புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
90 Posts - 77%
heezulia
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
255 Posts - 77%
heezulia
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_m10சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவாகம விதிப்படி திருநீறு பூசுவது எப்படி?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 05, 2012 11:47 pm

பூசை அறையில் மணை போட்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்க.

வலதுகை நடுவிரல் மற்றும் மோதிர விரலை சேர்த்து மற்ற விரல்களை நீக்கி சேர்த்துப் பிடித்துள்ள இருவிரல்களுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் திருநீறை எடுக்க வேண்டும். இது நந்தி முத்திரை எனப்பெறும்.

நந்தி முத்திரையால் எடுக்கப்பட்ட திருநீறை இடது உள்ளங்கையில் “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி வைக்க.

பின் அதனை நீராட்டிச் சுத்தம் செய்ததன் பாவனையாக ஒரு துளி நீரை திருநீறின் மீது தெளிக்க.

பின்னர் ஒரு சிறு துளி திருநீறை எடுத்து தென்மேற்கு திசையில் தெறிக்க. ஓத வேண்டிய மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் கடிதொழிக”. இது திருநீறில் இருக்கக் கூடிய ராட்சத பாகத்தை துரத்தி ஓட்டியதன் பாவனையாகும்.

இதன்பிறகு திருநீறை பார்வைத் தூய்மை, தெளித்தல், தட்டல், காப்பு வட்டம் ஆகிய நால்வகைத் தூய்மை செய்ய வேண்டும்.

பார்வைத் தூய்மை: வலது கை விரல்களை நீட்டி நேரே பிடிக்க. பின் அவற்றில் மோதிரவிரலை மட்டும் மடித்தால் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி வழியாக இடது வலது கண்களாலும், நெற்றிக் கண் இருப்பதாக பாவித்து அதனாலும் இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைப் பார்க்க. பார்க்கும் போது “ஓம் சிவாயநம” என்று ஓதுக.

தெளித்தல்: வலது கையில் உள்ள மூன்று விரல்களையும் குழித்துச் சேர்த்து, சுண்டு விரலை மட்டும் விலக்கி புருவ நடுவில் ஒழுகும் அமுதத்தை வாரி எடுப்பதாகப் பாவித்து எடுத்து இடது உள்ளங்கையில் உள்ள திருநீறில் தெளிக்க. ஓதும் மந்திரம் ‘ஓம் இறைதிரு கருவியால் தெளிக்க”.

தட்டல்: திருநீறு உள்ள இடது உள்ளங்கையை அதிரச் செய்தால் அதில் உள்ள திருநீறும் அதிரும். அப்படி அதிரும்போது திருநீறில் உறைந்து கிடந்த ஆற்றல் உயிர்ப்பிக்கப் பெறும். எனவே வலதுகை சுட்டுவிரலை நீட்டிக் கம்புபோல விறைக்கச் செய்து அப்படியே திருநீறு உள்ள இடது உள்ளங்கையை மூன்று முறை தட்டுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு கருவியால் சிலிர்க்க”.

காப்பு வட்டம்: இது இடது உள்ளங்கையில் உள்ள திருநீறைச் சுத்தம் செய்தபின் அந்த தூய்மையை அரண் செய்வதாகும். வலதுகை சுட்டுவிரலை மட்டும் நீட்டி, இடது உள்ளங்கையில் உள்ள திருநீறின் விளிம்பையொட்டி வட்டமிடுக. ஓதும் மந்திரம் “ஓம் இறைதிரு வடிவே சூழ்ந்து காக்க”.

(தொடரும்)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:37 am

ஆஹா திருநீர் புசுவதில் இவ்வளவு விடயம் உள்ளதா பகிர்விற்கு நன்றி சாமி அய்யா நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 06, 2012 10:34 am

நன்றி சாமி..

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 06, 2012 3:13 pm

திருநிரின் மகிமையை அறியதந்த உங்களுக்கு எல்லா வளமும் நிறையட்டும்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 06, 2012 9:08 pm

பின்னர் பதாகை முத்திரையால் (அதாவது திருநீறு உள்ள இடது உள்ளங்கையை வலது உள்ளங்கையால் மூடுதல்) மூடி வரும் கலை மந்திரங்களை ஓதுக.
ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி!
ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி!
ஓம் பட்டறிவுக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி!
ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி!

அதன் பின்னர் பதாகை முத்திரையால் மூடியபடி இடக்கையை வலது முழந்தாளில் வைத்து உருவிரி மந்திரங்களை ஓதுக.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!

ஓம் இறைதிரு இதயமே போற்றி!
ஓம் இறைதிரு முகமே போற்றி!
ஓம் இறைதிரு முடியே போற்றி!
ஓம் இறைதிரு வடிவே போற்றி!
ஓம் இறைதிரு கண்ணே போற்றி!
ஓம் இறைதிரு கருவியே போற்றி!

இதன் பிறகு வரும் தமிழ்மறைகளை ஓதுக.
மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமைப்பங்கன் திருஆலவாயான் திருநீறே!

கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலிய சிவாயநம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூர் அரனே!

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்தன்
மந்திர நமச்சிவாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே!

இதன்பின்னர் பதாகை முத்திரையை நீக்கி சிறிது நீரை திருநீறை குழைக்குமளவிற்கு உருத்திரிணியால் பஞ்ச பாத்திரத்திலிருந்து எடுத்து “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதி திருநீற்றில் விடுக.

பின்னர் “ஓம் இறைதிரு வடிவாய் நிறைக” என்று ஓதி குழைத்து, வரும் மந்திரங்களை ஓதி அந்தந்த இடங்களில் மூவரி தோன்ற இடுக.

“ஓம் தனியொளித் தலைவா போற்றி” என்று உச்சியில் தெளிக்க.
“ஓம் உயிரொளிர் பிரானே போற்றி” என்று நெற்றியில் இடுக.
“ஓம் அவிரொளி இயவுள் போற்றி” என்று மார்பில் இடுக.
“ஓம் உமையொரு கூறா போற்றி” என்று நாபியில் இடுக.
“ஓம் மன்னொளி முதலே போற்றி” என்று ஓதிக் கொண்டே வலத்தோள், இடத்தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது முட்டி, இடது முட்டி, வலது பிடரி, இடது பிடரி, முதுகு பாகத்தின் இடுப்புப் பகுதியில் வலது இடது பக்கங்கள் ஆகியவற்றில் குழைத்த திருநீறை இடுக.

இடது உள்ளங்கையில் நீரை ஊற்றி திருநீறுடன் உள்ள இருகரங்களையும் பின்வரும் ஐம்முக மந்திரங்கள் ஓதி கழுவி தலையில் தெளிக்க.
ஓம் தனியொளித் தலைவா போற்றி!
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி!
ஓம் அவிரொளி இயவுள் போற்றி!
ஓம் உமையொரு கூறா போற்றி!
ஓம் மன்னொளி முதலே போற்றி!

பின்னர் “ஓம் இறைதிரு கருவியால் தெறிக்க” என்று ஓதி முத்தாளம் செய்க.
(முத்தாளம்: வலது கை சுட்டுவிரல் மற்றும் நடுவிரலைச் சேர்த்துப் பிடித்து இடது உள்ளங்கையில் தட்டுக.)

பின்னர் “ஓம் இறைதிரு இதயமே போற்றி” என்று கழுவி விட்ட திருநீறைப் பாவனையால் வாங்கி மார்பில் சேர்க்க.
(முற்றும்)

arsvasan16
arsvasan16
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 05/06/2012

Postarsvasan16 Wed Jun 06, 2012 11:40 pm

மிக நல்ல பதிவு மற்றும் அறிவுக்கு பயனளிக்கும் முக்கிய பதிவு இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் பயனுள்ள thakaval

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 07, 2012 10:40 am

நன்றி பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே , இப்போ தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Thu Jun 07, 2012 1:52 pm

அருமையான விளக்கம். நன்றி சாமி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக