ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

5 posters

Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by விநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 8:11 am

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் 16597445018991833259770
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. “எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்’ என்றார் தேவேந்திரன்


வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க’ என்று சொல்கிறார். “நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது’ என, தன் சாதனை பயணத்திற்கு, “பிரேக்’ போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். “மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க’ என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், “மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!’
நன்றி : அ.ப.இராசா — with Jenny


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty Re: டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by யினியவன் Sat Jun 23, 2012 8:15 am

கடின உழைப்பு தாமதமாக பலன் தந்தாலும் நூற்றுக்கு நூறு
வெற்றியைத் தரும்ன்னு ப்ரூவ் பண்ணிய தேவேந்திரனுக்கு வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty Re: டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by ராஜா Sat Jun 23, 2012 8:30 am

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன்.

“நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்

தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் , பனிரெண்டாம் வகுப்பில் 1160 மதிப்பெண் , நுழைவு தேர்வில் 297.75 மதிப்பெண் அதிர்ச்சி சிரி உன்னுடைய சாதனைகளுக்கு தலைவணங்குகிறேன் தம்பி தேவேந்திரன்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு வருடம் கொத்தடிமை மாதிரி மாணவர்களை +2 பாடத்தை படிக்க வைக்கும் சில பள்ளிகளில் கூட மாணவர்கள் இது போல மதிப்பெண் வாங்குவது கஷ்டம். உன் போன்ற மாணவர்களால் தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty Re: டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by தர்மா Sat Jun 23, 2012 12:24 pm

எனக்கு தெரிந்து சாதாரண குளத்தில் தான் அழகிய தாமரை வளரும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty Re: டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by அருண் Sat Jun 23, 2012 2:40 pm

கடின உழைப்பு என்றும் வீண் போகாது..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம் Empty Re: டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum