புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
81 Posts - 67%
heezulia
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
1 Post - 1%
viyasan
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
273 Posts - 45%
heezulia
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
18 Posts - 3%
prajai
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பச்சையப்பன் கல்லூரி Poll_c10பச்சையப்பன் கல்லூரி Poll_m10பச்சையப்பன் கல்லூரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சையப்பன் கல்லூரி


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 15, 2012 12:02 pm

பச்சையப்பன் கல்லூரி 318099_415055798534043_100000888786399_1280919_2140536159_n

பச்சையப்பன் கல்லூரி... பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் இந்த கல்வி நிலையத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1800களில் தொடங்குகிறது இதன் கதை.

தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.

கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வேயில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. பின்னர் 1850இல் இப்போதைய கல்லூரி இருக்கும் இடத்திற்கு மாறியது. அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் இதனைத் தொடங்கிவைத்தார். ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பிய பிரமுகர்கள் கலந்துகொள்ள, இதன் தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

ஆனால் பச்சையப்பர் என்ற ஏழைதான் இவ்வளவு பிரம்மாண்டமான கல்லூரிக்கு அடித்தளம் அமைத்தவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். வறுமையில் பிறந்த பச்சையப்பன், தமது கடின உழைப்பாலும், அறிவுத் திறனாலும் வள்ளல் பச்சையப்பராக விஸ்வரூபம் எடுத்த கதை, நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம்.

காஞ்சிபுரத்தில் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் பச்சையப்பர். இவர் கருவில் இருந்தபொழுதே, விசுவநாத முதலியார் இறந்துவிட்டார். அவருடைய நண்பர் ரெட்டிராயர் என்பவர், சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார். எனவே அவருடைய ஆதரவை நாடி, பச்சையப்பரை வயிற்றில் சுமந்தபடி பெரியபாளையம் போனார் பூச்சியம்மாள். 1754 இல் பச்சையப்பர் அங்கு தான் பிறந்தார்.

ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.

அடுத்து பூச்சியம்மாள் நெய்தவாயல் பெளனி நாராயண பிள்ளை என்பவரிடம் ஆதரவு கேட்டார். மொழிபெயர்ப்பாளரான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர், பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். பின்னர் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்து அப்படியே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்பாளராக தம்மை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமின்றி திறமையாக பலவகை வணிகத்திலும் ஈடுபட்டார்.

தொழிலுக்கு வசதியாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை ஆகிய இடங்களிலும், தஞ்சாவூரிலும் பச்சையப்பர் குடியிருந்தார். அக்கா மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அங்குதான் விதி விளையாடியது. இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஓயாத சண்டை. விளைவு, நிம்மதியைத் தொலைத்தார் பச்சையப்பர். உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் திருவையாறில் இறந்தார்.

மரணம் வரப் போவதை அறிந்தோ, அறியாமலோ, இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உயில் எழுதினார் பச்சையப்பர். தன் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை என்பதால் உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்திற்கு போனார்கள்.

பச்சையப்பர் இறக்கும்போது, அவரது சொத்து சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது சுமார் ரூ.3 1/2 லட்சம். சொத்துச் சண்டை காரணமாக நீதிமன்றத்தில் 47 ஆண்டுகள் இருந்த இந்தப் பணம் பின்னர் சுமார் 8 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. பச்சையப்பர் உயில்படி இதில் மூன்றரை லட்சம் ரூபாய் கோவில் மற்றும் தர்ம பணிக்களுக்கென ஒதுக்கப்பட, மீதித் தொகையை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, 1880 இல் கல்லூரியாக உயர்ந்தது. இப்படித்தான் பச்சையப்பர் பெயரில் கல்வி நிலையங்கள் உருவாகின.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. 'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்கா நின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை ஏற்படுத்தப்படும்' என்கிறது அந்த கல்வெட்டு.


வறுமையில் பிறந்ததற்காக வாடி நிற்காமல், கடின உழைப்பால் தம்மையும் உயர்த்திக் கொண்டு, கல்வி நிலையங்கள் அமைத்து லட்சக்கணக்கானோரின் வாழ்வையும் உயர்த்திய உயர்ந்த மனிதரை இன்றும் நினைவுபடுத்தியபடியே நிற்கிறது பச்சையப்பன் கல்லூரி.



நன்றி - தினத்தந்தி

* சீனுவாச ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், அறிஞர் அண்ணா என இந்தக் கல்லூரியின் மாண்புமிகு மாணவர்கள் பட்டியல் மிக மிக நீளமானது.


* 1947ஆம் ஆண்டு வரை இங்கு இந்து மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.


* பச்சையப்பர் தினமும் காலையில் கூவத்தில் (அப்போ கூவம் நல்லா இருந்தது) குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக அவருடைய டைரிக் குறிப்பு சொல்கிறது.

mukanuul

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 12:09 pm

நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன் - இன்றுதான் சிறப்புகள் பல தெரிந்து கொண்டேன் பகவதி.

முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டீங்க - நம்ம ஓமன் கிளை இங்க தான் படிக்கிற மாதிரி நடிச்சாருன்னு நினைக்கிறேன். புன்னகை




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 15, 2012 12:09 pm

அருமை......நன்றிகள் பகவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 12:43 pm

மிக்க நன்றி பகவதி , அருமையான கட்டுரை

கொலவெறி wrote:முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டீங்க - நம்ம ஓமன் கிளை இங்க தான் படிக்கிற மாதிரி நடிச்சாருன்னு நினைக்கிறேன். புன்னகை
ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சியில் பச்சையப்பர் ஆவி இதற்காக வருத்தப்பட்டதாகவும் கேள்விபட்டுள்ளேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 12:55 pm

மிக்க நன்றி பகவதி எனது வாழ்க்கையில் என்னை முழுவதுமாக மாற்றிய ஒரு காலமென்றால் அது எனது கல்லூரி காலம்த்தான் அங்கே நான் படிப்பை தவிர மட்டற்ற அனைத்து விஷயங்களையும் கற்றுகொண்டேன் காரணம் மூன்று ஆண்டுகள் ஞாயிட்று கிழமை கூட கல்லூரிக்கு சென்றும் வகுப்புக்கு வெறும் 22 நாட்கள் மட்டுமே சென்றுள்ளேன் தினமும் கல்சுரல்ஸ் ப்ராக்டிஸ் நாடகம் இயற்ற்றுவது வசனம் எழுதுவது கிரிகெட் விளையாதுவது என்றே காலம் கழிந்தது உண்மையில் என் வகுப்பில் என்னை யாருக்கும் தெரியாது மட்டற்ற டிப்பாட்மென்ட் நண்பர்கல்த்தான் அதிகம்

இது எங்கள் நாடக டீம் துடும்பாட்டம் தப்பாட்டம் சிலம்பம் போன்றவைகளை நான் அங்கத்தான் கற்றுகொண்டேன்
பச்சையப்பன் கல்லூரி 179333_177114915657548_100000771238999_334008_4449464_n

மீண்டும் பழையநினைவுகளை தூண்டியதற்கு மிக்க மகிழ்ச்சி பகவதி

இது எனது முதல் நாடகமேடை முதல் வேஷமே அரசியல்வாதிக்கு அடியாள் வேலை மதகலவரத்தி தூண்டிவிடுவது கலவரத்தில் புகுந்து கலாட்டா செய்வது என்று நடித்துகொண்டிருந்தேன் திடிரென்று வசனம் மறந்துவிட்டது நானே சொந்தமாக ஜட்ஜை கலைத்து வசனம் பேச எனக்கு சிறந்த நடைக்கருக்கான சிறப்பு பரிசும் எங்கள் கல்லூரிக்கு முதல் பரிசும் கிடைத்தது

பச்சையப்பன் கல்லூரி 166164_177114185657621_100000771238999_334001_45144_n





ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சையப்பன் கல்லூரி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 1:01 pm

பச்சையப்பாஸ் பசங்க எல்லாம் bad Boys என்று கேள்விபட்டுள்ளேன் உண்மையா பாலா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 1:08 pm

ராஜா wrote:பச்சையப்பாஸ் பசங்க எல்லாம் bad Boys என்று கேள்விபட்டுள்ளேன் உண்மையா பாலா

எல்லாருமே கள்ளம் கபடம் இல்லாத பச்சை மண்ணுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சையப்பன் கல்லூரி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக