புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_m10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_m10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_m10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_m10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_m10தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 7:30 am

திரைப்பட நடிகரோ, பிரபல இசைக் கலைஞரோ, அரசியல் பிரமுகரோ, ஆன்மிகவாதியோ பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பிறகு, தனது செயல்கள் தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது, கூடாது என்றும் கூறுவது ஏற்புடையதல்ல. மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தையும், பேராதரவையும் பெறுவதில் பெருமிதம் கொள்ளும் இவர்கள், தங்களுக்கு சில வரம்புகள் உண்டு என்பதையும், பொது இடங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில் கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.

ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது. அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தண்டனை அறிவித்திருக்கிறார்.

ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் , விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால், அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.

தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க அலுவலர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?

ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக் கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?

"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை. அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.

5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும் உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே ஸ்டேடியம் மக்கள் சொத்து.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை, நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம் ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை அங்கீகரிக்க முடியாது!

ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும். தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.

திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண முடிகிறது.

தினமணி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 7:53 am

ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ? புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 8:17 am

அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ? புன்னகை
ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ? சிரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 9:40 am

மகா பிரபு wrote:
அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ? புன்னகை
ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ? சிரி சிரி
போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு... புன்னகை

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 11:02 am

என்ன கொடுமை சார் இது இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!! என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 11:05 am

பத்மநாபன் wrote: என்ன கொடுமை சார் இது இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!! என்ன கொடுமை சார் இது
ரேஸ்கல்ஸ் என்னா வேல பாத்துருக்கானுங்க... என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 19, 2012 12:07 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ? புன்னகை
ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ? சிரி சிரி
போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு... புன்னகை
இது நல்லா இருக்கே..

avatar
Guest
Guest

PostGuest Sat May 19, 2012 1:09 pm

என்ன கொடுமை சார் இது ஜன நாயகம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 1:20 pm

புரட்சி wrote: என்ன கொடுமை சார் இது ஜன நாயகம் சிரி
ஊகும் - பண நாயகம் - அங்க சொன்னத மறந்துட்டீங்க... புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக