ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு

2 posters

Go down

பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  Empty பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு

Post by rathnavel Fri 1 Jun 2012 - 7:55

எனது மதிப்பிற்குரிய இனிய நண்பர் திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்கள் பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றி முகநூலில் ஒரு அருமையான, பயனுள்ள கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன். திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.


உலக அளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் "ஸ்ட்ரோக்"..2ம் இடத்தை பிடித்திருக்கிறது.!

ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன :

ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு...அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!

காரணிகள் என்ன:‍

பொதுவான காரணிகளாக...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி(என்டோஜீனியஸ்..ENDOGENEOUS)..மாறிவரும் சமூகநிலைகளால்...சிறு வயது முதல்...வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்)...உள்ள தேவையற்ற பழக்கங்களான...தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள்
(எக்ஸோஜீனியஸ்..EXOGENEOUS)...பயன்பாடும்...மேற்கூறிய சிக்கல்களை நாள‌டைவில் ஏற்படுத்தி..எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு"..பாதிக்கப் படுவதை...பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!

விளைவுகள்:

பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம்
பக்கவாதம் ஏற்பட்டால்...கை அல்லது கால் செயல்படாமல் போவதையும் (பராலிசிஸ்..PARALYSIS)..மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால்..முகம் / வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING)...ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் ( டிமென்ஷியா..DEMENTIA)... ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!


பக்கவாதம் யாருக்கு ஏற்படும்:

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை..பல்வேறு காரணிகளால்..15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்)..ஆண்டுதோறும்...60 லட்சம் மக்கள் இறப்பதாக...உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும்..மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன.!

தீர்வு :

40 வயதிற்கு மேற்பட்டவர்கள்...தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும்
கொழுப்பின் அளவை..மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி.. பரிசோதித்துக் கொண்டு..சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி ( நடைப்பயிற்சி....BARISK WALK) தேவையற்ற‌ பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.! தேவை ஏற்பட்டால்..நிபுணரின் பரிந்துரைகளின் படி
மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து...சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!

சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:


1. நாம் அருந்தும் உண‌வில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க...வறுத்த உணவுக்கு பதிலாக...வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை)..எடுத்துக் கொள்வதுடன்...உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!


2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!



இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!

LAST BUT NOT THE LEAST...
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால்...கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ ( இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ..உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது.!

நண்பர்களே..இன்று உலக பக்கவாத தினம்...அது குறித்து சில தேவையான குறிப்புகள்...இனிய மதியம் / மாலை வணக்கத்துடன்...:-)





இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.
rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Back to top Go down

பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  Empty Re: பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு

Post by சார்லஸ் mc Fri 1 Jun 2012 - 8:35

நல்ல பயனுள்ள பகிா்வு திரு.இரத்தினவேல் அவா்களே பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550 பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550 பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550


பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum