புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
20 Posts - 3%
prajai
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_m10மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 03, 2012 10:02 am


படத்தோட விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே தன்மானம் உள்ள எந்த ஆணும் செய்யத்தயங்கும் ஒரு காரியத்தை படத்துல செஞ்ச ஹீரோவின் செயலுக்கு ஹீரோவையும், இயக்குநரையும் நறுக்னு ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.. காதல், அல்லது அன்பு என்பது ஒரு பெண்ணிடம் இருந்து தானா வரனும், கெஞ்சியோ ,அவ கால்ல விழுந்தோ வரக்கூடாது.. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் கால்ல விழறாரு.. காதலிக்க சொல்லி.. உஷ் அப்பா முடியல..சரி கதைக்கு வருவோம்


ஹீரோவும் , ஹீரோயினும் சின்ன வயசுலயே க்ளாஸ்மேட்ஸ்.. பிளஸ்டூ முடிஞ்சு லீவ்ல ஊருக்குப்போறப்ப தான் ஹீரோவுக்கு அவ மேல காதல் இருக்குன்னே தெரியுது.. அப்புறம் அவ ரிட்டர்ன் வந்ததும் பம்மறார். பழகறார்.. ஃபிரண்ட்ஸ் கிட்டே 2 பேரும் லவ்வறதா கலர் கலரா ரீல் விடறார்.. இது சகஜம் தான்... நம்மாளுங்க ஃபிகர்ட்ட சும்மா கடலை தான் போட்டிருப்பாங்க.. அதுவும் நீ எத்தனாவதும்மா படிக்கறே?அப்டித்தான் கேட்டிருப்பாங்க, ஆனா ஃபிரண்ட்ஸ் கிட்டே எல்லாமே முடிச்சுட்ட மாதிரி பீலா விட்டுக்குவாங்க..


ஹீரோயினுக்கு சின்னத்தம்பி படத்துல வர்ற மாதிரி கேவலமான முரட்டு அண்ணன்க இருக்காங்க.. ஹீரோயினுக்கு மேரேஜ் வேற பக்கம் ஃபிக்ஸ் ஆகுது.. ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஹீரோயினுக்கு மயக்க மருந்து கொடுத்து மண்டபத்துல இருந்து கடத்திட்டு கார்ல ஹீரோவோட எஸ் ஆகறாங்க..இடைவேளை..

மயக்கம் தெளிஞ்சு எழுந்த ஹீரோயின் ஆர்ப்பாட்டம் பண்றாங்க, நான் உன்னை லவ்வே பண்ணலை, எங்க வீட்டுக்கு போகனும்கறாங்க.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது? யாரெல்லாம் மாத்து வாங்கறாங்க... தியேட்டர் ஏன் ரிலீஸ் அன்னைக்கும் காத்து வாங்குது இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..


ஹீரோ சிவகார்த்திகேயன்க்கு இதுதான் முழு ஹீரோவா நடிக்கும் முதல் படம், அட்டர் ஃபிளாப் ஆன 3 படத்துல ஜஸ்ட் காமெடி தான்.வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் மேக்கிங்க்ல நல்ல பேர் வாங்கின மெரீனா வில் சைடு ஹீரோ மாதிரி.. இவரோட ஆக்டிங்க் பற்றி சொல்லும்போது எஸ் வி சேகர் பற்றி சொல்லனும்.. அவர் போடும் நாடகங்களில் அவரது ஆளூமை பிரமாதமா இருக்கும்.. டைமிங்க் காமெடி பின்னி எடுக்கும்.. ஆனா படத்துல ஹீரோவா நடிக்கறப்ப ஏனோ பொம்பள சிலுக்கு அப்டினு பேர் எடுத்து கொஞ்சம் பம்முவாரு..

அந்த மாதிரி சிவ கார்த்திகேயன் அது இது எது புரோகிராம்ல அலப்பறை பண்றதையும், ஸ்டேஜ்ல தொகுப்பாளரா வர்றப்ப பட்டாசைக்கிளப்பும் அவர் ஆளுமையையும் பார்த்துட்டு படத்துல ஹீரோவா பார்க்கறப்ப ஒரு மாற்று கமி தான்.. தேவையே இல்லாம வழியறது, பம்மறது இதெல்லாம் குறைச்சுக்கனும்..மற்றபடி யதார்த்தமான நடிப்புக்கான சாத்தியக்கூறுகள் இவரிடம் அதிகமாவே இருக்கு.. நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்..

ஹீரோயின் ஆத்மியா ஒரு கேரளா ஃபிகர் என்று பட்சி சொல்லுது, 70 மார்க் ஃபிகர். மீரா ஜாஸ்மின் முகம், உதடு, பூ விழி வாசலிலே ஹீரோயின் கார்த்திகா புருவம், கூந்தல் ரெண்டையும் மிக்ஸ் பண்ணினா பாப்பா தான்.. நல்ல கலர் தான்.. ஆனா பாப்பா அழும்போதும், கோபப்படும்போதும் சுத்தமா எடுபடலை.. பாப்பா எப்போ லவ் பண்ணுது? எப்போ கோபமா இருக்குன்னே தெரியலை.. லோ கட் சீன் ஒரே ஒரு இடத்துல மின்னல் மாதிரியும், லோ ஹிப் சீன் பெட்ரோல் விலை ஏற்றம் போல் பரவலாவும் இருக்கு, பார்த்து பயன் பெறுங்கள்...


படத்துல களை கட்டும் காமெடி சிங்கம்புலி, புரோட்டா சூரி, இவங்க 2 பேரும் தான்.. வெண்ணிற ஆடை மூர்த்தியும் உண்டு.. அவர் வர்ற காட்சிகள் எல்லாம் காதலுக்கு மரியாதை பட க்ளைமாக்ஸ் நினைவு வருது..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ புரோட்டா சூரியிடம் சொல்லும் கற்பனையான காதல் காட்சி கலகலப்பு ..

2. ஹீரோவும், ஹீரோயினும் லாங்க் ஷாட்ல வேற என்னமோ பேச அவங்க நண்பர்கள் அவங்களா ஒரு அர்த்தம் எடுத்துக்கிட்டு ட்ரான்ஸ் லேட் பண்றது


3. கல்யாண மண்டபத்தில் ஹீரோயினை நைஸா தள்ளிட்டு வர சிங்கம்புலி செய்யும் சேஷ்டைகள் செம சிரிப்பு ..

4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல், மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் பாடல்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திய விதம் அப்ளாஸ் அள்ளுது..

5. அய்யய்யோ வாடி புள்ள வீட்டுக்குள்ள யாரும் இல்ல.. சல் சல் ஓசை, போ போ போ நீ எங்கே வேணாலும் போ , ஊரான ஊருக்குள்ளே என்னைப்போல யாரும் இல்ல... என்ன சொல்ல ஏது சொல்ல என படத்தில் மொத்தம் 5 பாட்டும் கேட்கற மாதிரி இருக்கு. ஆனா இன்னும் மெனக்கெட்டிருந்தா 2 சூப்பர் ஹிட் பாட்டு கிடைச்சிருக்கும்.. ஐ மீன் அந்த 5ல 2 செம ஹிட் ஆக வேண்டியது.. ஜஸ்ட் மிஸ்..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் சம்மதம் இல்லாம ஹீரோ ஃபிரண்ட்ஸ் கடத்திட்டு வர்றாங்க , ஓக்கே , நினைவு திரும்பியதும் ஹீரோயின் தன் வீட்டுக்கு ஃபோன் பண்றார்.. பாட்டி எடுக்கறாங்க திட்டி வெச்சுடறாங்க.. அப்புறம் ஹீரோயின் அத்தோட விட்டுடறாங்க.. ஏன் தன் அப்பா, சித்தப்பா, அண்ணன் எல்லாம் இருக்காங்களே.. செல் ஃபோன் இருக்கே ட்ரை பண்ணி மேட்டர் சொல்லலாம்.. தான் இருக்கும் இடத்தை எஸ் எம் எஸ் பண்ணலாம்.. அதை எல்லாம் செய்யாம அருவில போய் துணி துவைச்சுட்டு இருக்கு..


2. ஹீரோயின் பாட்டி ஃபோனை அட்டெண்ட் பண்றப்ப சித்தப்பா பாட்டிக்கு பக்கத்துலயே நிக்கறாரு.. அப்போ எல்லாம் கம்முன்னு இருந்துட்டு ஃபோனை பாட்டி வெச்ச பின் சண்டைக்கு போறார்.. அப்பவே அவர் ரிசீவர் வாங்கி பேசறதுக்கு என்ன?


3. ஹீரோயின் தங்கி இருக்கறது கேரளாவுல இருக்கற பெரிய பங்களா... அங்கேயே 12 பாத்ரூம் இருக்கு.. 12 பேர் குடி இருக்கற அவ்வளவு பெரிய பங்களாவுல துவைக்காம துணி எடுத்துட்டு ஆத்துக்கு துவைக்க வர்றார்..


4. ஹீரோயினோட சொந்த பந்தங்கள்க்கோ, யாருக்குமோ ஹீரோயின் இருக்கற இடமே தெரியாது.. எப்படி கரெக்டா தமிழ் நாட்ல இருந்து கேரளா வந்து கன கச்சிதமா அந்த பங்களா வந்தாங்க ..?


5. ஹீரோ க்லைமாக்ஸ்ல ஹீரோயின் கிட்டே உனக்கு என் மேல லவ் இருக்குன்னு எனக்கு முன்னமே தெரியும்கறார்.. அப்ப என்ன இதுக்கோசரம் கோயில்ல பப்ளிக்கா ஹீரோயின் கால்ல விழுந்து என்னை லவ் பண்ணு?னு கெஞ்சறார்?


6. ஹீரோயின் கேரக்டர் தான் புடி படவே இல்லை.. ஹீரோ மேல காதல் இருக்கு , ஆனா வீட்ல சண்டைன்னா என்ன பண்ண அதனால அவன் கிட்டே லவ்வை சொல்லலை ஓக்கே , ஆனா ஹீரோ ஸ்கூட்டில வர்றப்போ அவ இடுப்பை தொடறப்போ, ஆஃபீஸ்ல அவளை கட்டிப்பிடிச்சு தூக்கறப்போ எல்லாம் சீறாம ரசிக்கறார்.. திடீர்னு ஹீரோ மேல எரிஞ்சு விழறார்..


7. சிங்கம் புலி வேனில் வில்லன்களிடம் அடி வாங்கும் காமெடி டிராக் அப்படியே அப்பட்டமாக பதினெட்டான் குடி படத்தில் இருந்து சுடப்படவை.. அதிலும் சிங்கம்புலியே தான் காமெடியன்.. ஒய் ஒய்?


7 . க்ளைமாக்ஸ்ல அவ்வளவு பிரச்சனை நடந்தும் ஹீரோயின் அப்பா ஒண்ணா 2 பேரையும் பிரிக்கனும், அல்லது சேர்த்து வைக்கனும், ஐ மீன் அவரே மேரேஜ் பண்ணி வைக்கனும், அதை எல்லாம் விட்டுடு என் பொண்ணை கூட்டிட்டு எங்கேயாவது போயிடுங்கறார்.. நிஜமாவே அவர் அப்பா தானா?


படத்தில் ரசித்த வசனங்கள்


1. உன் கடைல டீ குடிக்கவும் ஆள் இருக்கா?


நீ கட்டற பில்டிங்க்ல குடி இருக்கவே ஆள் இருக்குதே?


2. நீ உங்கப்பாவையும், எங்கப்பாவையும் ஏமாத்தலாம், ஆனா என்னை ஏமாத்த முடியாது.. டென் த் படிக்கறப்ப வாங்குன 500 ரூபாயையே இன்னும் திருப்பித்தராதவன் தானே நீ?


3. டேய்.. அந்த ஃபைலை எடுக்க ஹெல்ப் பண்ணுன்னு தான் சொன்னேன்.. எதுக்கு என்னை இடுப்பை பிடிச்சு தூக்கறே?


4. ஏண்டா லேட்?

ரெண்டு லவ்வர்ஸ் பேசிட்டு வந்தா லேட் ஆகத்தாண்டா செய்யும்.

அதான் நீ ஏன் லேட்னு கேட்டேன்...


5. இந்த குயீன் உனக்கு சேரவே சேராது


என் கிட்டே 4 ஜோக்கர்ஸ் கைவசம் இருக்கறப்ப கவலை எதுக்கு?


6. எனக்கு பட்சி என்ன சொல்லுதுன்னா....

பஜ்ஜி வடை எல்லாம் உன் கிட்டே பேசுமா?


7. ஏம்மா.. உன் கர்ச்சீப் அழுக்கானா சலவைக்கு போடு.. கண்டவன் கிட்டே எல்லாம் தராதே..


8. அந்த ஃபிகரை டெயிலி ஒரு ஆள் வந்து டிராப் பண்ணிட்டு பிக்கப் பண்ணிட்டு போறாங்க.. நாம போய் அதை கரெக்ட் பண்ண்லாமா?

ஹாட் மிஸ்.. அவன் யாரு?

எங்கண்ணன்..


நேத்து வந்தவன்?

அவனும் என் அண்ணன் தான். எனக்கு மொத்தம் 8 அண்ணன்க..

அய்யய்யோ.. 9 வது ஆள் ஐ மீன் 9 வது அண்ணன் உனக்கு நான் தான்மா .. டேய்.. குல சாமிக்கு ஒரு கெடா வெட்டுடா..


9. உன் பொண்டாட்டி எல்லாம் எப்படிடா உன்னை மதிக்கறா?

விட்றா,.. ஊர்ல எந்த பொண்டாட்டி புருஷனை மதிச்சிருக்கு?


10. நீயே வண்டி ஓட்டுடா...


ஓக்கே , நீ வேணா என் இடுப்பை பிடிச்சுக்கோ.. நான் ஏதும் சொல்ல மாட்டேன்.. பேசிக்கலி ஐ ஆம் டீசண்ட் யூ நோ?


11. எவண்டா அவன் குறுக்கே பேசறது?

டேய், நான் தாண்டா உங்கப்பன்..

சாரிப்பா..


12. மச்சான் மச்சான்னு அவனை கூப்பிடறியே, அதுக்கு என்ன அர்த்தம்னு சபைல சொல்லிட்டு உக்காரு..


13. டேய், 3 டீ போடு

4 டீ போடு

நாம 3 பேருதானே இருக்கோம்

எனக்கு மட்டும் 2 டீ ஹி ஹி


14. சந்திரபாபு மேரேஜ் லைஃப்ல கூட இப்படித்தான், மேரேஜ் முடிஞ்ச அன்னைக்கு நைட் மனைவி வேற ஒரு லவ்வர் இருக்கறதா சொன்னதும் சேர்த்து வெச்சார்டா.. அதனால கடைசி வரை நமக்கு சான்ஸ் இருக்கு


15. என்னடா 10 பேர் வந்து நின்னாலும் நின்னு அடிப்பான்னு சொன்னே?

ஐ மீன் ஒண்ணுக்கு அடிப்பான்னு சொன்னேன் .. மீ எஸ்கேப்


16. எனக்கு என் காதல் தாண்டா முக்கியம்.

எங்களுக்கு உயிர் தாண்டா முக்கியம்



17. டேய்.. உனக்கும், அவளுக்கும் லவ்னு எல்லாரும் சொல்றாங்களே, அது பொய் தானே?

அம்மா, நீயே பொய்னு சொன்ன பிறகு அது எப்படிம்மா உண்மையாகும்?நாம அவங்க கிட்டே சம்பளம் வாங்கறவங்க, எப்படி ஒத்துக்குவாங்க?


18. ஒரு காதலி காதலனுக்காக என்ன எல்லாம் பண்ணுவா?

ரூம் போட்டா ஓக்கே சொல்வா..

அது உங்க ஊர்ல மும்பைல, இது கிராமம்


19. டேய், மேரேஜ்க்கு இன்னும் 2 நாள் தாண்டா இருக்கு

48 மணி நேரம் இருக்குன்னு பாசிட்டிவா சொல்லுங்க


20. கோயிலை இப்படித்தானே சுத்தனும், எங்களை ஏன் டைவர்ட் பண்ணி விடறே?

சிலபஸ் மாத்தியாச்சு



21. மனசுக்குப்பிடிச்சவனோட வாழ்க்கை நடத்த எவ்ளவ் போராட வேண்டி இருக்கு?

22. பாதில ஓடறவன் தான் பாம்பே ஃபிரண்ட், கடைசி வரை அடி வாங்குனாலும், உதை வாங்குனாலும் சப்போர்ட்டா நிக்கறது தமிழ் நாட்டு ஃபிரண்ட்..


23. ரேவதி.. நான் தான் உன் அண்ணன் பேசறேன்..

ஹாய் , மச்சான், நான் தான் கண்ணன் பேசறேன்


24. டேய், நாம எல்லாம் அடி வாங்கிட்டு இருக்கோம். சொந்தத்தை மென்ஷன் பண்ற நேரமாடா இது?


25. இது என்ன லவ் பேர்ட்ஸா?

ஆமா..

உங்க வீட்ல லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாம், ஆனா உங்க வீட்டு பொண்ணுங்க லவ் பண்ணக்கூடாதா?


26. ஊரை விட்டு ஓடி வந்த ஜோடி மாதிரியாடா இருக்கீங்க? என்னமோ மூணாறுக்கு ஹனிமூன் வந்த மாதிரி இருக்கிங்க?


27. மார்ச்சுவரிக்குப்போற நிலைமைல இருந்தாலும் செஞ்சுரி டீட்டெயில்ஸ் கேட்காம போக மாட்டாண்டா இந்த தமிழன்


28. உங்க ஊர் ஆளூங்க அடிச்சா ரத்தம் வராதா? உனக்கு எந்த காயமுமே இல்லையே?

ஆல் உள்காயம் ஸ்


29. அவ என் சிஸ்டர்டா.. ஆண்ட்டின்னு நினைச்சீங்களா?


30. நான் எப்படி மானங்கெட்டத்தனமா உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுனனோ அதே மாதிரி கேரளாவுல எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணனும், ஹி ஹி


31. ஏண்டி. என் சமையல் எப்படி?


உங்கம்மா சமையல் மாதிரியே இருக்கு..


32. உன் ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்ததுக்கே இப்படி குதிக்கறியே..... ( டபுள் மீனிங்க்.. )


33. தண்ணி அடிக்கறாங்க மீன்ஸ் அவங்க தண்ணி போட்டுட்டு வந்து எங்களை அடிக்கறாங்க



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் ஃபேமிலியோட பார்க்கற மாதிரி தான் கண்ணியமான நெறியாள்கையில் தான் படம் இருக்கு.. படம் செம ஹிட் எல்லாம் ஆகாது, ஃபிளாப்பும் ஆகாது, மீடியமா ஓடிடும்.. எழில் ஜெயிச்சுட்டார்..

-----------
அட்ரா சக்க



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 10:09 am

அடடே படம் ரிலிஸ் ஆகிடுச்சா இங்கலாம் வராது அதுனால நெட்டில் விடும்வரை காத்திருப்போம்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக