ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி Mon Jul 02, 2012 5:47 pm

நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?

அய்யா மன்னிக்கவும் இனி சிமிளிகளை குறைத்து வார்த்தைகளை உபயோகிக்கிறேன் அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 8:29 am

naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 8:38 am

இரா.பகவதி wrote:
நன்று தம்பி பகவதி...ஒரு இரண்டொரு வார்த்தைகள் எழுதக்கூடாதா?...நீங்களும் அந்த மலையாளத்து கேசவன் நாயர் போல ''எமொடிகான்'' போட ஆரம்பித்து விட்டீர்களே?

அய்யா மன்னிக்கவும் இனி சிமிளிகளை குறைத்து வார்த்தைகளை உபயோகிக்கிறேன் அன்பு மலர்
நான் சிமிலிகள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை தம்பி பகவதி. அத்துடன் ஒரு இரண்டொரு வார்த்தைகள். அவ்வளவுதான் மகிழ்ச்சி . நன்கு தமிழ்ப் படித்த, யாப்பறிந்த கவிஞர்கள், பள்ளியில் ஆசிரியராக, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆக உள்ளவர்களே இந்தத் திரிக்கு வர விரும்பவில்லை என்ற நிலையில், நீங்கள் அடிக்கடி வருகிறீர்களே அதுவே பெரிய காரியம். அதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Tue Jul 03, 2012 10:58 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
naka wrote:பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நினைவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் நல்ல முன்னேற்றம் நாகா அவர்களே. பாராட்டுகிறேன். ஒரு சொல் காய்ச்சீரில் முடியும் பொது அடுத்து வரும் சொல் நேரில் துவங்க வேண்டும். அதுவே வெண்சீர் வெண்டளை ஆகும். ''நாடாது நினைவு'' என்பதில் நா/டா/து = நேர்/நேர்/நேர் = தேமாங்காய். ஆகவே அடுத்து வரும் சொல் நேரில் துவங்கியிருக்க வேண்டும். ஆகவே, நினை/வு = நிரை/நேர் = புளிமா என்று வருவதால் தளை தட்டுகிறது. மற்ற எல்லா இடத்திலும் தளை தட்டாமல் சரியாக உள்ளது. உங்களின் அயராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள் நாகா அவர்களே. மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாட்டுக்கள் பாடுவதை பாதையாய்ப் போட்டிட்டால்
நோட்டுக்கள் நாடாது நாடு

ஐயா வழி காட்டுதலுக்கு நன்றி. நாடு என்று முடிந்தால் சரி யென நினைக்கிறேன்.

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 8:37 pm

naka wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் சரி...நாகா அவர்களே... உங்களின் சரியான புரிதலை நான் பாராட்டுகின்றேன்.
பாட்டுக்கள் பா/டுவதை பா/தையாய்ப் போ/ட்டிட்டால்
நோ/ட்டுக்கள் நா/டாது நா/டு
மேலே குறித்தபடி பார்த்தால், பாட்டுக்கள் என்ற மூவாசை காய்ச்சீருக்கு அடுத்து பா என்று நேரில் துவங்குவதையும்; பாடுவதை என்ற காய்ச்சீருக்கு அடுத்து பா என நேரில் துவங்குவதையும்; பாதையாய் என்ற காய்ச்சீருக்கு அடுத்து போ என்று நேரில் துவங்குவதையும்; போட்டிட்டால் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நோ என்று நேரில் துவங்குவதையும்; நோட்டுக்கள் என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும்; நாடாது என்ற காய்ச்சீருக்கு அடுத்து நா என்று நேரில் துவங்குவதையும் காண்கின்றீர்கள். எல்லாமே காய்ச்சீர் ஆக நீங்கள் தேர்ந்து எடுத்துள்ளதால் இது முழுவதும் வெண்சீர் வெண்டளையால் வந்துள்ளது. பாட்டுக்கள் என்ற முதல் சீருக்கு இரண்டாம் அடியில் நோட்டுக்கள் என்று வந்ததால் எதுகை சிறப்பாக அமைந்துள்ளது. அவ்வாறே முதலடியில் மோனையும் அழகாய் அமைந்துள்ளது. நாடு என்று நீங்கள் முடித்துள்ளதால், காசு என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது. ஆக, ஒரு குறள் வெண்பாவை மிகவும் சிறப்பாக எழுதி முடித்துள்ளீர்கள் என் பாராட்டுக்கள்.

இதற்கு அடுத்து மிக முக்கியமான ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதாவது, நீங்கள் மனதில் எண்ணியதை, சொல்லவந்த கருத்தை, இந்தக் குறள் அப்படியே பிரதிபலிக்கிறதா அல்லது நீங்கள் நினைத்த உட்கருத்து முடிவில் மாறிவிட்டதா? என்பதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். எதுகை, மோனை, இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, ஓரசை ஈற்றுச்சீர் என்று எல்லா இலக்கணத்தையும் பார்த்து கடைசியில் நீங்கள் சொல்லவந்த கருத்து மாறி விட்டால் அந்தக் குறளில் ஒரு பயனும் இருக்க முடியாதல்லவா?! எழுதி முடித்த ஒரு குறளைப் பார்த்து, படித்து மூன்றாவது ஒருவர் அதைச் சரியாகப் புரிந்துகொண்டால், அவரின் விளக்கம் உங்களின் எண்ணத்தின் படி ஒத்துப்போகும் போதுதான் நீங்கள் எழுதும் குறள் சரியாக வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து எழுதிவரும்போது இந்தப் பிரச்சனை சரியாகி விடும். எனவே குழப்பமடைய வேண்டாம் நாகா அவர்களே.

அடுத்து நீங்கள், ஈற்றுச்சீர் என்பதைக்குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். அது, நாள், மலர், காசு , பிறப்பு என்று வாய்பாட்டில் ஒன்றில் தான் முடியவேண்டும். அது குறித்து பின்பு எழுதுகிறேன். தொடர்ந்து முயலுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 03, 2012 9:12 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Ahelpinghand

குறள் வெண்பா : ௦௩௪ (034)

நட்புக்கு நல்விளக்கம் நானென்றே நற்க்கிளையில்
உட்கார்ந் துதவும் குரங்கு

நட்/புக்/கு – நல்/விளக்/கம் – நா/னென்/றே – நற்க்/கிளை/யில்
உட்/கார்ந் – துத/வும் – குரங்/கு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு

எதுகை : ட்புக்கு; ட்கார்ந்

மோனை : ட்புக்கு – ல்விளக்கம் – நானென்றே - ற்க்கிளையில்

ஈற்றுச்சீர் : குரங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் 'தடோபா விலங்குகள் சரணாலயம்' உள்ளது. இது தேக்கு, சால் மரங்களால் ஆன அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும். வருடாவருடம், ஏப்பிரல், மே மாதங்களில் கடுமையான வறட்சி நிலவும். அப்போது தரையில் உள்ள புற்களும் பூண்டுகளும் முற்றிலும் காய்ந்து போய் விடும். மான்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படும். அப்போது அங்குள்ள லங்கூர் இன கருங்குரங்குகள் இந்த மான்களுக்கு உதவி செய்யும். ஒரு மரக்கிளையில் அமர்ந்து இந்த குரங்குகள் அதை வளைத்து தரையை நோக்கி தாழ்த்தும். அப்போது மான்கள் பச்சை இலைகளை பறித்துத் தின்னும். சிறிய மான் குட்டிகளுக்கு எட்டவில்லை என்றால், குரங்கே இலையைப் பறித்து தரையில் வீசும். வருடா வருடம் இந்த உறவு தொடர்த்துகொண்டே உள்ளது. என்னே குரங்குகளின் மனிதநேயம். வியப்பில் ஆழ்த்துகிறது. இப்படத்தை எடுத்தவர், எனது அருமை நண்பர் Dr அருண் சதுர்வேதி அவர்கள். நாக்பூரில் வசிக்கிறார்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் Wed Jul 04, 2012 12:09 pm

அழகு

முகமதை மிளிராக்க மேலிட்டாய் மூலிகை
அகமதை அழகாக்க அறி

(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 04, 2012 8:58 pm

naka wrote:அழகு

முக/மதை மிளி/ராக்/க மே/லிட்/டாய் மூ/லிகை
அக/மதை அழ/காக்/க அறி

(பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். நன்றி -தமிழ் கூடல்)
நேற்று, காய்ச்சீர் வரும்போது அடுத்து துவங்கும் சீர் நேரில் இருக்கவேண்டும் என்று பார்த்தீர்கள். அவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை என்றும் கண்டீர்கள். இன்று இயற்ச்சீர் வெண்டளை என்றால் என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஈரசைச் சீர்கள் நான்கு...தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்று தெரிந்திருப்பீர்கள். ஒரு சொல் நேரில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நிரையாக இருத்தல் வேண்டும். மாறாக, ஒரு சொல் நிரையில் முடிந்தால் அடுத்து துவங்கும் சீர் நேராக இருத்தல் வேண்டும். இப்படி மாறி வருவது இயற்ச்சீர் வெண்டளை எனப்படும். உதாரணம்:
"அன்பும் அறனும் அகிலம் முழுதுமே
என்பும் .......... .......... ........."
இயற்ச்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து வருமாறு வெண்பாக்களை அமைத்தல் சிறப்பு.
முதலில், ஓரசைச்சீர், ஈரசைச்சீர், முவசைச்சீர் என்றால் என்ன அவற்றை எவ்வாறு அசை பிரிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். " மரபுப் பா பயிலரங்கம்" திரியில் இவை மிகவும் எளிமையாக சொல்லப்பட்டு இருக்கிறதே?!! தவறாமல் படியுங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 05, 2012 8:38 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Mariagef

குறள் வெண்பா : ௦௩௫ (035)

வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து

வாழ்/க - மண/மக்/கள் - வை/யத்/துள் - வாழ்/வாங்/கு
சூழ்/கவே - சுற்/றம் - தொடர்ந்/து

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமா – புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு

எதுகை : வாழ்க; சூழ்கவே

மோனை : வாழ்க ணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு;
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து

ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இன்று நமது ஈகரை உறவு , நிர்வாகக்குழு உறுப்பினர், தம்பி மகாபிரபுவின் திருமண வைபவம் இனிது நடைபெறுகிறது.

அவ்வாறே நமது உறவு , ஈகரையின் சிறப்புக் கவி, அருமைத் தம்பி பி.ஜி. ராமனின் அக்காவின் திருமணமும் சிறப்புற நடைபெறுகிறது.

இவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சதாசிவம் Thu Jul 05, 2012 8:26 pm

அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.

தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.

இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்

மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து

மா - மகாலக்ஷ்மி

சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 23 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum