ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

+4
balakarthik
ராஜா
யினியவன்
arjunsugu
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by arjunsugu Tue May 29, 2012 5:08 pm

அப்பா...!

" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..."

என் முதல் கதாநாயகன்..
நீங்கள் தான் அப்பா..!

தலைகனத்தில்
நான் ஆடும் போது
குட்டு வைத்தது நீங்கள்,

தடுமாறி நான்
விழுந்த போது
தூக்கி நிறுத்தியதும்
நீங்கள் அப்பா..!

உங்கள் உயிரே
என் மீது
வைத்து இருந்தும்,
ஒரு சிறு
இடைவெளியில்தான்
நம் பந்தத்தை
நீங்கள்
வைத்து இருந்தீர்கள்,
அந்த
இடைவெளிதான்
உங்கள் பாசத்தை
உணர வைத்தது எனக்கு,


கம்பீர பார்வை,
நேர் படும் பேச்சு,
அஞ்சா நெஞ்சம்,
சில சமயம்
ரௌத்திர குணம்
இருந்தாலும்
உங்கள்
மனம் என்றும்
குழந்தைதான் அப்பா...!


அடுக்கி வைத்த
சிங்கப்பல்,
கொண்டு நீங்கள் சிரிக்கும் போதும்,
உதிர்ந்தது
என்னவோ
மழலை
புன்னகைதான்
அப்பா...!


அம்மா சொல்வார்கள்
நான்
எனக்கு
விவரம்
தெரியும் வரை
உங்கள் மடியில் தான்
படுத்துகொள்வேன் என்று,

ஆனால்
எனக்கு விவரம்
தெரிந்த நாள் முதல்,
உங்கள் மடியில்
நான்
படுத்தது இல்லையே அப்பா..!


ஒன்று நினைவு
உள்ளது அப்பா...
நான்,
காதலில் தோற்ற போது,

என் படுக்கையே
என் கண்ணீரால்
நனைந்த போது,
நீங்கள் வந்தீர்கள்,
என் தலை எடுத்து
உங்கள் மடியில் வைத்து
என் தலைமுடி கோதி,
என் கண்ணீர் நீங்கள்
துடைத்தபோது ,
என் மனசாட்சி
என்னை செருப்பால்
அடித்தது அப்பா...!


இந்த மடியை
விட்டுவிட்டா
நீ,
பெண் மடி
தேடி அலைந்தாய் என்று...?


உங்கள் கண்களில்
நான் இதுவரை
கண்ணீரை கண்டதில்லை,

அப்பா,
உங்கள் அப்பா
இறந்தபோதும்
மனதில் அழுதீர்களே தவிர
கண்களில் அழவில்லை நீங்கள்,


கண் மருத்துவரிடம்
உங்களை
கூட்டிசென்றபோது,
உங்கள் கண்களில்
மருந்து விட்டார்கள்,

முதல் சொட்டு
உங்கள் கண்களில் விழாமல்,
கண் ஓரம் விழுந்து,
கண்ணீர் போல்
வழிந்தது,
வழிந்தது என்னவோ
மருந்துதான்,
பார்க்க கண்ணீர் போல்
இருந்ததனால்
நான் பதறிப்போனேன்
அப்பா...!
என் அப்பா கண்களில் கண்ணீரா.???


ஒரு முறை சாலையில்
உங்கள் விரல் பிடித்து
நான் நடக்கையில்,
எதிரே வந்தவர்,
தன்
மிதிவண்டியில்
என்னை இடித்து விட,
என் கால்களில்
ரத்தம்..,

நீங்கள் எதுவும் பேசவில்லை,
அப்போது...!
பிறகு,
என்னை வீட்டில் விட்டுவிட்டு...
நீங்கள் சென்று
அவன் சட்டை பிடித்து,
அவன் கால்களை
பதம் பார்த்ததை,
நான் அறிவேன் அப்பா..!

உங்களின் ரௌத்திரம்
நான் கண்டது
அப்போதுதான் அப்பா...!


நூறு ருபாய்
நான் கேட்டாலும்
நூறு கேள்வி
கேட்பீர்கள்..எதற்கு என்று..?
வெறுப்பாய்
பெற்றுசெல்வேன் நான்..,

இன்று நான்
சம்பாதிக்கையில்
புரிகிறது அப்பா..!
நூறு ரூபாய்க்கு
நூறு வியர்வை துளிகளை
சிந்த வேண்டி இருக்கிறது...,


அப்பா..!
உங்களின் வியர்வை
உறிஞ்சு வளர்ந்தவந்தானா நான்..???


உங்களால் பிறந்தவன்
நான் அப்பா..,
உங்களை காய படுத்தி
இருக்கிறேன் பல முறை,
மன்னிப்பு என்ற வார்த்தை
போதாது அப்பா..!


என் ஆசை
ஒன்று தான் அப்பா..!
உங்களை இழக்கும்
மன தைரியம்
எனக்கு இல்லை..அப்பா..!


என் ஈமை சடங்குகளை
நீங்கள் செய்யுங்கள் அப்பா
என் பாவங்கள்
தீரட்டும்...


ஆம் அப்பா
உங்களுக்கு முன்பு
நான் மரிக்க வேண்டும்...


போதும் அப்பா..,
இதுவரை போதும்
நான் உங்களை
பாடாய் படுத்தியது....!

அப்பா...!

" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." { Ini Oru Vidhi Seivom }

- இளையபாரதி
(நன்றி ...வழிமூலம் முகப்புத்தகம் இனி ஒரு விதி செய்வோம்...இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ...நிச்சயமாக நான் காதலித்த முதல் ஆண் என் அப்பா ...நன்றி இளையபாரதி உன் கவிதையின் வெற்றி எங்களின் கண்ணீர் )


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by Guest Tue May 29, 2012 5:47 pm

சூப்பருங்க அருமை நண்பா ...நெகிழ்ச்சி கவி
avatar
Guest
Guest


Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by யினியவன் Tue May 29, 2012 5:52 pm

அப்பாவின் அருமை பெருமையை உணர்த்தும் வரிகள் பகிர்வுக்கு நன்றி சுகுமார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by ராஜா Tue May 29, 2012 5:54 pm

மனம் இயங்க மறுக்கிறது. அழுகை பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்
arjunsugu wrote:இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ..)
இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் தந்தை இறந்துவிடுவர் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் என்னிடம் சொன்ன அன்று இரவு , என் தந்தை இது எதுவுமே தெரியாமல் உறங்கிகொண்டிருந்தபோது அவரின் வயிற்றை தடவி கொடுத்துக்கொண்டு இதே தான் நானும் நினைத்து கொண்டிருதேன் கண்ணீருடன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by arjunsugu Tue May 29, 2012 6:03 pm

ராஜா wrote:மனம் இயங்க மறுக்கிறது. அழுகை பகிர்வுக்கு நன்றி அர்ஜுன்
arjunsugu wrote:இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ..)
இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் தந்தை இறந்துவிடுவர் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் என்னிடம் சொன்ன அன்று இரவு , என் தந்தை இது எதுவுமே தெரியாமல் உறங்கிகொண்டிருந்தபோது அவரின் வயிற்றை தடவி கொடுத்துக்கொண்டு இதே தான் நானும் நினைத்து கொண்டிருதேன் கண்ணீருடன்.
நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by ராஜா Tue May 29, 2012 6:09 pm

arjunsugu wrote:நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...
நன்றி சுகுமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by balakarthik Tue May 29, 2012 6:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம் என்றால் எம் தந்தைதான்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by arjunsugu Tue May 29, 2012 6:39 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி நண்பர் கார்த்திக் பாலசுப்ரமணியம் அவர்களே ...பதிர்வுக்கு நன்றி ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by arjunsugu Tue May 29, 2012 7:09 pm

ராஜா wrote:
arjunsugu wrote:நண்பரே உங்களின் வலியை நான் வார்த்தையாக மட்டும் உணராமல் இதய பூர்வமாக உணர்கிறேன் ...உங்களின் தந்தையின் அன்பும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் எல்லா நிலைகளும்... நான் எல்லாரையும் நேசிக்க கொடுத்தது என் தந்தையே... நான் முதன் முதலில் நேசித்ததும் அவரைதான் ...இந்த கவிதையின் வலியினை உலகின் எல்லா தந்தையர்க்கும் அர்ப்பணம் செய்கிறேன் ... நான் எனது தந்தையை காதலிக்கிறேன் ...
நன்றி சுகுமார்
நண்பரே தாங்கள் வாழ்வியல் நிகழ்வினை என்னுடன் பகிர்ந்து கொண்டமை என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ... என் வாழ்விலும் வலியினை உணர்ந்தேன் என் தந்தையின் உடல்நலம் சரி இல்லாத நேரங்களில் ...அந்த ஒரு வார காலம் வேதனையின் காலமாக இருந்தாதது அவர் மீண்டும் உடல் நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பும் வரை ...அவர் ஒரு விவசாயி அவர் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தோ உடல் நலம் குன்றியோ பார்க்காத நான் துடித்த நாட்கள் அவை ...இன்றும் இந்த வாழ்கையில் எனக்காய் உழைத்து கொண்டிருக்கிறார் ...அவர் தந்தையால் அவருக்கு வழங்க முடியாமல் நிறைவேற்ற முடியாமல் போன ஆசைகளை எனக்காய் நிறைவேற்றி இருக்கிறார் .... என் தந்தை வறுமையின் கொடுமையால் கல்வியறிவு பெற முடியாமல் போனவர் ...இன்று என்னை இயந்திரவியல் பொறியியல் படிப்பினை படிக்க வைத்துள்ளார் ...நான் எழுதும் கவிதைகள் கூட அவருக்கு தெரியாது...அவருக்காய் வாசிக்க முடியாமல் போனாலும் அதன் வலியை வேதனையை உணர்கிறேன் ..."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்" என்ற குறள் எப்போதும் என் நினைவில் நிலாடுகிறது நிறைவேற்ற சொல்லி என் கவிதையின் மூலமும் நடத்தையின் மூலமும் ...அவருக்கு பணிவைடை செய்யவும் என் மகனாக அவர் பிறக்கவுமே கடவுளை வேண்டுகிறேன் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 6:59 am

மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அர்ஜுன் சுகுவின் கவிதை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிங்கம் என்றால் எம் தந்தைதான்... Empty Re: சிங்கம் என்றால் எம் தந்தைதான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum