ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

+5
hega
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
9 posters

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Thu Jun 14, 2012 6:19 pm

14. 2தெசலோனிக்கேயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதப்பட்ட காலம்: கி.பி.50 - கி.பி.51 (1தெசலோனிக்கேயர் எழுதப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு)

சேருமிடம்: தெசலோனிக்கேய சபை

காலத்தின் தேவை: கிறிஸ்துவின் இரண்டாம் போதனையைக் குறித்த தவறான போதனையை எதிர்த்தல்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “இரண்டாம் வருகையைக் குறித்த திருத்தம்”

கருப்பொருள்: கர்த்தருடைய நாளின் வருகை

நோக்கம்: கர்த்தருட‌ைய நாள் ஏற்கனவே வந்தாயிற்று என்ற தவறான எண்ணத்தைச் சரிசெய்தல்.

குறிப்பு விவரம்: ஊக்கம், திருத்தம் மற்றும் அறிவுரை

1. ஊக்கம் (2தெசலோனிக்கேயர்: 1:3 - 1:12)

2. திருத்தம் (2தெசலோனிக்கேயர்: 2்1 - 2:17)

3. அறிவுரை (2தெசலோனிக்கேயர்: 3:1 - 3:14)

முக்கியவசனம்: 2தெசலோனிக்கேயர்: 2:15 - “ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலை கொண்டு, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபத‌ேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:42 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Thu Jun 14, 2012 9:45 pm

போதக நிருபங்களுக்கு ஒரு முன்னுரை


1தீமோத்தேயு முதல் பிலமோன் வரை
I. பெயர்:

தனி நபர்களுக்கு எழுதப்பட்டது.

II. ஆசிரியர்:

அ) மரபு வழியாக - அப்போஸ்தலனாகிய பவுல்.

ஆ) ஆசிரியரின் நிருபணம்:

1. போதக நிருபங்கள் அவை பவுலினால் எழுதப்பட்டவை என வலியுறுத்துகின்றன. (1தீமோத்தேயு: 1:1; 2தீமோத்தேயு: 1:1; தீத்து: 1:1).

2. ஆசிரியரின் நிருபணத்தைக் குறித்த ஆதிசபையின் இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

3. இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை வெளிப்புறமான சான்றுகள் தொடர்ச்சியாக நிரூப்பிக்கின்றன.

III. அப்போஸ்தலர் 28 ம் அதிகாரத்திற்குப்பின்பு பவுலின் இயக்கங்கள்:

அ) ரோமாபுரியில் 2 வருட சிறை தண்டனை (அப்போஸ்தலர்: 28:30,31; பிலிப்பியர்: 1:19,25-27; 2:24)

ஆ) விடுதலையான பின்பு தொடர்ச்சியான ஊழியப் பயணங்கள் (பிலமோன் 22).

இ) கிழக்கிலுள்ள சபைகளுக்கு பயணம்:

1. எபேசு (1தீமோத்தேயு: 1:5)

2. கொரிந்து, துரோவா, மிலேத்து (2தீமோத்தேயு: 4:13,20)

3. கிரேத்தா (தீத்து: 1:5)

4. மக்கெதோனியா (தீத்து: 3:12)

ஈ) ரோமாபுரியில் மீண்டுமாக சிறை தண்டனை (2தீமோத்தேயு: 1:8,16,17; 2:9; 4:10).

IV. பவுலினுடைய உடன் வேலையாட்கள்:

அ) தீமோத்தேயு:

1. பவுலினுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது அவரைச் சோ்ந்து கொண்டவர். (அப்போஸ்தலர்: 16:1-3).

2. பவுலினுடைய மிக நெருங்கிய பயணத்துணைகளில் ஒருவன்.

- பவுலுடன் மக்கெதோனியா, அகாயா, ஆசியா மற்றும் ரோமாபுரியில்.

- பவுலின் 13 கடிதங்களுள், 6 கடிதங்களில் பவுலுடன் சோ்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறான் (2கொரிந்தியர்: 1 :1; பிலிப்பியர்: 1:1; கொலோசெயர்: 1:1; 1தெசலோனிக்கேயர்: 1:1; 2தெசலோனிக்கெயர்: 1:1; பிலமோன்: 1 வசனம்.)

3. வாலிபன் என்றாலும் நம்பகமானவன் (1தீ‌மோத்தேயு: 4:12; 1கொரிந்தியர்: 16:11, 4:17; பிலிப்பியர்: 2:19)

4. எபேசுவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (1தீமோத்தேயு: 1:3; 3:14,15)

ஆ) தீத்து:

1. எருசலேமில் எழும்பின வாக்குவாதத்திற்கு ஆளான புறஜாதியான் (கலாத்தியர்: 2:1-5).

2. பத்து வருடங்களுக்குப் பிறகு கொரிந்திய சபையுடன் இணைக்கப்பட்ட குறிப்பிடப்பட்டவன் (2கொரிந்தியர்: 1:23 - 2::18; 7:5 - 15; 8:6,16-23).

3. 8,10 வருடங்களுக்குப் பின்பு, கிர‌ேத்தாவிலுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (தீத்து: 1:5).

4. தல்மாத்தியாவில் ஊழியம் (2தீமோத்தேயு: 4:10)



தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:46 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 3:02 am

15. 1தீமோத்தேயு

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியாவாக இருக்கக்கூடும்.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: எப‌ேசுவிலுள்ள தீமோத்தேயு.

காலத்தின் தேவை: எபேசுவிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளை வழிநடத்துவதற்குத் தேவையான போதனையை தீமோத்தேயுவிற்கு அளித்தல்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஒரு இளம் போதகருக்கு அறிவுரை கூறுதல்”

கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.

நோக்கம்: பவுல் வரும்வரை சபையின் வேலையை எவ்வாறு ஒழுங்கு செய்து, நிர்வகிப்பது என்பதைக் குறித்து தீமோத்தேயுவிற்கு போதித்தல்.

குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:

1. சபையின் ஒழுங்கு (1தீமோத்தேயு: 1:3 - 3:13)

2. சபையின் நிர்வாகம் (1தீமோத்தேயு: 3:14 - 6:19)

முக்கியவசனம்:

1தீமோத்தேயு: 3:14,15 - “நான் உன்னிடத்தில் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:47 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 3:16 am

16. 2தீமோத்தேயு

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.65 - கி.பி.67

சேருமிடம்: எபேசுவிலுள்ள தீமோத்தேயு

எப்போது தேவைப்பட்டது: ரோமாபுரியில் பவுல் மரணத்துக்கேதுவாக தண்டனையளிக்கப்படுவதற்கு முன்பாக எழுதிய கடைசி வார்த்தைகள்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பவுலின் இறுதி அறிவுரை”

கருப்பொருள்: பவுலினுடைய மரண சாசனம்

நோக்கம்: சபையை முறையாக வழிநடத்தி, போதிப்பதில் தீமோத்தேயுவை ஊக்குவித்தலும், மழைகாலத்திற்கு முன்பாக தேவையான சில பொருட்களைக் கொண்டு வரும்படி அவனுக்குக் கூறுவது.

குறிப்பு விவரம்: முறைப்படியற்றது:

1. கடந்த காலம் (2தீமோத்தேயு: 1:3-18)

2. நிகழ்காலம் (2தீமோத்தேயு: 2:1-26)

3. எதிர்காலம் (2தீமோத்தேயு: 3:1-17)

4. பவுலின் பிரியாவிடை (2தீமோத்தேயு: 4:1-18)

முக்கியவசனம்:

2தீமோத்தேயு: 2:2 - “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 3:29 am

17. தீத்து

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: நிக்கப்போலி

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: கிரேத்தாவிலுள்ள தீத்து.

காலத்தின் தேவை: சபையை வழிநடத்துவதில் தீத்துவிற்குத் தேவையான போதனையை அளித்தல்.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “கிரேத்தாவிலுள்ள ஒரு போதகருக்கு அறிவுரை அளித்தல்”

கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.

நோக்கம்: கிரேத்தா தீவிலுள்ள சபைக்கு மேய்ப்பனாக செயல்படுவதில் தீத்துவிற்குப் போதனையளித்தல்.

குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:

1. சபையின் ஒழுங்கு (தீத்து: 1:5-19)

2. சபையின் நிர்வாகம் (தீத்து: 1:10 - 3:14)

முக்கியவசனம்: தீத்து: 2:7,8 - “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக் குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமில்லாதவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:49 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 3:41 am

18. பிலமோன்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (பிலமோன்: 19 வசனம்)

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.60 - கி.பி.62

சேருமிடம்: பிலமோனும், சபையும்.

காலத்தின் தேவை: திரும்பி வந்த ஒநேசிமு.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஓடிச்சென்ற ஒரு அடிமை திரும்பி வருகிறான்”

கருப்பொருள்: ஓர் அடிமையின் சார்பில் நட்புடன் பேசுவதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்.

நோக்கம்: ஓடிச் சென்ற ஒரு அடிமையை, பவுல் சிறையிலிருக்கும் போது கிறிஸ்துவினிடம் வழிநடத்தினபடியால், அவனை ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, பிலமோனிடம் நட்புடன் பரிந்து பேசி வேண்டிக்கொள்ளுதல் (பிலமோன் 10 வசனம்).

குறிப்பு விவரம்: முறைப்படியற்ற கடிதம். வரையறுக்கப்பட்ட குறிப்பு விவரம் இல்லை.

முக்கியவசனம்:

பிலமோன்: 17 வசனம் - “ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக் கொள்வதுபோல அவனையும் ஏற்றுக் கொள்ளும்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:50 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 8:23 am

பொதுவான நிருபங்களுக்கு ஒரு முன்னுரை


எபிரேயு முதல் யூதா வரை
I. பெயர்:

A. பொதுவான நிருபங்கள்:

1. குற‌ைந்த அளவிலான பொது அம்சங்கள்:

a. வேறுபட்ட உள்ளடக்கம்:

நெறிமுறை சார்ந்தது (1யொவான்), இம்மை, மறுமை குறித்த கோட்பாட்டைச் சார்ந்தது (2பேதுரு).

b. வேறுபட்ட அமைப்பு:

1யோவானில் வாழ்த்துக்களும் பிரியாவிடையும் காணப்படவில்லை.

2. பொதுவான செய்தி ஒரு பொதுப்படையான அம்சமாகும்.

a. நிருபங்களின் செய்தி ஒரு உள்ளூ்ர் ஐக்கியத்திற்கு மட்டும் அளிக்கப்படாமல் அனைத்து விசுவாசிகளுக்கும் அளிக்கப்படுகிறது.

b. ஆசிரியரின் பெயர் தலைப்பாக அமைகிறது.


B. எபிரேயர்:

1. பிரத்தியேகமானது: ஆசிரியர் அறியப்படாதவர்.

2. யாருக்காக எழுதப்படுகிறது என்பதைக் குறித்த விவரம் இல்லை.


II. பின்னணி:


A. அடக்குமுறையின் உபத்திரவம்:

1. மதப்பிரகாரமாக (எபிரேயு, யாக்கோபு).

2. அரசியல்ரீதியாக (1பேதுரு).

B. முரண்பாடான சமயக் கருத்துக்கள்:

1. கிறிஸ்து சரீரப்பிரகாரமாக மனித உருவெடுத்தார் என்பதையும், விசுவாசத்தினாலுண்டாகும் இரட்சிப்பையும் சமரச மறையியல் கோட்பாடு மறுக்கிறது. (சமரச மறையியலின் முரண்பாடான சமயக் கருத்துக்களை தவறு என நிருபிப்பதற்காக 1யோவான், 2யோவான், 3யோவான் எழுதப்பட்டது). சமரச மறையியல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் அறிவினாலுண்டாகும் இரட்சிப்பை விசுவாசிக்கிறார்கள். (கிரேக்க மொழியில் “நாசிஸ்” (Gnosis) என்றால் “அறிவு” என்று பொருள்).

2. நியாயபிரமாண மறுப்பின் கோட்பாடு: கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளிலிருந்து ஒரு மனிதனை முழுமையாக விடுவிக்கிறது என்ற நம்பிக்கை - “நியாயப்பிரமாண மறுப்பின் கோட்பாடு” ஆகும். (இந்த முரண்பாடாண போதனையை மறுப்பதற்காக 2பேதுரு, யூதா, யாக்கோபு ஆகியவை எழுதப்பட்டன)


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:52 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 8:46 am

19. எபிரேயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: அறியப்படாதவர் (பவுல்? அப்பொல்லோ? பர்னபா?) தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இப்புத்தகத்தை எழுதியவர் தேவன் ஒருவர் மட்டுமே அறிவார்.

எழுதப்பட்ட இடம்: அறியப்படவில்லை.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.67 - கி.பி.68.

சேருமிடம்: ரோமாபுரி

எந்நிலையில் எழுதப்பட்டது:

யூதா விசுவாசிகளுக்கு எதிராக அதிகாிக்கும் எதிர்ப்பைக் கையாளும்போது.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “கிறிஸ்து என்னும் மேலான வழி”

கருப்பொருள்:

பழைய ஏற்பாட்டின்மீது கிறிஸ்துவின் மேலான தன்மை (“மேலான” என்ற பொருளைக் குறிக்கும் “அதிக, விச‌ேஷித்த” போன்ற வார்த்தைகள் 13 முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன).

நோக்கம்:

கிறிஸ்துவுக்குள்ளான தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யூத விசுவாசிகள் மீண்டுமாக யூத கோட்பாடுகளிடம் திரும்புவதைத் தவிர்ப்பதற்காக கிறிஸ்துவின் மேலான தன்மையை எடுத்துக் காட்டுதல். (எபிரேயர்: 10:32-36; 12:3,4).

குறிப்பு விவரம்: அறிவுரை (“கடவோம்” என்ற வார்த்தை 13 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது); உபயோக்கிக்கப்பட வேண்டிய ஒரு பிரசங்கம் (எபிரேயர்: 13:22; 10:19-25).

1. அறிவிப்பு: கிறிஸ்துவின் மேலான தன்மை (எபிரெயர்: 1:1 - 10:39).

2. செயல்முறை: விசுவாசத்தின் மேலான தன்மை (எபிரெயர்: 11:1 - 13:17).

முக்கியவசனம்:

எபிரேயர்: 4:14 - “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இய‌ேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்.”



தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:54 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Fri Jun 15, 2012 12:13 pm

20. யாக்கோபு

அ) பின்னணி:


ஆசிரியர்: யாக்கோபு

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.48 - கி.பி.62

சேருமிடம்: சிதறடிக்கப்பட்ட யூத விசுவாசிகளின் மத்தியில்

எப்போது தேவைப்பட்டது:

எதிர்ப்பையும் நியாயப்பிரமாண மறுப்பின் கோட்பாட்டையும் எதிர்நோக்கும் யூத விசுவாசிகள்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: உண்மையான மதம்

கருப்பொருள்: கிரியையுள்ள விசுவாசம்

நோக்கம்:

பல்வ‌ேறு உபத்திரவங்களினாலும், சோதனையினாலும் தங்களுடைய விசுவாசத்தில் பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த யூத விசுவாசிகளை ஊக்குவிக்கும்படியாக எழுதப்பட்டது. இரட்சிப்புக்குரிய விசுவாசத்தைக் குறித்த பல்வேறு தவறான கருத்துக்களை சரி செய்வதற்காக. இதை வாசிப்பவர்கள் தங்களுடைய நீதியுள்ள விசுவாச வாழ்க்கையோடும், நற்கிரியைகளோடும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற போதனையும் புத்திமதியும் கொடுப்பதற்காக.

குறிப்பு விவரம்: நான்கு பிரசங்கங்கள்:

1. சோதனைகள் (யாக்கோபு: 1:2 - 18)

2. அன்பின் பிரமாணம் (யாக்கோபு: 1:19 - 2:26)

3. தீமையைப் பேசுதல் (யாக்கோபு: 3:1 - 4:12)

4. துன்பத்தைச் சகித்தல் (யாக்கோபு: 4:13 - 5:20)

முக்கியவசனம்:

யாக்கோபு: 1:27 - “திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னை காத்துக்கொள்ளுகிறதும‌ே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:58 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12

Post by சார்லஸ் mc Sat Jun 16, 2012 7:02 am

21. 1பேதுரு

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பேதுரு, சில்வானு (1பேதுரு:5:12)

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள்

காலத்தின் தேவை: ரோமாபுரியில் உபத்திரவத்திற்குட்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள்

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பாடுகளின் மூலமாக இரட்சிப்பு”

கருப்பொருள்: பாடுகளின் மூலமாக தேவனுடைய கிருபையில் நிலைத்திருத்தல்.

நோக்கம்: உபத்திரவத்திற்குட்ப‌ட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான தங்களுடைய விசுவாசத்தில் உறுதியுடன் நிலைநிற்கும்படி அவர்களை ஊக்குவித்தல்.

குறிப்பு விவரம்: மூன்று கோட்பாடு மற்றும் உபயோகப் பகுதிகள்.

1. அறிவிப்பு: இரட்சிப்பு (1பேதுரு: 1:3-12)

அறிவுரை: பரிசுத்தராயிருங்கள் (1பேதுரு: 1:13 - 2:3)

2. அறிவிப்பு: தேவனுடைய மக்கள் (1பேதுரு: 2:4-10)

அறிவுரை: ஒப்புக் கொடுங்கள் (1பேதுரு: 2:11 - 3:17)

3. அறிவிப்பு: பாடு அனுபவித்தல் (1பேதுரு: 3:18-22)

அறிவுரை: களிகூறுங்கள் (1பேதுரு: 1பேதுரு: 4:1 - 5:11)

முக்கியவசனம்:

1பேதுரு: 5:12 - “உங்களுக்குப் புத்தி சொல்லும்படிக்கும், நீங்கள் நிலை கொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும்; நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.”


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 1:59 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum