஆவிகள் உங்களை மோசம் போக்க இடம் கொடாதிருங்கள்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Fri Jul 20, 2012 8:49 am

கைரேகை, ஜாதகம், ஜோதிடம், குறி கேட்டல், அஞ்சனம் பார்க்குதல், பட்சி சாஸ்திரம் பார்த்தல் போன்ற பழக்கங்களின் மூலமாக, பிசாசின் குறி சொல்லும் ஆவிகள் உங்களை மோசம் போக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இவ்வித பழக்கவழக்கங்களை தேவன் விரும்புவதில்லை. இவகைளை தேவன் அருவருப்பானவைகளாகக் காண்கிறார். இவ்விதக் கிரியைகளுக்கு விலகும்படி சத்திய வேதம் பல வசனங்களில் நம்மை எச்சரிக்கிறது.

"குறி கேளாமலும் நாள் பாராமலும் இருப்பீர்களாக" (லேவியராகமம்: 19:26).

"அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறி சொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்" (லேவியராகமம்: 19:31).

அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களை பின் தொடர்ந்து சோரம் போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்தமாவுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனை தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப் பண்ணுவேன்" (லேவியராகமம்: 20:6).

"குறி சொல்லகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சு+னியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளெ இரக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்தி விடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாய் இருக்கக்கடவாய். நீ துரத்தி விடப் போகிற இந்த ஜாதிகள், நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவி கொடுக்கிறார்கள். நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவு கொடார்" (உபாகமம்: 18:10-14).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Fri Jul 20, 2012 6:36 pm

"நீ உன் சிறுவயது முதல் பிரயாசப்பட்டுப் பழகி வருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சு+னியங்களையும் நீ அனுசரித்து நில்; அவைகளால் உனக்கு பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ பார்ப்போம். உன் திரளான யோசனைகளினால் நீ இழைத்துப் போனாய். இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசை கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்; இதோ அவர்கள் தாளடியைப் போல இரப்பார்கள், நெருப்பு அவர்களை சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினி ஜீவாலையிலிருந்து விடுவிப்பதில்லை..." (ஏசாயா: 47:12-14).

"நான் கட்டுக் கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறி சொல்லகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்" (ஏசாயா: 44:25).

மேலே குறிப்பிட்டுள்ள பரிசுத்த வேதவசனங்களிலிருந்து குறி கேட்டல், மந்திரவாதம், சு+னியம், மாயவித்தை, அஞ்சனம் பார்க்குதல், நாள் பார்க்குதல், ஜாதகம், ஜோதிடம் கணித்தல் பொன்ற இவைகள் அனைத்தும் தேவனுக்கு அருவருப்பான காரியங்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இவ்வித செயல்களை வேடிக்கைக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ கற்றுக் கொள்ளக் கூடாது.

நம்முடைய தேவன் காலங்களையும், சமயங்களையும் மாற்றுகிறவர்; நாட்களை உண்டாக்கியவரும் அவரே. தாம் உண்டாக்கின அனைத்து நாட்களையும் தேவன் நல்லது என்று கண்டார். சசுரியன், சந்திரன், நட்சத்திரங்களை தேவன் நமக்கென்று படைத்து, அவைகளையும் நல்லது என்று கண்டார்.

"புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதியார் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்" (எரேமியா:10:2).

உங்கள் எதிர்காலம் தேவனிடத்தில் இருக்கிறது. அவர் காலங்களையும், சமயங்களையும் மாற்றுகிறவர். மனிதன் வளமுடன் வாழ்க்கை நடத்த, தேவன் பல ஆவிக்குரிய விதிகளை நியமித்திருக்கிறார். அந்த விதிமுறைகளை தினமும் அனுசரித்து முயற்சியுடன் பயிற்சி செய்தால் நீங்கள் விரும்பும் வளமான வாழ்வைக் கண்டடைய முடியும்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by சார்லஸ் mc Fri Jul 20, 2012 6:47 pm

உங்கள் கெட்ட காலங்களை நல்ல காலங்களாக தேவன் மாற்றுகிறவர்.
தன் மனம் போல நடந்து, அலைந்து வாழ்ந்து கொண்டிரப்பவர்கள், தங்கள் தோல்விகளை இராசி பலன் சரியாக இல்லை, நேரம், காலம், சரியில்லை என்று கூறிக் கொள்வது விந்தைக்குரியதும், சிந்தைக்குரியதும் ஆகும்!

இன்று நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்ப முன் வந்தால், தேவன் உங்கள் தக்கத்தை சந்தோஷமாகவும், தோல்வியை ஜெயமாகவும், சாபத்தை ஆசீர்வாதமாகவும் மாற்றுவார். அத்துடன் குறி சொல்லம் ஆவிகளின் மோசம் போக்கும் செயல்களுக்கும் தப்புவிக்கப்படுவீர்கள்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 11 Empty Re: "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum