ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லசந்தாவின் இறுதி தலையங்கம்

Go down

லசந்தாவின் இறுதி தலையங்கம் Empty லசந்தாவின் இறுதி தலையங்கம்

Post by shineson Fri May 18, 2012 8:18 pm

எந்தத் பணியும் அந்தப் பணியைச் செய்பவர்களின் உயிரைக் காணிக்கையாகக் கேட்பதில்லை, ராணுவப் பணியைத் தவிர. இலங்கையில் பத்திரிகைப் பணியும் அந்த நிலையில் தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக சுயேச்சையான ஊடகங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்துள்ளன. மின்னூடகங்க நிறுவனங்களும், அச்சு ஊடக நிறுவனங்களும் எரிக்கப்பட்டுள்ளன, குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன மற்றும் பல வன்மறைத் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. கணக்கற்ற பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர், கொலை செய்யப்பட்டுள்ளானர். நான் மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளிலும் அடங்கியிருப்பதற்காக பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்லப் போனால் அறுதியாகக் கூறப்பட்டுள்ள பிரிவில் இருப்பது எனக்கு மரியாதைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

நான் நீண்ட காலமாக பத்திரிகைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 2009ம் வருடம் சண்டே லீடரின் பதினைந்தாவது வருடமாகும். இலங்கையில் இந்தக் காலகட்டத்தில் பல விஷயங்கள் மாறி விட்டன. பல மாற்றங்கள் மிக மோசமானவையே என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. இரத்தவெறி அடங்காதவர்களால் நடத்தப்படும் ஒரு உள்நாட்டுப் போரின் நடுவில் நாம் வாழ்கிறோம், பயங்கரவாதிகளாலும், அரசாங்கத்தாலும் நிகழ்த்தப்படும் பயங்கரச் செயல்கள் நமது நாட்டின் அன்றாட நடவடிக்கையாகிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் சுயேச்சையான அங்கங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கொலையை அடிப்படை ஆயுதமாக பயன்படுத்துகிறது. இன்று அவர்கள் பத்திரிகையாளர்களாக இருக்கிறார்கள், நாளை நீதிபதிகள் அந்த இடத்துக்கு வருவார்கள். இவ்விரண்டு தரப்பினருக்கும் ஆபத்துகள் சமமான அளவிலேயே இருக்கின்றன.

பின் நாங்கள் ஏன் இந்தப் பணியைச் செய்கிறோம்? நான் இதை நினைத்து அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நானும் ஒரு கணவன் தான், அற்புதமான மூன்று குழந்தைகள் எனக்கும் இருக்கிறார்கள். வழக்கறிஞர் தொழிலாகட்டும், பத்திரிகைத் தொழிலாகட்டும், அந்தத் தொழிலுக்கு அப்பாற்பட்ட கடமைகளும், பொறுப்புகளும் எனக்கும் உண்டு. நான் அபாயங்களை எதிர்நோக்கி வாழும் அளவுக்கு இந்தத் தொழில் எனக்குத் தகுதியானதா? இல்லை என்று பலர் என்னிடமே கூறுகிறார்கள். எனது நண்பர்கள் என்னிடம் வழக்கறிஞர் தொழிலுக்குத் திரும்புமாறு கூறுகிறார்கள். அது எந்த அளவுக்கு பாதுகாப்பானதும், சிறந்ததுமான வாழ்க்கையைத் தரும் என்று யாருக்குத் தெரியும்? பல கட்சி அரசியல் தலைவர்கள் என்னை அரசியலுக்குள் இழுக்க முயன்றார்கள். எனக்குத் தேவையான அமைச்சகத்தைத் தருவதாகவும் கூறினர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் அபாயங்களை அறிந்துள்ள வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து என்னைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் அங்கே தங்குவதற்கு குடியுரிமை வழங்குவதாகவும் என்னிடம் கூறினர். எனக்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

இருந்தாலும் புகழ், செல்வாக்கு, பாதுகாப்பு இவற்றையும் தாண்டி எனது மனசாட்சியின் குரல் என்னை அழைக்கிறது.

சண்டே லீடர் சர்ச்சைக்குரிய பத்திரிகையாக கருதப்படுகிறது. ஏனென்றால் நாங்கள் பார்க்கும் விஷயங்களை அப்படியே சொல்லுகிறோம். கறுப்பனைக் கறுப்பன் என்றும், திருடனைத் திருடன் என்றும், கொலைகாரனைக் கொலைகாரன் என்றும் நாங்கள் நேரடியாகவே அழைக்கிறோம். அலங்காரச் சொற்களுக்குப் பின்னால் நாங்கள் பதுங்கிக் கொள்வதில்லை. நாங்கள் பதிப்பிக்கும் புலனாய்வுச் செய்திகளுக்கு ஆதாரங்கள் உண்டு. அவற்றை எங்களுக்கு அளிப்பதன் மூலம் தங்களைப் பெரும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளும் மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். பல ஊழல்களை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த பதினைந்து வருடங்களில் நாங்கள் கூறியது தவறு என்று யாரும் நிரூபிக்கவில்லை; யாரும் நீதிமன்றங்களில் எங்களுக்கு எதிராக வழக்காடி வெற்றி பெற்றதில்லை.

சுயேச்சையான ஊடகங்கள் கண்ணாடி போன்று செயல்படுகின்றன. எங்களிடமிருந்து நீங்கள் உங்கள் நாட்டின் நிலையையும், உங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான வருங்காலத்தைக் கொடுக்க நீங்கள் தேர்ந்தெடுத்த நிர்வாகிகளின் நிர்வாகத்திறனைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். சில நேரங்களில் நீங்கள் இந்தக் கண்ணாடியில் காணும் காட்சி இனிமையானதாக இருப்பதில்லை. நீங்கள் தனிமையில் உங்கள் நாற்காலியில் அமர்ந்து முறுமுறுக்கலாம். ஆனால் அந்தக் கண்ணாடியைத் தாங்கிப்பிடிக்கும் பத்திரிகையாளர்கள் தங்களைப் பெரும் அபாயத்துக்குள்ளாக்கிக் கொள்கிறார்கள். அது எங்களுக்கான அழைப்பு. நாங்கள் அவற்றைத் தவிர்க்க முனைவதில்லை.

எல்லா பத்திரிகைகளும் தங்கள் சொந்த கோணங்களில் பிரச்சினைகளைக் காண்கின்றன. எங்களுக்கும் அத்தகைய கோணம் உண்டு என்பதை நாங்கள் மறைப்பதற்கில்லை.இலங்கையை வெளிப்படைத்தன்மை கொணட, மதசார்பற்ற, சுதந்திர நாடாகக் காண்பதே எங்கள் நோக்கமாகும். இந்த வார்த்தைகளைப் பற்றி நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பொருள் உண்டு. வெளிப்படைத்தன்மையுடைய என்றால் அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் என்றும், மக்களின் நம்பிக்கையைத் தவறாக உபயோகிக்கக் கூடாது என்றும் பொருள்படுகிறது. நமது நாட்டைப் போன்று பல இன, பல கலாச்சார மக்கள் வாழும் நாட்டில் ஒற்றுமை வேண்டுமென்றால் மதசார்பற்ற தன்மைதான் சிறந்தது என்பதால் நான் மதசார்பற்ற தன்மை தேவை என்று கூறுகிறேன். எல்லா மக்களும் வேறுபாட்டுடன் படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களை அந்த வேறுபாடுகளுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நான் சுதந்திரத்தன்மையை வலியுறுத்துகிறேன். ஜனநாயகம் ஏன் தேவை என்று நான் விளக்க வேண்டியிருந்தால், நீங்கள் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நிறுத்தி விடலாம்.

பெரும்பான்மையினரின் அபிப்பிராயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதன் மூலம் நாங்கள் பாதுகாப்புடன் இருக்க விரும்பவில்லை. நாங்கள் அதை எதிர்கொள்கிறோம். பத்திரிகை விற்பனையாவதற்கு அதுவும் ஒரு வழியாகும். அதற்குப் பதிலாக, பல வருடங்களாக நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்த கருத்துகள் பல மக்களுக்கு கசப்பாகவே இருந்துள்ளன என்பது தான் உண்மையாகும். எடுத்துக்காட்டாக, பிரிவினை பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் எப்பொழுதும் சொல்லி வந்துள்ளோம். அதே நேரத்தில் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். இலங்கையின் இனப்பிரச்சினையை வரலாற்று நோக்குடன் அணுகுமாறும், பயங்கரவாதம் என்னும் பூதக்கண்ணாடி வழியாக நோக்க வேண்டாம் என்றும் நாங்கள் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி வந்துள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுத்து வந்துள்ளோம். தனது சொந்தக் குடிமக்கள் மீது அடிக்கடி குண்டுவீசித் தாக்குதல் நடத்தும் நாடு இலங்கை மட்டுமே என்பதையும் நாங்கள் வெளிப்படையாகவே பேசினோம். இதற்காக நாங்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டோம். இதை நீங்கள் துரோகம் என்று அழைப்பீர்கள் என்றால் நாங்கள் அப்பட்டத்தைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

சண்டே லீடருக்கு ஒரு அரசியல் செயல்திட்டம் உண்டு என்று பல மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுகிறோம். ஏனென்றால் கிரிக்கெட் விளையாடும் போது பீல்டிங் திசைக்கு நேராக பந்து வீசுவதால் எந்தப் பயனும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சில வருடங்களுக்கு நாங்கள் அதன் தொண்டையில் முள்ளாக இருந்தோம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். எங்கே ஊழல் நடந்தாலும் அதை வெளிப்படுத்தினோம். நாங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக வெளிப்படுத்திய விஷயங்களே அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

நாங்கள் யுத்தத்தை எதிர்ப்பதற்குக் காரணம் புலி ஆதரவு அல்ல. இந்தப் பூவுலகில் தோன்றிய கொடூரமான, இரத்தவெறி பிடித்த அமைப்புகளுள் விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்று. அதனை அழிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ் குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களை இரக்கமற்று குண்டுவீசிக் கொன்று குவிப்பதும் தவறான நடவடிக்கை மட்டுமல்ல; சிங்கள மக்களை வெட்கப்படுத்தும் செயலுமாகும். அது மட்டுமல்ல. தம்மத்தின் பாதுகாவலர்கள் என்ற அவர்களின் உரிமையை இந்தக் காட்டுமிராண்டித்தனம் கேள்விக்குறியாக்குகிறது. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுவதால் இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.

மேலும் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் ராணுவ ஆக்கிரமிப்பு தமிழ் மக்களின் மானமிழக்கச் செய்து அவர்களை நிரந்தரமாக இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றி விடும். போர் முடிந்த பிறகு மறுகட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று விடலாம் என்று கற்பனை செய்யாதீர்கள். போரின் காயங்கள் அவர்கள் மனதில் நிரந்தரத் தழும்புகளாகவே இருக்கும். கசப்புத்தன்மையும், பகைமையும் நிறைந்த வெளிநாடு வாழ் தமிழர்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டியதிருக்கும். அரசியல் தீர்வு காணக்கூடிய ஒரு விஷயத்தை, நீங்கள் நிரந்தரத் தழும்பாக மாற்றுகிறீர்கள். எனது நாட்டின் பெரும்பாலான மக்களும், அரசாங்கமும் இந்த தெளிவான விஷயத்தைக் கண்டு கொள்ளாததால் நான் கோபமடைகிறேன், ஏமாற்றமடைகிறேன்.

இரண்டு முறை நான் கொடூரமாகத் தாக்கப்பட்டேன். ஒரு முறை எனது வீடு எந்திரத்துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளாகியது. அரசாங்கத்தின் புனிதமான வாக்குறுதிக்குப் பின்னரும், இந்தத் தாக்குதல்களைப் பற்றி தீவிரமான விசாரணை எதுவும் நடக்கவில்லை; இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரும் கைது செய்யப்படவும் இல்லை. இந்த விஷயங்களால் என்மீதான தாக்குதல்கள் அரசாங்கத்தின் தூண்டுதல்களால் நிகழ்த்தப்பட்டவை என்று நம்ப எனக்குக் காரணம் இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும் போது, என்னைக் கொலை செய்வது இந்த அரசாங்கமாகவே இருக்கும்.

இதிலுள்ள நகைச்சுவையான அம்சம் என்னவென்றால் மகிந்தாவும் நானும் கடந்த கால் நூற்றாண்டாக நெருங்கிய தோழர்களாக இருக்கிறோம் என்பது பெரும்பாலான பொதுமக்களுக்குத் தெரியாது. மகிந்தாவின் முதற்பெயரைச் சொல்லியும், பேசும் போது ஓயா என்று சிங்கள மொழியில் அழைக்கவும் செய்யும் ஒரு சில நபர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். மகிந்தா பத்திரிகையாளர்களுக்காக அடிக்கடி நடத்தும் கூட்டங்களில் நான் கலந்து கொள்ளாவிட்டாலும், நான் மகிந்தாவை மாதத்திற்கு ஒருமுறையாவது சந்தித்துப் பேசுவேன். சில நெருங்கிய நண்பர்களுடனோ, அல்லது தனியாகவோ நாங்களிருவரும் அதிபர் இல்லத்தில் இரவு நேரங்களில் சந்திக்காமல் இருந்தது இல்லை. அப்பொழுது நாங்கள் சில சம்பவங்களைப் பற்றி பேசிக்கொள்வோம்; அரசியலைப் பற்றிப் பேசுவோம்; கடந்துபோன நாட்களைப் பற்றி மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வோம். மகிந்தாவிடம் நான் கூற விரும்பும் சில வார்த்தைகளை இங்கே கூறுவது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மகிந்தா, நீ இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 2005ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இந்தப் பத்திரிகையில் தான அதிகமாக வரவேற்கப்பட்டாய். உன்னை முதற்பெயர் சொல்லி அழைத்து ஒரு பத்தாண்டு பாரம்பரியத்தை உடைத்தெறிந்தோம். மனித உரிமைகளின் மீதும், சுதந்திர எண்ணங்கள் மீதும் நீ கொண்டிருந்த மதிப்பு அப்பொழுது அனைவரும் அறிந்ததே. ஒரு முட்டாள்தனமான செயலின் மூலமான ஹம்பந்தோட்டை ஊழலில் கலந்து கொண்டாய். மிகத் தீவிரமான ஆன்மத்தேடுதலுக்குப் பின்பு நாங்கள் அந்த செய்தியைப் பிரசுரித்தோம். அதே நேரத்தில் அந்தப் பணத்தைத் திரும்பிக் கொடுத்து விடமாறு உன்னிடம் கூறினோம். நீ பல வாரங்கள் கழித்து அதைச் செய்த போது உனது கெளரவம் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. நீ அதனுடனே இப்போது வாழ்ந்து வருகிறாய்.

அதிபர் பதவியின் மீது ஆசை இல்லை என்று நீயே என்னிடம் சொல்லியிருக்கிறாய். நீ அதைத் தேடிப் போகவில்லை. அதுவே உன் மடியில் விழுந்தது. உனது மகன்களே உனது மகிழ்ச்சி என்றும், அவர்களுடன் நேரத்தைக் கழிப்பதையே நீ விரும்புவதாகவும், உனது சகோதரர்கள் அரசு இயந்திரத்தை இயக்குவதாகவும் நீ கூறுகிறாய். எனது மகன்களும், மகளும் தங்கள் தந்தையை இழக்கும் அளவுக்கு அரசு இயந்திரம் இயங்கியதை அனைவரும் காணபார்கள்.

எனது மரணம் நிகழும் போது, நீ வழக்கம் போல அப்பாவியைப் போல் சத்தங்களை எழுப்பிக் கொண்டு, விரைவான தெளிவான விசாரணை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடுவாய். ஆனால் நீ கடந்த காலத்தில் உத்தரவிட்ட விசாரணைகளைப் போல, இதன் மூலமாகவும் எதுவும் வெளிவரப் போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என் மரணத்துக்குக் காரணம் என்னவென்று நம்மிருவருக்குமே தெரியும். ஆனால் அவனது பெயரைச் சொல்ல துணிவிராது. ஏனென்றால் எனது வாழ்க்கை மட்டுமல்ல, உனது வாழ்வும் அதைச் சார்ந்து தான் இருக்கிறது.

உனது இளம் வயதில் உனது நாட்டைப் பற்றிக் கண்ட கனவுகளை விட்டு, வெறும் மூன்றே வருடங்களில் அதைக் குப்பைக்குவியலான ஆக்கி விட்டாய் என்பது வருந்தத் தக்கது. தேசபக்தி யின் பெயரால் நீ மனித உரிமைகளை மிதித்தாய்; கட்டற்ற ஊழலை வளர்த்தாய்; உனக்கு முன்பு ஆட்சியிலிருந்த அதிபர்களை விட அதிகமாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தாய். பொம்மைக்கடையில் சுதந்திரமாக விடப்பட்ட குழந்தையைப் போன்றே உன் நடவடிக்கைகள் அமைந்தன. இந்த எடுத்துக்காட்ட கூட பொருந்தாது. ஏனென்றால் எந்தக் குழந்தையும் இந்நிலத்தை இரத்த நிலமாக மாற்றியிராது. உன்னைப் போல் குடிமக்களின் உரிமையை அலட்சியப்படுத்தியிராது. நீ அதிகார போதையில் மூழ்கியிருப்பதால் இவற்றை உன்னால் காண முடியவில்லை. உனது மகன்கள் உன்னிடமிருந்து ஏராளமான இரத்தத்தை வாரிசு சொத்தாக பெற்றுக்கொள்ளும் போது நீ வருந்துவாய். அது சோகத்தையே தோற்றுவிக்கும். என்னைப் பொறுத்தவரை, நான் சுத்தமான மனசாட்சியுடனே என்னைப் படைத்தவரிடம் போகிறேன். இறுதியாக உன் காலம் வரும் போது நீயும் அப்படிச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன்; நான் விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் நிமிர்ந்து நடந்தேன், யாருக்கும் தலைவணங்கவில்லை என்பதில் திருப்தியடைகிறேன். நான் தனியாகப் பயணிக்கவில்லை. பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதையில் என்னுடன் பயணித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டார்கள்; விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; தொலைவில் உள்ள நாடுகளுக்கு ஓடிப் போனார்கள். பிறர் மரணத்தின் நிழலில் தங்கியிருக்கிறார்கள். எனது மரணம் உனது ஆட்சியின் போது தான் நடந்தது என்பதை உன்னால் மறக்க முடியாது. ஆனாலும் என்னைக் கொன்றவர்களை நீ பாதுகாப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை. குற்றவாளி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் நீ மிகக் கவனமாயிருப்பாய். உனக்கு வேறு வழியில்லை. ஷிராந்தி அடுத்த முறை பாவமன்னிப்பு கேட்க போகும் போது அதிக நேரம் முழங்காலில் நிற்க வேண்டியிருக்கும். ஏனெனில் அவள் தன் பாவத்துக்காக மட்டுமல்ல. உன்னை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் பெரிய குடும்பத்திற்காகவும் பாவமன்னிப்பு கோர வேண்டும்.

சண்டே லீடரின் வாசகர்களிடம் எங்கள் பயணத்தை ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரபலமில்லாத கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடினோம்; தங்களுக்காக எழும்பி நிற்க வலிமை இல்லாதவர்களுக்காக நாங்கள் எழும்பி நின்றோம்; ஊழல்களை வெளிப்படுத்தினோம்; உங்களது வரிப்பணம் வீணாய்ப் போனதை வெளிப்படுத்தினோம்; அப்பொழுது பிரபலமான கொள்கை எதுவாக இருந்தாலும் அதனோடு முரண்பட்ட கொள்கையையும் உங்களுக்குத் தெரியப்படுத்தினோம். இதற்காக நானும் எனது குடும்பமும் நாங்கள் பலியிட வேண்டும் என்று நெடுநாளாக அறிந்ததை பலியிடுகிறோம். விளைவிகளைத் தடுக்க நான் முயற்சிக்கவில்லை. எந்தப் பாதுகாப்புமில்லை; முன்னெச்சரிக்கையுமில்லை. நான் அவனைப் போல் கோழையில்லை என்பதை எனது கொலையாளி அறிந்து கொள்ளட்டும். மனிதக்கேடயங்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லும் கோழை நான் அல்ல என்பதை அவன் அறியட்டும். அத்தனை பேரின் நடுவில் நான் யார்? எனது வாழ்க்கை யாரால் முடிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்பட்டாயிற்று. எப்போது என்பது தான் எழுதப்படவில்லை.

சண்டே லீடர் இன்னும் நீதிக்கான தனது போரைத் தொடரும் என்பதும் எழுதப்பட்டாயிற்று. நான் தனியாகப் போராடவில்லை. சண்டே லீடர் மூடப்படும் முன் என்னைப் போன்று பலர் சாக வேண்டும். எனது கொலை சுதந்திரத்தின் தோல்வியாகக் காணப்படாமல், முயற்சியெடுப்பவர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் நேசிக்கும் தாய்நாட்டில் அத்தகைய சக்திகள் விடுதலையை நிறுவும் என்று நான் நம்புகிறேன். எத்தனை பேர் தேசபக்தியின் பெயரால் கொல்லப்பட்டாலும் மனித சுதந்திரம் செழித்து வளரும் என்பதை அதிபருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எல்லா ராஜபக்சேக்களும் ஒன்று சேர்ந்தாலும் அப்படிச் செய்ய முடியாது.

நான் இப்படிப்பட்ட ஆபத்தான செய்கைகளை ஏன் மேற்கொள்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் கொலை செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனை நான் அறிவேன். அதனைத் தவிர்க்க முடியாது. நாம் இப்பொழுது பேசாவிட்டால், பிறகு தங்களுக்காக பேச முடியாதவர்களுக்காக பேச யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அவர்கள் இனச் சிறுபான்மையினராய் இருக்கட்டும், இயலாதவராய் இருக்கட்டும், தண்டிக்கப்பட்டோராய் இருக்கட்டும். ஒரு பத்திரிகையாளனான என்னை ஊக்குவித்தது ஜெர்மன் இறையியலாளரான மார்ட்டின் நிமோலர் தான். தனது இளமையில் அவர் யூதர்களுக்கு எதிரானவராகவும், ஹிட்லரின் இரசிகராகவும் இருந்தார். ஆனால் விரைவில் அவர் நாசிசத்தின் சுயரூபத்தை உணர்ந்து கொண்டார். ஹிட்லர் யூதர்களை மட்டும் ஒடுக்க விரும்பவில்லை. மாற்றுக்கருத்துள்ள அனைவரையும் ஒழிக்க விரும்பினார். நிமோலர் பேசியதற்காக அவர் ஷதஷன்ஹாசன் சித்திரவதை முகாமிலும், டச்சாவ் சித்திரவதை முகாமிலும் 1937ல் இருந்து 1945 வரை அடைக்கப்பட்டிருந்தார். நான் எனது பதிவயதில் அவருடைய கவிதை ஒன்றைப் படித்தேன். அது என் மனதில் பதிந்து விட்டது.


முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.
நான் யூதன் அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்.
நான் கம்யூனிஸ்டு அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்,
நான் தொழிற்சங்கவாதியல்ல, அதனால் நான் பேசவில்லை.
இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
இப்பொழுது எனக்காகப் பேச எவரும் இல்லை.

நீங்கள் வேறு எதை மறந்து போனாலும் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். லீடர் பத்திரிகை உங்களுக்காகத் தான் இருக்கிறது. நீங்கள் சிங்களராகட்டும், தமிழராகட்டும், முஸ்லிமாகட்டும், கீழ்சாதியாகட்டும், ஓரினச்சேர்க்கையாளராகட்டும், மாற்றுத்திறனாளியாகட்டும். லீடரின் ஊழியர்கள் யாருக்கும் தலைவணங்காமல், அஞ்சாமல் போராடுவார்கள். பத்திரிகையாளர்கள் செய்யும் தியாகங்கள் எங்களது சொந்தப் பெருமைக்காக அல்ல. அவர்கள் உங்களுக்காகப் படைக்கப்பட்டார்கள். அவர்களின் தியாகத்துக்கு நீங்கள் தகுதியானவர்களா என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை நான் முயற்சி செய்தேன் என்பதைக் கடவுள் அறிவார்.


வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum