புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
156 Posts - 79%
heezulia
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%
prajai
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
321 Posts - 78%
heezulia
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
8 Posts - 2%
prajai
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாசுமிகு சென்னை ! Poll_c10மாசுமிகு சென்னை ! Poll_m10மாசுமிகு சென்னை ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசுமிகு சென்னை !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 14, 2012 6:07 pm

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து வந்த ஓர் ஆய்வர் குழு 1998 முதல் 2006 வரை சென்னையின் வளிமண்டலத்தை ஆய்வு செய்தது.

சென்னைவாசிகளில் பலர் குண்டாயிருப்பதற்கு அரிசி உணவு, கொழுப்பு நிறைந்த துரித உணவு, இருக்கையைவிட்டு எழாத பணியாற்றல், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளுடன் மாசடைந்த காற்றுடன் பல வகையான ரசாயன ஆவிகளையும் சேர்த்துச் சுவாசிப்பதும் ஒன்றாக இருக்கலாமென்று அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

டீசல் புகையில் இடம்பெறும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் வகை ஆவிகள் சிறு குழந்தைகளின் உபரியான பருமனுக்குக் காரணமாக இருக்கலாம்.

பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் வகை ஆவிகள் டீசல் வாகனங்களிலிருந்து பெருமளவு வெளிப்படுகின்றன. விறகு, மரக்கரி, சிகரெட் ஆகியவை எரியும்போதும் அவை தோன்றுகின்றன.

2011 ஆம் ஆண்டில் சென்னைக் காற்றில் கனமீட்டருக்கு 325.7 முதல் 790.8 நானோ கிராம் வரை பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இது கவலைப்பட வேண்டிய கணக்கு. சென்னையில் ஐம்பது விழுக்காடு வாகனங்கள் டீசலில் ஓடுகின்றன.

பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் ஆவிகள் மண்ணிலும் நீரிலும் எளிதாக உட்கவரப்பட்டு விடும். எனவே அவற்றின் வெளியீட்டை உடனடியாகக் குறைக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது.

பிளாஸ்டிக்குகளை எரிக்கும்போது வெளிப்படும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள், டையாக்சின், எளிதில் சிதையா கரிம ஆவிகள் போன்றவை கணைய செல்களை அழித்து உடல் பெருத்தல், நீரிழிவு ஆகியவற்றால் நகரவாசிகள் பீடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. சிறு குழந்தைகளையும் இவை பீடிப்பதற்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை நீரிழிவு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவர் மோகன் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான உடல்நலக் குறைவு உள்ளவர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சென்னை நகரப் பள்ளி மாணவர்கள் உடல் பருமனுடனும் நீரிழிவுடனும் தொடர்புள்ள உடல் அழற்சிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு வளிமண்டல மாசுகள் பொதுவான காரணியாக உள்ளன.

அன்றாட வாழ்வில் கையாளப்படும் பொருள்களில் உள்ள பல ரசாயனங்கள் ஹார்மோன்களைப்போல நடித்து உயிரினங்களில் கோரமான உருக்குலைவுகளை உண்டாக்கி வருகின்றன. நெற்றியில் ஒற்றைக் கண்ணுடன் ஆடு பிறந்ததாக அண்மையில் செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

பரவலாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு களைக்கொல்லி பெண்மை ஹார்மோனைப்போல நடித்து ஆண் விலங்குகளில் பெண்மைத் தன்மையை உண்டாக்குகிறது.
பிளாரிடாவில் உள்ள ஓர் ஏரியில் பிறக்கும் ஆண் அலிகேட்டர் முதலைக் குட்டிகளின் ஆண் குறிகளின் நீளம் வரவரக் குறைந்துகொண்டே வருவதற்கு இத்தகைய ரசாயனங்களே காரணம் என்று ஆய்வர்கள் கருதுகிறார்கள்.

மற்ற நீர்நிலைகளில் ஆண் தவளைகளில் பெண் உறுப்புகள் உருவானதற்கும் ஆண் மீன்கள் முட்டையிடத் தொடங்கியதற்கும் நீரில் கலக்கும் ஹார்மோன் போலிகளே காரணம் என்கிறார்கள்.
இந்த வகை வேதிகள் மனிதர்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. முலைப் புற்றுநோய், கருத்தரியாமை, விந்தணுக்குறைவு, இனப்பெருக்க உறுப்புகளில் ஊனம், மிகச் சிறு வயதிலேயே பூப்படைதல், நீரிழிவு, உடல் பெருத்தல் போன்றவை இத்தகைய பாதிப்புகளில் சில.

ஆண் சிசுக்களின் ஆண் குறியில் சிறுநீர் வெளிப்படும் துளை முனையில் அமையாமல் அடிப்பகுதியில் அமைந்து விடுகிற பிறவிக்குறைபாடு கடந்த சில ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்திருப்பதாக பிலிப் லான்ட்ரிகன் என்ற குழந்தை நல மருத்துவர் அமெரிக்காவில் செய்த ஆய்வுகள் காட்டுகின்றன.

ஹார்மோன்களின் உற்பத்தி, அளவு, தரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான நாளமில்லாச் சுரப்பி அமைப்பைச் சீர்குலைக்க வல்ல சில வேதிகளின் பேரில் அவர் குற்றம் சாட்டுகிறார்.
துரதிருஷ்டவசமாக இத்தகைய வேதிகள் எதிர்ப்படாத இடமேயில்லை. தானியங்கிப் பணம் வழங்கும் கருவிகள், கடைகளில் பில் அச்சிட்டுத் தரும் கருவிகள், மின்னிதய வரைவிகள், மின் மூளை வரைவிகள் போன்றவை சூடு காட்டி அச்சிடும் முறையைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் மெழுகுக் காகிதங்களில் ஹார்மோன் போலி வேதிகள் உள்ளன.

கவர்ச்சியான வண்ணங்களில் அச்சிட்ட உணவு டப்பிகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் பயன்படுத்தப்படும் அச்சு வர்ணங்களிலும், சாயங்களிலும், ஒப்பனைப் பொருள்கள், பிளாஸ்டிக்குகள் எனப் பல பொருள்களிலும் இந்த வேதிகள் உண்டு.

அண்மைக்காலங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ரத்தம், சிறுநீர், முலைப்பால், தொப்புள் கொடித் திரவம் போன்றவற்றில் இந்த வேதிகளின் இருப்பு அதிகமாவதாகத் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள நாளமில்லாச் சுரப்பி ஆய்வுச் சங்கம் உண்பொருள் பொதியப்படும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் அச்சு மைகளில் உள்ள பிஸ்பீனால் - ஏ என்ற வேதி நாளமில்லாச் சுரப்பிகளைக் குலைப்பதாக அறிவித்தபின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அதைத் தடை செய்ய முனைந்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இவ்வாறான நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான்களை உடனடியாகத் தடை செய்யக் கோரி "சயின்ஸ்' என்ற சஞ்சிகையில் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் வெளித்தெரிய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்பது அவற்றின் அபாய அளவை அதிகரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை கருச் சிதைவதையும் மசக்கைக் கோளாறுகளையும் தடுப்பதற்காகக் கருத்தரித்த பெண்களுக்கு டிஇஎஸ் என்ற செயற்கை ஈஸ்ட்ரோஜன் போலி ஹார்மோன் பரவலாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக அப்போது தெரியவில்லை. ஆனால், அப்பெண்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு, பெண்குறி மற்றும் முலைப் புற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்ட பின் இப்போது அந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டது.
உடலில் ஹார்மோன் செறிவு நுண்ணிய அளவுகளில் ஏறி இறங்கினாலும் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் உடலில் பாதிப்பு ஏற்படும் என்பது நீண்டகாலமாகவே அறியப்பட்டிருப்பதுதான்.
எடுத்துக்காட்டாகக் கருப்பையில் ஒன்று ஆணாகவும் மற்றது பெண்ணாகவும் இரட்டைக் குழந்தைகள் தோன்றியிருக்குமானால் ஆண்மைக்கான ஹார்மோன்களில் சில பெண் சிசுவின் உடலிலும் ஊடுருவும். அந்தச் சிசு லேசான ஆண்மைக்கூறுகள் உள்ளதாக வளரும்.

பிற்காலத்தில் அவள் ஆண்களைப் போன்ற முரட்டுத்தனமும் பரபரப்புத் தேடும் குணமும் பெற்றுவிடக் கூடும். ஆனால், அவர்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவிலேயே உணவு மண்டலக் கோளாறுகள் ஏற்படும்.

டஊஞஅ என்ற நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான் உடலில் அதிகமாகச் சேர்ந்துவிட்ட, கருவுற்ற பெண்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகமான உடல் பருமனுள்ளவர்களாக மூன்று மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.

இந்த வேதி மைக்ரோ அவனில் சோளப் பொறி தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் உறைகள் முதல் தரை விரிப்புகளைச் சுத்தம் செய்ய உதவும் கரைசல்கள் வரையான பல வீட்டு உபயோகப் பொருள்களில் இடம்பெறுகிறது.

நாளமில்லாச் சுரப்பிக் குலைப்பான்களும் இதேபோன்ற நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அவற்றின் தீய விளைவுகளைப் பற்றிய ஆய்வுகள் மூலம் கணிசமான தகவல்கள் திரட்டப்பட்டு அபாய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வேதி ஆய்வு முறைகளிலும் பத்திரமான அளவை நிர்ணயிக்கும் முறைகளிலும் பல அடிப்படையான அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன. அவற்றுக்கான நடவடிக்கைகள் அமெரிக்காவிலேயே இன்னமும் முழுமையாகத் தொடங்கப்படவில்லை என்கிறபோது நம் நாட்டைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

(நன்றி - கே.என். ராமசந்திரன் - தினமணி )

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 6:14 pm

பயனுள்ள பகிவிற்கு நன்றி அருமையிருக்கு



செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 14, 2012 6:28 pm

மிகவும் நன்று...தொடருங்கள் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jun 15, 2012 10:55 am

அதிர்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 11:13 am

பயனுள்ள பதிவு சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 15, 2012 11:38 am

பகிர்வுக்கு நன்றி சாமி.

மனித மனங்களில் தேங்கிய மாசினையும் நாம் அப்புறப் படுத்த முயல வேண்டும்.




வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jun 24, 2012 3:50 pm

பயனுள்ள பதிவு ..நன்றி .ஒரே தற்காலிக தீர்வு ,CNG வாயு பொருத்திய வாகனகள் மற்றும் அதிகமாக பொது போக்குவக்ரத்து வாகனங்களை பயன் படுத்துவது ஓரளவுக்கு நன்மை தரும் . மேலும் புகைவண்டி சேவை ஒரு நல்ல தீர்வாக இருக்கும் ..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 24, 2012 8:58 pm

ஒரே வரியில் சொல்லவேன்டுமென்றால் மக்களுக்கு அது இல்ல, எது?
சாலையில் சென்றால் ரோடு சென்ஸ்,
மருத்துவமணை சென்றால் காமன்சென்ஸ்
வீட்டு குடியிருப்புகளில் இருப்பவர்கள் ஆக்குவார்கள் ரோட்டை நான்சென்ஸ்
வேலையில் இருப்பவர்கள் செய்வார்கள் நியூசென்ஸ்
மொத்தத்தில் அது இல்லை, எது?

எது எங்க இருக்கனுமோ? அது?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக