ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை யோகம் 2: சாங்கிய யோகம் !!!

Go down

கீதை  யோகம்  2:  சாங்கிய யோகம் !!!  Empty கீதை யோகம் 2: சாங்கிய யோகம் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jun 10, 2012 12:53 am

அழியும் உடம்பினுள் உறையும் ஆத்துமா அழிவற்றது !![/size]

கீதை 2:10 அப்போது கொந்தளிக்கிற சேனைகளின் மத்தியிலே சாந்தமுடன் புன்னகை பூத்த யுகபுருஷன் கிரிஸ்ணர் துக்கசாகரத்தில் மூழ்கிய அர்ச்சுணனுக்கு பின்வருமாறு உபதேசித்தார் !!

கீதை 2:11 இறைதூதர் கிரிஸ்ணர் கூறுகிறார் : பட்டறிவால் விளைந்த வார்த்தைகளையே பேசுகிறாய் அர்ச்சுணா ! நன்று ! ஆனாலும் துக்கப்பட தகுதியில்லாதைவகளுக்கு நீ அஞ்சலி செலுத்துகிறாய் !யார் ஞானம் விளைந்தவர்களோ அவர்கள் உயிரோடு இருக்கிறவர்களுக்கோ அல்லது மரித்தவர்களுக்கோ வெதும்புவதில்லை !!

கீதை 2:12 படைப்பின் துவக்கத்திலிருந்து நான் இல்லாத நேரம் இல்லை அல்லது நீயோ ஏன் இங்குள்ளோர் அனைவரும் இல்லாது போகும் நேரம் இனிமேலும் இல்லை !!

கீதை 2:13 உடலினுள் உறையும் ஆத்துமா இந்த உடம்பில் குழந்தை ; வாலிபம் மற்றும் வயோதிகத்துள் கடந்து போவதுபோல இறப்பிற்குப்பின்னும் ஆத்துமசரீரமாய் உடம்பையும் கடந்துபோகிறது ! உணர்ந்தோன் உடம்பு கடந்து போவதற்காய் தடுமாற்றம் அடைவதில்லை !!

கீதை 2:14 நிலைத்த தன்மை அற்ற ``இன்பம் மற்றும் துன்பம்`` ஆகியவற்றின் தற்காலிக இருப்பும் அல்லது சின்னாளில் இல்லாதுபோவதும் குளிர்காலமும் கோடைகாலமும் மாறிமாறி வருவது போன்றதே ! பாரத குலத்தோன்றலே ! இவைகள் புலண்களின் நுகர்சியிலிருந்து தோன்றுபவையே ! அவைகளால் உண்டாகும் பாதிப்புகளை பொருட்படுத்தாத மனநிலையை கற்றுகொள்ளவேண்டும் !!

கீதை 2:15 மனிதர்களில் சிறந்தவனே ! யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கபடாத மனநிலை உடையவனாய் இரண்டிலும் சமநிலை எய்தியவனோ அவனே விடுதலை பெற தகுதியுடையவன் !!

கீதை 2:16 உண்மையை உணர்ந்தவர்கள் நிலையற்ற பெளதீக பொருட்களுக்கு நீடிப்பும் : நிலைத்த ஆத்துமாவுக்கு முடிவும் இல்லையென்றே தீர்க்கமாய் உரைக்கிறார்கள் ! உலகம் சார்ந்தவைகள் மற்றும் உள்ளார்ந்தவைகள் இரண்டின் இயல்புகளை ஆராய்ந்தே இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள் !!

கீதை 2:17 உடல் முழுவதும் நிறைந்திருக்கும் ``ஆத்துமா அழிவற்றது `` என அறியக்கடவாய் ! அழிவற்ற ஆத்துமாவை இப்போரினால் கொல்லமுடியாது !!

கீதை 2:18 கண்டறிந்து கைப்பற்ற இயலாத உள்ளார்ந்த மனித ஆத்துமா (ஜீவாத்துமா) அழிவற்றது ! அதன் பெளதீக உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும் ! ஆகவே போரிடுவாயாக !!

கீதை 2:19 தன்னைத்தானே அழித்துக்கொள்ளவோ அல்லது அடுத்த ஆத்துமவை அழிக்கவோ ஜீவாத்துமாவாலும் முடியாது ! ஆகவே யார் பிறரை கொல்லுவோம் அல்லது பிறரால் கொல்லப்படுவோம் என நினைக்கிறார்களோ அவர்கள் அறிவீணர்களே !!

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

கீதை 2:21 பார்த்தா ! ஆத்துமா அழிவற்றது ; நித்தியமானது :பிறப்புஇறப்பை கடந்தது ; கட்டிவைக்கபட முடியாதது என்பதை உணர்ந்த ஒருவன் ``கொல்லுவது கொல்லப்படுவது`` என்பதை கடந்துவிடுகிறான் !!

கீதை 2:22 ஒரு மனிதன் பழைய ஆடைகளை களைந்து புதிய ஆடைகளை அணிந்துகொள்ளுவது போல புதியபுதிய உடல்களாக பரிணமித்துகொள்ளுகிறது ; தளர்ந்து பயனற்று போன உடலை விட்டுவிடுகிறது !!

கீதை 2:23 ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டமுடியாது ! தீயினால் எரிக்கமுடியாது ; தண்ணீராலும் பதப்படுத்தமுடியாது அல்லது காற்றினாலும் பறக்கடிக்க முடியாது !!

கீதை 2:24 அனைத்துமாகிய பரமாத்துமாவோ பிரித்துபார்க்க முடியாதது ; சாம்பலாக்கவோ கரைக்கவோமுடியாதது ; உலர்ந்தும் போகாதது !பரமாத்துமா முடிவே இல்லாதது ; எங்கும் நிறைந்தது ; மாற்றமடையாதது ; அகன்றுபோகாதது !!
கீதை 2:25 ஆத்துமா கண்ணால் காணமுடியாதது ; ஒடுக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாதது ! இவற்றை அறிந்தபின்பு லெளகீக உடலுக்காய் ஏன் துக்கபடவேண்டும் ?

கீதை 2:26 போரில் வல்லவனே ! ஆத்துமா பிறக்கிறது அழிகிறது என நம்பிக்கொண்டிருந்ததாலேயே உனக்கு இந்த துக்கம் உண்டாகிறது !!

கீதை 2:27 இப்பிறவியின் உடல் நிச்சயம் அழிந்தே தீறும் ! ஆத்துமாக்கள் இப்பிறவிக்கு பிறகு அடுத்த யுகத்தில் பிரவேசிக்கின்றன ! ஆகவே உன் மேல் வந்த கடமைகளை நிறைவேற்ற துக்கம் கொள்ளாதே !!

கீதை 2:28 எல்லா படைப்பிணங்களும் படைப்பவரால் வெளிப்படுத்தபடாதபோது இல்லாதவைகளைப்போல இருந்தவைகளே ! தற்காலிகமாக வெளிப்படுத்தபட்டு இருப்பவைகளைப்போல செயல்படுபவைகளே ! முடிவில் அழிவடைந்து இல்லாதவைகளைப்போல ஆவைகளே ! ஆகவே எவைகளுக்காய் துக்கபட என்ன இருக்கிறது ?

கீதை 2:29 சிலர் மட்டுமே அற்புதமான ஆத்துமாவை அறிந்து கொள்ளுகிறார்கள் ! சிலர் அற்புதமான ஆத்துமாவை பற்றி பேசிக்கொண்டு மட்டுமே உள்ளனர் ! சிலரோ கேள்விப்பட்டு மட்டுமே உள்ளனர் ! ஆனால் பலரோ எதுவுமே அறியாதவராகவே உள்ளனர் !!

கீதை 2:30 அழியும் உடலில் உறையும் ஆத்துமா அழிவற்றது ! ஆகவே அர்ச்சுணா ! எவருக்காகவும் நீ துக்கபட வேண்டிய அவசியமில்லை !!

[size=18]தர்மத்திற்கான யுத்த களம் மறுமையில் மேன்மைக்கான கதவு !!


கீதை 2:31 சத்திரியனுக்கு நியமிக்க பட்ட தனித்த கடமை என்ற அளவில் தர்மத்திற்காக போரிடுவதை விட மேலான வேறு பொறுப்புகள் ஏதுமில்லை ! ஆகவே நீ தயங்குவதற்கு முகாந்தரமில்லை !!

கீதை 2:32 அப்படிப்பட்ட யுத்த களம் வாய்க்குமென்றால் அதற்காக ஆத்மதிருப்தி கொள்ளும் சத்திரியர்கள் இருப்பார்கள் பார்த்தா ! ஏனெனில் மறுமையில் மேன்மைக்கான கதவு திறக்கப்பட்டதை அறிந்து உவகை அடைவார்கள் !!

கீதை 2:33 தர்மத்திற்காக போரிடுவதை தட்டிகளித்தால் கடமை தவறிய குற்றத்திற்கு ஆளாவதோடு போர்வீரன் என்ற கீர்த்தியையும் இழப்பாய் !!

கீதை 2:34 உலகோர் உன் இயலாமையை இகழ்வர் ! அத்தகைய அவப்பெயரை விட மதிப்புள்ளவருக்கு மரணமே மேலானது !!

கீதை 2:35 உனது பேரையும் புகழையும் கொண்டாடும் யுத்த வீரர்களின் தலைவர்கள் நீ பயந்து யுத்த களத்தை விட்டு ஓடியதாகவே நினைப்பர் ! அதனால் உன்னை கோழை என்பதாக முடிவு செய்வர் !!

கீதை 2:36 உனது எதிரிகள் வாய்க்கு வந்த படி வர்ணித்து சொல்லத்தகாத வார்த்தைகளால் இகழ்வர்! அதனை காட்டிலும் வேறு என்ன மனநோவு வரும் ?

கீதை 2:37 குந்தியின் மகனே ! ஒன்று தர்மத்திற்காக யுத்த களத்தில் கொல்லப்பட்டால் மறுமையில் மேன்மையை அடைவாய் ! அல்லது போரில் வென்று உலக அரச போகத்தையும் அனுபவிப்பாய் ! ஆகவே மனதிடத்தோடு எழுந்து நின்று போரிடுவாயாக !!

கீதை 2:38 இன்பதுன்பம் ; லாப நட்டம ; வெற்றி தோல்வி என்ற இருமைகளை கடந்து செயலுக்காக செயல் புரியும் மன நிலையில் போருக்காக போர் செய்க ! அப்படி செயல்பட்டால் பாவம் உன்னை பற்றாது !!

மனச்சம நிலையில் செயலாற்றுவதே யோகம் !!

கீதை 2:39 இதுவரை பவ்தீக பொருட்களின் அடிப்படையில் இந்த மெய் அறிவை உனக்கு உபதேசித்தேன் ! இப்போதோ பலன் விளைவில் பற்று கடந்த வேள்வியைப்பற்றி உனக்கு உபதேசிக்கிறேன் ! பிரதாவின் மகனே ! அந்த அறிவில் நிலைத்து நின்று செயல்பட்டால் கர்மங்களால் உண்டாகும் தளைகளை தகர்த்து சுதந்திரமடைவாய் !!

கீதை 2:40 இந்த வேள்வியில் இழப்போ அல்லது குறைச்சலோ ஏற்படாது !மாறாக இவ்வழியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஒருவன் அதி பயங்கரமான பயத்தையும் கடந்து விடுவான் !!

கீதை 2:41 இவ்வழியில் நடப்போர் தங்கள் இலக்கில் தெளிவடைந்து ஒரே நோக்கத்திற்காய் செயல்படுவர் ! குருவம்சத்தில் சிறந்தவனே ! இலக்கில் தெளிவில்லாதவர்களின் அறிவுத்திறனோ பல பல வாய்க்கால்களில் வடிந்து போகும் !!

கீதை 2:42 ஆழ்ந்த அறிவற்றவர்கள் லோகாதாய பக்தி மார்க்கங்களின் ஜால வார்த்தைகளை வேதமென நம்பி அதன் பால் கவரப்படுகிரார்கள் ! அது வசதியையும் வாய்ப்பையும் அதிகாரத்தையும் ஆட்சியையும் அடைவதற்கு வாக்களித்து அதன் மூலம் உயர்ந்த லோகத்தையும் அடைந்துவிடலாம் என நம்ப வைக்கிறது !

கீதை 2:43 ஆடம்பரமான வாழ்வையும் புலனின்பங்களை அனுபவிப்பதையுமே விரும்பி இதை விட மேலான சம்பத்து வேறு என்ன வேண்டும் என கூறிக்கொள்கின்றனர் !!

கீதை 2:44 புலனின்பங்களையும் டாம்பீக வாழ்வையும் அதனால் சுயபெருமையும் அடைந்தவர்கள் அந்த வழியில் மனம் லயித்ததனால் உன்னதமான் கடவுளுக்கு உள்ளார்ந்த பக்தி -இறைஅன்பு புலப்படாமலேயே போகின்றனர் !!

கீதை 2:45 தாமச, ரஜோ மற்றும் சத்வம் எனும் மூவகை குணங்களிலிருந்து பிறக்கும் அண்ணமயம், மனோமயம் ,மற்றும் விஞ்ஞானமயம் என்ற மூவகை கோஷங்களின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அந்த லோகாயாத வேதங்கள் வழிகாட்டுகின்றன ! அர்ச்சுனா ! இந்த மூன்றையும் கடந்து மெய்ஞானமய கோஷத்தில் நுழைந்தால் எல்லாவகையான் இருமைகளின் தாக்கத்தை கடந்து ; வெற்றி தோல்வி வேட்கையை களைந்து பரிபூரணத்தில் தன்னில்தானே மகிழ்ந்திருப்பாய் !!

கீதை 2:46 பெரிய ஏரியால் கிடைக்கும் அனுகூலங்கள் எல்லாம் ஒரு கிணற்றிலிருந்தும் அடையப்பெறும் ! அதுபோல லோகாயாத வேதங்கள் அனைத்தினதும் அனுகூலங்கள் எல்லாம் அதனை கடந்த மெய்ஞானத்தை அடைந்தவனுக்கும் உண்டாகும் !!

கீதை 2 :47 உனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்வதற்கு மட்டுமே உரிமை உண்டு ; ஆனால் செயல்களின் பலன்களின் மேல் உனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை ! எப்போதும் உனது செயல்களின் விளைவுகளுக்கு நீ காரணன் என்று எண்ணாதே ; அதற்காக கடமைகளை தட்டிகழிக்கவும் உன்னை ஆட்பாடுத்தாதே !!

கீதை 2 :48 வெற்றி தோல்வியின் மீது உள்ள பற்றுதல்கள் ஒழித்து விட்டு மன சமநிலையோடு உனது கடமைகளை செய்து வருவாயாக ! அர்ச்சுனா ! அந்த சம நிலையே யோகம் என்பதை அறிக !!

கீதை 2 :49 தனஞ்சய ! லோகாயாத செயல்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து :கடவுளையே சரனாகதியடைத்து அவருக்கு பக்தி தொண்டாக கருதி உன்மேல் வந்த கடமைகளை செய்து வருவாயாக ! அவ்வாறில்லாமல் பலன்களை அனுபவிக்கும் நோக்கில் செயல்படுவோர் துன்பத்தையே அடைவர் !!

கீதை 2 :50 யார் ஞானம் முதிர்ந்த பக்தி தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்களோ அவர்கள் இவ்வுலக வாழ்விலேயே நன்மையான செயல்கள் அல்லது தீமையான செயல்கள் என்ற பேதத்தை கடந்து சுதந்தரமடைவர் ! ஆகவே அத்தகைய யோகத்தில் நிலைக்க பெருமுயற்சி செய்க ! அதுவே செயல்களில் சிறந்த செயலாகும் !!

கீதை 2:51 இவ்வாறான மெய்ஞான பக்தியின் மூலம் உன்னதமான கடவுளுக்கே தொண்டாற்றி மகரிஷிகளும் நல்லடியார்களும் உலகியல் வாழ்வில் கர்மங்களின் தளைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்கிறார்கள் ! இப்பாதையில் நடப்பதால் எல்லாவகையான பிரவிப்பினியை வெல்லும் தகுதியடைந்து நித்திய ஜீவனுக்கு ஏதுவாகிறார்கள் !!

கீதை 2:52 மாயைகள் என்னும் அடர்ந்த வனத்தை உன் அறிவுத்திறன் கடந்து விட்டால் ; உலகம் அறிந்ததைதையும் இனிமேல் அறியப்போவதையும் விஞ்சிய நிலையடைவாய் !!

கீதை 2:53 எப்போது உன் மனம் லோகாயாத வேதங்களின் ஜால வார்த்தைகளால் மயங்காத நிலையடைகிறதோ ; தன்னை உணர்ந்து பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதில் நிலைத்து நின்றுகொண்டே இருக்கிறதோ அப்பொழுதே நீ தெய்வீக உணர்வில் -மெய்ஞானமய கோஷத்தில் திளைக்க முடியும் !!


கீதை 2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?

ஆத்தும விடுதலை !!

கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!

கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!

கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!

கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!

கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் துலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபரிபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்துமபரிபூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர ஆத்துமா ; கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!


கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை ! தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!

கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!

கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை உண்டாகிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை வளர்க்கிறது !!

கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!

கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!

கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது ! ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !!

தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதை !!

கீதை 2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன் ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை ! இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த சந்தோசமும் நிலைப்பதில்லை !!

கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!

கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!

கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!

கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!

கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!

கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!

http://www.godsprophetcenter.com/index_5.html
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum