ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:51 am

மலேசியாஇன்று

போலீஸ் தடுப்புக் காவலில் மரணமுற்ற குகனின் உடல் கிடத்தப்பட்ட பொன் நிற மெர்சடீஸ் பென்ஸ் காரைப் பின்தொடர்ந்து 500 பேர் கொளுத்தும் வெயிலையும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னேரம் மணி 2 அளவில் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலிருந்து ஊர்வலம் சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள பூச்சோங், இந்து மயானத்தை நோக்கி புறப்பட்டது.

சிறிது தூரம் நடந்தபின் கூட்டத்தினர் அவர்களுடைய வண்டிகளில் ஏறி சவம் ஏற்றப்பட்டிருந்த பென்ஸ் காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தென்இந்திய வழக்கப்படி சவப்பெட்டி வாழை இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காரில் ஏற்றப்பட்டு குகன் மரணமடைந்த போலீஸ் நிலையத்திற்குச் சென்று, பின்னர் சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu1
முதல் சவப் பரிசோதனையில் அவருடைய நுரையீரலில் தண்ணீர் கோர்த்திருந்ததால் குகன் இறந்ததாகக் கூறப்பட்ட மருத்துவ அறிக்கையை குகனின் கும்பத்தினர் நிராகரித்ததைத் தொடர்ந்து இரண்டாவது பரிசோதனை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நடைபெற்றது.

ஏராளமான செய்தியாளர்கள் - வெளிநாட்டு செய்தியாளர்கள் உட்பட - பின்தொடர எல்டிபி நெடுஞ்சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் சுமார் 80 நிமிடங்களுக்குப்பின் சுபாங், தைப்பான் போலீஸ் நிலையத்தை சென்றடைந்தது.

அந்தப் போலீஸ் நிலையத்தில்தான் உடலில் கடுமையான காயங்களுக்கு ஆளான 22 வயதான அந்த இளைஞர் மயக்கமுற்று விழுந்து இறந்து போனார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:52 am

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu2

அப்போலீஸ் நிலையத்தின்முன் ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட இன்னொரு பெரிய கூட்டத்தினர் இரண்டு நிமிடங்களுக்கு பிராத்தனை செய்ததுடன் போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கும் சுலோகங்களை முழங்கினர். அதன் பின்னர், ஊர்வலத்தைத் தொடர்ந்தனர்.

அங்கு 20 போலீஸ் சேமப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஹெலிக்கோப்டர் உயரே சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அசம்பாவங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஊர்வலம் செல்லும் வழியில் பத்து 14, தேவான் செபாரங்கான் பூச்சோங் முன் போலீஸ் சேமப்படையினரின் இன்னொரு ஒன்பது வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஊர்வலம் பூச்சோங், கம்போங் பத்து 14 லில் உள்ள மயானத்தைச் சென்றடைந்தது. வழியில் போக்குவரத்து நிலைகுத்தியது. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் ஒலி எழுப்பி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

அந்நேரத்தில் கூட்டத்தினரின் எண்ணிக்கை 1000 க்கு மேலாகியது.

இறுதியில், சில சடங்குகள் மற்றும் பிராத்தனைக்குப்பின் மாலை மணி 5.30 க்கு குகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:52 am

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu3குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu4

அறுவர் கைது செய்யப்பட்டனர்

இதற்குமுன் காலையில் மலாயாப் பல்கலைக்கழக மருத்திவ மையத்திற்குச் செல்லும் சாலைகளை ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பே போலீசார் மூடினர்.

அறுவர் கைது செய்யப்பட்டனர்: மூவர், தடை செய்யப்பட்டிருக்கும் இண்ட்ராப் இயக்கத்தின் டி-சட்டையை அணிந்து இருந்தனர் என்பதற்காக; இன்னும் இருவர், போலீஸ் தடையை மீறி சவக்கிடங்கினுள் நுழைய முயன்றனர் என்பதற்காக.

கைது செய்யப்பட்டவர்களில் இண்ட்ராப் இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் ஆர்.எஸ், தினேந்திரனும் ஒருவர்.


குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu5
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:55 am

ஆறாவதாகக் கைது செய்யப்பட்டவர் கொலை சம்பந்தமாக சந்தேகிக்கப்பட்டவர் என்று போலீஸ் ஐஜிபி மூசா ஹசான் பின்னர் கூறினார்.

சொகுசு கார்கள் களவாடலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட குகன் ஜனவரி 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் ஐந்து நாள்களுக்குப்பின் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது மரணமடைந்தார்.

குகனின் சவ அடக்கத்தை ஓர் அரசியல் கூட்டமாக்கக் கூடாது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் காலிட் அபு பாக்கர் ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu6
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:55 am

சிலாங்கூர் மாநில அரசாங்கம் சவ அடக்கத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் கூறினார்.

சவ அடக்கத்தில் கலந்து கொண்ட இதர தலைவர்களில் பினாங்கு துணை முதலமைச்சர் பி. ராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந்த் சிங் டியோ, ஆர். சிவராசா, எம். மனோகரன், தெராசா கோக் மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்குவர்.

பொதுமக்கள் எழுப்பிய கடும் கண்டனத்தைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் இவ்வழக்கை கொலை என்று வகைப்படுத்தினார். இவ்வழக்கு பற்றிய விசாரணைகள் முடிவுற்றுள்ளன.


குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu7
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:56 am

குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும்

“இன்றைய சவ அடக்கம் போலீஸ் அத்துமீறலால் ஏற்பட்ட கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்”, என்று சிவராசா கூறினார்.

“மக்கள் நீதி கோருகிறார்கள். அரசாங்கம், குகனின் மரணம் முழுமையாக விசாரிக்கப்படுவதை,குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்படுவதை, அவர்கள் தப்பித்துவிடாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்”, என்று அவர் எஎப்பியிடம் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர், தனேந்திரன் கைதுகள் நியாயமற்றவை என்று அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போலீஸ் நிலையத்திலிருந்து கூறினார்.

“நாங்கள் செய்ததெல்லாம், போலீசாரின் அத்துமீறலால் இறந்து போன ஒருவரின் சவ அடக்கத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை தெரிவிக்க வந்ததுதான். இது மலேசிய அரசாங்கம் அதன் மக்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு, மரியாதை கொடுப்பதில்லை என்பதைக் காட்டுகிறது”, என்று தொலைபேசி வழியாகக் கூறினார்.

சவ அடக்கத்தில் தனது மனைவி மற்றும் அவர்களுடைய மூன்று குழந்தைகளுடன் கலந்து கொண்ட 38 வயதான பொறியியலாளர் பீட்டர் செல்வநாயகம் குகனின் மரணத்தை சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகப் பின்பற்றப்படும் வேறுபாட்டுடன் இணைத்துக் கூறியவர்களில் ஒருவராவார்.

“இந்திய சமூகத்தினருக்கு எதிரான அநீதியை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைக் காட்டுவதற்காக எனது குடும்பத்தினரும் நானும் இங்கு வந்திருக்கிறோம். குற்றவாளிகள்மீது வழக்கு தொடரப்பட வேண்டும். அவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப விடக்கூடாது”,
என்று அவர் கூறினார்.
குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Fu8
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:57 am

தலைவர்கள் புடைசூழ குகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

சுமார் 500 பேர்கள் பின்தொடர குகனின் உடல் கிடத்தப்பட்ட சவ வண்டி சுபாங் தைபான் போலீஸ் நிலையத்தை பிற்பகல் மணி 3.20 க்கு - ஊர்வலம் தொடங்கிய 80 நிமிடங்களுக்குப் பிறகு - வந்தடைந்தது.

போலீஸ் நிலையத்தின்முன் ஊர்வலம் இரண்டு நிமிடங்களுக்கு - ஒரு சிறு பிராத்தனை செய்வதற்காகவும் போலீசாரின் வன்முறைகளுக்கு எதிராக சுலோகங்களை முழங்கவும் - நின்றது. அதன்பின், குகனின் உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலம் பூச்சோங் நோக்கி நகர்ந்தது.

இருப்பினும், முன்பு அறிவித்திருந்தவாறு சடங்குகள் எதுவும் நடத்தப்படவில்லை.

ஊர்வலம் மணி 4.30க்கு பூச்சோங் இடுகாட்டை சென்றடைந்தது.

சில சடங்குகள் மற்றும் பிராத்தனைக்களுக்குப் பிறகு குகனின் உடல் மாலை மணி 5.30 க்கு அடக்கம் செய்யப்பட்டது.

குகனின் சவ அடக்கத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களில் பினாங்கு துணை முதல்வர் பி. ராமசாமி, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம், பூச்சோங் நாடாளுமன்றா உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஜெயகுமார் ஆகியோரும் அடங்குவர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Admin Thu Jan 29, 2009 4:58 am


குகனின் இறுதி யாத்திரை தைபான் போலீஸ் நிலையத்தின் முன் நின்றது


குகன் ஆனந்தனின் இறுதி யாத்திரை இன்று பிற்பகல் மணி 2.05 க்கு யுனிவர்சிடி மலாயா மருத்துவ மையத்திலிருந்து (யும்எம்எம்சி) புறப்பட்டது.

முன்னதாக யும்எம்எம்சி-யை நோக்கிச் செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் மூடிவிட்டனர்.

ஐவர் கைது செய்யப்பட்டனர்-இருவர் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுத்ததற்காகவும் மேலும் இருவர் போலீஸ் தடுப்பைமீறி யும்எம்எம்சி சவக்கிடங்குக்குள் நுழைய முயன்றதற்காகவும்.

கைதி செய்யப்பட்ட ஐந்தாமவர், இண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ். தனேந்திரன். தடைசெய்யப்பட்ட இண்ட்ராப் இயக்க டி-ஷர்ட் அணிந்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

குகனின் இறுதி யாத்திரை யும்எம்எம்சி-யிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பூச்சோங்கில் உள்ள இந்து மயானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

குகனின் நல்லடக்கச் சடங்கை அரசியல் கூட்டமாக ஆக்கிட வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் காலிட் அபு பக்கர் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வோர், சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் பதாகைகள் அல்லது சுவரொட்டிகளை ஏந்திவர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த எச்சரிக்கையையும் மீறி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கானவர் யும்எம்எம்சி-க்கு வந்திருந்தனர். அந்த இடம் முழுக்க போலீசாரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இறுதி ஊர்வலம், சுபாங்ஜெயா தைபான் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று பின்னர் புறப்பட்டுச் செல்லும் என காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம் மலேசியாகினியிடம் கூறினார். அங்கு குகனுக்கு இறுதி கிரியைகள் சில செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஊர்வலம் வந்து சேர்வதற்கு முன்பே மணி 3.20 அளவில் அங்கு சுமார் 100 பேர் காத்திருந்தனர். 20 கலகத் தடுப்புப் போலீசாரும் அங்கிருந்தனர். ஒரு ஹெலிகொப்டரும் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஊர்வலம் போலீஸ் நிலையம் வந்தடைந்ததும் ஊர்வலத்தினர் போலீஸ் கொடூரமாக நடந்து கொள்வதற்கு எதிராக சுலோகங்களை முழங்கினர். பின்னர் பூச்சோங் நோக்கிப் புறப்பட்டனர். போலீஸ் நிலயத்துக்குமுன் ஏற்கெனவே சொன்னதுபோல் கிரியை எதுவும் செய்யப்படவில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம் Empty Re: குகன் சவ அடக்கம்: 500 பேர் உடன்செல்ல 20கிமீ ஊர்வலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum