புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_m10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_m10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_m10ஹைக்கூ ஆற்றுப்படை  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jul 09, 2012 8:38 am

ஹைக்கூ ஆற்றுப்படை

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்

ஹைக்கூ தமிழகத்தில் பிரவேசித்து ஒரு நூற்றாண்டு எட்டப் போகிறது .முதல் தொகுப்பு வெளி வந்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது .முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கக் கூடும் .ஹைக்கூ மீது எதிர்ப்புகள் கிளம்பின .ஏராளமான கடும் விமர்சனங்கள் எழுந்தன .எல்லாவற்றையும் மீறி ஹைக்கூ வளர்ந்தது .தொகுப்புகள் வந்தன .ஹைக்கூ என்ன சொல்கிறது .எப்படி இருக்கிறது .எதை பேசுகிறது என விமர்சனங்கள் அதிகம் இல்லை .முதன் முதலில் விமர்சனங்களை எழுதி தொகுப்பாக்கி ஹைக்கூ அனுபவங்கள் என்ற பெயரில் தந்தவர் பொன் .குமார் .நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் இரா .இரவி வெளியிட்டிருக்கும் தொகுப்பு ஹைக்கூ ஆற்றுப்படை .

தொகுப்பில் இருபத்தாறு ஹைக்கூத் தொகுப்புகளின் மீதான விமர்சனம் உள்ளது .மூத்தவரான அமுத பாரதியையும் விமர்சித்துள்ளார் .பூத்தவரான புதுவை ஈழனும் இடம் பெற்றுள்ளார் .தொகுக்கப்பட்டதும் உண்டு .கூட்டுத் தொகுப்பும் இருக்கிறது .பாகுபாடற்று வாசிக்கக் கிடைத்தவற்றை எல்லாம் விமர்சித்துள்ளார் .

விமர்சனத்தை தொடங்குமுன் கவிஞர் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார் .புகழ் பாடி உள்ளார் .கவிஞர் அமுத பாரதியை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி என்கிறார் . கவிஞர் மு .முருகேசை ஹைக்கூ பொது மக்களிடையே பரவியதற்குக் காரணம் என்கிறார் .மிகச் சிறந்த மரபுக் கவிஞர் ,இலக்கணம் நன்கு அறிந்தவர் என சி .விநாயக மூர்த்தியைக் குறிப்பிடுகிறார்.புகழ் பெற்ற ஹைக்கூக்களை எழுதுவதில் வல்லவர் என கவிமுகிலை அறியச் செய்கிறார் .வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் கன்னிக் கோயில் ராஜா என்கிறார் .புதுவை தமிழ் நெஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு பகுத்தறிவுவாதி என்றும் இன உணர்வு மிக்கவர் என்றும் அடையாள படுத்துகிறார் .சோர்வில்லாத உழைப்பாளி ,சிறந்த சிந்தனைவாதியாக வசீகரனைக் காட்டியுள்ளார் .ஹைக்கூ உலகில் தனி இடம் பிடித்தவர் நந்தவனம் சந்திரசேகரன் என்கிறார் .ஒவ்வொரு ஹைக்கூவாளர்களின் தனித் தன்மையை அறிந்து கூறியுள்ளார். ஹைக்கூத் தொகுப்புகள் மீதான பற்றுடன் ஹைக்கூவாளர்களுடனான தொடர்பையும் வெளிப் படுத்தியுள்ளார் .ஒரு விமர்சனத்தில் ஹைக்கூக்களை பட்டிமன்றம் மூலம் பிரபலப் படுத்தியவர் முனைவர் இரா .மோகன் என்கிறார் .

தொகுப்பை விமர்சிக்கும் கவிஞர் ஹைக்கூக் குறித்தத் தன் சிந்தனைகளை விமர்சனங்கள் ஊடாக விரவியுள்ளார் .ஹைக்கூவிற்கான இலக்கணங்களையும் எழுதிஉள்ளார் அவை .
1.ஹைக்கூவில் தேவையற்ற சொற்கள் இருக்கக் கூடாது .
2.ஹைக்கூ மிக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் இருக்க வேண்டும் .
3.ஹைக்கூ வாசிக்கும் போதே காட்சியாக விரிய வேண்டும் .
4.ஹைக்கூ வாசகன் மனத்தில் எண்ண அலைகளை ஏற்படுத்த வேண்டும் .மாற்றத்தை உண்டாக்க வேண்டும்.
5.ஹைக்கூ சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம் .
6.ஹைக்கூ வாசகனையும் பாடைப்பாளியாக்கும் ஆற்றல் பெற்றது .
7.ஹைக்கூ வியப்பை உண்டாக்க வேண்டும் .
8.ஹைக்கூ மூன்று வரியில் மட்டுமே இருக்க வேண்டும் .

ஹைக்கூவின் சிறப்புகளையும் பண்புகளையும் எடுத்துக் கூறியவர் ஹைகூவாளரைப் பாராட்டியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார் .
1.ஹைக்கூக்களை இன்றைய நவீன உலகத்தில் அனைவரும் உணர வேண்டும் .
2.எழுதியதெல்லாம் தொகுப்பாக்காமல் தேர்ந்து எடுத்துத் தொகுக்க வேண்டும் .
3.செலவு அதிகம் எனினும் ஒவ்வொரு ஹைக்கூ விற்கும் ஒவ்வொரு புகைப்படம் வைக்க வேண்டும் .
4.பட்டாம் பூச்சி ,பனித்துளி தவிர்த்து ஹைக்கூ எழுத வேண்டும் .
(வண்ணத்துப் பூச்சியும் ,நிலாவும் இல்லாமல் ஒரு ஹைக்கூத் தொகுப்புத் தர வேண்டும் என்னும் தீர்மானத்துடனே வெளி வந்தது .மீண்டும் என பொன் .குமார் முன்னுரையில் குறிப்பிட்டு அளித்த தொகுப்பு மீண்டும் ஆண்டு 2004 )

தொகுப்பில் உள்ள ஹைக்கூக்களில் தனக்குப் பிடித்ததை, தான் ரசித்ததை எடுத்துக் காட்டியுள்ளார்.ஹைக்கூ என்ன சொல்கிறது .எதைக் குறிக்கிறது என விளக்கமளித்து வாசகர்களையும் ரசிக்கத் தூண்டியுள்ளார் .கவிஞர் எடுத்துக் காட்டியவைகளில் சில எடுத்துக் காட்டுகள்.

கவியும் இருட்டு
கடைசிச் சொட்டில்
மெழுகின் உயிர் ( மு .முருகேஷ் )

விற்காத பூக்களில்
தொலையும் மனம்
சருகாகும் வாழ்வு ( பொள்ளாச்சி குமார ராஜன் )

நிசப்தமான வீதி
அதிர்ந்து பரவுகிறது
இராப் பிச்சைக்காரன் குரல் (சிபி )

விரலில் மாட்டியிருந்தது
அதிட்டக் கல் மோதிரம்
துண்டிக்கப் பட்ட கை (ம .ஞானசேகரன்)

பவளத்தில் படகு
ஏறத்தான் ஆளில்லை
பிறை நிலா ( சி .வினையாக முர்த்தி )

முடிகின்றது
அறியும் முன்
வாழ்க்கை ( புதுவை ஈழன் )

மணமக்கள் தேவை
விளம்பரத்தில்
சாதி தேடும் விழிகள் (கன்னிக் கோயில் ராஜா )

பொதிக் காளை
லாடம் கழற்றப் பட்டது
அடிமாட்டுச் சந்தை (அருணாசலச் சிவா)

சுள்ளென்ற வெயில்
வரிசையில் குழந்தைகள்
எப்ப வருவார் அமைச்சர் (வசீகரன் )

உடைக்க முயல்கிறாள்
வறுமைக் கல்லை
கல்குவாரியில் அம்மா (நந்தவனம் சந்திர சேகரன் )

படைப்பாளிக்கு மரணம் இல்லை படைப்புகள் நிலைக்க படைப்பாளி நிலைப்பான் .கவிஞர்கள் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல .தங்கம் விலை ஏற ஏற நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை எண்ணிக்கையும் உயருகின்றது என்பன போன்ற பொதுவான கருத்துகளையும் விமர்சனத் தினிடையே பதிவித்துள்ளார் .

ஹைக்கூவை எதிர்த்தவர்களுக்கு ,விமர்சித்தவர்களுக்கு, வெறுத்தவர்களுக்கு ,குறை சொன்னவர்களுக்கு இந்தத் தொகுப்பில் உள்ள விமர்சனங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் .ஹைக்கூ விற்கு ஓர் அந்தஸ்துப் பெற்றுத் தந்துள்ளார் .ஹைக்கூ எழுதப் பட வேண்டியதே என்கிறார் .ஹைக்கூத்
தமிழுக்கு அவசியம் என்கிறார் .அச்சாக்கத்தையும் ,வடிவமைப்பையும் நன்றாக செய்துள்ளது மின்னல் கலைக்கூடம் .

ஹைக்கூ ஆற்றுப்படைஎன்னும் இத் தொகுப்பு ஹைக்கூ விமர்சனங்கள் என்று அடையாளப் படுத்தப் பட்டுள்ளது . கவிஞர் எவ்விடத்திலும் எந்த ஹைக்கூ வையும் விமர்சனம் செய்ய வில்லை மாறாக வரவேற்றுள்ளார் .வாழ்த்தியுள்ளார் .போற்றியுள்ளார் .புகழ்ந்துள்ளார் .எல்லாவற்றையும் பாராட்டுக் கண்ணாடி யோடே பார்த்துள்ளார் .ஹைக்கூவை வளர்க்க வேண்டும் . ஹைக்கூவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்னும் கவிஞரின் எண்ணமே வெளிப்பட்டுள்ளது .அணிந்துரை முன்னுரை வழங்கியவர்களையும் பாராட்டி உள்ளார் .விமர்சனத் தொகுப்பான இத் தொகுப்பில் விமர்சனம் என்பது இல்லை என்பதே இத் தொகுப்பின் மீதான விமர்சனம் .முனைவர் இரா .மோகன் முன்னுரையில் குறிப்பிட்டது போல் படைப்பில் குணங்களையே கண்டு வானளாவ போற்றும் பாராட்டு முறைத் திறனாய்வு வகையினையே பின்பற்றியுள்ளார் .ஹைக்கூப் படை தோற்கின் எப்படி வெல்லும் என்னும் கோசத்தை முன் வைக்கிறது கவிஞர் இரா .இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை வெல்ல வாழ்த்துக்கள் .

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக