ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 45 of 76 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 60 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Thu Aug 02, 2012 5:31 pm

இந்தியாவின் வறுமை நிலையை உணர்த்தும் புகைப்படம்,,,அழகிய குறள் தந்தமைக்கு நன்றி

கஞ்சியை காண்பதற்கு கால்கடுக்க காக்கிறாள்
வஞ்சியிவள் நம்கொடி விற்று


சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 03, 2012 7:54 am

சதாசிவம் wrote:இந்தியாவின் வறுமை நிலையை உணர்த்தும் புகைப்படம்,,,அழகிய குறள் தந்தமைக்கு நன்றி

கஞ்சியை காண்பதற்கு கால்கடுக்க காக்கிறாள்
வஞ்சியிவள் நம்கொடி விற்று
மிகவும் உண்மை தம்பி....உங்களின் அழகிய குறள் இந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 03, 2012 8:16 am

குறள் வெண்பா : ௦௬௪(064)

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Aattuuram

இயற்கை உரங்கள் இடுவதே செம்மை
செயற்கையால் சேர்ந்திடும் தீங்கு

----- சதாசிவம், மலேசியா.

இயற்/கை - உரங்/கள் - இடு/வதே - செம்/மை
செயற்/கையால் - சேர்ந்/திடும் - தீங்/கு

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரைநேர்/பு

புளிமா – புளிமா – கருவிளம் – தேமா
கருவிளம் – கூவிளம்காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
/b]
[b]எதுகை :
ற்கை; செற்கையால்

மோனை : யற்கை – டுவதே; செயற்கையால் – சேர்ந்திடும் – தீங்கு

ஈற்றுச்சீர் : தீங்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுளின் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

இந்த அழகிய குறள் வெண்பாவைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். செயற்கை உரங்களால் வரும் ஆபத்துகளை உலகமே இப்போது உணர ஆரம்பித்துள்ள நிலையில் எல்லோரும் மீண்டும் இயற்கை உரங்களை நோக்கி திரும்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. தொடருங்கள் ...தொடர்ந்து குறள் வெண்பா கொடியை படருங்கள் இத்திரியில்!! மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 04, 2012 2:49 pm

அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது. கடந்த குறளை பதிந்து முப்பத்து மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒரு பின்னுட்டமும் யாரும் இடவில்லை. தமிழ் ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் மற்ற ஆசிரியர்கள், நம் தமிழுக்காகவே பதிவுகள் இடுபவர்கள் என்று எவ்வளவோ பேர் நம் ஈகரை தளத்தில் இருந்தாலும், இத் திரியில் வந்து பின்னுட்டம் இடாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்ல. இங்கு வருகின்றவர்கள் எல்லோரும் குறளிலேயே பின்னுட்டம் இடவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லையே?

நான் சிறு வயதாக இருந்த போது கண்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 1958 – 1965 ஆண்டுகள் வாக்கில் நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலம். எங்கள் ஊருக்கு நாடகக் கம்பனிகள் வருடா வருடம் வந்து முகாம் இடுவார்கள். ஒரு நாடகக் கம்பனி வந்தால் மூன்று நான்கு மாதங்கள் தங்குவார்கள். நல்லதங்காள், பவளக்கொடி என்று பல தலைப்புக்கள். தினமும் எங்கள் ஊர் வீரக்குமார சாமி திடலில் நாடகம் நடக்கும் இரவு முழுவதும். சில கதைகள் ஒருவாரம் பத்து நாட்கள் என்று தொடரும். ராமாயணம் போன்ற நாடகங்கள் ஒரு மாதம் கூட தொடர்ந்து நடக்கும்.

இடையில் மாறுதலுக்காக பொம்மலாட்டம் சேர்ப்பார்கள். காரணம்....ராமனாக நடிப்பவரின் மனைவிக்கு பிரசவமாம் ....தந்தி வந்ததால் போய்விட்டார். அவர் திரும்பி வரும்வரை பொம்மலாட்டம் தான் ...என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வருவதும் போவதுமாக களையாக இருக்கும். குதிரை வண்டியில் பெரிய பேனர்கள் கட்டிக்கொண்டு கிளாரினெட், சிறிய டிரம் அடித்துக்கொண்டு, நாடகம் குறித்து நோட்டீஸ் விநியோகிப்பார்கள். மைக் செட்டில் அலறும்படி எம் கே டி, பாடல்கள் போடுவார்கள். இடையில் மழை வந்தாலும் கவலைப்படாதீர்கள் நாடகத்தை நிறுத்த மாட்டோம் என்று விளம்பரம் செய்வார்கள். இப்படி அந்தக் காட்சிகள் இன்னும் நீங்க நினைவுடன் ஏன் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

என் இனிய உறவுகளே, எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று குழப்பமாக உள்ளதா? யாரும் பின்னுட்டம் இட வருவதில்லை என்பதால் இந்தத் திரியை நிறுத்திவிட மாட்டேன். தொடர்ந்து குறள்கள் பதிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்வதற்குத்தான்!
இன்றைய குறளும் அதுவே:

குறள் வெண்பா : ௦௬௫(065)

அடாத மழையிலும் நாடகம் இங்கே
விடாது நடத்தப் படும்


அடா/த - மழை/யிலும் - நா/டகம் - இங்/கே
விடா/து - நடத்/தப் - படும்

நிரை/நேர் - நிரை/நிரை - நேர்/நிரை - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை

புளிமா - கருவிளம் - கூவிளம் - தேமா
புளிமா - புளிமா - மலர்

இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சிவா Sat Aug 04, 2012 3:08 pm

பின்னூட்டங்கள் திரியின் ஓட்டத்தைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற பதிவுகளில் பின்னூட்டங்கள் குறைவாகவே இடம் பெறும். அவ்வாறு அரட்டைகள் இடம் பெற்றாலும் நீக்கப்பட்டுவிடும்.

உங்களின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் இங்கு படித்து பின்னூட்டமும் இட்டுச் செல்கின்றேன் அண்ணா!



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by கே. பாலா Sat Aug 04, 2012 3:50 pm

விடாது படிப்பினும் ஏனோ பதிவை
போடாது போனவன் நான்

விடா/து படிப்/பினும் /னோ பதி/வை
போ/டாது போ/னவன் / நான்

நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
நேர் நேர் நேர் நேர் நிரை நேர்

தேமா கருவிளம் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளம் நாள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by முரளிராஜா Sat Aug 04, 2012 3:59 pm

பின்னூட்டங்கள் நான் போடாவிட்டாலும் இங்கு பதியும் குறளை படித்து ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்
ஒரு நல்ல திரி அரட்டை திரியாக மாறிவிடகூடாது என்பதால்தான் பின்னூடம் இடவில்லை அய்யா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 9:51 am

சிவா wrote:பின்னூட்டங்கள் திரியின் ஓட்டத்தைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற பதிவுகளில் பின்னூட்டங்கள் குறைவாகவே இடம் பெறும். அவ்வாறு அரட்டைகள் இடம் பெற்றாலும் நீக்கப்பட்டுவிடும்.
உங்களின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் இங்கு படித்து பின்னூட்டமும் இட்டுச் செல்கின்றேன் அண்ணா!
மிகவும் நன்று சிவா..வாருங்கள் வந்து உங்களின் கருத்துகளை பதியுங்கள். அது எனக்கு ஒரு நல்ல உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 9:56 am

கே. பாலா wrote:விடாது படிப்பினும் ஏனோ பதிவை
போடாது போனவன் நான்
விடா/து படிப்/பினும் /னோ பதி/வை
போ/டாது போ/னவன் / நான்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
நேர் நேர் நேர் நேர் நிரை நேர்

தேமா கருவிளம் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளம் நாள்
மிகவும் நன்றி பாலா...விடாது படிக்கிறீர்கள் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போல் வந்து உங்களின் கருத்துக்களை பதியுங்கள். குறள் நன்றாக உள்ளது. நீங்களும் எழுதலாமே? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 9:59 am

முரளிராஜா wrote:பின்னூட்டங்கள் நான் போடாவிட்டாலும் இங்கு பதியும் குறளை படித்து ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்
ஒரு நல்ல திரி அரட்டை திரியாக மாறிவிடகூடாது என்பதால்தான் பின்னூடம் இடவில்லை அய்யா
மிகவும் நன்றி முரளி...நான் இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்க வில்லை. அதுவும் சரிதான். ஆயினும் அவ்வப்போது ஒரு சில பின்னூட்டங்கள் இருந்தால், இந்தத் திரி நல்ல முறையில், சீராக நேர்கோட்டில் செல்கிறது என்பதை எனக்கு உணர்த்துவதாக இருக்கும் என்று எண்ணினேன். வாய்ப்பு கிடைக்கும் போது வாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 76 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 60 ... 76  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum