ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Poll_c10அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Poll_m10அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?

2 posters

Go down

அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Empty அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 21, 2012 12:37 pm

புதுடெல்லி, மே. 21-

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? 951dfaa0-2f79-4b8d-86e8-047dfb16af75_S_secvpf

இந்த இரு கட்சிகளுக்குமே ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லை. கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வேட்பாளரோ அல்லது பாரதீய ஜனதா வேட்பாளரோ வெற்றி பெற முடியும்.

காங்கிரஸ் சார்பில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து வருகிறது.

பாரதீய ஜனதா அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால் அப்துல்கலாம் தன்னை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வேண்டும். போட்டியிருந்தால் வேண்டாம் என்று கூறி விட்டார். அப்துல்கலாம் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரதீய ஜனதாவும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளார். இவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகித்தவர்-மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 15-ந்தேதி சென்னை வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை ஜனாதிபதி பதவி வகித்த தில்லை. எனவே அவரை ஆதரிப்பதாக அறிவித்ததுடன் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்டு ஏ.பி.பரதன், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் முதல்-மந்திரியுமான பிர காஷ்சிங் பாதல் ஆகியோருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெலிபோனில் பேசினார்.

அப்போது முன்னாள் சபாநாயகரும், வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி ஆவதற்கு முழு தகுதி உள்ளது. எனவே அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பா.ஜனதா முடிவு ஜெயலலிதாவின் வேண்டுகோள் குறித்து கட்சி தலைவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். இதில் பாரதீய ஜனதா கட்சி சங்மாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

டெலிபோனில் பேசிய ஜெயலலிதாவிடம் அத்வானி பதில் அளிக்கும் போது சாதகமான கருத்தை தெரிவித்தார் என்றும் ஆனால் இதில் கட்சியின் மற்ற தலைவர்களுடனும், கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனி வேட்பாளரை அறிவித்தால் மற்ற கட்சிகள் ஆதரிக்க முன் வராது. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

எனவே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே பாரதீய ஜனதா எடுக்கும் என்று கூறப்படு கிறது. இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

காங்கிரசும், பாரதீய ஜனதாவும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் அதிகாரப் பூர்வமாக பி.ஏ. சங்மாவை அறிவித்து ஆதரவு அளித்தார். தென் இந்திய தலைவர்கள், பிராந்திய மனப்பான்மை கொண்டவர்கள் என்ற கருத்து வடமாநில தலைவர்களிடம் நிலவுகிறது.

அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் வட இந்திய தலைவர் உயர்ந்த இடத்துக்கு வர தென்னிந்திய தலைவரான ஜெயலலிதா ஆதரவு அளித்து இருக்கிறார். மேலும் சங்மா கிறிஸ்தவ வேட்பாளர் என்பதால் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் மனப்பான்மையில் முதல்- அமைச்சர் இருப்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அரசியல் எதிரிகள் ஜெயலலிதா உயர்ந்த சாதிக்காரர் என்ற எண்ணத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சிறுபான்மை சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல என்பதையும் நிரூபித்து இருக்கிறார். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளித்து இருப்பதும் வட இந்திய தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது என்றார்.

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறையால் பாரதீய ஜனதா மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கும். காங்கிரஸ் வேட்பாளரை இந்த கட்சிகள் ஒரு போதும் ஆதரிக்க முன் வராது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் முன் வந்துள்ளார்.

முலாயம்சிங் யாதவ் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். பி.ஏ.சங்மாவை ஆதரிப்பீர்களா? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவாரிடம் கேட்டபோது, நாங்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். சங்மா எங்கள் கட்சி தலைவர் என்றாலும், காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்து இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார்.

லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு, எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். என்றாலும் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரைத் தான் ஆதரிப்பேன் என்றார்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு? Empty Re: அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?

Post by யினியவன் Mon May 21, 2012 2:55 pm

எதப் பண்றாங்களோ இல்லியோ அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை புது ரப்பர் ஸ்டாம்ப் ஒன்னு பண்ணிடறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum