ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
ayyasamy ram
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
mohamed nizamudeen
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
VENKUSADAS
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 

Top posting users this month
heezulia
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
ayyasamy ram
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
mohamed nizamudeen
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 
VENKUSADAS
வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_m10வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

2 posters

Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 3:49 pm

மேஷம்

பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் தெளிவு பெறும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். தடைபட்டிருந்த காரியங்கள் கூட நல்லபடியாக நடக்கும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

ரிஷபம்

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். மனம் நிம்மதியாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து மகிழக்கூடும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்

பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடக்கூடும். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த நண்பரை சந்தித்து மகிழக்கூடும்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 3:50 pm

கடகம்

பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கவலைகள் குறையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நிலம் வாங்க முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளக்கூடும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம்

பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதே சமயம் உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கன்னி

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 3:52 pm

துலாம்

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் செல்லத் திட்டமிடக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது நல்லது. உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

விருச்சிகம்

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவரை அனுசரித்துச் செல்லவும். சேமிப்பில் கவனம் செல்லும்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. யாருக்கம் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

தனுசு

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். பயணங்களின்போது கவனமாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்றுசேரும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அடுத்தவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 3:53 pm

மகரம்

பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். மனம் உற்சாகமாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். மனம் மகிழும் செய்தி வீடு தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களை நம்பி உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். அடுத்தவர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்பம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடையக்கூடும். பண வரவு அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருக்கும். மனம் குதூகலமாக இருக்கும்.

மீனம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவரை அனுசரி்த்துச் செல்லவும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by யினியவன் Fri Jun 29, 2012 6:46 pm

அபாரம் முரளி - கைவசம் நிறைய தொழில் இருக்கும் போல் தெரியுதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by முரளிராஜா Fri Jun 29, 2012 7:04 pm

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Kili_jodhidam
நம்ம யினியவனுக்கு இனிமேலாது நல்ல காலம் பொறக்குமா?
பாத்து நல்ல சீட்டா எடுத்து குடுடீ ஏன் பச்சை கிளீ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by யினியவன் Fri Jun 29, 2012 7:20 pm

இனி நல்ல காலம் பொறந்து என்ன பண்றது முரளி? போவுது விடுங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை) Empty Re: வார பலன்(29-6-2012 முதல் 5-7-2012 வரை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum