ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

+13
பத்மநாபன்
பாலாஜி
நாகசுந்தரம்
கே. பாலா
ரா.ரா3275
கேசவன்
சாமி
பிஜிராமன்
சார்லஸ் mc
இரா.பகவதி
Aathira
அதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 7:26 pm

நாற்பதடி வெண்பா
நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம்


என் இனிய உறவுகளே,
நீண்ட நாட்களாக ‘’கவிதைக் களஞ்சியம்’’ பக்கமே வரமுடியவில்லை. கடந்த 18 ம் திகதி இனப்படுகொலை குறித்து அவசரஅவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அதிகமான வேலைப்பளுவின் காரணமாகவும் எனது உடல்நலக்குறைவினாலும் “பொழுதைக் கழிக்க ஒர்திரி” யும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்க வேண்டும் என்று உறவுகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். விரைவில் அத்திரியை தட்டிஎழுப்ப உள்ளேன். இடையில், இயற்கை உணவின் நன்மைகள்/பெருமைகள் குறித்து ஒரு கவிதை எழுதும்படி எனது நண்பர்கள் கோவையில் இருந்து பணித்தார்கள். கசாப்புக்கடைகாரன் ஜீவகாருண்யம் குறித்து போசுவதுபோல் இருக்கும் என்றேன் நான். இல்லை...இல்லை, ஒரு கவிஞன் என்ற முறையில் இயற்கை உணவைப் பேணுபவனாக எண்ணிக்கொண்டு எழுதுங்கள் என்றார்கள். சரி என்று நானும் எழுத ஆரம்பித்தேன். பின்புதான் தெரிந்தது அது அவ்வளவு சுலபம் அல்ல என்று. முதலில் இயற்கை உணவு என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள படிக்கவேண்டி இருந்தது. அதன் நன்மைகள்/கடைப்பிடிக்க ஏற்ப்படும் சிரமங்கள் குறித்து அறிந்துகொண்டேன். முதலில் இயற்கை உணவு என்றால் சைவஉணவுதானே என்று நினைத்தேன். பின்புதான் புரிந்தது அதுவும் சரியல்ல என்று. படிக்கும்போதே என்னால் சிலவற்றை ஜீரணிக்க முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக எழுத ஆரம்பித்தேன். நீண்டுகொண்டே போவதால் ஒரு வழியாக முடித்துக்கொண்டேன். முறையாக முற்றுப்பெறவில்லை என்பதுதான் உண்மை.

கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். மொத்தம் நாற்பது அடிகள். எல்லாமே முச்சீர்களால் ஆன சொற்களையே உபயோகித்துள்ளேன். அதிலும் நேரில் துவங்கி நேரில் முடியும் காய்ச்சீர்கள். அதாவது, தேமாங்காய், கூவிளங்காய் மட்டுமே. எனவே, கவிதை முழுவதும் வெண்சீர் வெண்டளை வருமாறு அமைத்துள்ளேன். எல்லோருக்கும் புரியும்படியாக எளிய சொற்களையே கையாண்டுள்ளேன். இடையில் சில ஆங்கிலச் சொற்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால்கூட அதனால் அசை-சீர் கெடாமல் பார்த்துக்கொண்டேன். முடிவாக, இவ்வளவும் செய்துவிட்டு கவிதைக்கு பொருள் பொருந்தி வரவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை அல்லவா. என்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்துள்ளேன்.

உறவுகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: கவிதை பெரிதாக இருக்கிறது என்பதால் நுனிப்புல் மேயாமல், ஆரம்ப முதல் கடைசிவரையில் படித்தபின்பு உங்களின் கருத்துக்களை பின்னுட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.

இறுதியாக, இந்தக்கவிதையை எண்ட பிரியப்பட்ட அனியன் ஸ்ரீமான் கேசவன் நாயருக்கு அன்புப் படைப்பாக்குகிறேன் (அது வேறு யாரும் இல்லீங்கோ...நம்ம தம்பி emoticon பிரியன், சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கேசவன்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ... ஹி..ஹி..ஹி..)

[கலிவெண்பா]
அன்றெல்லாம் நம்முன்னோர் அக்களிப்பாய் வாழ்ந்திட்டார்
நன்றென்றே நல்லியற்கை நல்கியதை ஏற்றார்கள்
தேங்காயும் நற்பழங்கள் தேர்ந்தெடுத்துப் பூசித்தார்
மாங்காயும் நல்லபலா வாழைவகை உண்டுவந்தார்
அன்றவருக் கச்சமில்லை அல்சரென்றும் கேன்சரென்றும்
நன்றாக வாழ்ந்தார்கள் நல்லதையே சிந்தித்தார்.
பாலைவன நாடுகளில்* பல்திராட்சைச் சாறுடனே
சோலைவளர் பேரீச்சம் சோர்வின்றி உண்டார்கள்
எத்தகைய சூட்டினிலும் ஏதமிகும் மண்ணிடையில்
சித்தமதே குன்றாமல் சீர்மிகுந்தே வாழ்ந்தார்கள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* அத்தனைபேர் நல்லுயிரை
காப்பதுவும் யாதென்றீர்? வாழைமரக் காய்கனியே!
கேரளத்தைப் பாருங்கள் கப்பையுடன் நேந்திரமும்
தாரளமாய் காலையிலே தக்கபடி உண்ணுகின்றார்.
இப்படியாய் இங்கிருக்க இன்றிளைய செந்தமிழர்
எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்
நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?
உண்மையிதே ஆனாலும் உண்பதற்கு என்னவென்பீர்?
திண்மையுடன் நான்சொல்வேன் தின்பதற்குண் டேராளம்
நல்லியற்கை தந்துள்ள நற்பழங்கள், கொட்டைகளும்
பல்விதமாம் கீரைகளும், பச்சைக்காய் நற்பருப்பும்
தாழ்வின்றி நற்தேங்காய் தாராள மாய்சேர்த்தே
வாழ்வோம்நாம் வையகத்தில் நன்கு.

[நேரிசை வெண்பா]
வாழ்த்திடுவோம் நல்லுணவை வந்தனங்கள் சொல்லித்தான்
தாழ்த்திடுவோம் நம்தலையை தண்டமிழா – பாழ்கொள்ளை
நோய்நொடிகள் நீங்கிநல்ல நுண்மையுற நாமுண்போம்
காய்கனிகள் கச்சிதமாய் சேர்த்து

-----------------------------------------------------------------------------------------------
பாலைவன நாடுகளில்* = அரேபிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்.
ஆப்பிரிக்க நாடொன்றில்* = கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி,ருவாண்டா
போத்தென்றே* = போத்து = பறவை, விலங்குகளின் ஆணினத்தைக் குறிக்கும்
சொல். கேரளத்தில் (மலையாளத்தில்) எருமை.
மச்சையையும்* = மஜ்ஜை = எலும்பின் உட்திசு (மச்சை) = marrow of the bone.
[ஆதாரங்கள்: சென்னை பேரகரமுதலி, வின்சுலோ அகரமுதலி]

-----------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கொண்டு படிப்பதற்கு:
1. டாக்டர் தேவேந்திர வோரா அவர்களின் “நம் நலம் நம் கையில் பாகம்-1 (தமிழ், ஆங்கிலம்), பாகம்-2, (ஆங்கிலம்).
2. இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - மூ.ஆ. அப்பன். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, மூலிகை விளக்கங்கள், இயற்கை உணவு செய்முறைகள்.
3. இயற்கை வாழ்வியல் கலை. கொ.எத்திராஜ், சித்த வித்தை தவ மையம், சித்தர் வழி சாலை, சிவானந்தகிரி, மல்லையாபுரம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
4. எளிய முறை உடற்பயிற்சி-வேதாத்திரி மகரிஷி
5. உலக சமாதானம்-வேதாத்திரி மகரிஷி


----- Dr. சுந்தரராஜ் தயாளன்,பெங்களூர்.


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 23, 2012 9:47 am; edited 2 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by அதி Tue May 22, 2012 7:35 pm

"கப்பை" என்றால் என்ன ஐயா?

இதற்கு "தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!" என்ன பொருள்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Aathira Tue May 22, 2012 7:45 pm

ஐயா,
உண்மையாகச் சொல்லப் போனால இது சித்தர் இலக்கியம் படிப்பதைப் போல உள்ளது.
எம்முளும் உளான் ஒரு பொருநன் என்று அவ்வை சொல்வது போல...

எங்களிடமும் உளார் ஒரு மரபுக் கவி என்று இதுநாள் வரை மார் தட்டிக் கொண்டு இருந்தோம். இப்போது எம்மிடமும் உள்ளார் ஒரு சித்தர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவோம்.

தாங்கள் ஈகரையின் சிறப்புக்கவி என்பதில் ஈகரைக்கும் எங்களுக்கும்தான் பெருமை. :வணக்கம்:


நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Tநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Hநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Iநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Rநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by இரா.பகவதி Tue May 22, 2012 7:46 pm

அய்யா மிக அருமை நம்ம ஊரு காய் மற்றும் உணவுவகைகளையும் , தற்போது உள்ள அவசர உணவுகளால் ஏற்படும் அவலங்களை அழகாக புட்டு வைத்துள்ளீர்கள் ,பதிவிற்கு நன்றி அய்யா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Aathira Tue May 22, 2012 7:50 pm

//எப்படித்தான் ஏற்றாரோ இத்தாலிப் பிஸ்சாவை!
சீனாவின் நூடுல்ஸ்சும் சில்லிகொபி என்றுசொல்லி
தானாய்கை யாட்டுமுன்னே தந்திடுவார் செய்ததனை!
இத்தகைய இல்லுணவை இங்கிவர்கள் உண்பதுடன்
மெத்தனமாய் பீடிசிகார் மேல்நாட்டுப் விஸ்கியென்பார்!
ஆட்டிறைச்சி, கோழிபுறா அக்கக்காய் வெட்டிவைத்தே
காட்டுமுயல் பன்றியுடன் கச்சிதமாய் ஓருணவாம்!
கூட்டமிடும் வெள்ளெலியைக் கூடயிவர் விட்டதில்லை!
மாட்டிறைச்சி போத்தென்றே* மச்சையையும்* விட்டகலார்/
/

உண்மை. மிக அழகாக சொல்லி உள்ளீர்கள். :வணக்கம்:



நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Tநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Hநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Iநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Rநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Aநாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 8:24 pm

அதி wrote:"கப்பை" என்றால் என்ன ஐயா?

இதற்கு "தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!" என்ன பொருள்?
உங்கள் வருகைக்கு நன்றி அதி. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 8:34 pm

வெண்பா மிக அருமையாக உள்ளது ‌ஐயா நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 224747944 நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 677196 நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550


நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by பிஜிராமன் Tue May 22, 2012 8:50 pm

ஐயா,
இதனை வெறும் மரபுக் கவிதை என்று நான் கூறேன்.

மக்கள் எத்தகைய உணவு முறையை பின்பற்ற வேண்டும், எதை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை பற்றி ஆய்வு செய்து இயற்றப்பட்டுள்ள பா என்றே கூறுவேன்.

அருமையான மரபுக் கவிதை ஐயா, தக்க உதாரணங்களுடன் கருத்தினை எடுத்தியம்பியது பலவற்றை தெரிந்து கொள்ள உதவியது.

பெங்களூர் என்றுநீர் பின்குறிப்பில் இட்டாலும்
எங்களூர் என்றுரைப்போம் நன்கு

அருமை ஐயா, நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by சாமி Tue May 22, 2012 11:20 pm

கவிதை அருமையாக உள்ளது ஐயா!

அன்புடன்
சாமி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 23, 2012 5:27 am

Aathira wrote:ஐயா,
உண்மையாகச் சொல்லப் போனால இது சித்தர் இலக்கியம் படிப்பதைப் போல உள்ளது.
எம்முளும் உளான் ஒரு பொருநன் என்று அவ்வை சொல்வது போல...

எங்களிடமும் உளார் ஒரு மரபுக் கவி என்று இதுநாள் வரை மார் தட்டிக் கொண்டு இருந்தோம். இப்போது எம்மிடமும் உள்ளார் ஒரு சித்தர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவோம்.

தாங்கள் ஈகரையின் சிறப்புக்கவி என்பதில் ஈகரைக்கும் எங்களுக்கும்தான் பெருமை. :வணக்கம்:
மிகவும் நன்றி ஆதிரா...ஈகரையின் சிறப்புக்கவியாகவே இருந்துவிடுவதே சாலச்சிறந்தது என்று கருதுகிறேன்...நிர்வாகக்குழுவில் இருப்பதைவிட... மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !! Empty Re: நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum