ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

3 posters

Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by அருண் Mon Jun 18, 2012 11:16 am

கேள்வி: விண்டோஸ் பிரிவியூ சிஸ்டம் பைல் களை ஒரு டிவிடி அல்லது சிடியில் பதிந்து, பின் நாம் விரும்பும் நாளில் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியுமா?
பதில்: இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. சிஸ்டம் இன்ஸ்டலேஷன் செய்வதற்கான setup executable பைலை தரவிறக்கம் செய்து இயக்கவும். அதுவாகவே, மற்ற பைல்களை யும் இறக்கிவிடும். பின்னர், டிவிடியில் எழுத உதவிடும் புரோகிராம் மூலம், அனைத்து பைல்களையும் ஒரு டிவிடியில் எழுதலாம். அல்லது ஒரு பிளாஷ் ட்ரைவிலும் அவற்றைப் பதிந்து கொண்டு பயன் படுத்தலாம். இந்த இரண்டையும், விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ சிஸ்டம் இன்ஸ்டால் செய்திட பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: ரிலீஸ் பிரிவியூ தமிழ் மொழியில் வந்துள்ளதா?

பதில்: இல்லை. ஆங்கிலம் மற்றும் சீனம் உட்பட 13 மொழிகளில் வந்துள்ளது.

கேள்வி: எந்த பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இதனைப் பதிந்து இயக்கலாம்?
பதில்: விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதன் பின்னர் வெளியான, எந்த விண்டோஸ் சிஸ்டம் கம்ப்யூட்டர்களிலும் இதனை நிறு வலாம். ஆனால், பாதுகாப்பாக முந்தைய சிஸ்டம் சிடி வைத்துக் கொள்வது நல்லது. மீண்டும் முந்தைய சிஸ்டம் செல்ல அது தேவைப்படும். இது குறித்து http://www.winbeta.org/guides/how-remove-windows-8-consumer-preview-and-install-windows-7 என்ற முகவரியில் என்ன தரப்பட்டுள்ளது என்று படித்த பின்னர் செயல்படவும்.

கேள்வி: தொடர்ந்து இந்த ரிலீஸ் பிரிவியு பதிப்பினைப் பயன்படுத்தலாமா?
பதில்: 2013 ஜனவரி 15 வரை பயன் படுத்தலாம். அதன் பின்னர் பயன்படுத்து வது சட்டப்படி தவறு என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: ஸ்டார்ட் பட்டன் குறித்து பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித் ததை கருத்தில் கொண்டு, மைக்ரோசாப்ட் அதனை மீண்டும் தந்துள்ளதா? தருமா?
பதில்: இல்லை. தரவில்லை. இனியும் தருவது சந்தேகமே. அதற்குப் பதிலாக, மெட்ரோ ஸ்கிரீனை எப்படி விரும்பிப் பயன் படுத்தலாம் என்பதற்கான விளக்கக் குறிப்பு களை அளிக்கப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ பதிந்த பின்னர், என் டிவிடி ட்ரைவ் பயன்படுத்த முடியுமா?
பதில்: ஆம், பயன்படுத்தலாம். விண்டோஸ் மீடியா சென்டர் வசதியை கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இருப் பினும் கட்டணம் எவ்வளவு எனக் குறிப்பிடவில்லை. “Add features to Windows 8” என்ற பிரிவிற்குச் சென்று MBFBV-W3DP2-2MVKN-PJCQD-KKTF7 என்ற ப்ராடக்ட் கீயினைப் பயன்படுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திட ப்ராடக்ட் கீ தேவையா?
பதில்: நேரடியாக இணையம் வழி இன்ஸ் டால் செய்தால் தேவையில்லை. டிவிடியில் பதிந்து இன்ஸ்டால் செய்தால், ப்ராடக்ட் கீ கேட்கப்படும். அப்போது TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF என்ற ப்ராடக்ட் கீயினைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: எனக்குப் பிடிக்கவில்லை என்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து, என் முந்தைய சிஸ்டத்திற்குச் செல்ல முடியுமா?
பதில்: நீங்களாக, ஜஸ்ட் லைக் தட் செல்ல முடியாது. பழைய சிஸ்டத்தின் சிடியைக் கொண்டு, புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். உங்களுடைய பழைய அப்ளிகேஷன் புரோகிராம்கள், சார்ந்த டேட்டா பைல் என அனைத்தையும் முன்பே பேக் அப் செய்து வைத்திருக்க வேண்டும்.

கேள்வி: விண் 8 சிஸ்டத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், புதிய விஷயங்கள் ஏதாவது உள்ளனவா?
பதில்: ஆம்,நிறைய உள்ளன. குறிப்பாக அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயர் இணைந்தே கிடைக்கிறது. மெட்ரோ பதிப்பிற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் அனைத்து ப்ளக் இன் வசதிகளையும் எடுக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதனை விண்டோஸ் 8 பதிப்பில் மட்டுமே இயக்க முடியும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஒன்றினை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், அது கிடைப்பதற்கான அறிகுறி இல்லை.

கேள்வி: கன்ஸ்யூமர் பிரிவியூ பதிப்பிற்கெனப் பயன்படுத்திய, பெர்சனல் கம்ப்யூட்டரை ரிலீஸ் பிரிவியூவிற்கும் பயன்படுத்தலாமா?
பதில்: இந்த கேள்விக்கு மைக்ரோசாப்ட் "ஆம்' என்றே பதில் சொல்லியுள்ளது. ஆனால், பன்னாட்டளவில் பல வாடிக்கை யாளர்கள் இது இயலவில்லை என்று கூறியுள்ளனர். சில கம்ப்யூட்டர்களில் முடியவில்லை என்பதே உண்மை.

கேள்வி: எப்போது விண்டோஸ் 8 முழுமையான சிஸ்டம் பதிப்பு விற்பனைக்கு வரும்.
பதில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கே இந்த கேள்விக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், எல்லாரும் வரும் அக்டோபரில் எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் சந்தேகங்கள் இருந்தால், http://windows.microsoft.com/en-US/windows-8/faq என்ற முகவரியில் மைக்ரோசாப்ட் தரும் விளக்கங்களைக் காணவும்.

கம்ப்யூட்டர் மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty Re: விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by ராஜா Mon Jun 18, 2012 11:40 am

ஆகா மொத்தம் , வழக்கம் போல microsoft இதிலும் சொதப்பியுள்ளது.

இவர்கள் எப்போதுமே ஒழுங்கா இயங்குதளம் வெளியிட்டதில்லை ஆயிரம் குறைகள் இருக்கும் , அப்புறம் service pack , patches என்று சொல்லி சரிபன்னுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty Re: விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by அருண் Mon Jun 18, 2012 12:17 pm

அப்ப தான அவங்க சம்பாரிக்க முடியும் ராஜா அண்ணா..! இதற்கு உபண்டு எவ்வளவோ தேவலாம் போலிருக்கு..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty Re: விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by Guest Mon Jun 18, 2012 6:25 pm

சூப்பருங்க அருமை அருண் .... நல்ல சொதபுறாங்க ராஜா அண்ணே ... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty Re: விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by யினியவன் Mon Jun 18, 2012 6:31 pm

இவங்களும் இனிமே சொல்லிக்கலாம் -

ஜன்னலைத் திற சர்வீஸ் பேக் வரும்
ஜன்னலை திற பேச்சஸ் வரும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..! Empty Re: விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா? சில குறிப்புகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum