ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

+7
selvadhas
யினியவன்
ஆரூரன்
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
yarlpavanan
சாமி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by சாமி Tue Jun 26, 2012 10:44 pm

First topic message reminder :

(பின்வருவன சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியது )

சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.

சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.

சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.

பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.

(தொடரும்)


Last edited by சாமி on Wed Jun 27, 2012 9:23 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by சாமி Fri Jun 29, 2012 10:56 pm

தேஷ்
தேம் என்ற தமிழ் மூலச் சொல்லுக்கு இனிமை என்பதே பொருளாகும். தேம் என்பதே பிற்காலத்தில் தேன் என்றும் சொல்லப்பட்டது. ஒரு நாடு வளமையும், மகிழ்வும், இனிமையும் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதையும், பண்டைய குமரிக்கண்டம் அவ்வாறு இருந்தது என்பது பற்றியும், நாட்டைத் தேயம் என்று அழைத்தனர். தேம் – தேயம்.

தேயம் என்ற தமிழ்ச்சொல், தேஷ் என்று சமற்கிருதத்தில் திரிந்தது.

நாடு, NATION
மக்கள் விரும்பி நாடிச் செல்லும் நிலப்பகுதி நாடு எனப்பட்டது. நாடு என்பது, நோடு என எபிரேய மொழியில் திரிந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள நேட்டால் (NETAL) என்ற பகுதி, நாடு – நாடல் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. நாடு என்ற தமிழ்ச்சொல்லே, நேட்டால் என்று இலத்தீன் மொழியில் சொல்லப்பட்டு, (NATION) என்று ஆங்கிலத்தில் திரிந்தது.

ஈழம்
பாபிலோனுக்கு கிழக்கேயிருந்த ஒரு சிறிய நாடு இலம் எனப்பட்டது. இதனை ELAM என்றவாறு குறித்துள்ளனர். அது ஈழம் என்ற தமிழ்ச் சொல்லே, ழகரத்தை ஒலிக்க இயலாத பிற்கால ஆய்வாளர்கள் இலம் என்று கூறினர். ஈழம் தமிழர் குடியேற்ற நாடுகளில் ஒன்றாகும்.

பாபிலோன்
பாபிலோன் என்ற இந்த நாட்டின் பெயரும் தமிழ் மூலத்தைக் கொண்டதே. இறைவனுடைய தேவாலயத்தின் வாயில் என்ற பொருள் கொண்டதே பாபிலோன் ஆகும். பாப் – இல் என்று எபிரேய மொழியிலும் பாப் – இலு என்று அக்காடிய மொழியிலும் சொல்லப்பட்டுள்ளது. பாப் – இல் என்பது, வாய் – இல் = வாயில் என்ற தமிழ்ச் சொல்லே. வாய் – இல் – பாப் இல் எனத் திரிந்தது. பாப் இல் பாபிலோன் எனப்பட்டது.

இங்கே குடியேறிய தமிழர்கள், ஒரு கோபுரம் கட்டியதாகவும், அக்கோபுரம் முற்றுப்பெறாமல் போனதாகவும் செய்திகள் கூறுகின்றன. அக்கோபுரமும் பாபெல் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. இதனுடைய அடித்தளத்தை அண்மையில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யூப்ரடீசு தைகிரீசு நதிகள்
பாபிலோனின் இரட்டை ஆறுகளான யூபரடீசு தைகிரீசு ஆகியவை அந்நாட்டிற்கு வளம் சேர்ப்பவைகளாகும். வடக்கிலிருந்து தெற்கு முகமாக ஓடிவரும் அவ்விரு ஆறுகளும், பக்கம் பக்கமாக பாய்ந்து கொண்டிருப்பவை. இடப்பக்கம் ஓடியதை இப்புறத்து ஆறு என்றும், வலப்பக்கமாக ஓடியதை அப்புறத்து ஆறு என்றும் அக்காலத்தில் அழைத்தனர். யூப்ரடீசு நதியை அக்காடிய மொழியில் இப்புரத்து என அழைத்தனர். அது இப்ரதூஸ் என கிரேக்கத்திலும், இப்ரதோஸ் என இலத்தினிலும், யூப்ரடீஸ் என ஆங்கிலத்திலும் திரிந்தது. இப்புறத்து என்ற தமிழ்ச்சொல்லே, யூப்ரதீஸ் எனத்திரிந்துள்ளதை நோக்குக.

தைகிரீசு என்பது பிற்காலப் பெயராகும். யூப்ரதீசைக்காட்டிலும் நீளத்தில் குறைவானது. எனவே அதனைச் சின்னாறு என அழைத்தனர். சின்னாறு சென்னாறு என எபிரேய மொழியில் சொல்லப்பட்டுள்ளது. அப்புறத்து ஆறு என்ற சொல் வழக்கும் உள்ளது. அப்புறத்து என்ற சொல், அப்பிறு என்று விளக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இவ்விறு ஆறுகளின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by ஆரூரன் Sat Jun 30, 2012 1:47 pm

உலகம் முழுக்க தமிழ்ப்பெயர் இருக்க தன் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வெக்கப்படறான் இன்றைய தமிழன்!
வாயில நுழையாத, பொருளே தெரியாத, திட்டுற வார்த்தையா அசிங்கமான வார்த்தையா என்பது கூட தெரியாமல் ஏதாவது ஸ்,ஷ், சத்தம் வர்ற மாதிரி வைக்கிறான்!!
தன்னுடைய மூதாதையர் பெருமையப் பத்தி தெரியாத முட்டாப்பயலுங்க இன்னைக்கு இருக்கிற தமிழன்கள்ள பெரும்பாலோர்!!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by தர்மா Sat Jun 30, 2012 2:38 pm

தமிழ் குடிதாங்கி தன பேத்திகளுக்கு வைத்த பெயர் சங்கமித்ரா சம்யுக்த சஞ்சுத்ரா. எப்படி தமிழ் விளங்கி கொண்டிருகிறது இவர்கள் கையில்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by தர்மா Sat Jun 30, 2012 2:42 pm

எந்த பெயராகவது இருந்துவிட்டு போகட்டும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் கற்று கொடுங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுங்கள் பெரியோரை மதிக்க கற்று கொடுங்கள் இறைவனுக்கு பயப்பட சொல்லுங்கள் இதை தான் தமிழ் மொழி உங்களிடம் எதிர்பார்கிறது. பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by ராஜா Sat Jun 30, 2012 2:49 pm

தர்மா wrote:எந்த பெயராகவது இருந்துவிட்டு போகட்டும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் கற்று கொடுங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுங்கள் பெரியோரை மதிக்க கற்று கொடுங்கள் இறைவனுக்கு பயப்பட சொல்லுங்கள் இதை தான் தமிழ் மொழி உங்களிடம் எதிர்பார்கிறது. பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்
சூப்பருங்க நன்றி அருமையாக சொன்னிங்க அண்ணா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by ஆரூரன் Sat Jun 30, 2012 4:49 pm

தர்மா wrote:பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்

நண்பரே முதல்லே நாம திருந்தனும். மு.க வுக்கு என்ன தமிழை ‘கான்ட்ராக்ட்’ ஆ விட்டிருக்காங்க?
நம் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு வேண்டும். நம்ம அப்பா , தாத்தாவெல்லாம் பெயரை வைக்கும் போது நம்ம முன்னோர் பெயரைத்தானே வெச்சாங்க? எந்த கூத்தாடி பெயரையும் வெக்கலியே?

நம்ம ஊரிலே காந்தி, நேரு, சுபாஷ் இந்திரா, ராஜீவ் ன்னு பெயர் வைக்கிறானே இப்ப. வடநாட்டிலே எவனாவது கட்டபொம்மன், வ.வு.சி, அண்ணாதுரை, ராமசாமி ன்னு பெயர் வைக்கிறானா? அவன் தெளிவா இருக்கான். நம்ம மக்கட்டைங்க தான் அறிவில்லாம இருக்கு.

தமிழ் அப்படின்னாலே கருணாநிதி அப்படி பண்ணிட்டாரு இப்படி பண்ணிட்டாருன்னு தான் சொல்றாங்களே. இங்க இருக்க ஒவ்வொருத்தனும் தமிழன்தானே?

நாம மாறினா நம்மை ஆளுற வர்க்கமும் மாறும். நாட்டோட மக்களின் குணங்களைத்தான் தலைவர்கள் பிரதிபலிக்கிறாங்க!!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by தர்மா Sat Jun 30, 2012 6:11 pm

unkal vayathil ithaivida athikam naankalum pesiyavarkal thaan thambi. neenkal enkal vayathai adaiyumpothu nitharsanathai purinthukolveerkal
ஆரூரன் wrote:
தர்மா wrote:பேருக்கு தமிழ் பெயர் வைத்துகொண்டு நாட்டில் இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும்போது தனக்கு பிடித்த பெயர் வைத்துகொண்டு தமிழுக்கு எவ்வளவு பேர் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவோ மேல்

நண்பரே முதல்லே நாம திருந்தனும். மு.க வுக்கு என்ன தமிழை ‘கான்ட்ராக்ட்’ ஆ விட்டிருக்காங்க?
நம் ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு வேண்டும். நம்ம அப்பா , தாத்தாவெல்லாம் பெயரை வைக்கும் போது நம்ம முன்னோர் பெயரைத்தானே வெச்சாங்க? எந்த கூத்தாடி பெயரையும் வெக்கலியே?

நம்ம ஊரிலே காந்தி, நேரு, சுபாஷ் இந்திரா, ராஜீவ் ன்னு பெயர் வைக்கிறானே இப்ப. வடநாட்டிலே எவனாவது கட்டபொம்மன், வ.வு.சி, அண்ணாதுரை, ராமசாமி ன்னு பெயர் வைக்கிறானா? அவன் தெளிவா இருக்கான். நம்ம மக்கட்டைங்க தான் அறிவில்லாம இருக்கு.

தமிழ் அப்படின்னாலே கருணாநிதி அப்படி பண்ணிட்டாரு இப்படி பண்ணிட்டாருன்னு தான் சொல்றாங்களே. இங்க இருக்க ஒவ்வொருத்தனும் தமிழன்தானே?

நாம மாறினா நம்மை ஆளுற வர்க்கமும் மாறும். நாட்டோட மக்களின் குணங்களைத்தான் தலைவர்கள் பிரதிபலிக்கிறாங்க!!!


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by பத்மநாபன் Sun Jul 01, 2012 12:38 pm

புதிய தகவல் ... நல்ல ஆராய்ச்சி ... தொடருங்கள் நண்பரே ...
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by இரா.பகவதி Sun Jul 01, 2012 9:53 pm

சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு - Page 2 Empty Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum