புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
3 Posts - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
30 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
5 Posts - 1%
i6appar
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 5 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 25, 2012 6:02 pm

C. வேதாகமம்: நாம் அதை எவ்வாறு புரிந்து கொள்வது?

பொருள் விளக்கத்தின் சட்டங்கள் (Law of Interpretation):


முதன்மையானமுக்கியத்துவம்:
இதுவரை பின்வரும் குறிப்புகளை குறித்து பார்த்தோம்;

1. அனைத்து வ‌ேத வாக்கியங்களும் நமக்கு தேவனால் அளிக்கப்படடவை; அவை மனிதர்களின் கண்டுபிடிப்போ அல்லது அபிப்பிராயோமோ இல்லை... எனவே...

2. தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் முற்றிலுமாக பிழையற்றது; இரட்சிப்பு மற்றும் கிறிஸ்துவ வாழ்க்கையைக் குறித்து நாம் அறிய வேண்டிய அனைத்திலும் முழுமையாக நம்பகமானது.

இந்த அடிப்படையான இரண்டு கொள்கைகளும் உண்மையாயிருப்பதால், நாம் ஒரு சரியான தொலை நோக்குடன் வேதாகமத்தை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கைக்கொள்ளும்படி நாட வேண்டும்.

தேவன் தம்முடைய வார்த்தையை அளிப்பதற்கு பல நூற்றாண்டுகளாக மிகுதியான பிரயாசத்தை மேற் கொண்டார். அவர் நிச்சயமாக நமக்கும் அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட நோக்க்த்திற்காக அதை நமக்கு அளித்துள்ளார்.

எனவே, நாம் அதை வாசித்து, சரியாகப் புரிந்து கொண்டு, நம்முடைய வாழ்க்கையிலும், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அதை முறையாக உபயோகப்படுத்துவது நம்முடைய முதன்மையான முக்கியத்துவமாக இருக்க வ‌ேண்டும்.


முயற்சி செய்யுங்கள்!
நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரிடமிருந்து ஒரு முக்கியமான கடிதம் வருகிறதென்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கடிதம் மிகுந்த வேதனையிலும், தியாகத்திலும் அனுப்பப்படுகிறது. அந்த கடிதம் வேறொரு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதில் எழுதப்பட்டுள்ளவற்றை புரிந்து கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி செய்வீர்கள் அல்லவா?

அப்படியானால், உங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, ஜீவனுள்ள சத்தியம் அடங்கியுள்ள, தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எவ்வளவு அதிகமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்!

துரதிர்ஷ்டவசமாக, வ‌ேதாகமத்திற்கு, பலரும் பல வித்தியாசமான வழிகளில் பொருள் விளக்கமளிக்கிறார்கள். இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், குழப்பத்தையும் அளித்துள்ளது.

நாம் நம்முடைய சொந்த அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்காக வேத வாக்கியங்களுக்கு விளக்கமளிக்கக்கூடாது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 26, 2012 7:23 am

“பாதையைப் பின்பற்றுங்கள்”
கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவயங்களாகவும், தலைவர்களாயிருக்கும் ஒவ்வொருவரும், “வெட்கப்படாத ஊழியக்காரர்களாயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாயும், தேவனுக்கு முன்பாக உத்தமர்களாக (நம்மை) நிறுத்துவதற்கு ஜாக்கிரதையாயிருக்கும்படி” (2தீமோத்தேயு: 2:15) வேதாகமம் கட்டளையிடுகிறது.

“பகுத்து” என்ற வார்த்தை ஆர்த்தோடோர்னவுட்டா (Orthotornounta) என்ற கிரேக்க வார்த்தயைலிருந்து வருகிறது; “வெட்டுதல்” என்பது இவ்வார்த்தையின் நேரடியான பொருள். இந்த வார்த்தை, நிலத்தை உழுவது, அல்லது ஒரு சாலையைக் கட்டுவது ஆகியவற்றை விளக்குவதற்காக உபயோகிக்கப்படுகிறது.

ஒரு உண்மையான அர்ப்பணிப்புடைய “வேலையாள்” (கிரேக்க வார்த்தை - ergon- “உழைப்பு”, “முயற்சி”) தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை அளிப்பதில் மிகவும் சரியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று பவுல் இந்த வேதபகுதியில் வலியுறுத்துகிறார்.

ஒரு தேவ ஊழியர் தேவனுடைய வார்த்தையின்படியான வாழ்க்கைப் “பாதையைப்” பின்பற்ற வேண்டும்; தன்னுடைய போதனையினாலும், முன் மாதிரியினாலும் மற்றவர்களும் அதையே செய்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும்.

தேவனுடைய வார்த்தையைப் “பகுத்தல்” என்றால் அதை இரண்டு துண்டாக வெட்டுவது என்பது பொருளல்ல. மாறாக, வேதாகமத்திலுள்ள சத்தியங்களையும், கொள்கைகளையும், பகுத்துணர்ந்து, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி, பின்பு அதை உண்மையுடன் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 26, 2012 9:50 am

“பொருள் விளக்கம்

வேதாகமத்திற்கு பொருள் விளக்கமளிப்பது எப்படி? என்பதைக் குறித்து பார்ப்போம். இது பொருள் விளக்க சாஸ்திரம் அல்லது Hermeneutics” என்று ‌அழைக்கப்படுகிறது.

வேதவாக்கியங்களின் சத்தியங்களை நம்முடைய அனுதின நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தாவிட்டால், தேவனுடைய வார்த்தையைக் குறித்த பல்வேறு கோட்பாடுகளைக் கற்பதில் அதிகமான பயன் இல்லை. வேத வாக்கியங்களின் சத்தியங்களை நாம் கைக் கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தையில் உள்ள பயங்கரமான வல்லமையையும் அபிஷேகத்தையும் நாம் அனுபவிக்கத் துவங்குகிறோம்!

தேவனுடைய வார்த்தையை சரியாகப் புரிந்து கொண்டு, அதை நம்முடைய வாழ்க்கையில் உபயோகிப்பதற்கு, நாம் 3 முக்கியமான குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்:

1. வேதவாக்கியங்களின் மூலம் சர்வ வல்லமையுள்ள தேவன் அனைத்து மக்களிடமும் அதிகாரத்துடன் பேசுகிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக நாம் வ‌ேதாகமத்தை வாசிக்கத் துவங்க வேண்டும்.

2. நாம் வேதாகமரீதியாக கேட்கும் திறனை உருவாக்க வேண்டும் - தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து, கீழ்படிவது என்பது இதன் பொருள்.

3. வேதாவாக்கியங்களுக்கு கவனமாக பொருள் விளக்கமளிப்பதற்குத் தேவையான நடைமுறைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 26, 2012 10:20 am

“தேவனுடைய வார்ததைக்கு பொருள் விளக்கமளித்தலும் அதைக் கற்றுக் கொள்ளுதலும்”
வேதாகமம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாயிருப்பதாக பலர் உணருகிறார்கள். சரித்திரக் காலத்தில், மக்கள் வேதாகமத்தை வாசிக்காதபடி சபைத்தலைவர்கள் அவர்களைத் தடுத்தார்கள். ஏனென்றால், அது அவர்களைக் குழப்பி விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். இப்படியாக, வேதவாக்கியங்களின் பொருள் விளக்கங்களை சபையின் கல்விமான்களும், வ‌ேதசாஸ்திரிகளும் மட்டுமே கற்றறிந்தார்கள்.

ஆனால், த‌ேவன் தம்முடைய வார்த்தையை ஒருபோதும் ஒரு சிலருக்காக மட்டும் அளிக்கவில்லை! ஒவ்வொரு மனிதனும் வேதவாக்கியங்களை அறிந்து அவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

வேதாகமம் எழுதப்பட்ட மூலபாஷைகளைக் கற்பதும், வேதாகம காலத்தின் கலாச்சாரங்களை அறிந்து கொள்ளுதலும் வேதாகமத்தை நன்கு கற்றறிவதற்கு பயனுடையவையாக இருக்கும். ஆனால், அவைகளை அறிவது அத்தியாவசியமானது அல்ல. ஏனென்றால், இரட்சிப்பின் சத்தியங்கள் மற்றும் நம்முடைய இரட்சகருடனான நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான சத்தியங்கள் ஆகியவை அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியவையாகும். வேதவாக்கியங்களும் இக்கருத்துக்களை வலியுறுத்துகின்றன.

உதாரணமாக, தீர்க்கதரிசனங்களைக் குறித்து தீர்மானிக்கும் கடமையை மக்கள்தாமே பெற்றிருந்தார்கள் என்று வ‌ேதாகமம் கூறுகிறது (1கொரிந்தியர்: 14:29). அவர்கள் பெற்றுக் கொண்ட சத்தியத்தின் அடிப்படையில் இக்க‌டமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் (உபாகமம்: 13:1-5; கலாத்தியர்: 1:8,9; அப்போஸ்தலர்: 17:10-12).

தேவனுடைய வார்த்தை அனைத்து மக்களுக்கும், அனைத்துக் காலங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, பரிசுத்த வேத வாக்கியங்களைக் கற்பதற்கும், அவற்றிற்கு பொருள் விளக்கமளிப்பதற்கும் தேவையான 10 முக்கியமான கொள்கைகளை இனி பார்ப்போம்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 26, 2012 6:02 pm

1. உங்களுடைய வேதாகமத்தை பொருளின் அடிப்படையில் வாசியுங்கள்:

வேதாகமத்தில் ஒரு தலைப்பை அல்லது வார்த்தையைத் தொிந்து கொண்டு, அந்த தலைப்பு அல்லது வார்த்தையைக் குறித்த ஒவ்வொரு வேதாகம குறிப்பையும் தேடுங்கள்.

உதாரணமாக: “மீட்பு” என்ற வார்த்தை வேதாகமத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. உங்களிடம் ஒத்த வாக்கிய விளக்கவுரை (கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் கிடைக்கும்) இருந்தால், “மீட்பு” “மீட்பர்” போன்ற வார்த்தைகள் இடம் பெறும் வேதவாக்கியங்களைக் கண்டு பிடியுங்கள். வேதாகமத்தில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படும் பல வேதவாக்கியங்களை வாசிப்பதன் மூலம், ஒரு வேதாகம பொருள் அல்லது வார்த்தையைக் குறித்து நாம் அதிகமாக புரிந்து கொள்ள முடியும்.



2. வேத வாக்கியம் வேத வாக்கியத்திற்கு பொருள் விளக்கமளிக்கட்டும்:

வேத வாக்கியத்தின் தனிப்பட்ட பகுதிகள் வேத வாக்கியங்களின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்திருப்பதில்லை; அவை தேவனுடைய முழுமையான வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

எனவே, வேத வாக்கியத்தின் ஒவ்வொரு பகுதியும், முழு வேதாகமத்தினுடைய சத்தியத்தின் அடிப்படையில் பொருள் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

வேதாகமம் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டிருந்தாலும், அது இன்னும் ஒரு ஒருங்கிணைந்த இணக்கமுள்ள புத்தகமாகும். ஏனென்றால், பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் ஒருவரால் மட்டுமே அது எழுதப்பட்டது.

உதாரணமாக: வெளிப்படுத்தல்: 13:16-18 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “மிருகத்தின் முத்திரையைக்” குறித்து, அது என்னவாயிருக்கும் என்று பல ஊகங்கள் எழும்பின. அது நம்முடைய கையில் அல்லது நெற்றியில் வைக்கப்படும் ஒரு கணிப்பொறி துணுக்கு (Computer Chip) என்று சிலர் நினைக்கிறார்கள். வேறு சிலர் அது பச்சைக் குத்துவது போன்ற ஒரு முத்திரை என்று கூறுகின்றனர்.

ஆனால், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, வேதாகமத்தில் “நெற்றி” என்ற வார்த்தை நம்முடைய சித்தத்தையும், சிந்தனையையும் குறிக்கிறது என்று அறிகிறோம்.

வேதாகமத்தில் , “கை” என்ற வார்த்தை நம்முடைய வேலை அல்லது கிரியைகளைக் குறிக்கிறது. ஒரு “முத்திரையை” பெறுவது என்பது தற்செயலாக நிகழக்கூடியது அல்ல. நாம் நம்முடைய அறியாமையினால் “முத்திரையை” பெறவும் முடியாது, முத்திரையை பெறுவதற்கு, நாம் மிருகத்தை ஆராதிக்க வேண்டியிருக்கும். (வெளிப்படுத்தல்: 13:15).

மிருகத்தை ஆராதிக்க வேண்டுமென்றால், அதை ஆராதிக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் தீர்மானித்து, நம்முடைய செயல்களினால் அத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அந்த தீர்மானத்தை அனைவரும் காணும் வகையில் அது தெளிவான ஒன்றாயிருக்கும்.

“மிருகத்தின் முத்திரை” ஒரு தொழில் நுட்பக் கருவியை விட அதிகமானது. அது அந்திக்கிறிஸ்துவிற்கு நாம் அளிக்கும் விசுவாசம் மற்றும் உண்மையைக் குறித்ததாயிருக்கக் கூடும் அல்லது அது தேவனை மட்டும் குறித்ததாயிருக்கக் கூடும்.

அந்த “முத்திரை” உண்மையில் என்னவாயிருக்கும் என்று நமக்கு தெரியாது - ஆனால், விசுவாசிகளுக்கு அது ஒரு திகைப்பாக இருக்காது அல்லது அந்த முத்திரையை அவா்கள் தற்செயலாகப் பெறமாட்டார்கள் என்று வ‌ேதாகமம் தெளிவாக நமக்குக் கூறுகிறது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 26, 2012 9:11 pm

3. சுற்றியுள்ள மற்ற வசனங்களை கவனியுங்கள்:


வேதவாக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும்போது, அவ்வசனத்திற்கு முன்பாகவும், அவ்வசனத்திற்குப் பிறகும் உள்ள வசனங்களையும் கவனிப்பது மிகவும் முக்கியமாகும்.

பின்வரும் கேள்விகளுக்கு விடை காண அது உதவியாயிருக்கும்:

- குறிப்பிட்ட வசனம் யாருக்காக கூறப்பட்டது?

- அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாதங்கள் அல்லது சூழ்நிலைகள் யாவை?

- இந்த வசனத்தை அதைச் சுற்றியுள்ள வசனங்கள் இன்னும் தெளிவாக விளக்குகின்றனவா?

ஒரு வசனத்தை அல்லது ஒரு வசனத்தின் சொற்றொடரை, பரிசுத்த ஆவியானவரால் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து எடுத்து, வேறு இடத்தில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது அந்த வசனத்திற்கு மிகவும் தவறான விளக்கம் அளிக்கிறது.

ஒரு இளைஞன் தேவனிடத்திலிருந்து ஒரு வார்த்தையைப் பெறுவதற்கு முயற்சித்ததை குறித்த ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. அவன் தன்னுடைய வேதாகமத்தை திறந்து, பக்கங்களை புரட்டிக் கொண்ட‌ே இருந்தான். சில நிமிடங்களுக்கு பின்பு, அவன் பக்கங்களை புரட்டுவதை நிறுத்தி, திறந்திருக்கும் பக்கத்தில் தன்னுடைய விரலை வைத்து, அவனுடைய விரல் குறிப்பிடும் வசனத்தை வாசித்தான். அவன் வாசித்த வசனம் இவ்வாறு கூறியது: “யூதாஸ் புறப்பட்டுப்போய், நான்று கொண்டு செத்தான்” (மத்தேயு: 27:5).

இந்த வார்த்தை அவனை திடுக்கிடச் செய்தது. எனவே, அவன் மறுபடியும் முயற்சித்தான். இந்த முறை அவனுடைய விரல், லூக்கா: 10:37 - வசனத்தின் மீது இருந்தது. “நீயும் போய் அந்தப்படியே செய்” என்று அவ்வசனம் கூறியது.

அந்த இளைஞன் இப்போது, உண்மையாகவே பயந்து விட்டான்; இன்னும் ஒரு முறை மட்டும் முயற்சிக்கலாம் என்று அவன் நினைத்தான். எனவே, அவன் இன்னும் அதிகமான பக்கங்களை (மத்தேயு அல்லது லூக்காவில் இல்லாமல்) புரட்டினான். அவன் பக்கங்களை புரட்டுவதை நிறுத்தியபோது, அவனுடைய விரல் யோவான்: 13:27 வசனத்தின் மீது இருந்தது. அவ்வசனம் இவ்வாறு கூறுகிறது: “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்.”

அந்த இளைஞன் தன்னுடைய வேதாகமத்தைக் கீழே வைத்து விட்டு, அலறிக் கொண்டு தன்னுடைய அறையிலிருந்து வெளியே ஓடினான்!

இந்த முட்டாள்தனமான கதையைக் கேட்டு நாம் சிரிக்கலாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. சாத்தான் ஒரு மதப்பிரகாரமான ஆவி; அவன் வேத வாக்கியங்கள் மற்றும் மனித சுபாவத்தைக் குறித்து, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அதிகமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறான். வேத வாக்கியத்தை எவ்வாறு புரட்டுவது என்று அவன் அறிந்திருக்கிறான். எனவே, அவன் நம்முடைய அறியாமையையும், சுயநலமான விருப்பங்களையும் உபயோகித்து விளையாட விரும்புகிறான்.

இதை அவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் முயற்சித்து (ஆதியாகமம்: 3:1-6), மனுக்குலத்தை வீழ்த்துவதில் வெற்றியும் அடைந்தான். அவன் அதை இயேசுவினிடமும் முயற்சித்தான் (மத்தேயு: 4:1-11). ஆனால், பிசாசானவன் அவரைத் தோற்கடிக்க முடியாதபடிக்கு அவர் தேவனுடைய வார்த்தையில் ஞானமுள்ளவராயிருந்தார்.

நாம் வேதாகமத்தை அறிய வ‌ேண்டும். நாம் அதைச் சரியான முறையில் உபயோகப்படுத்த வேண்டும். நம்முடைய சொந்த விருப்பங்களுக்கேற்ப வசனங்களைக் கலக்கவோ அல்லது சோ்க்கவோ கூடாது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun May 27, 2012 6:03 am

4. ஒரே வேத வாக்கியம் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்:

தேவன் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் கூறும்போது, அதை நாம் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று பொருள். பல வேளைகளில், வேதாகமத்தில் அடிக்கடி கூறப்படாத காரியங்கள், அடிக்கடி கூறப்படும் காரியங்களால் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக: 1கொரிந்தியர்: 15:29 - வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார். “மேலும் மாித்தோர் உயிர்த்தெழா விட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?”

பவுலினுடைய வார்த்தைகளின் பொருள் என்ன?

வேதாகமத்தில், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் குறித்து இந்த ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறித்த பல பொருள் விளக்கங்கள் உண்டு. ஆனால் அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடமில்லை.

நம்மால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட வேத வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு முழு கோட்பாட்டை அதிலிருந்து உருவாக்குவது தவறு.

1கொரிந்தியர்: 15 - ம் அதிகாரத்தில் பவுல், மரித்தோரின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலின் உறுதிப்பாட்டைக் குறித்துக் கூறுகிறார் - நாம் அதிகமாக அறிந்திராத ஞானஸ்நான சடங்கைக் குறித்து அல்ல. விசுவாசிகளின் ஞானஸ்நானத்தைக் குறித்து பல வேத வாக்கியங்கள் நமக்கு ஒரு தெளிவான வழிநடத்துதலை அளிக்கின்றன. (மத்தேயு்: 25:19; அப்போஸ்தலர்: 8:35-38; ரோமர்: 6:3-6 மற்றும் பல).

இவற்றைப் போன்ற பல வ‌ேத வாக்கியங்கள் மறுபடியும் பிற்நத ஓர் விசுவாசி ஞானஸ்நானம் பெறும்படி ஓர் உறுதியான அடிப்படையை அளிக்கின்றன.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun May 27, 2012 6:25 am

5. வேத வாக்கியத்திலுள்ள தெளிவைக் கவனியுங்கள்:

சில வேளைகளில், புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒரு வேத பகுதியை நாம் வாசிக்கிறோம்.

உதாரணமாக: விசுவாசத்தினால் வரும் நீதியைக் குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் மீண்டும், மீண்டும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், நீங்கள் யாக்கோபு: 2:14-16 வசனங்களை வாசிக்கும்போது, நாம் விசுவாசத்தினால் மட்டுமல்ல, “கிரியைகளினாலும்” நீதிமான்களாக்கப்படுகிறோம் என்று யாக்கோபு வலியுறுத்துவதைப் போல தோன்றுகிறது.

என்றாலும், யாக்கோபு விசுவாசத்திற்கு விரோதமாகப் போதிக்கவில்லை; மாறாக, அவா் இரண்டு வகையான விசுவாசத்தைக் குறித்து கூறுகிறார். செத்த விசுவாசம் என்று அழைக்கப்படும் ஒரு வித விசுவாசம் வெறுமையான வாதமாகவும் அல்லது சமய கோட்பாடாகவும் மட்டு‌மே உள்ளது (பிசாசுகளும் “விசுவாசிக்கின்றன” யாக்கோபு: 2:19)!

விசுவாசத்தின் மற்றொரு வகை இரட்சகரின் மீதான அன்பினால் விளையும் ஒரு கீழ்ப்படிதலின் வாழ்க்கைக்கு நேராக நம்மை வழிநடத்தும் இரட்சிப்பின் விசுவாசமாகும்.

நம்முடைய “கிரியைகள்” நாம் நம்புவதாகக் கூறும் கொள்கையினுடைய உண்மைத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது: அவை நம்முடைய விசுவாசத்தின் கனியாகும் (யாக்கோபு: 2:17,19,26; யோவான்: 15:1-8,16; ரோமர்: 6 ம் அதிகாரம் முழுவதும்).

மறுபடியும் பிறவாமல் இரட்சிப்பைப் பெறுவதற்காக நாம் செய்யும் மதப்பிரகாரமான கிரியைகள் உண்மையான விசுவாசமாயிருக்க முடியாது என்று வேதாகமம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால், உண்மையான விசுவாசத்தின் விளைவு, பிதாவாகிய தேவனுடைய மகிமைக்காக செய்யப்படும் நற்கிரியைகளாகும் (மத்தேயு: 5:16).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun May 27, 2012 8:15 pm

6. நேரடியான பொருள் விளக்கத்தை உபயோகியுங்கள்:

வேதாகமத்தை ஒரு விளங்காத புலப்படாத மொழியில் எழுதும்படி வேதாகமத்தை எழுதினவர்களிடம் தேவன் கூறவில்லை. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் ஆழமான மறைமுகமாக அர்த்தங் கொண்ட கதைகளல்ல.

மாறாக, தேவன் இயற்கையான மனித மொழியை உபயோகித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட சத்தியத்தை அறிவிக்கிறார் என்று உந்துதலின் கோட்பாடு நமக்குப் போதிக்கிறது. வேதாகமத்தில் உண்மையாகவே நிகழ்ந்த சம்பவங்கள் சரித்திரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அது வலியுறுத்துகிறது.

அ) மொழியைக் குறித்து:

போதனை அல்லது தீர்க்கதரிசனம் போன்றவற்றை பெறுபவர்கள் அவற்றின் “எளிமை வாய்ந்த, தெளிவான பொருளைப்” புரிந்து கொள்ள வேண்டுமென்பது பொருள் விளக்கத்தின் நோக்கமாகும்.

ஒரு வேதபகுதிக்குப் பொருள் விளக்கமளிக்கும்போது, ஆசிரியரின் காலத்தில் அதற்கு அளிக்கப்படடிருந்த பொருளில் மாற்றம் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

வார்த்தைகளின் பொருளிலும், அவ்வார்த்தைகள் எவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதிலும் நாம் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு சாதாரண மொழி, வார்த்தைகளைப் பல்வேறு வழிகளில் உபயோகிக்கிறது. அது வேதாகமத்திலும் அவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. பொருள் விளக்கமளிப்பதில், நேரடியான பொருள் விளக்கமளிப்பதற்கும், மறைமுகமான பொருளை அளிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். (பிழையற்ற தன்மையின் கோட்பாடு - என்ற தலைப்பின் கீழ் இதைக் குறித்து முன்ப‌ே விரிவாக பார்த்தோம்.)

ஆ) சரித்திர சம்பவங்களைக் குறித்து:

வேதாகமத்திலுள்ள சரித்திர சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்தவையாகும். இச்சம்பவங்களை அவை நிகழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள்.

வேதவாக்கியங்களுக்கு நேரடியான பொருள் விளக்கம் அளிக்கும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மையை வலியுறுத்த நாம் தவறி விடக் கூடாது.

வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களைப் போன்ற சம்பவங்கள், சமீப காலத்தில் நடைபெறவில்லையென்பதால் அவை உண்மையல்ல என்று கூறி விட முடியாது.

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயம், பாப‌ேல் கோபுரத்தில் பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது. யாத்திராகமத்தின் காலத்தில் எகிப்தில் நேரிட்ட வாதைகள், கன்னியிடம் பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவின் வாழ்க்கை - இந்த அனைத்து அற்புதங்களையும் வேதாகமம் உண்மையுடனும், பிழையில்லாமலும் பதிவு செய்துள்ளது.

தேவன் “இருக்கிறவராகவே இருப்பதால்” , வேதாகமத்திலுள்ள அனைத்து அற்புத சம்பவங்களும் அவருடைய வல்லமைக்கு மிஞ்சினவையல்ல. ஏனெனில், “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதியாகமம்: 18:14).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 12:03 am

7. வேதாகம “ஒப்புமைகளும்”, “நிழலாட்டங்களும்” முரண்பாடற்றவையாக இருக்க வேண்டும்:

பிற்காலத்தில் வாழப் போகிற ஒரு நபருக்கு அல்லது நிகழப் போகிற சம்பவத்திற்கு தற்போது தீர்க்கதரிசன அடையாளமாக உள்ள ஒரு பொருள் அல்லது சம்பவம், “ஒப்புமை” அல்லது “நிழலாட்டம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வேதாகமரீதியான “நிழலாட்டம்” அந்ம நபர் அல்லது சம்பவத்தின் குணநலன்களைப் பெற்றிருக்கிறது.

உதாரணமாக: யாத்திராகமம் 11 மற்றும் 12 ஆம் அதிகாரத்திலுள்ள பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவிற்கு ஒரு “ஒப்புமை” அல்லது நிழலாட்டமாகும்.

யாத்திராகமத்தின் காலத்தில் மக்களை சங்காரக்காரனுடைய கரங்களுக்கு மீட்டுப் பாதுகாத்த பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், உலகத்தின் பாவங்களுக்காக மரித்து, மீட்பைப் பெற்றுத்தந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு ஒரு தீர்க்கதரிசன அடையாளமாகும்.

பழைய ஏற்பாட்டு ஒப்புமையாகிய பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்த தேவ ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவிற்கு நிழலாட்டமாகும்.

இக்கருத்திற்கு மற்றொரு உதாரணமான, தேவனுடைய பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைக் குறித்து எபிரேயர்: 10:1 வசனம் இவ்வாறு கூறுகிறது: “நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே, அவைகளை செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்த மாட்டாது”.

கிறிஸ்து பாவத்திற்கான பலியை செலுத்தி விட்டபடியால், பாவத்திற்காக தொடர்ந்து மிருகங்களை பலியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த கிரியை பாவத்திற்கான “ஒரே நிரந்தர” பலியாயிருப்பதால், அனைத்து காலங்களிலும், அனைத்து இடங்களிலும் அவரை ஏற்றுக் கொள்கிற அனைவரும் இரட்சிக்கப்படுவதற்கு, அது போதுமானதாகும். (யோவான்: 3:16; எபிரேயா்: 9:11,12, 23-28; 10:10; 1பேதுரு: 3:18).

இந்த பழைய ஏற்பாட்டு ஒப்புமைகள் தங்களுக்குள் முழுமை பெற்றவை அல்ல. தேவன் ஒரு நோக்கத்தோடு அவை முழுமைபெறாதபடி செய்திருக்கிறார். ஏனென்றால், கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் முழுமையான நிறைவேறுதலுக்கு இந்த ஒப்புமைகள் ஒரு நிழலாட்டமாக மட்டுமே உள்ளன.

ஒரு “ஒப்புமையின்” ஒவ்வொரு சிறிய கருத்திற்கும் நாம் பொருள் விளக்கமளிக்காமல், ஒரு பொதுவான, மேலோட்டமான பொருள் விளக்கத்தை அளிக்க வேண்டுமென்பது முக்கியம்.

ஒப்புமைகள் ஒரு கோட்பாட்டிற்கு உதாரணமாக பயன்படுத்தபட வேண்டுமேயன்றி, புதிதாக ஒரு கோட்பாட்டை உருவாக்குவதற்கு அல்ல - என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக