ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 7:19 am

சுவிசேஷம் அல்லது நற்செய்தி[center]

சுவிசேஷங்களிலே முதலாவது எழுதப்பட்ட நூலான மாற்கு கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கிறது:

"தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்" (மாற்கு: 1 :1 ).

நற்செய்தியைக் குறித்த கிரேக்க பதம் "யுவாங்கலியோன்" (Euangelion) என்பதாகும். கிரேக்கரிடையே இவ்வார்த்தையானது வெற்றியின் செய்தியை பிரகடனப்படுத்துவதைக் குறிக்கிறது.

செய்தி அறிவிப்பவன் தகவலை கப்பலிலோ, குதிரையிலோ அல்லதுநடந்து வந்தோ கோட்டை வாயிலில் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு படையின் வெற்றியையும், பகைவரின் தோல்வியையும் அறிவிப்பான். தூதுவனுடைய தோற்றமே நற்செய்தியை வெளிப்படுத்திவிடும்.

அவன் தன் கைகளை உயர்த்தி உயர்ந்த தொனியில் ஆர்ப்பரிக்க அது முழு நகரத்தையும் மகிழ்ச்சியினால் நிரப்புமாம். அவனது நற்செய்தி மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்ததால் தூதுவனுக்கு வெகுமதி கொடுக்கப்படுமாம்.

"யுவாங்கலியோன்" என்ற வார்த்தை கீழ்க்கண்ட காரியங்களை குறித்தது:

1 . யுத்தத்தில் வெற்றி

2 . அரசனின் பிறப்பு

3 . அரசன் அரியணை ஏறுதல்

4 . தெய்வங்களிடமிருந்து அவ்வப்போது அருளப்படும் வாக்கியங்கள்

5 . பிசாசின் வல்லமையிலிருந்து விடுதலை பெறுதல்

மேற்கூறியவைகள் கிரேக்கர்கள் மத்தியில் கருதப்பட்டு வந்தது.

பழைய ஏற்பாட்டில் யுதர்களுக்கு தம்முடைய மக்களை தேவன் விடுவிக்கிறார் என்பதையும் வரப்போகிற யெகோவாவின் அரசாட்சியையும் விவரிக்கக்கூடியதாய் ஏசாயாவின் புத்தகத்தில் சுவிசேஷம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது.

தேவனுடைய நற்செய்தியானது யுதர்களுக்கும் புறஜாதியாருக்கும் மற்றும் அனைவருக்கும் உரியது என்பது புலனாகியது.

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 8:35 am

"சுவிசேஷம்"

சுவிசேஷத்திற்கு எபிரேய மொழியில் "இவாஞ்சலிஸிஸ் சொஸ்தாய்" () என்று கூறப்பட்டுள்ளது.

சுவிசேஷம் என்பது...

அ) அறிவித்தல் அல்லது பிரசித்தப்படுத்துதல்

ஆ) பிரசங்கம் பண்ணுதல்

இ) நற்செய்தியைக் கொண்டு வருதல்

ஈ) வெற்றியைக் கொண்டு வருதல்

இயேசுவை இவ்வுலகில் பிதாவானவர் ஒரு பிரசங்கத்திற்காக, பிரசங்கபயணத்திற்காக அனுப்பவில்லை. ஜீவதேவனின் உண்மைகளை தனிமனிதன் அறியவும், தனிமனிதனுடைய தேவைகளை சந்திக்கவுமே அனுப்பினார்.

இயேசுவினுடைய பிரசங்கமும், கிரியையும் சேர்ந்து வந்தது என லூக்கா 18 ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம். இயேசுவின் பிரசங்கமும், திருஷ்டாந்தங்களும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றாகவே இணைந்து வந்தன. (மாற்கு: 1 :1 ). கிரியை செய்வதும், உபதேசிப்பதுமே சுவிசேஷமாகும். அப்போஸ்தலரில் சில அதிகாரங்கள் தவிர மற்ற அதிகாரங்கள் செய்வதும், பிரசங்கிப்பதும் ஒன்றாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. (அப்போஸ்தலர்: 8 :16 ).

சரித்திரக் கிறிஸ்துவை - வேதாகமக் கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் எடுத்துரைத்து, மக்களை தேவனிடம் தனியாக கொண்டு வந்து ஒப்புரவாக்கி வைப்பது சுவிசேஷம்.

"நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்" ; "அன்றியும், மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது".(மாற்கு: 16 :15 ; லூக்கா: 24 :47).

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 8:53 am

"நற்செய்தியின் முக்கியக் கருத்துக்கள்"

நற்செய்தியைக் குறித்த வேதாகமக் கோட்பாடு மற்றும் சத்தியத்தின் மையக் கருத்தை எளிதாகக் கீழ்க்கண்ட வசனங்கள் காட்டுகின்றன:

"நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஐந்நூறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு, யாக்கோபுக்கும் அதன்பின்பு அப்போஸ்தரெல்லாருக்கும் தரிசனமானார்." (1கொரிந்தியர்: 15:3-7).

மேற்கண்ட வசனங்களில் உள்ள முக்கியமான வேதாகமக் கோட்பாடுகளைக் காண்போம்:

"நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமானதாக ஒப்புவித்ததும்..."

இந்தச் சொற்றொடரின் மூலமாய் பவுல் நமக்கு நினைவுட்டுவது என்னவென்றால், அவர் நற்செய்தியின் வெளிப்பாட்டை "இயேசு கிறிஸ்துவே வெளிப்படுத்தினதின் மூலம்" பெற்றுக் கொண்டார். (கலாத்தியர்: 1 :11 -17 ). பவுல் ஏதோ சரித்திர சம்பந்தமான செய்திகளை (அவைகள் உண்மைதான்) கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்லவில்லை. மனுஷருடைய போதனையினாலல்ல. தேவகுமாரனாகிய இயேசுவானவரே நேரடியாக வெளிப்படுத்தினதினாலே பெற்றுக் கொண்ட நற்செய்தியின் மையக் கருத்தைப் பவுல் அறிவிக்கிறார்.

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 9:49 am

"கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி..நமது பாவங்களுக்காக மரித்து..."

பவுல் "கிறிஸ்து" என்ற பதத்தைப் பயன்படுத்தக் காரணம் தம்முடைய வாசகர்களுக்கு இயேசுவானவர் யாரென்று நினைவுபடுத்தத்தான். 'கிறிஸ்து' என்பது 'மேசியா' , அபிஷேகம் பண்ணப்பட்டவர், தேவகுமாரன் என்பதைக் குறிக்கும். அவரே முழுவதும் தேவகுமாரனாயிருந்தும் மனித உருவில் பிறந்தார்.

இந்த தேவன் - மனிதனாகிய இயேசுவானவர் தாம் மரித்தார். அவர் மயக்கமடையவோ, மூளை செயலிழந்த நிலைக்கோ, ஏமாற்று , மரணமடையவோ அல்லது தமக்குப் பதிலாக அவருடைய இடத்தில் மரிக்க யாரையும் அனுப்பவோ இல்லை. இயேசு கிறிஸ்து மெய்யாகவே, உண்மையாகவெ மரித்தார். (எபிரேயர்: 2 :9 ). நம்மில் யாரும் மரிப்பது போலவே அவரும் மரித்தார். அவருடைய ஆத்துமா சரீரத்தை விட்டுப் பிரிந்த பொழுது, அவருடைய சரீர செயலாற்றல் நின்று போயிற்று.

அவருடைய மரணம் குறிப்பிட்ட, பிரத்தியேகமான ஒரு தெய்வீக நோக்கத்திற்காகயிருந்ததால் மற்ற மரணங்களைவிட வித்தியாசமானது. அவர் காலத்திய பக்தி அமைப்பை எதிர்த்தார் என்பதற்காக மட்டும் இயேசுவானவர் கொலை செய்யப்படவில்லை. தேவனாகிய பிதாவினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு முன் குறிக்கப்பட்டது. பிதாவினுடைய ராஜரீக சித்தத்துக்குக் கீழ்ப்படியக் குமாரன் சம்மதித்த மரணம் அது. (ஆதியாகமம்: 3 :15 ; அப்போஸ்தலர்: 2 :22 ,23 ; பிலிப்பியர்: 2 :5 -11 ; எபிரேயர்: 10 :1 -11 ).

இயேசுவானவரும் புமியில் அவர் செய்த ஊழியத்தின்போது அவருக்கு வரப்போகும் பாடு, மரணத்தைப் பற்றி அடிக்கடிப் பேசினார். (மத்தேயு: 16 :21 ; மாற்கு: 8 :31 ; 9 :30 ,31 ; லூக்கா: 9 :21 ,22 ; 18 :31 -33 ).

கிறிஸ்துவின் மரணம் முன்னரே திட்டமிடப்பட்டது மட்டுமல்ல் ; இது நோக்கத்தையும் நிறைவேற்றியது. "கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார்" (1கொரிந்தியர்: 15 :3 ). மனிதனது முரட்டாட்டத்தாலும் பாவத்தாலும், அவன் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டான். அந்த முரட்டாட்டத்திற்கும் கலகத்திற்கும் தண்டனை மரணம் (எசேக்கியேல்: 18 :4 ,20 ). கிறிஸ்துவினுடைய மரணம் இந்தத் தண்டனையை முழுவதுமாக நிறைவேற்றித் தீர்த்து, மனிதன் தேவனோடு ஒப்புரவாக வழி வகுத்தது. இதுவே "பிராயச்சித்தம்" என்றழைக்கப்டுகிறது. (ரோமர்: 5 :10௦,11 ; 2கொரிந்தியர்: 5 :18 ,19 ; கொலோசெயர்: 1:19 -23 ; 1தீமோத்தேயு: 2 :5 ,6 ).

கிறிஸ்து நமக்குப் பதிலாகக் குற்ற நிவாரண பலியாக மரித்தது "வேதவாக்கியங்களின்படி" நடந்தது:

அ) ஆதாமும் ஏவாளும் வீழ்ந்த காலத்திலிருந்து (ஆதியாகமம்: 3 :15 )

ஆ) மோசே மூலமாக (உபாகமம்: 18 :15 )

இ) தீர்க்கதரிசிகள் மூலமாக (ஏசாயா: 7 :14 ; 9 :1 -6 ; ஏசாயா:53 அதிகாரம்; சங்கீதம்: 22 ; லூக்கா: 24 :25 -27 ) - அவர் மரணம் முன்னுரைக்கப்பட்டது.

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 10:53 pm

"... அடக்கம் பண்ணப்பட்டு... "

இந்த சொற்றொடரும் கிறிஸ்துவினுடைய மரணம் உண்மையாகவே அவர் சரீரத்தில் நிகழ்ந்த உடல் சம்பந்தப்பட்ட உண்மையாகும். எந்த மனிதனும் சரீர மரணம் அடைந்தால் அடக்கம் பண்ணப்படுவதுபோல, அவரும் அடக்கம் பண்ணப்பட்டார். இதன் முக்கியத்துவம் 1கொரிந்தியர் 15 ல் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவின்மேல் தனிப்பட்ட விசுவாசம் வைத்தவர்கள் கிறிஸ்துவைப் போலவே ஓர் நாளில் சரீர உயிர்த்தெழுவார்கள் என இந்தப் பகுதி காட்டுகிறது. (1கொரிந்தியர்:15 :51 -57 ; கொலோசெயர்: 1 :18 ; வெளிப்படுத்தல்: 1 :5 ). கிறிஸ்துவைப் போலவே, அவர்கள் நித்திய வாழ்வுக்கென்று எழுப்பப்படுவார்கள். அங்கே "அழிவுள்ளது அழியாமையை தரித்துக் கொள்ளும்" மரணம் என்றென்றுமாய் வெற்றி கொள்ளப்படும்.

கிறிஸ்துவின் மரணம் அவர் சரீரத்தில் நிகழ்ந்த சரித்திர உண்மையாகும். அவருடைய மரணம் இல்லையென்றால், மனித குலத்தின் பாவத்திற்கான கிரயமும் இல்லை. கிறிஸ்துவின் மரணமும் அடக்கமும் இல்லையென்றால், அதைத் தொடர்ந்து மரணத்தை ஜெயமாக விழுங்கும் உயிர்த்தெழுதலும் இல்லை. ஆகவே, கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் சரீர உயிர்த்தெழுதல் இல்லாவிடில், நம்முடைய விசுவாசம் ஒன்றுமில்லாமல் போய்விடும். நாம் இன்னும் நம் பாவக்கட்டில் தான் கிடப்போம். மேலும் நம் நம்பிக்கைகளும் பொய்யாயிருக்கும். (1கொரிந்தியர்: 15 :12 -19 ).

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 11:19 pm

"...வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்..."

மூல கிரேக்க மொழியிலே, பவுலின் வார்த்தைகள் கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றும், கிறிஸ்து இன்றும் எழுப்பப்படுகிறார் என்றும் பொருள் கொள்ளும். அன்றொரு நாள் கிறிஸ்து உயிரோடெழுந்தது, அவர் இன்றும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுகிறார் என்னும் உண்மையோடு இணைக்கப்படுகிறது.

இதன் பொருள் என்னவெனில், எல்லா காலத்துக்கும் சேர்த்து ஒரே தடவையாக சிலுவையில் நிறைவேற்றப்பட்டதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, திரும்ப உயிரோடெழுந்ததும் அன்றுபோல் இன்றும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. நம்முடைய இரட்சகர் மரணத்தை வென்றார். உயிரோடெழுந்து, உயிருடன் இருந்து இப்பொழுதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்! அவர் நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறர்! (எபிரேயர்: 8 :31 ; 7 :25 ).

மேலும் நம்முடைய இரட்சிப்பென்னும் "விசேஷித்த உடன்படிக்கைக்கு" மத்தியஸ்தராயிருக்கிறார். (எபிரேயர்: 8 :6 ). அவருடைய தியாக பலியான மரணமும் உயிர்த்தெழுதலும் நம் பாவத்திற்கான தண்டனையை திருப்தி செய்து, தேவனுக்கு முன் சரியான நிலையில் நிற்கச் செய்கிறது. (நீதிமானாக்கப்படுகிறான்)

"மூன்றாம்நாள்" என்னும் பதம் எப்பொழுது கல்லறை காலியானதாகக் கண்டு பிடிக்கப்பட்டது, எப்போது கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்கு காட்சி தர ஆரம்பித்தார் என்பதையும் காட்டுகிறது. இயேசுவானவர் தாமே, தம்முடைய மரணத்திற்குப்பின் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதை தீர்க்கத்தரிசனமாக சொன்னார். (மத்தேயு: 16 :21 ; யோவான்: 1 :18 -22 ). கிறிஸ்துவின் மரணத்திற்கும் மூன்றாம்நாள் உயிர்த்தெழுதலுக்கும் தீர்க்கதரிசன "முன்னடையாளங்களாக" இருந்தன. 2இராஜாக்கள்: 20 :5 ; ஓசியா: 6 :2 ; மத்தேயு: 12 :38 - 40 ).

தொடரும்...

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by சார்லஸ் mc Wed Jun 27, 2012 11:52 pm

"...கேபாவுக்கும் (பேதுரு) பன்னிருவருக்கும் தரிசனமானார்..."

இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், அவரை உயிரோடு உள்ளவராகக் கண்ட சாட்சிகளின் பட்டியலைத் தருவதன் மூலம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பவுல் உறுதிப்படுத்துகிறார். அவர் சரீரத்தில் உயிரோடெழுந்து அநேகருக்குக் காணப்பட்டார். பவுல் கொரிந்தியருக்கு எழுதியபோது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்ட சாட்சிகள் உயிரோடு தான் இருந்தார்கள். உயிர்த்தெழுந்த கர்த்தரை கண்ணால் கண்ட மேலும் பல சாட்சிகளைப் பற்றி சுவிசேஷ நூல்களில் காணலாம். (மத்தேயு: 28 :1 -10 ; லூக்கா: 24 :13 -35 ; யோவான்: 20 :11 -18 ).

கிறிஸ்துவின் திட்டவட்டமான சரீர உயிர்த்தெழுதலுக்கு தேவனுடைய வார்த்தை மறுக்க முடியாத சாட்சி பகருகிறது:

1கொரிந்தியர்: 15 :3 -5 கூறுவதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக கிறிஸ்தவத்திற்கும் நற்செய்திக்கும் ஏராளமான காரியங்கள் உண்டு. இருப்பினும் இந்த வசனங்கள் சுவிசேஷத்தின் முக்கியக் கருத்துக்கள் ஆகும். நமக்காக நம் பாவத்திற்கான தண்டனையின் கிரயத்தை சிலுவையில் மரித்ததினால் செலுத்தி நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிப் பின்னர் தன்னை தேவனென்று நிரூபிக்கவும், நம்முடைய நித்திய இரட்சிப்பை முத்தரிக்கவும் செய்த இயேசு கிறிஸ்து என்ற நபர்தான், கிறிஸ்தவத்தின் அதி முக்கியமானவரும் மையமானவரும் ஆவார்.

நற்கிரியைகளினாலோ வேறெந்த வழியினாலோ மனிதகுலம் இந்த இலவச இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது. இது இயேசு கிறிஸ்துவினாலும், அவருடைய மாபெரும் தியாகத்தினாலுமே, தேவனுடைய அன்பான இரட்சிப்பின் திட்டம் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. (யோவான்: 3 :16 ; ரோமர்: 6:23 ; எபேசியர்: 2 : 8 ,9 ).

அல்லேலூயா! நாம் உயிர்த்தெழுந்த இரட்சகரை சேவிக்கிறோம். அவர் வாழ்கிறார். என்றென்றுமாய் உயிரோடிருக்கிறார்! நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். ஆளுகிறார் என்றென்றுமாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார் ( வெளிப்படுத்தல்: 1 :18 ; 5 :18 ,19 ).

கிறிஸ்துவின் மூலமாகத்தான் - ஆம், கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நாம் தேவனிடத்தில் மீண்டும் சேர்க்கப்படுகிறோம்; கிறிஸ்துவில்தான் - ஆம், கிறிஸ்துவில் மட்டுமே அவரோடுகூட நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறோம். (யோவான்: 11 :25 ,26 ; 1கொரிந்தியர்: 15 :22 ; எபேசியர்: 2 :1 -10 ). அதுவே செய்தி - சுவிசேஷத்தின் நற்செய்தி!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம் Empty Re: "சுவிசேஷம்" அல்லது "நற்செய்தி"யின் பொருள் விளக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி
»  காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு மனு
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum