ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!

Go down

கீதை யோகம்  5 : கர்ம சந்நியாச யோகம் !! Empty கீதை யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 19, 2012 10:17 pm

கீதை 5:1 அர்ச்சுணன் கூறினான் : கிருஷ்ணா ! முதலில் செயல் விளைவில் பற்றற்று இரு என்றும் ;பின்னர் கடவுளுக்கான பக்தி தொண்டாக எச்செயலையும் செய்து வா என்றும் உபதேசிக்கிறீர்கள் ! அன்பு கூர்ந்து எதை செய்வது நல்லது என தெளிவாக கூறவும் !!

கீதை 5:2 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : செயல் விளைவில் பற்றற்று இருப்பதும் ; கடவுளுக்காக என்று எச்செயலையும் செய்வதும் வெவ்வேறானதல்ல ! இருப்பினும் கடவுளுக்காக என்று செயலாற்றுவதே மேலோட்டமாகவேனும் ஆத்தும விடுதலைக்கு நல்லது !!

கீதை 5:3 தனது செயல்களின் விளைவுகளின் மீது யார் விருப்பு வெறுப்பு கடந்தவரோ அவரே செயல் விளைவில் பற்றற்றவர் எனப்படுவார் ! அப்படிபட்ட நபர் இருமைகளின் பாதிப்புகளை கடறும் பயிற்சியால் எளிதாக லவ்கீக தளைகளில் இருந்து விடுபட்டு ஆத்தும விடுதலையில் முழுமையடைவார் !!

கீதை 5:4 கடவுளுக்கு பக்தி தொண்டையும் சாங்கிய யோகத்தையும் வெவ்வேறானது என ஆழ்ந்த அனுபவமற்றவர்கள் நினைக்கிறார்கள் ! உண்மையில் அனுபவம் பெற்றவர்கள் இவை இரண்டில் ஒன்றிலாகிலும் முன்னேறியவுடன் அது மற்றதின் நிறைவிலும் வந்து முடிந்து இரண்டும் ஒன்றாகியதை உணர்வார்கள் !

கீதை 5:5 சாங்கிய யோகத்தில் ஆழ்ந்து நிறைவடைந்தவர் அதே நிலையை பக்தியோகத்தில் நிறைவடைந்தவறும் அடைந்திருப்பதை உணர்ந்து ஒருவர் அனுபவத்தை ஒருவர் அனுபவமாக சுவீகரித்து கொள்ளுவார்கள் ! இரண்டும் கலந்த முதிர்ந்த யோகத்தில் நிலைப்பர் !!

கீதை 5:6 சாங்கிய யோக தத்துவ விசாரம் மட்டும் செய்கிறவர் முன்னேறிய நிலைமையிலும் பரிபூரணம் எய்தாமல் தவிப்பர் ! அந்நிலையில் உன்னதமான கடவுளின் மீது பக்தி கொண்டதும் பரிபூரண நிலையை உடனே எய்துவர் !!

கீதை 5:7 தனக்குள்ளாக மூழ்கி மனதையும் புலன்களையும் அடக்கி ஆத்தும தூய்மை எய்தியவர் ;கடவுளை ஏற்று பக்தி தொண்டாக கர்மயோகத்தை செய்யும் போது எல்லாம் அவருக்கு பிரியமாகவும் எல்லோருக்கும் அவர் பிரியமானவராகவும் ஆகும் ! எவ்வகை செயல்களாலும் அவர் பாதிக்க படுவதில்லை !!

கீதை 5:8 அத்தகு மெய்ஞானமய கோஷத்தில் நிலைத்தவர் உலகியலில் பார்த்தல் , கேட்டல் , தொடுதல் , நுகர்தல் , உண்ணல் , நகர்தல் , தூங்குதல் சுவாசித்தல் என செய்தாலும் உள்ளார்ந்து எதுவுமே செய்யாதவரைப்போலவே உணர்வர் !

கீதை 5:9 ஏனென்றால் அவரைப்பொறுத்து மேற்கண்ட இயக்கங்கள் அனைத்தும் உடலும் புலன்களும் அவற்றை ஈர்க்கும் பொருட்களுடன் இடைபடுவதால் தோண்றிமறைபவையே தவிர தானும் ஆத்துமாவும் அவைகளுக்கு அப்பாற்பட்டே இருப்பார் !!

கீதை 5:10 தண்ணீரில் தாமரை இலை இருப்பதுபோல ; செயல் விளைவில் பற்றற்று செயலின் விளைவுகள் அனைத்தையும் யார் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்களோ அவர்களின் மீது பாவங்கள் சுமறுவதில்லை !!

கீதை 5:11 யோகிகள் எனப்படுவோர் எல்லா பற்றுக்களையும் களைந்து ; உடலாலும் , மனதாலும் , அறிவாலும் , புலன்களாலும் கடவுளுக்கென்றே செயல்பட்டு ஆத்தும தூய்மை எய்துகிறார்கள் !!


கீதை 5:12 பக்தியில் நிலைத்த ஆத்துமா கலப்பில்லாத சாந்தியை எய்தும் ; ஏனெனில் தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அவன் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறான் ! கடவுளுடன் ஒத்திசைவை கற்றுக்கொள்ளாதவனோ தனது சுயமுயற்சியின் பலன்களின் மீது ஆசை கொண்டு தடுமாற்றம் அடைகிறான் !!

கீதை 5:13 உள்ளார்ந்த ஆத்துமா தன்னை உணர்ந்து தெளிந்து ;உடலை ஆழுமை செய்து ; தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அர்ப்பணித்து விடுமானால் ஒன்பது வாயில்கள் கொண்ட உடலில் பரிபூரணம் எய்தி சுகித்திருக்கும் ! ஆத்துமா கர்மம் செய்வதுமில்லை : கர்மத்தின் விளைவை அனுபவிப்பதுமில்லை !! மனதளவில் அவன் கர்மத்தை துறந்தவனாகிறான் !!

கீதை 5:14 உள்ளார்ந்த கடவுளின்ஆவியாகிய உயிரே ; உடலுக்கும் ஆத்துமாவுக்கும் இயக்கு சக்தியாகும் ! அது எக்செயல்களையும் உருவாக்குவதுமில்லை ; செயல்களின் பலன்களை பெற்றுக்கொள்வதுமில்லை ! அல்லது மனிதர்களை செயல்படும் படி தூண்டி விடுவதுமில்லை ; உடலின் மூவகை இயல்புகளிலிருந்தே கர்மத்தளைகள் உற்பத்தியாகி ஆத்துமாவை பிணைக்கிறது !!

கீதை 5:15 உண்ணதமான கடவுள் பூமியில் ஒருவர் பாவத்தையோ ; நெருக்கடிகளையோ செய்யும் படி ஒருபோதும் பணித்ததில்லை ! உடலில் உறையும் உயிரும் , ஆத்துமாவும் உடலால் எழும் மயக்கத்தால் தனது மெய்யுணர்வை மறந்து தடுமாற்றம் அடைகின்றன !!

கீதை 5:16 இருப்பினும் ஆத்துமா விளிப்படைந்து ஞானத்தால் அஞ்ஞானத்தை அழிக்குமானால் ; ஒருவன் எல்லாவற்றிலும் தெளிவடைவான் ! சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சமாக்குவது போல ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் !!

கீதை 5:17 எப்போது ஒருவனின் புத்தி . மனம் , பக்தி , அடைக்கலம் உண்ணதமான கடவுளின் மீது நிலைக்கிறதோ அப்பொழுதே அவன் பரிசுத்தம் அடைவதிலும் ; ஞானத்தை அடைவதிலும் ; தவறுகளிலிருந்து விடுபடவும் தொடங்கி ஆத்தும விடுதலைக்கான பாதையில் சரியாக முன்னேறுவான் !!

கீதை 5:18 மனத்தாழ்மை -- அடக்கம் நிறைந்த சாதுக்கள் தங்களது ஞானத்தால் ; கல்விமான்கள் , ரிஷிகள் , பசு . யானை , நாய் ஏன் நாயை உண்போரைக்கூட சமநோக்காகவே காண்பர் ! வெளிநோக்கு சம நோக்காகவே இருக்கும் !!

கீதை 5:19 ஏக இறைவனுடன் ஒருமைப்பாட்டிலும் ; இருமைகளை கடந்த மனநிலையிலும் நிலைத்தவர்கள் எவரோ ; அவர்கள் ஏற்கனவே பிறப்பு இறப்பை தளையை வெண்று நித்தியஜீவனை அடைந்தவர்களே ! அவர்கள் உண்ணதமானவரில் நிலைத்திருப்பதால் அவரைப்போலவே மாசுமருவற்றவராகவே ஆவர் !!

கீதை 5:20 மனம் விரும்பும் ஒன்றை சாதித்ததால் மகிழ்சியடையாதவர் எவரோ ; மனம் விரும்பாத ஒன்றை அடைந்ததால் துக்கிக்காதவர் எவரோ ; முற்றறிவில் நிலைத்து தடுமாற்றம் இன்றி கடவுளை அறிகிற அறிவில் வளர்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஞானத்தில் நிலைத்தவராவர் !!

கீதை 5:21 ஆத்தும விடுதலை அடைந்த நபர் லவ்கீக புலன் கவர்ச்சியின் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொள்ளமாட்டார் ; ஏனென்றால் தனக்குள் மூழ்கி ஆத்தும பரிபூரணத்தின் பேரின்பத்தில் திளைத்தவராகவே இருப்பார் ! அவர் உண்ணதமானவரில் நிலைப்பதால் தன்னுணர்வு பெற்று வற்றாத பேரின்பத்திற்கு ஏதுவாவார் !!

கீதை 5:22 ஞானவான் ஒருபோதும் துன்பத்திற்கு காரணமானவைகளில் பங்கு பற்றவே மாட்டார் ! அவைகள் புலன்கள் உலகோடு கொள்ளும் தொடர்புகளாலேயே உருவாகின்றன ! குந்தியின் மகனே ! அவ்வகை சிற்றின்பங்கள் துவங்குவது போன்றே விரைவில் முடியக்கூடியவை !நிலையற்றவைகளை ஞானவான் கொண்டாடுவதில்லை !!

கீதை 5:23 இந்த உடலை விட்டுவிடும் முன்னர் ஒருவர் புலன்களின் தகிப்பில் சாந்தி உண்டாக்குவாரானால் ; இச்சையையும் கோபத்தையும் தடுத்து நிறுத்தும் வல்லமையுள்ளவரானால் ; அவர் உண்ணத நிலையை எட்டி ; இவ்வுலகிலும் ஆனந்ததில் திளைப்பவராவார் !!

கீதை 5:24 யார் தனக்குள்ளாகவே திளைக்கிறாரோ ; தனக்குள்ளாகவே விளித்திருந்து ஆனந்தத்தை கண்டவரோ ; அவர் தனக்குள்ளாக மூழ்கி ஆத்தும பரிபூரணத்தை எட்டி உண்ணதமானவருடன் ஆத்துமதொடர்பு பெறுவார் ! அப்படியே முடிவில் பரமாத்துமாவுடன் ஐக்கியமடைவார் !!

கீதை 5:25 அஞ்ஞானத்திலிருந்து விளையும் இருமைகளை கடந்தவர் எவரோ ; தனக்குள்ளாக நிலைத்து ஆத்தும விளிப்படைந்தவர் எவரோ ; உலகில் நன்மைகளின் பக்கம் இடைவிடாமல் பங்களித்துக்கொண்டிருப்பவர் எவரோ ; அவரே உலகியலின் பாவத்தளைகள் அனைத்தையும் அறுத்து ; உண்ணதமானவருக்குள் ஆத்தும விடுதலை எய்துவார் !!

கீதை 5:26 கோபத்திலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடுபவர் எவரோ ; தன்னை உணர்கிறவர் எவரோ ; தன்னை தானே ஒழுங்குபடுத்துபவர் எவரோ ; பரிபூரணத்தை எட்ட இடைவிடாமல் உழைப்பவர் எவரோ ; அவரே கூடிய விரைவில் கடவுளில் ஆத்தும விடுதலை பெற வாக்களிக்க பட்டவராவார் !!

கீதை 5:27 எல்லா புலன் வழி நுகர்வையும் அடைத்து ; புருவ மத்தியில் கண்களையும் உணர்வையும் நிலைநிருத்தி ;உள்மூச்சும் வெளிமூச்சும் ஒடுங்கிய நிலையை எய்தி ; மனதையும் , புத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்து வருக !!

கீதை 5:28 இவ்வாறாக மனதையும் , பத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்கிறவர்கள் இச்சை , பயம் , கோபத்தை கடற பெறுவர் ! அவ்வாறு கடந்த நிலையடைந்தால் ஆத்தும விடுதலை அடைவது திண்ணம் !!

கீதை 5:29 அகில உலகங்கள் ,தேவதூதர்கள் அனைத்திற்கும் அதிபதியானவரும் ; இம் மண்ணுலகில் அனைத்து உயிரிணங்களையும் காக்கிறவரும் உணவளிப்பவரும் ; எல்லா யாகங்களும் யோகங்களும் யாரின் தயவை நாடி செய்யப்பட வேண்டுமோ ; அந்த உண்ணதமான கடவுளை அறிகிற அறிவிலே வளர்கிறவர்கள் உலகியலின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து சாந்தியிலும் சமாதானத்திலும் நிலைப்பர் !!


http://godsprophetcenter.com/index_5.html
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum