ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

2 posters

Go down

யூரோ சாம்பியன் யார்?   இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை Empty யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

Post by ராஜா Sun Jul 01, 2012 10:40 am

யூரோ சாம்பியன் யார்?


இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

கீவ், ஜுலை.1-

யூரோஎன்ற ஐரோப்பிய கால்பந்து போட்டியில் புதிய சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி அணிகள் இன்று மல்லுகட்டுகின்றன.

யூரோ கோப்பை

உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடந்து வரும் 14-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழாவில் (ïரோ) இன்று `கிளைமாக்ஸ்' அரங்கேறுகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும், இத்தாலியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் உக்ரைனின் கீவ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சாம்பியன் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயினும், இத்தாலியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

யார் கை ஓங்கும்?

இரு அணிகளுமே பலம் வாய்ந்தது தான். என்றாலும் ஸ்பெயினின் கையே சற்று ஓங்கி நிற்கிறது. ஸ்பெயின், இத்தாலி இரு அணிகளும் `பாதுகாப்பு யுக்தி' என்ற தடுப்பாட்டத்திற்கு பெயர் பெற்ற அணிகள் ஆகும்.

இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் இத்தாலியும், போர்ச்சுகலுக்கு எதிரான அரைஇறுதியில் ஸ்பெயினும், `நானும் கோல் அடிக்க மாட்டேன்; உன்னையும் அடிக்க விடமாட்டேன்' என்கிற ரீதியில் விளையாடியதால் தூக்கம் மறந்து டி.வி.யி.ல் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் வெறுத்தே போய் விட்டனர். கடைசியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முடிவுகள் அறியப்பட்டன.

ஸ்பெயின் எப்படி?

உலக சாம்பியனான ஸ்பெயின் அணி இந்த தொடரில் இதுவரை ஒரே ஒரு கோல் மட்டுமே (லீக் சுற்றில் இத்தாலிக்கு எதிராக) விட்டுக்கொடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக தோல்வி கண்ட பிறகு ஸ்பெயின் அணி இதுவரை சர்வதேச போட்டிகளில் (நட்புறவு ஆட்டம் கிடையாது) தோல்வியையே சந்தித்ததில்லை. தொடர்ந்து 19 ஆட்டங்களில் வீழ்த்த முடியாத அணியாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

கேப்டனும், கோல் கீப்பருமான இகேர் கேசில்லாஸ் தான் ஸ்பெயின் அணியின் தூணாக திகழ்கிறார். ஸ்பெயினின் வெற்றிப்பயணத்தில் அவரது பங்களிப்பு இன்றியமையாது என்பதை மறுக்க முடியாது. கடந்த 419 நிமிடங்களில் அவர் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்கவில்லை.

இதே போல், கோல் வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் வல்லவரான ஷாவி ஹெர்னாண்டஸ் இந்த தொடரில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட முறை பந்தை `பாஸ்' செய்து அசத்தியுள்ளார். கடந்த ïரோ இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர்களில் 9 பேர் இப்போதும் ஸ்பெயின் அணியில் இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம் ஸ்பெயினுக்கு நிச்சயம் சாதகமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை.

இத்தாலி நிலை

இத்தாலி அணியிலும் கோல் கீப்பர் பப்பன், திறம்பட செயல்பட்டு வருகிறார். அவரால் தான் இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் வெற்றி கிடைத்தது. ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ள மரியோ பலோடெலி மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரீயோ பிர்லோ எதிரணியை மிரட்டக்கூடியவர். 33 வயதான பிர்லோ, எதிராளியிடம் இருந்து பந்தை தட்டிப்பறித்து தங்கள் அணிக்கு கடத்தி கொடுப்பதில் கெட்டிக்காரர். இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதியில் மட்டும் அவர் 146 முறை பந்தை `பாஸ்' செய்து வியக்க வைத்தார்.

இத்தாலி பயிற்சியாளர் பிரான்டெலி கூறுகையில், `ஸ்பெயினின் பலவீனம் என்ன என்பதை கண்டறிந்து, அதனை பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் இது எளிதான விஷயமாக இருக்காது' என்று குறிப்பிட்டார்.

நள்ளிரவு 12.15 மணிக்கு...

இரு வலுவான அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பதால் அதிகமான கோல்களை எதிர்பார்க்க முடியாது. கடந்த இரு ïரோ இறுதிப்போட்டிகளில் கூட தலா ஒரு கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.

ஆனால் இவ்விரு அணிகளும் விளையாடும் விதத்தை பார்க்கும் போது இறுதிப்போட்டி பெனால்டி ஷூட்-அவுட் வரை நகர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. `ïரோ' கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்த ஒரு இறுதிப்போட்டியும் பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த `இறுதி யுத்தம்' இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டத்தை நியோ பிரைம் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூரோ சாம்பியன் யார்?   இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை Empty Re: யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 10:58 am

இருக்கை முனையில் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஆட்டம்.,இவ்விரு அணிகளின் தடுப்பாட்ட யுக்தியால் போர் அடிக்காமல் இருந்தால் சரி.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யூரோ சாம்பியன் யார்?   இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை Empty Re: யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

Post by ராஜா Sun Jul 01, 2012 11:05 am

ஜேன் செல்வகுமார் wrote:இருக்கை முனையில் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஆட்டம்.,இவ்விரு அணிகளின் தடுப்பாட்ட யுக்தியால் போர் அடிக்காமல் இருந்தால் சரி.,
கண்டிப்பா போர் அடிக்காது ஜேன். இத்தாலியை காட்டிலும் ஸ்பெயின் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது , ஆனாலும் இத்தாலி தாக்குதல் ஆட்டத்தில் சிறந்தவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய அணி. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூரோ சாம்பியன் யார்?   இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை Empty Re: யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

Post by ஹர்ஷித் Sun Jul 01, 2012 11:14 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இருக்கை முனையில் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஆட்டம்.,இவ்விரு அணிகளின் தடுப்பாட்ட யுக்தியால் போர் அடிக்காமல் இருந்தால் சரி.,
கண்டிப்பா போர் அடிக்காது ஜேன். இத்தாலியை காட்டிலும் ஸ்பெயின் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது , ஆனாலும் இத்தாலி தாக்குதல் ஆட்டத்தில் சிறந்தவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய அணி. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

யூரோ சாம்பியன் யார்?   இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை Empty Re: யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு
» யூரோ கால்பந்து போட்டி: இத்தாலி சாம்பியன்
» ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை
» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
» தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum