புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
1 Post - 2%
Barushree
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_m10இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவற்றையும் கொஞ்சம் படியுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jun 17, 2012 9:17 pm

நான் இந்த தகவல்களை http://santhanamk.blogspot.இன் என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதித்தேன்

b]
" கற்பனையை மிஞ்சிய அனுபவம் ?"
கற்பனையை மிஞ்சிய அனுபவம் ஒன்று உண்டு ![/b]
முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திரப் பிரசாத், பீகார் மாகாணத்தில் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கச் சென்றபோது, ஒரு குடிசையில் ஏழைப் பெண் ஒருவர் வசிக்கிறார் . அவரைப் பார்த்து ஓட்டு கேட்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . அவருடைய மகள் உள்ளே இருப்பது அறிந்து, அவரைப் பார்த்து ஓட்டு கேட்கவும் விரும்புகிறார். காத்திருக்கச் சொல்கிற அந்தத் தாய் உள்ளே சென்ற ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, வெளியே வருகிறார் மகள் , இருவரையும் ஒருசேர சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் ராஜேந்திரப் பிரசாத் . ஆனால், அது முடியவில்லை. சிந்தித்துப் பார்த்த அவருக்கு ஓர் உண்மை புரிகிறது . தாய்க்கும் மகளுக்கும் இருப்பது ஒரே புடவை

"வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா ? "


" நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதில் தவறு இல்லை . அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, ' இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா ? ' என்று கேட்டார் அண்ணா . ' நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே , நீங்களூமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள் ? ' என்று சிரித்தபடியே கேட்டார் அமெரிக்க மருத்துவர் . ' ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன் . அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது . அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன் ' என்றார் .
பகத்சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்தபோதுகூட, ' இந்த புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன் ' என்றார் . அண்ணாவுக்கு மறுநாள் குறித்து நிச்சயம் கிடையாது . பக்த்சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது . மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ?


கதை -- நீதி !
அலெக்சாண்டரை அடிமை ஆக்க ஆசையா ? !
கதை : இந்தியா மீது படையெடுக்க அலெக்சாண்டர் ஆயத்தமானபோது, அவரது மனைவி தனது ஆசை என்று இப்படிக் கூறினார் , ' இந்தியாவில் ' ரிஷி'கள் எனப்படும் முனிவர்கள் தவ வலிமையால் அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள் . அப்படி ஒரு ' ரிஷி'யை இந்தியாவில் இருந்து வரும்போது எனக்காகக் கொண்டுவாருங்கள் ! ' படையெடுப்பு முடிந்ததும், பிரபலமான ஒரு ரிஷியைக் கண்டுபிடித்துத் தன்னொடு வருமாறு பணித்தார் அலெக்சாண்டர் . ரிஷி நிர்தாட்சன்யமாக மறுத்துவிட்டார் . அதுவரை அலெக்சாண்டரின் வார்த்தைக்கு யாரும் மறு வார்த்தை பேசியது இல்லை . உச்சகட்ட கோபத்தில் இருந்து தன் வாளை உருவினார் அலெக்சாண்டர் . அதைப் பார்த்ததும் ரிஷி முகத்தில் பிரகாசமான புன்னகை . அதுவரை அலெக்சாண்டரின் வாளைப் பார்த்ததும் யாரும் சிரித்ததும் இல்லை . கோபத்தையும் தாண்டி ஆச்சர்யத்தில் வளைந்தன அலெக்சாண்டரின் புருவங்கள் . ' நீ ஏன் சிரிகிறாய் ? நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன் தெரியுமா....' என்றார் அலெக்சாண்டர் .
" நீ உன் வாளைப் பயன்படுத்தும் முன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள் . அந்த வாளால் நீ என்னைக் கொல்ல முடியாது என்பது முதல் சங்கதி . இரண்டாவது, நீ எனது அடிமைக்கு அடிமையாக இருக்கிறாய் ! "
புரியாமல் விளக்கம் கேட்டார் அலெக்சாண்டர் . " அந்த வாளால் என் உடலைத்தான் உன்னால் வெட்டி வீச முடியும் . ஆனால், ' நான் ' என்பது இந்த உடல் கிடையாது ! "
ஏதோ புரிந்தும் புரியாமல் தலை அசைத்த அலெக்சாண்டர், " ஆனால், நான் இந்த உலகத்தின் பேரரசன் . என்னை எப்படி உனது அடிமையின் அடிமை என்றாய் ? " என்று கேட்டார் . " ஆசை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் நான் கட்டுப்படுத்தி எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் . நான் எப்போதும் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல மாட்டேன் .
மாறாக, அவைதான் எப்போதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும் . ஆனால், உன்னைப் பொறுத்தவரை, என்னிடம் அடிமையாக இருக்கும் ஆசை, கோபம் என்ற அடிமைகளிடம் நீ அடிமையாக இருக்கிறாய் . அப்படியானால் நான் சொன்னது உண்மைதானே ! '' என்பது ரிஷியின் பதில் .
நீதி : எப்போதும் அடிமைக்கு அடிமை ஆகாதீர்கள் !

ஐ. நா. சபை !
நைல் நதிக்கரை ஓரம் முதலைகள் வாய் திறந்து படுத்திருக்கும் . அப்படி வாய் திறந்து எவ்வளவு காற்றைத் தன் சுவாசப் பையில் சேமித்துக்கொள்கிறதோ, அதற்கேற்ப நீருக்குள் அமிழ்ந்திருக்கும் . முதலை வாய் திறக்கும் சமயம், அதன் பல் இடுக்குகளில் ஒட்டி இருக்கிற உணவுத் துகள்களைக் கொத்தித் தின்ன ஒரு பறவை வரும் . முதலையும் விட்டுவிடும் . காரணம், பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டால்தான் அடுத்த முறை இரை உண்ணும்போது தடை ஏற்படாமல் இருக்கும் .அதே சமயம், முதலைக்கு பசி ஏற்படுகிறபோது அந்தப் பறவையையே தின்றுவிடும் . அப்படி வல்லரசுகள் தரும் நிதியைக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில்தான் ஐ.நா. இருக்கிறது .

ஷாஜகான் எழுதிய கடிதம் !


பதவி ஆசையால், பெற்ற தந்தை என்றும் பாராமல் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜகானை சிறையில் அடைத்து தண்ணீர் கூட தராமல் கொடுமைப்படுத்தினான் ஔரங்கசீப் . அது குறித்து ஔரங்கசீப்புக்கு கடிதம் எழுதினார் ஷாஜகான் . அதில், ' ஔரங்கசீப்.... இந்துக்கள் சம்பிரதாயத்தில், தந்தை இறந்துவிட்டால், அவருடைய மகன் எள்ளையும், தண்ணீரையும் வழங்கி இறந்த தன் தந்தையின் ஆன்மாவுடைய பசியைத் தீர்ப்பான் . ஆனால், நீ உயிருடன் இருக்கும் எனக்கு தண்ணீர் கூட தர மறுத்து தவிக்க விட்டுள்ளாய் ' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்

ராஜராஜன் காலத்தில்...

* ராஜராஜ சோழனின் ராஜகுருவாக விளங்கியவர் ஈசான சிவ பண்டிதர் .
* தஞ்சைப் பெரிய கோயிலின் தலைமை அர்ச்சகராகத் திகழ்ந்தவர் பவணபிடாரன் .
* தஞ்சைக் கோயிலில் இன்றும் நாம் காணும் கல்வெட்டுகளை வெட்டியவர் பாளூர் கிழவன் .
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி, வீர சோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன் . அவரது உதவியாளர்கள் : மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் .
* ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் .
* மற்ற மன்னர்கள்போல் தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதித்து பெருமை கொண்டாடாமல், தனக்கு உதவிய அத்தனை பேரின் பெயரையும் பொறித்தது தமிழ்மன்னன் ராஜராஜனின் பெருந்தன்மை

பழைய பெயர் -- புதிய பெயர் !

தேசிய கீதத்தில் வரும் ' உத்கல் ' என்ற சொல்தான் இன்றைய ஒரிசாவை குறிக்கிற புராதனப் பெயர் .
மெட்ராஸ் -- சென்னப்பட்டனம் -- சென்னை .
சிலோன் -- ஸ்ரீலங்கா .
பர்மா -- மியான்மர் .
பாரசீகம் -- ஈரான் .
பாலஸ்தீனம் -- இஸ்ரேல் .
சோவியத் யூனியன் -- ரஷ்யா .
கிழக்கு பாகிஸ்தான் -- பங்களாதேஷ் .
மெஸமடோமியா -- ஈராக் .
சயாம் -- தாய்லாந்து .
மலாவாய் -- நியூசிலாந்து .
ஹாலந்து -- நெதர்லாந்து .
கம்பூசியா -- கம்போடியா .
பார்மோஸ் -- தைவான் .
சாண்ட் விச் தீவுகள் -- ஹவாய் .
தென் ரொடீஷியா -- ஜிம்பாவே .
தென் மேற்கு ஆப்பிரிக்கா -- நமீபியா .
அபிசீனியா -- எத்தியோப்பியா .
டச் ஈஸ்ட் இண்டீஸ் -- இந்தோனிஷியா .

இலங்கையில் தமிழர்களின் பூர்வீகப் பகுதியான திரிகோணமலையில் திருக்கோனேச்சுரர் கோயில் அருகில் கன்னியா கிராமத்தில் ராவணனால் உருவாக்கப்பட்ட 7 சுடுநீர் ஊற்றுக்கள் உள்ளது . ஆன்மிக உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கிணறுகள், ராவணன் தன் தாயாரின் ஈமச்சடங்குகளை செய்வதர்காக உருவாக்கியவை என்று புராணங்களும், ராமாயணமும் குறிப்பிடுகிறது

ராஜராஜனுக்கு 11 மனைவியர்கள் .

ராஜராஜ சோழனின் பட்டத்தரசி லோகமாதேவி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் . இவர் தவிர மேலும் 10 மனைவிகள் ராஜராஜனுக்கு உண்டு .
1 . சோழமாதேவி
2 . திரைலோக்கிய மாதேவி
3 . பஞ்சவன் மாதேவி
4 . அபிமானவல்லி
5 . இலாடமாதேவி
6 . பிருத்விமாதேவி
7 . மீனவன்மாதேவி
8 . வீரநாராயணி
9 . வில்லவன் மாதேவி
10. வானவன் மாதேவி
ஆகியோர் அவர்கள் . அத்தனை பேரும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டும்போது, தங்களிடமிருந்த அத்தனை நகைகளையும் திருப்பணிக்குத் தந்து பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள்

காந்தி .

காந்தி , அரிச்சந்திரனின் ரசிகர் . சத்திய சோதனையாளர் . அரையாடைப் பக்கிரி . அகிம்சைப் போராளி !
* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2 -ல் பிறந்தார் . மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30 -ல் மறைந்தார் . காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது !
* காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி விடுமுறை . குடியரசு தினம் , சுதந்திர தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள் !
* முதன்முதலில் ' தேசத் தந்தை ' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் . ' மகாத்மா ' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் !
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் ' ஹரிஜன் ' என்பது . அதன் பொருள் , ' கடவுளின் குழந்தைகள் ! '
* ' உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி ' என்று சொன்ன காந்தி , லண்டனில் சட்டம் பயிலும்போது , ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார் !
* காந்தி ஒரு துறவியைப்போன்றவர்தான் . ஆனால் , அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை . 1931 -ல் லண்டனுக்குச் சென்றபோது , பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி . ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு , பக்கிஙஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது , அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர் . அதில் ஒருவர் , ' இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா ' என்று கேட்டார் .' எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து , மன்னரே அணிந்திருந்தார் ' என்று பதில் அளித்தார் காந்தி !
* ' வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தின்போது , காந்தி சொன்ன வாக்கியம்தான்... ' செய் அல்லது செத்து மடி ! '
* ' கொள்கை இல்லாத அரசியல் , வேலை செய்யாமல் வரும் செல்வம் , மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம் , பண்பு இல்லாத அறிவு , நியாயம் இல்லாத வணிகம் , மனிதம் மறந்த அறிவியல் , தியாகம் இல்லாத வழிபாடு '. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள் !
* கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார் . எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும் , உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார் . அதை அவரும் கடைப்பிடித்தார் !
* தான் தவறு செய்தால் , அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால் , அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் . இந்தக் குணம் , அவர் தாய் புத்லிபாயிடம் இருந்து வந்ததாகும் !
* இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா ? அவர் வாழ்நாளில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது . இது நடந்தது 1961 ஜனவரி 26 -ல் !
* ' என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு ' என்று காந்தி அழைத்தது வினோபா பாவேவைத்தான் !
* மார்டின் லூதர்கிங் , தலாய் லாமா , ஆன் சான் சூகி , நெல்சன் மண்டேலா , அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கிய காரணம் , காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் . ஆனால் , காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை !
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது , அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர் . ஒருவர் காந்தி . இன்னொருவர் தந்தை பெரியார் !
* ' கனவில் இருந்து நிஜத்துக்கு , இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு ' - காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது !

அயோத்தி .

மொத்தம் உள்ள 77 ஏக்கர் நிலத்தில் வெறும் 2.7 ஏக்கர் நிலம்தான் சர்ச்சைக்குரியதாக விளங்குகிறது . இதுதான் ராமர் பிறந்த இடம் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அலகு ஒப்பீடு .

1 இன்ச் = 2.54 செ. மீ.
1 அடி = 12 இன்ச் .
1 எக்டேர் = 2. 471 ஏக்கர் .
1 மைல் = 1.609 கி. மீ.
1 கடல் மைல் = 1.852 கி. மீ.
1 கிலோ = 2.205 பவுண்டு .

கடல் எல்லை....பெரும் தொல்லை !

ஒவ்வொரு நாடும் , அதன் கடற்கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தன் எல்லையாக்கிக்கொள்ளலாம் . 12 நாட்டிகல் மைல் என்பது உத்தேசமாக 22.2 கி. மீ. தூரம் . இந்த 22 கி. மீ. தூரத்துக்கும் முதலாளி அந்த நாடு தான் . ஆனால் , இந்த வழியாக பிற நாட்டுக் பயணக் கப்பல்கள் போன்றவை செல்லலாம் . ஒருவேளை 22 கி. மீ.க்குள் இன்னொரு நாட்டின் எல்லை வந்தால் என்ன செய்வது ? அதுதான் நமக்கும் இலங்கைக்கும் உள்ள பிரச்னை .
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 30 கி. மீ.தான் . இரண்டு நாட்டின் கடல் எல்லைகளும் ஒன்றின் மீது ஒன்றாக இருக்கின்றன . இத்தகைய சூழலில் இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி எல்லையை ஆளுக்குப் பாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் .
'எனக்கு 22 கி. மீ. தேவை இல்லை . கொஞ்சம் போதும் ' என நினைத்தால் பிரச்னை இல்லை . சிங்கப்பூர் , ஜோர்டான் போன்ற நாடுகள் எல்லாம் ' எங்களுக்கு 6 கி. மீ. தூரம் போதும் ' என விரும்பி ஏற்றுக்கொண்டு இருக்கின்றன . இரண்டு நாடுகளுமே எனக்கு அதிகம் இடம் வேண்டும் என குடுமிப்பிடி சண்டை போட்டால் நிலைமை சிக்கலாகும் .
இந்த 22 கிலோ மீட்டரையும் தாண்டி இன்னும் ஒரு 22 கி. மீ. தூரத்தை நாடுகள் தங்கள் ' கண்காணிப்பில் ' வைத்திருக்கலாம் .இது பெரும்பாலும் போர்கள் அண்டை நாடுகளிலிருந்து வரும் ஆபத்து போன்ற சிக்கல்களுக்காக ஏற்படுத்தப்பட்டது . கடலில் ரோந்து போக வேண்டும் , தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றால் இந்த எல்லையைப் பயன்படுத்தலாம் .
இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி , மூன்றாவதாக ஓர் எல்லையும் உண்டு . அது பொருளாதார எல்லை . கரையில் இருந்து சுமார் 393 கி. மீ. தொலைவில் உள்ள எல்லா கடல் வளங்களும் அந்த நாட்டுக்கே சொந்தம் . வேறு நாடுகள் கப்பல் ஏறி வந்து உரிமை கொண்டாடமுடியாது . மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற சகல பொருளாதார உரிமைகளுக்கும் கடிவாளம் அந்தந்த் நாட்டிடமே . இதற்கு மேலும் எல்லையை நீட்டிக்க விரும்பினால், சர்வதேசக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்

ஆச்சர்யமான வரலாறு !
வரலாறு ஆச்சர்யங்களால் நிரம்பியது . ஜீன் பால் முல்டர்ஸ் என்கிற பத்திரிகையாளர் , தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹிட்லரின் தம்பி , ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹிட்லரின் மாமா இருவரிடமும் மரபணுப் பரிசோதனை செய்தார் . ஹிட்லரின் முன்னோர்கள் யூத மற்றும் ஆப்பிரிக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்க , ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது உலகம் . லட்சக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் , ஒரு யூத வம்சத்தவர் என்றால் என்ன சொல்வது ?
என்ன கொடுமை ஹிட்லர் !

பாத காணிக்கை .
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொது, ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .சிறையில் அடைத்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர் . இருந்தாலும் அந்த அதிகாரி தமது நூலகத்தில்லிருந்து சிறந்த நூல்களை காந்தியடிகள் படிப்பதற்காக அனுப்பி வந்தார் .
சிறையிலிருந்த காந்தியடிகள் செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் . விடுதலையானதும் ஜெனரல் ஸ்மட்ஸை காணஸ் சென்றார் காந்திஜி . அப்போது தாம் தயாரித்திருந்த ஒரு ஜோடி செருப்புகளை அவருக்கு பரிசாக அளித்தார் . நெகிழ்ந்து போய் ஸ்மட்ஸ் அதை பெற்றுக் கொண்டார் .
பின்னாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த ஸ்மட்ஸ், ' நான் சிறையில் தள்ளிய அந்த மனிதரின் ( காந்திஜி ) மகத்தான தயாள குணத்தை முதன்முதலில் கண்டுகொண்டேன் . அவர் தந்த பரிசு சாதாரணமாயினும் , அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை . அன்பு, தயாள குணம் இரண்டுக்கும் நினைவுச் சின்னமாக விளங்கும் அந்தக் காலணியை மிகவும் கவனமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறேன் ' என்றார்

ஆப்கன் அதிர்ச்சி !

ஆப்கன் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக சேவகி ஒருவர் சொன்னது இது ... " ஆப்கானிஸ்தான் சாலைகளில் குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளி விட்டுத்தான் கணவனைப் பின் தொடர்ந்து மனைவி நடந்து வர வேண்டும் . நிவாரணப் பணிகளுக்காக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு தம்பதியினர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . ஆனால், ஆச்சர்யம்... கணவனுக்கு ஆறு அடிகள் முன்பாக மனைவி சென்றுகொண்டு இருந்தார் . எனக்குப் பயங்கர சந்தோஷம் . உடனே ஓடிச் சென்று, அவளது கணவனைப் பாராட்டினேன் . அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தவன், ' இந்தப் பகுதியில் புதைத்துவைக்கப்பட்டு இருந்த பல கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப் படவில்லை. அதனால்தான் என் மனைவியை எனக்கு முன்னால் நடக்கச் சொல்லி, அவள் பாதங்கள் கடந்த பாதையில் நான் நடக்கிறேன் , என்றான் அவன் . நான் நிலைகுலைந்துவிட்டேன் ! " இதுதான் ஆப்கனில் பெண்களின் நிலை

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் !

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .
* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .
* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "
* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "
* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "
* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "
* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "
* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "
* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "
* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "
* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "
* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "
* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "
* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்
* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .
* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு !

மலைக்கோட்டை.
மங்களாவரம் மலையில் ஆடுமேய்த்த ஒரு சிறுவன் ஒரு இடத்தில் அதிசயமான தெய்வீக விக்ரகத்தைக் கண்டு காகாதிய மன்னரிடம் சொல்ல, அதை புனித இடமாகக் கருதிய மன்னர், இங்கு கோட்டை கட்டினார். இதனால் இந்த இடத்திற்கு ' மேய்ப்பனின் மலை ' என்ற அர்த்தம் கொண்ட ' கொள்ள காண்டா ' என்ற தெலுங்கு பெயர் வந்தது. பின்னர், கோல்கண்டா என்று மருவியுள்ளது.
கோல்கண்டா, ஆரம்பத்தில் இந்து மன்னர்களின் ஆட்சியில் தக்காண நாட்டின் தலைமையிடமாக இருந்துவந்தது. காகாதிய மன்னர்கள் ஆட்சியில் களிமண் கோட்டையாக இருந்த இந்த மலைக்கோட்டை, பாமினி சுல்தான்கள் ஆட்சியில் கல் மதில்களுடன் சில மாற்றங்களைப் பெற்றது. பிறகு, குதூப் சாஹி வம்ச ஆட்சியில் 7 கி. மீ., தூர மதில்சுவர் மற்றும் கிரானைட் வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட வடிவம் பெற்றது. அதன்பின் கோல்கண்டாவைக் கைப்பற்றிய முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப், கோட்டையின் பல பகுதிகளை இடித்து புதுப்பித்தார். இப்படி, இந்தியப் பாரம்பரிய கட்டடக்கலையும் பாரசீகக் கலைநுட்பங்களும் கலந்து மிளிர்கிறது இந்தக் கோட்டை !
காகாதிய வம்ச மன்னர் கட்டிய காளிகோயில், கோட்டையின் ஆரம்பகால வரலாற்றுக்கு சாட்சி கூறுகிறது. அனுமதி பெறாமல் பத்ராசலம் கோயில் கட்டிய பக்த ராமதாஸரை சுல்தான் தானா ஷா சித்ரவதை செய்த சிறை, இன்னொரு மவுன சாட்சி.
இந்த கோட்டையின் தனிச்சிறப்பு, ' எதிரொலி ' அறைகள். விதவிதமான கூரை அமைப்புகளால் ஒலியைத் திசைதிருப்பி இந்த அதிசய அறைகளை அமைத்துள்ளனர். ' கைதட்டல் அறை ' என்ற அறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கை தட்டினால், 24 முறை எதிரொலி கேட்கிறது !
தண்ணீரை கோட்டை பகுதிகளுக்குள் இடமாற்றூவதற்கான நுட்பமான அமைப்புகள், இன்னொரு பிரமிப்பு. பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரம் இருந்த இடம், மார்க்கபோலோ புகழ்ந்து எழுதிய இடம் என்று நீண்டுகொண்டே போகிறது கோல்கொண்டா மலைக்கோட்டையின் சரித்திரம்
[

பகத்சிங் !

பகத்சிங் பிறந்த நாள் செப்டம்பர் 27 .
அப்பொழுது 1931 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு பகத்சிங் குடும்பத்தினர் அவரைப் பார்க்க வருகிறார்கள் . அதுதான் குடும்பத்தினருடனான கடைசி சந்திப்பு . கடைசியாக விடைபெற்றுப் போகிறபோது பகத்சிங்கின் தம்பி குல்தாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை . ஆனால், அவனுடைய தாய், ' உன்னைத் தூக்கில் போடும்போது நீ, புரட்சி ஓங்குக என்று முழக்கம் செய் ' என்று சொல்கிறார் .
குறித்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே ( மார்ச் 23, 1931 மாலை ) பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்படுகிறார்கள் . முன்னதாகத் தூக்கிலிடப்படும் செய்தி குடும்பத்திற்குத் தெரியாது . அவர் தூக்கிலிடப்பட்ட மறுநாள் அதிகாலையில் அவர்கள் சிறைக்கு வந்து அவரைக் கடைசிமுறையாகக் காணக் காத்திருக்கிறார்கள் .
அவரது சாம்பல் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை . சட்லெஜ் நதியில் அது கரைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள் . ஆனால், உண்மையில் முழு உடலும் எரியும் வரை காத்திருக்காமல் அவரது உடல் கோடரியால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது .
தூக்கிலிடப்பட்டபோது பகத்சிங்கின் வயது 23 . அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் : " என் முகத்தை கருப்புத்துணியால் மூடாதீர்கள் . என் மூச்சு நிற்கும் வேளையில் என் தாய்மண்னைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் .

பிரமிடுகள் !

பிரமிடுகள் உலக அதிசயம் மட்டுமல்ல ; உலகின் காஸ்ட்லியான பொருள்கள் திருடப்படும் இடமும்கூட ! எகிப்திய மன்னர்கள் இறந்த பின், அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், கட்டில், கைத்தடி என எல்லாப் பொக்கிஷங்களையும் உள்ளே வைத்துப் பிரமிடு கட்டினார்கள் . திருடர்களுக்கு பிரமிடுகள் என்றால் சொர்க்கம் . மம்மிகளைச் சுற்றி இருக்கும் லினன் துணிகள்கூட விலை போகும் . மம்மி போட்டு இருக்கும் தங்க முகமூடி, நகை, மோதிரம் எல்லாமே அதைவிட அதிகமாக விலைபோகும் . ஒரே திருட்டு... 'ஓஹோ'ன்னு வாழ்க்கை . கும்பல் கும்பலாகப் பிரமிடுக்குள் புகுந்தார்கள் திருடர்கள் . டுட்டன் காமென் கல்லறையை மட்டும்தான் விட்டுவைத்தார்கள் . பிரமிடுக்குள் நுழைவதும், வழி கண்டுபிடிப்பதும் சவாலான விஷயம் . பெரும்பாலான மன்னர்களின் கல்லறை பூமிக்கு அடியில் இருக்கும் . அதற்கு மேல் பொய்யாக ஒரு கல்லறை இருக்கும் . ரொம்பக் கனமான கதவுகளைத் திறந்தால் மேலே தொங்கும் பெரிய கல் விழுந்து நசுக்கிவிடும் . கல்லறைக்கு அருகே குழிகள் மூடி இருக்கும் . கால்வைத்தால் கபாலமோட்சம்தான் . இத்தனையையும் தாண்டி எல்லா பிரமிடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டார்கள் திருடர்கள் . ' இதுவரை பிரமிடுகளில் குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொக்கிஷங்கள் திருடு போயிருக்கும் ' என்று கனக்குச் சொல்கிறது எகிப்து அரசு


நான் இந்த தகவல்களை http://santhanamk.blogspot.இன் என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதித்தேன்





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  1357389இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  59010615இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images3ijfஇவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jun 17, 2012 10:21 pm

அமெரிக்காவை !
* ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக 1945 ம் ஆண்டு செயல்பட ஆரம்பித்தது .
* ஒரு பாஸ்போர்ட் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் .
* அமெரிக்கா ஒரு மெகா நாடு என்று எல்லோருக்கும் தெரியும் ,. அந்த நாடு 50 மாநிலங்களைக்கொண்டது என்று தெரியுமா ?
* மோனலிசா ஓவியம் பாரீஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது .
* அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் உயரம் 151 அடி .
* போரில் அமெரிக்கா அணு ஆயுதங்களைப் 1941 ம் ஆண்டு பயன்படுத்தியது .
* நாசா விண்வெளி மையத்துக்கு ' கென்னடி ' என்று அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் சூட்ட்ப்பட்டுள்ளது .
* அமெரிக்காவின் ' ட்வின் டவர்ஸ் ' எனப்படும் ரெட்டைக் கோபுரம் 2001 -ம் வருஷம் செப்டம்பர் 11 -ம் தேதி
தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது . அதன் உயரம் 1368 அடி .
* அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வாஷிங்டனில் பென்ஸில்வேனியா அவென்யூ என்ற இடத்தில்
அமைந்துள்ளது .
* அமெரிக்காவில் எந்த ஒரு அவசர உதவிக்கும் ( FIRE , MEDICAL EMERGENCY , CRIME ) 911 என்ற தொலைபேசி
எண்ணை மட்டுமே உபயோகிப்பார்கள் ..
* அமெரிக்காவின் புகழ்பெற்ற இடமான ' WALL STREET ' ( சுவர் தெரு ) நியூயாக் நகரத்தில் உள்ளது .
* நியூயாக் நகரம் மன்ஹாட்டன் தீவில் அமைந்துள்ளது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  1357389இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  59010615இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images3ijfஇவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jun 18, 2012 7:03 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அரிய தகவல்கள் அனைத்தும் அறிய தந்தமைக்கு நன்றி :வணக்கம்:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jun 18, 2012 11:54 am

dhilipdsp wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அரிய தகவல்கள் அனைத்தும் அறிய தந்தமைக்கு நன்றி :வணக்கம்:
நன்றி நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  1357389இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  59010615இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images3ijfஇவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 18, 2012 2:20 pm

எப்போதும் அடிமைக்கு அடிமை ஆகாதீர்கள் !
சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 18, 2012 6:23 pm

சூப்பருங்க அருமை கேசவன்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jun 18, 2012 7:00 pm

சூப்பருங்க சிறப்பான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jun 18, 2012 7:28 pm

அனைத்து பொக்கிஷங்களும் அருமை சூப்பருங்க நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 18, 2012 9:27 pm

மிகவும் நன்றி கேசவன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 19, 2012 9:31 am

முரளிராஜா wrote:மிகவும் நன்றி கேசவன்
நன்றி நன்றி நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  1357389இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  59010615இவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images3ijfஇவற்றையும்  கொஞ்சம்  படியுகள்  Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக