ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல்லில் ஒரு மகான் !!

+3
யினியவன்
கே. பாலா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 5:01 pm

நாமக்கல்லில் வெளியே தெரியாத ஒரு மகான் ஒருவர் உள்ளார் ! பெயர் :சந்திரமோகன் !ஒய்வு பெற்ற மாவட்ட நிதிபதி ! இளவயதில் தனது மனைவியை இழந்தவர் !பிறகு திருமணம் செய்து கொள்ளவே இல்லை ! தவ யோகியாகவே நீதிபதி பதவியில் கர்ம யோகம் செய்தவர் ! அரசு பதவியில் எந்த பந்தா அலட்டல் இல்லாமல் ;யாருக்கும் பயப்படாமல் விரைவாக நீதி வழங்குவார் !அடிக்கடி ஒரு சாமியாராக பல இடங்களுக்கு பாதயாத்திரை செல்வார் !

பிறந்த குடும்பத்தின் வழி நிறைய சொத்துகள் பதவி இருந்தாலும் இல்லாதவரை போலவே அவரது நடைமுறை இருக்கும் ! சுய தேவை எதையும் முடிந்த அளவு சுருக்கி உடலை ஒடுக்குவது என்பதாகவே அவரது செயல்பாடுகள் இருக்கும் ! சபரி மலைக்கு பதயாத்திரையாகவே வருவார் !அவரோடு எனது மாமனாரும் சேர்ந்து கொள்ளுவார் !நானும் 1990 வாக்கில் இரண்டு முறை பெருவழிப்பாதையில் நடந்து சென்றிருக்கிறேன் ! அது துறவு வாழ்க்கை அனுபவத்தை ;உலகியல் வாழ்வில் தனது உடலை அடக்கி தான் ஆத்துமா என்கிற உணர்வோடு பயிற்சி செய்வது ;பிற ஆத்துமா மனிதர்களை கடவுளின் ஒரு சொருபமாக மதிப்பது ;எதையும் விரும்பாது கடவுளிடம் நிலைத்திருந்து அன்றாட வாழ்வில் தாமரை இலை தண்ணீர் போல இருக்க முயல்வது போன்ற உண்மையான ஆன்ம இயல்புகளை அவரிடமிருந்து கற்றுகொள்ள உதவி செய்தது !

இன்று ஆன்மிகவாதிகள் மடாதிபதிகள் என்போரிடம் கற்று கொள்ள முடியாத பல முன்னுதாரமான செயல்பாடுகள் அவரிடமுள்ளது !

கடைசியாக அவர் மதுரை மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தார் !அலுவல் தவிர ஒரு நிமிடம் கூட காரில் ஏற மாட்டார் ! அவர் ஒய்வு பெற்ற அன்று பிரிவு உபசார விழாவில் சின்ன உபதேசம் செய்துவிட்டு எல்லோரும் நல்லாயிருங்கள் என கைகூப்பிப்பி கும்பிடு போட்டு விட்டு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு தெருவிலே நடந்து கால்நடையாகவே அறைக்கு வந்து சேர்ந்தார் !! அவரை பற்றி தெரிந்ததால் யாரும் வற்புறுத்தவில்லை ! எதையும் ஒரு நிமிடத்திலே உதறி பழகியவர் !

அவரது ஓய்வு ஊதிய பணத்தை கொண்டு ஒரு ஆசிரமம் போல ஆரம்பிக்கலாமா என்னும் நோக்கத்தில் நாமக்கல்லிலே 50 எக்கர் வயல வாங்கினார் !நான் கூட அதை ஒரு ஆசிரமம் போல நிர்வாக செயல்பாடுகள் செய்ய கேட்டும் கொண்டேன் !பார்ப்போம் கடவுள் தான் உத்திரவு கொடுக்க வேண்டும் என்றார் ! ஆனால் சிலநாள் முன்பு எல்லா சொத்துகளையும் திருப்பனந்தாள் காசி மடத்திற்கு பத்திரம் செய்து கொடுத்து விட்டார் ! இந்த நிர்வாகம் நமக்கு வேண்டாம் என்று ஒரு சந்நியாசி பூனை வளர்த்து அதற்கு பால் வாங்க பசுமாடு வளர்த்து கொஞ்சம்கொஞ்சமாக சம்சாரியாக மாறிய கதையை சொல்லி சிரித்தார் !

பல லட்சம் சொத்துள்ளவராக இருந்த போதும் இல்லாதவரை போலவே இருந்தார் !இன்று எல்லா சொத்துகளையும் தானம் செய்து விட்டு இல்லாதவராக பூர்விக வீட்டில் கடவுளே கதியென நிம்மதியாக வாழ்கிறார் !

மனம் போன போக்கில் கால்நடையாக சாமியாராக யாத்திரை சென்று கொண்டே இருக்கிறார் ! என் வீட்டிற்கு வரும் படியாக பல முறை வேண்டி அழைத்தால் அவ்வப்போது வந்தாலும் ஒரு மணிநேரம் மேல் தங்க மாட்டார் ! குடும்பத்தினருக்கு சின்னதாக உபதேசம் செய்து ஆசிர்வதித்து விட்டு இரு கூடவராதே என கண்டிப்பாக சொல்லிவிட்டு தெருவிலே இறங்கி நடந்து விடுவார் ! குடும்ப விசேசங்களுக்கு அழைத்தால் வந்து அஅசிர்வதிப்பார் !

இத்தகையவர்களே சித்தர்கள் !அவர்கள் தம்மை வெறுமையாக்கி கடவுளில் நிலைத்து கடவுளே கதியென வாழ்பவர்கள் !எங்கும் தன்னை துருத்தாதவர்கள் ! அவர்களின் உபதேசத்தை காட்டிலும் அவர்கள் வரவும் ஆசியுமே போதும் !நம் வாழ்விலும் குடும்பததிலும் கடவுளின் அருளை கொண்டுவரும் !

நாம் அவர்கள் மீது காட்டுகிற மரியாதையும் பணிவையும் தவிர நம்மிடம் தேவையானது அவர்களுக்கு ஒன்றுமில்லை !நாம் அவர்களிடம் காட்டுகிற பணிவும் கடவுளுக்காக அவரது அடியவரிடம் காட்டுவது ! இத்தகைய குருசேவையை கடவுள் தனக்கான சேவையாகவே எடுத்துக்கொண்டு அன்பும் அருளும் வழங்குகிறார் என்பது எனது அனுபவம் !

நாமக்கல்லில் இருப்போர் வாய்ப்பிருந்தால் அவர் வீட்டில் இருக்கிறாரா என விசாரித்து விட்டு சென்று ஆசி பெற்று வரவும் :

கைபேசி : 9442864285
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கே. பாலா Tue May 22, 2012 5:08 pm

நல்ல தகவல் ...ஆச்சர்யமாக இருக்கிறது.....இப்படியும் மனிதர்களா!??
நன்றி ஐயா !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by யினியவன் Tue May 22, 2012 5:24 pm

நல்ல மனிதர் - அதான் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே என்று அறிந்து நல்ல மனம் கொண்டவராக இருப்பதை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக.

பகிர்வுக்கு நன்றி கிருபா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கேசவன் Tue May 22, 2012 5:27 pm

பகிர்வுக்கு மிக நன்றி கிருபா அவர்களே...அவர் நாமக்கல்லில் எந்த ஊரில் வசிக்கிறார் என்று தங்களுக்கு தெரியுமா....


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல்லில் ஒரு மகான் !! 1357389நாமக்கல்லில் ஒரு மகான் !! 59010615நாமக்கல்லில் ஒரு மகான் !! Images3ijfநாமக்கல்லில் ஒரு மகான் !! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by யினியவன் Tue May 22, 2012 5:33 pm

கேசவன் wrote:பகிர்வுக்கு மிக நன்றி கிருபா அவர்களே...அவர் நாமக்கல்லில் எந்த ஊரில் வசிக்கிறார் என்று தங்களுக்கு தெரியுமா....
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:
நாமக்கல்லில் இருப்போர் வாய்ப்பிருந்தால் அவர் வீட்டில் இருக்கிறாரா என விசாரித்து விட்டு சென்று ஆசி பெற்று வரவும் :

கைபேசி : 9442864285
கே7 - கைபேசி என்னை அழுத்துங்கள். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by ரா.ரா3275 Tue May 22, 2012 5:40 pm

அடடா...மிக நல்ல மனிதர்...இன்னும் இந்த உலகில் மனிதம் மிச்சமிருக்கு...இல்லை...அதிகமாவே இருக்கு...
பகிர்வுக்கு நன்றி...


நாமக்கல்லில் ஒரு மகான் !! 224747944

நாமக்கல்லில் ஒரு மகான் !! Rநாமக்கல்லில் ஒரு மகான் !! Aநாமக்கல்லில் ஒரு மகான் !! Emptyநாமக்கல்லில் ஒரு மகான் !! Rநாமக்கல்லில் ஒரு மகான் !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 5:49 pm

அய்யப்பன் கோவில் பஸ் ஸ்டாப் எதிரிலுள்ள காந்திநகரில் உள்ளார் செல்லில் அவர் இருக்கிறாரா என கேட்டுவிட்டு செள்று சந்திக்கவும் கம்பம் கூடலூரிலிருந்து உங்களைப்பற்றி சொன்னார்கள் என்று கூறவும்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கேசவன் Tue May 22, 2012 6:13 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:அய்யப்பன் கோவில் பஸ் ஸ்டாப் எதிரிலுள்ள காந்திநகரில் உள்ளார் செல்லில் அவர் இருக்கிறாரா என கேட்டுவிட்டு செள்று சந்திக்கவும் கம்பம் கூடலூரிலிருந்து உங்களைப்பற்றி சொன்னார்கள் என்று கூறவும்
மிக மிக நன்றி கிருபானந்தன் அவர்களே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல்லில் ஒரு மகான் !! 1357389நாமக்கல்லில் ஒரு மகான் !! 59010615நாமக்கல்லில் ஒரு மகான் !! Images3ijfநாமக்கல்லில் ஒரு மகான் !! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 12:22 am

நான் இக்கட்டுரையை எழுதிய நோக்கம் :

அ) இது போல வெளியே தெரியாத கடவுளை மட்டும் நம்பிய ஆத்துமா சொருபிகள் பலர் உள்ளனர் ! இவர்கள்தான் நாம் பிரபலமாக உச்சரிக்கும் சித்தர்களின் மாதிரிகள் !

ஆ ) இவர்கள் தன் சரீரத்திர்க்குள் இருக்கும் ஆத்துமா மட்டும் தான் கடவுள் என்ற சிந்தனையை தாண்டி தனக்கு வெளியே எல்லா மனிதர்களிலும் நிரம்பியுள்ள ஜீவாத்துமாகள் அனைத்தையும் கடவுளின் சொருபமாக பார்க்கவும் இந்த ஜீவாத்துமாகள் அனைத்தும் ஒரேஒரு ஆத்துமா --பரமாத்துமாவின் அங்கம் என்ற பரந்த நோக்கம் விளந்தவர்கள் ! இந்த பரந்த நோக்கம் தான் என்ற அஹம்பாவத்தை கடந்த பிறகு வருவது !அந்த அஹம்பாவத்தை உண்டாக்குவது உடம்பு நான் என கருதுவதால் வருவது !அந்த உடம்பை எதிரியாக தெளிந்து அதனை எப்படியெல்லாம் அடக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அடக்கி ஜீவாத்துமாவை நான் என உணருவது !ஜீவாத்துமா நான் ;எனக்குள் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் உடல் நான் எனக்குள் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் அடிப்படையே மாறிப்போகிறது !முந்தையவர் உடலை --அஹம்பாவத்தை அடக்கி தாழ்மையடைந்து நான் கடவுளின் சொருபம் என்பவர் ;பிந்தயவர் உடல் வழி சுயமஹிமைக்காக நான் கடவுளின் சொருபம் என்பவர் !தாழ்மைக்கும் சுய பெருமைக்கும் வித்தியாசம் உள்ளது !
முந்தையவர் தனக்குள்ளும் எங்கும் எவரிடத்தும் நிறைந்த ஆத்துமாக்கள் அனைத்தையும் மதித்து அவை எந்த ஒன்றின் அங்கங்களோ அந்த பரமாத்துமாவை உணரத்தொடங்கி அதனுடன் ஐக்கியமாக தொடங்குபவர் !அது ஞானம் முற்றுவதால் உண்டாகிற விபூதி--நிறைபக்தி !
பிந்தயவரோ தனது உடலை தான் என துருத்தி தனக்கு பெருமை சேர்ப்பதற்கு தன்னை ஞானவான் என காட்டி கொள்வதற்கு சித்தர்களை அடையாளப்படுத்தி கொள்பவர் ! ரெண்டு சித்தர் பாடலை பாடிக்கொண்டு வைத்தியத்தை மூலிகையை பற்றி பேசிக்கொண்டு காலம் கழிக்கிறவர் ! ஆழமாக பிற மனிதர்களையாவது மதிப்பார்களா என்பது தெரியாது !தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் என பேசிக்கொண்டு இருப்பார்கள் ! தனது ஆத்துமாவையும் உணராது மற்ற மனிதர்களின் ஆத்துமா சொருபத்தையும் உணராது அதன் மூலமாக பரமாத்துமாவையும் உணராது உடற்பயிற்சி செய்வதை யோகம் என கருதிக்கொண்டிருப்பவர்கள் !ஜீவாத்துமாவையோ பரமாத்துமாவையோ அறியாத நவீன நாத்திக வாதிகள் பலர் தங்களின் நாத்திக கொள்கையை நாசுக்காக சித்தரியல் என்ற போர்வையில் தாங்களும் ஆன்மீக வாதிகள் போல காட்டிகொள்கிரார்கள் !
இது ஒரு வகையான மாயாவாதம் ! ஒரு நாளும் எந்த ஆன்மீக முன்னேற்றமும் அடையவாய்ப்பே இல்லாத சுய ஏமாற்று ! மீடியாவில் சித்தர்கள் பிரபலமடைந்ததாலும் யோகா வியாபாரிகள் பலர் விற்பனை செய்து யோகிகள் பட்டங்களை விற்பனை செய்வதாலும் நவீன நாத்திகவாதம் ஆன்மீகத்தின் பெயரால் பரவிக்கொண்டுள்ளது !

ஆனால் சித்தர்களின் அடிப்படையே வேறு !அவர்கள் உடல் தனது எதிரிஎன அதனை அடக்கி பழகியவர்கள் !எந்த மகிமையையும் பெருமையையும் தனக்கு தேடாதவர்கள் ! காசையே மதிக்காதவர்கள் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 12:23 am

ஒருமுறை கம்பம் பகுதி முழுவதும் அவருடன் கால்நடையாக கூட வர அனுமதித்தார் ! பழங்கள் நிறைய வாங்கி ஒரு பையில் நான் சுமந்துகொண்டு கூட போனேன் !பேசிக்கொண்டே ஊர் முழுக்க சுற்றும் பொது ஆங்காங்கே பைத்தியமாய் தான் பாட்டுக்கு இருக்கிரவர்கலாக கண்டு பிடித்து அவர்களுக்கு பழங்களை கொடுத்து வணங்கிக்கொண்டே வந்தார் !சிலர் வாங்கினார்கள் !சிலர் வாங்கவுமில்லை !அதற்கு மேலாக எங்களை பொருட்படுத்தவும் இல்லை !இப்படியாக சுருளி தீர்த்தம் வரை வந்தோம் !முடிவிலே ஜட்ஜு `` இவர்களல்லாம் மிலிட்டரி போல ஒருவித காக்கி உடை போட்டிருந்தார்களே அதை யார் இவர்களுக்கு கொடுத்தது என கேட்டார் `` நாம் பேச்சு கொடுத்தாலும் ஏதாவது அலட்டினார்களா சித்தன் போக்கு சிவன் போக்கு என தனக்குள்ளாகவே முழ்கி இருப்பவர்கள் !பைத்தியங்களுக்கு இவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! இப்படி உடலை கேவலப்படுத்தி ஆணவத்தை கடற்கிற பயிற்சியில் இந்த ஆத்துமாக்கள் உள்ளன ! இப்படி தேறிய ஆத்துமா கருவிலே திருவாக ஞானியாக ஊருக்கு உபதேசிக்கும் ! இவர்கள் நம்மை விட முன்னேறிய --ஆனால் உடலால் உண்டான பாவங்களை கடந்து கொண்டிருப்பவர்கள் !மற்றொரு வகையில் கடவுளின் ராஜ்ஜிய வீரர்கள் போல ! அதனால் தான் இந்த மிலிட்டரி உடை ! இவர்கள் ஆங்காங்கே இருந்து அசுர ஆவிகளின் செயல்பாடுகளை அடக்கி கொண்டிருப்பார்கள் என்றார் !

சித்தர்கள் என்பவர்கள் உடலை அடக்கி வெல்பவர்கள்! உலக மனிதர்களுக்காக வைத்திய சாஸ்திரம் சொன்னவர்கள் ;அவர்களை பொறுத்த அளவு வைத்தியம் தேவை இல்லாதவர்கள் !காசு பணம் சேர்த்துக்கொண்டு சொத்து சேர்த்துக்கொண்டு எனக்குள்ளாக கடவுள் இருக்கிறார் என அலட்டியவர்களல்ல !

ஈ ) ஒரு ஆத்துமா உண்மையிலேயே தன்னை உணரத்தொடங்கி ஆண்மவியலுக்குள் வளர தொடங்கினால் கடவுள் ஜட்ஜை போன்ற நம்மை விட முன்னேறிய ஆத்துமாக்களை அவ்வப்போது குருவாக அனுப்புவார் !அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்கொள்ளும் போது வேறு குருவையும் அனுப்பி வைப்பார் ! இதனை குருபாரம்பரியம் என கீதை கூட குறிப்பிடுகிறது ! இப்படிப்பட்ட உள்ளார்ந்த அனுபவம் எனக்கு பல ஏற்பட்டுள்ளது ! இது இருந்தால் மட்டுமே நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகும் !
ஆகவே நம்மை விட முன்னேறிய ஆத்துமாக்களை கண்டறிந்து அவர்களோடு தொடர்பு கொள்ளுவதும் அவர்களுக்கு சிறு சேவை செய்வதன் மூலம் அவர்களின் பரிவை பெறுவதும் நமது இருளை அகற்றி ஞானத்தை அதிகரிக்கும் !குரு பார்க்க கோடி பாவம் தீரும் என்பது இது தான் !
அத்தகைய குருக்களில் ஜட்சும் ஒருவர் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

நாமக்கல்லில் ஒரு மகான் !! Empty Re: நாமக்கல்லில் ஒரு மகான் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum