ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

3 posters

Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by கேசவன் Sat May 12, 2012 8:22 am

அத்யாயம்- 1

அந்த முதியவரை பார்பதற்கு விநோதமாக இருந்தது ஒல்லியான உடம்பு அதை மிகைபடுத்தி காட்டும் உயரம் குடைமிளகாய் போன்ற மூக்கு மார்பையும் தாண்டி அசைதாடும் தாடி நெற்றி நிறைய திருமண் தனது பெயர் ராகவாட்சாரி என்று அறிமுகபடுத்தி கொண்டார் என் முன்னால் வந்து அமர்ந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி நீர் வைஷ்ணவரா? என்பது தான் அதற்கு நான் திருமாலை இஷ்டதெய்வமாக வழிபடுபவன் எவனாக இருந்தாலும் அவன் வைஷ்ணவன் என்று நீங்கள் நம்பினால் நான் வைஷ்ணவனே அப்படியெல்லாம் கிடையாது வைஷ்ணவ சம்பிரதாய குடும்பத்தில் பிறந்தவன் மட்டுமே வைஷ்ணவனாக ஆகமுடியும் என்று நீங்கள் கருதினால் நான் வைஷ்ணவன் அல்ல என்று பதில் சொன்னேன்.

என் பதிலில் இருந்த அர்த்தத்தை உள்வாங்கி கொண்ட அவர் வாய்விட்டு சிரித்தார் பிறகு தான் கையில் வைத்திருந்த மஞ்சள் நிற துணிப்பையை எடுத்து பிரித்து அதன் உள்ளே இருந்து மிக பழையகால ஏட்டு சுவடி ஒன்றை எடுத்து என் முன்னால் வைத்தார் அந்த சுவடி ஈரத்தில் நைந்து போயிருக்க வேண்டும் மிகவும் கீலகமான நிலையில் இருந்தது தொட்டால் கொட்டிவிடும் என்பார்களே அதே போல இதை கொஞ்சம் படித்து பாருங்கள் என்று சொன்னார் சுவடி கட்டிலிருந்து மிக கவனமாக ஒரே ஒரு ஓலையை எடுத்து படித்து பார்த்தேன் பல எழுத்துக்கள் எனக்கு புரியவில்லை சில எழுத்துக்கள் மங்கி போய் இருந்தது அவற்றையும் மீறி வைப்பு, ஏவல், இடு மந்திரம் என்று சில வார்த்தைகளை படிக்க முடிந்தது இது மாந்திரீகம் சம்மந்தமாக ஓலையாக இருக்கும் என்று அவரிடம் சொன்னேன்


அதற்கு அவர் இது மாந்திரீக சம்மந்தமான ஓலைதான் அதில் சந்தேகமில்லை அந்த காலத்தில் எனது பாட்டனார் மிகபெரிய மாந்தீரிக நிபுணராக இருந்தார் அவர் தான் கற்ற மந்திரத்தால் சாதிக்காதது எதுவுமே இல்லை என்று சொல்லலாம் ஜமிந்தார்கள், வெள்ளைகாரர்கள் கூட என் தாத்தாவை காண வீட்டுக்கு வருவார்களாம். அவர் பயன்படுத்திய சுவடி இது இதன் மகத்துவம் இக்கால பிள்ளைகளுக்கு தெரியாது தக்கவரை தேடி கொடுக்க வேண்டும். என்று விரும்பினேன் இதோ உங்களிடம் கொடுத்துவிட்டேன். என்று கூறிய அவர் அடுத்ததாக ஒரு கேள்வியை என் முன்னால் வைத்தார்.

நான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள் மந்திரம் மாந்தீரிகம் என்பவைகள் எல்லாம் உண்மைகள் தானா? அல்லது உண்மையை போல வெளியில் காட்டிகொள்ளும் தந்திரங்களா? எனக்கு ஏனோ என் தாத்தா சிறந்த மந்திரவாதி என்றாலும் எனக்கு மந்திரத்தின் மீது நம்பிக்கை வரவில்லை ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு ஜெபிக்கும் மந்திரத்தால் இன்னொருவரை வாழவைத்து விட முடியுமா? அல்லது அழித்து விடத்தான் முடியுமா? மந்திரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியுமென்றால் கடவுள் எதற்கு அவனை அடைய பக்தி எதற்கு உயிர்களை வருத்தும் கர்மா தான் எதற்கு இதற்கு நீங்கள் விளக்கம் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.


இப்படி கேட்டவர் ஒரு சாதரணமான மனிதரோ விஷயஞானம் இல்லாத தற்குறியோ அல்ல வேதங்களை நன்றாக கற்றறிந்து விளக்கம் தரக்கூடிய விற்பன்னர் பிரம்ம சூத்திரம் பகவத் கீதை போன்றவற்றை தரவாரியாக படித்தறிந்தவர் கடவுள், ஆத்மா, உலகம் என்று எதை கேட்டாலும் தத்துவ ரீதியில் விளக்கம் சொல்ல கூடிய மாகாமேதாவி அப்படிப்பட்ட ஒருவரே மந்திரம் உண்டா? மந்திரத்தால் நல்லது கெட்டதை செய்ய முடியுமா? என்று கேக்கும் போது அவைகளை பற்றி அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் என்னென்ன கேட்பார்கள் எப்படி நம்புவார்கள் அதிகம் சொல்வானேன் நான் கூட சில காலங்களுக்கு முன்பு வரையில் மாந்திரகம் என்பது மோசடி மந்திரம் என்பது மெளடிகம் என்று தான் நம்பி இருந்தேன் அதன் பிறகு தான் நான் அனுபவத்தில் கண்ட பல விஷயங்களை வரிசை படுத்தி பார்த்து அவைகளிலும் எதோ ஒரு உண்மை மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தேன்.

நான் ஐந்தாறு வயது பையனாக இருந்த போது என் பெரியப்பா மகன் ராமராஜை தேள் கடித்து விட்டது ஒரு மனிதனுக்கு தேள் கடித்தால் எப்படி வலிக்கும் அவன் எப்படி துடிப்பான் என்பதை அப்போது தான் முதல் முறையாக பார்த்தேன் அவன் என்னை விட மிகவும் சிறியவன் தேள் விஷம் சரசரவென்று உடம்பு முழுவதும் பரவி கொண்டிருந்தது அவன் அழுது அழுது மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தான் மருத்துவ மனைக்கு தூக்கி போகலாம் என்றால் அப்போது போக்குவரத்து வசதி அதிகமில்லை ஒரு நாளையில் இரண்டு முறை தான் எங்கள் கிராமத்திற்குள் பேருந்து வந்து போகும் அது நின்றால் உண்டு இல்லை என்றால் இல்லை மக்கள் மாட்டு வண்டியையும் நடைபயணத்தையும் நம்ப தகுந்த போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தினர்.


வண்டிகட்டி போவதென்றாலும் நடந்து போவதென்றாலும் சில மணி நேரம் பயணம் செய்தால் தான் மருத்துவ மனையை அடைய முடியும் ஆனால் பையனின் நிலை நிமிடத்திற்கு நிமிடம் விபரீதமாகி கொண்டிருந்தது. பெண்கள் எல்லோரும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்போது தான் தோப்பையாநாடார் தாத்தா வந்தார் இதற்கு போய் ஏன் எல்லோரும் ஒப்பாரி வைக்கிறீர்கள் நம்ம பூங்கோவில் பிள்ளையிடம் தூக்கி போங்கள் மந்திரித்தால் எல்லாம் சரியாக போகும் சீக்கிரம் கிளம்புங்கள் என்று சொன்னார் அவனை தூக்கி கொண்டு தெருவின் கடேசியில் இருந்த பூங்கோவில் பிள்ளை தாத்தா வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக எல்லோரும் போனார்கள் பூங்கோவில் பிள்ளை பையனை கட்டிலில் கிடைத்த சொன்னார் அவன் உடம்பு முழுவதும் கைகளால் தடவி விட்டார் அதற்குள் யாரோ வேப்பிலையை ஒடித்து அவரிடம் கொடுத்தார்கள் கத்தை வேப்பிலையை கையில் பிடித்த அவர் முனுமுனுவென்று எதோ மந்திரம் சொல்லி மந்திரிக்க ஆரம்பித்தார்.

சுமார் அரைமணி நேரம் அவர் கையில் இருந்த வேப்பிலை கொத்து சுதர்சன சக்கரம் போல் சுற்றிகொண்டே இருந்தது நேரம் ஏற ஏற அவர் இலையை வீசும் வேகமும் அதிகரித்தது கடேசியில் அந்த இலையால் அவன் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை தடவி விட்டார் பிறகு தண்ணீர் எடுத்துவர சொன்னார் யாரோ எடுத்து வந்து கொடுத்தார்கள் சலீர் சலீரென்று தண்ணீரை அவன் முகத்தில் அடித்தார் என்ன ஆச்சரியம் தூக்கத்தில் இருந்து விளித்தவனை போல ராமராஜ் எழுந்து உட்கார்ந்தான் பிறகு அவனுக்கு வலியே இல்லை ஊசி போட்டால் கூட சில மணி நேரம் தேள் கடித்த வலி போகாது ஆனால் சின்ன பையனுக்கு அபாயகரமாக ஏறிய விஷம் இறங்கியதுடன் வலியும் இல்லாது போனது பெரிய அதிசயமாக எனக்கு இருந்தது.


இதே போன்ற அதிசய சிகிச்சை முறையை பாப்கான் பாய் என்ற இஸ்லாமிய பெரியவர் அரகண்டநல்லூரில் செய்ததையும் நான் பார்த்திருக்கிறேன். கத்தியால் கிழிக்காமலே மந்திரம் சொன்ன சில வினாடிகளில் கடிவாயில் இருந்து நீலம் கலந்த குருதி கொட்டுவதை கண்கள் விரிய விரிய பார்த்த அனுபவம் பொய்யல்ல சதையும் ரத்தமும் கலந்த நிஜமான உண்மை மந்திரம் போட்டால் நோய் விலகி விடும். என்று நோயாளி நம்புகிறான் அவ்வளவு மட்டுமே மற்றப்படி மந்திரத்திற்கு வேறு எந்த சக்தியும் கிடையாது என்று பலர் சொல்கிறார்கள். அது உண்மை என்றால் மருந்தே இல்லாமல் தேள் விஷம் இறங்கியது எப்படி கடிவாயில் இருந்து ரத்தம


Last edited by கேசவன் on Thu May 24, 2012 11:30 am; edited 2 times in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 1357389பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 59010615பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images3ijfபில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty Re: பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2012 9:12 am

காஷ்மோரா என்ற பில்லி சூனியனத்தை பற்றி துளசி தளம் என்ற நாவலில் படித்து உள்ளேன்... புன்னகை
ஒரு சிலருக்கு மட்டுமே அவையெல்லாம் வெத்து கூச்சல் முட்டாள் தனத்தின் உச்ச நிலை என்று தோன்றும்
புன்னகை ஆமோதித்தல்

காஷ்மோரா என்றால் என்ன?

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 199912+-+Cover+Page+-+Thulasi+Dhalam,+Small,+Dec+1999,2004
காஷ்மோரா என்பது உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த மாந்திரீக வித்தை;அதை ஏவினால் போதும்.அதற்கு மாற்று எதுவும் கிடையாது.யார் மீது காஷ்மோராவை ஏவினோமோ,அந்த மனிதனை யாராலும் காப்பாற்ற முடியாது.(பக்கம் 105);யாருடைய வீட்டில் துளசிச்செடி வளர்க்கப்படுகிறதோ,அங்கே காஷ்மோராவால் செயல்பட முடியாமல் போய்விடும்.
சூனியம் என்பது 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒரு மனசக்தி கலை;யாருக்கும் தெரியாத,ரகசியம் நிறைந்த அந்த கலையை தற்போது கற்க ஆளில்லாமல் அழிந்துபோயிருக்கிறது.தற்போது இந்தியா முழுவதற்கும் இந்தக் கலை அறிந்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.
பிரஹத்ஜோதியைப் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு மனித அணுவின் மீது ஆட்சி செலுத்துவது எளிது.சப்த அணுக்கள் எனப்படும் மனித சருமம்,மனித ரத்தம்,மனித சதைப்பகுதி,மனித எலும்புகள்,மனிதனின் எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜை,ரேதஸ் முதலியவற்றைச் சூனியம் வைப்பவன் தன்னுடைய வசத்திற்குக் கொண்டுவந்து துன்புறுத்துவான்.இந்த சப்த தாதுக்களுக்கும் சப்த அதிஷ்டான தேவதைகள் இருக்கிறார்கள்.சருமத்திற்கு டாகினி முதல் ரேதஸ்ஸிற்கு யாகினி வரை.இந்த சப்த தேவதைகளை சூனியம் செய்யப்பட்டவர்களின் ஏழு அங்கங்களில் காணலாம்.டாகினியை கழுத்தில்,மற்ற தேவதைகளை வரிசையாய் இதயம்,நாபி,சிச்னம்,மூலாதாரம்,பூமத்யம்,பிரம்மத் துவாரத்தில் காணலாம்.இந்த தேவதைகள் பீஜாக்ஷரங்களுக்குப் பிரச்சன்னமாவார்கள்.யம்,ரம்,லம்,வம்,சம்,ஸம்,ஹம் என்ற சப்த பீஜங்களின் மூலமாக அங்கங்களை ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் தேவதைகளை வசப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட ஆளைத் துன்புறுத்தலாம்.அதனால்தான் காஷ்மோராவை ஏவியதும் ஒவ்வொரு நாளும் ஏவப்பட்டவருக்கு ஒவ்வொரு நோயாக தாக்குகிறது.அதன் பிறகு உபாசகன் வாயுக்களை தன் வசத்தில் எடுத்துக்கொள்கிறான்.பிராணவாயுவை மட்டுமின்றி நாபியிலிருக்கும் சமான வாயுவை,கழுத்திலிருக்கும் உதான வாயுவை ஸ்தம்பிக்கச் செய்து துன்புறுத்துவான்.
இதிலிருந்து மீள ஒரு வழி உண்டு.முதுகுத்தண்டின் கடைசியில் இருப்பது ஸ்ரீசக்கரம்.இதை மூலாதாரச்சக்கரம் என்றும் அழைப்பார்கள்.குண்டலினியை எழுப்பி சுஷம்ன வழியாக மூலாதாரத்திலிருந்து சகஸ்ரத்திற்குச் சேர்க்க முடிந்தவன் யோகி.மூன்று ஏக பீஜ மந்திரங்களை ஜபிக்கவும்.க்ஷாம் என்பது நரசிம்ம பீஜம்.ஹ்ரீம் என்பது புவனேஸ்வரி மந்திரம்;க்லீம் என்பது காமராஜ பீஜம்.108 முறை இந்த மந்திரங்களை ஜபம் செய்.இந்தத் தண்ணீரில் அமர்ந்து கொண்டு மந்திரங்களைச் சொல்லியபின் இந்த எண்ணெய்யைக் குடி.இந்த எண்ணெய் சூரிய கிரகணத்தன்று மாலகம் விதையிலிருந்து பாதாள மந்தரிம் வழியாக எடுத்தது.நீ ஜபித்த 108 மந்திரங்களும் உன் மகளுடைய பொம்மையில் குத்தி வைக்கப்பட்டுள்ள 108 முட்களுக்கு எதிராக வேலை செய்யும்.பொம்மை ஏற்கனவே சிதிலமடைந்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.காஷ்மோராவை எதிர்க்கக் கூடியது காளி ஒன்றுதான்.அம்பாளைப் பிரசன்னம் செய்துகொள்.காஷாய வஸ்திரத்துடன் பூசத்தன்று பறித்த விஷ்ணு கிராந்திப்பூக்களின் சூரணத்தை உன் நெற்றியில் திலகமாக வைக்கிறேன்.இந்த திலகத்தை இட்டுக்கொண்டு நீ யாரைப் பார்க்கிறாயோ அவன் உனக்கு அடிமையாகிவிடுவான்.உன் மகளின்மீது சூனியத்தை ஏவிவிட்டவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடி.இன்ரு 21 வது நாள்.இன்று இரவு 12 மணிக்குள் இது நடந்தாக வேண்டும்.இன்று இரவு 12 மணிக்குப் பொம்மையின் கட்டுக்களை அவிழ்த்து ஹோமத்தில் போடுவான் மந்திரவாதி.அப்படி போடுவதற்குள் நான் சொன்னது நடந்து முடியவேண்டும்.இதோ இந்தப் பலகையின் மீது ஸ்ரீசக்கரத்தைச் செதுக்கி இருக்கிறேன்.இதனால் தான் அவனை அடிக்க வேண்டும்.இந்த துளசி தீர்த்தத்தை அந்த ஹோமத்தில் போட வேண்டும்.(பக்கம் 282,283)எண்டமூரி விரேந்திரநாத் எழுதிய துளசி தளம்;மாந்திரீகம் பற்றிய நாவல்.

-ஆன்மீகக்கடல் நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty Re: பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by கேசவன் Sat May 12, 2012 4:32 pm

பகிர்வுக்கு நன்றி ரமேஸ் குமார் அவர்களே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 1357389பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 59010615பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images3ijfபில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty Re: பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by சிங்கம் Sat May 12, 2012 5:27 pm

இதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிருங்கள்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty Re: பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by கேசவன் Thu May 24, 2012 11:26 am

பில்லி சூன்ய விளக்கங்கள்.
,

அத்யாயம் 2

ஒரு பெரியவருக்கு இந்த சமூதாயத்தின் மீது அடக்கமுடியாத கோபம் என்ன உலகம் சார் இது மனுஷன் எவனிடமும் ஈவு இறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது ஆட்டைகடித்து மாட்டை கடித்து கடேசியில் மனுஷனையே கடித்த கதையாக ஆகிவிட்டது அப்பா அம்மா மீது மரியாதையில்லை அண்ணன் தம்பிகளிடத்தில் பாசமில்லை கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை இல்லை பிள்ளை பாசம் என்பது கூட போலி நாடகமாக இருக்கிறது. என்கிறார்

இன்னொறுவர் சொல்கிறார் கண்ணுக்கு எதிரே ஒரு மனிதன் உயிருக்காக போராடிகொண்டிருந்தாலும் அவனை காப்பாற்றுவது பற்றி சிந்திக்காமல் தான் பயணபோகவேண்டிய பேருந்துக்காக சலிப்போடு காத்திருப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய டாக்டர்கள் கூட பணத்தை பார்க்கிறார்களே தவிர தங்களது கடமையை உணரவில்லை மருத்துவர்களே பாதைமாரிய பிறகு அரசியல் வாதிகள் அதிகாரிகள் சமூகநல ஆர்வலர்கள் பொது பணியாளர்கள் காவலர்கள் போன்றோர்கள் மாறாமலா இருப்பார்கள் அதனால் தான் இந்த நாடு கெட்டு குட்டிசுவராகி விட்டது என்கிறார்.

இதற்கு வேறொருவர் இப்படி எல்லோரும் கெட்டு போனதற்கு சினிமாதான் முழுமுதற்காரணம் எப்படி தப்பு பண்ண வேண்டும் தப்பு செய்துவிட்டு தப்பித்துகொள்ள என்னென்ன வழி உண்டு தவறுகளை மூடிமறைப்பது எப்படி மறைத்துவிட்டு நல்லவர் போல் நடிப்பது எப்படி என்பவைகளை சினிமா தெளிவாக காட்டிவிடுகிறது. இதுமட்டுமா கொலை செய்வது கற்பழிப்பது ஊரான் மனைவியை மானபங்கம் செய்வது பொது பிரச்சனைகளை ஜாதி கலவரங்களை தூண்டிவிடுவது எப்படி என்றெல்லாம் ஒரு அகராதியை போல் சினிமா விளக்கி விடுகிறது. அதை பார்ப்பவன் மிக சுலபமாக தீய வழிகளை தெரிந்துகொள்கிறான் எனவே இந்த சமூதாயம் நிஜமாகவே முன்னேற வேண்டுமானால் ஒரு பத்து வருடத்திற்கு சினிமாவையும் தொலைக்காட்சியையும் தடைசெய்ய வேண்டும் என்கிறார்.


இவர்களது பேச்சில் நியாயமில்லை நிஜமில்லை என்று எவரும் சொல்ல இயலாது ஆனால் எதார்த்தமாக பார்க்கும் போது இப்படி பட்டவர்களின் கூற்று முற்றிலும் சரி என்று நம்மால் ஒத்துகொள்ள முடியவில்லை சினிமா வருவதற்கு முன்பு மட்டும் இந்த சமூகத்தில் தீங்குகள் நடக்காமலா இருந்தது என்று நாம் கேட்கபோவதில்லை சினிமாவில் தீமைகள் மட்டும் தான் காட்டபடுகிறதா நல்ல விஷயங்கள் எதுவுமே சொல்லப்படவில்லையா என்று கேட்க தோன்றுகிறது. காரணம் தாய்பாசம் உடன்பிறந்தவர் பாசம் நட்பு நேர்மை கடமை தவறாமை என்று எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்லபடுகிறதே அவைகளை எல்லாம் யாருமே கவனத்தில் கொள்ளவில்லையா? அல்லது அவைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இல்லையா என்றும் நமக்கு தோன்றுகிறது.

சினிமா பார்க்கப்படும் மனிதர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானால் நூற்றுக்கு ஐம்பது பேர்களையாவது நல்வழி படுத்திருக்க வேண்டுமே அவைகளை பற்றி யாருமே சொல்லவில்லையே அது ஏன் ஆட்டோ சங்கர்களையும் ஜெயப்ரகாஷ்களையும் மட்டும் தான் சினிமா உருவாக்கி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பக்கம் சாராமல் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள மக்கள் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள் அதை பற்றி அதிகமாக பேசுகிறார்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களையாவது செலவிட்டு அவைகளை பற்றி சிந்திக்கிறார்கள் இது உலக மக்கள் அனைவரின் பொதுவான மனோதத்துவமாகும் ஒரு பெண் தன்னை கைபிடித்து இழுக்க வந்தவனை செருப்பால் அடித்து விட்டாள் என்றால் அது அதிகவேகமாக பரவாது அதே பெண் அவனை நடுத்தெருவில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் என்றால் வினாடி நேரத்தில் ஊர் முழுவதும் பரவிவிடும்.

அதாவது ஒரு விஷயத்தில் உள்ள கெடுதியான தன்மை மனித மனத்தை ஈர்ப்பது போல நல்ல தன்மை என்பது அவ்வளவாக ஈர்ப்பது இல்லை சினிமா மட்டுமல்ல மாந்தீரிகம் என்பதும் ஏறக்குறைய அப்படி தான் மாந்திரிக சாஸ்திரத்தில் ஏராளமான நன்மைகள் மலிந்து கிடக்கிறது. மந்திரங்களை வைத்து ஆக்கபூர்வமான காரியங்கள் எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி ஏராளமான விளக்கங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன ஆனால் அவைகளை பற்றி நிறைய பேருக்கு தெரியாது வசியம் மோகனம் மாரகம் என்ற கெட்ட விஷயங்களை அறிந்து வைத்திருக்கின்ற அளவிற்கு நல்ல விஷயங்களை யாரும் தெரிந்து வைத்திருக்க வில்லை


ஒரு சமயம் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் மந்திரங்களால் கேடு செய்ய முடியுமா? என்பதை பற்றி நேரடி பேட்டி கொடுத்திருந்தேன் அதை பார்த்துவிட்டு நிறைய பேர் ஐயோ சுவாமி நாங்கள் உங்களை ஒரு துறவி என்று தான் நினைத்து கொண்டிருந்தோம் நீங்கள் ஒரு மந்திரகாரரா எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கேட்டார்கள் அப்படி கேட்டவர்களின் பலர் என்னிடம் உள்ள தொடர்பை உடனடியாகவே துண்டித்து கொண்டார்கள் அவர்களை எண்ணி எனக்கு சிரிப்புதான் வந்தது காரணம் அறியாமையில் கிடக்கும் அவர்களை பற்றி வேறு என்ன என்னால் சொல்ல முடியும். மாந்திரிகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும் அது ஏவல், பில்லி சூன்யம் தானே அவைகளை பற்றி எதற்க்காக பேச வேண்டும் அவைகளை தெரிந்து வைத்து ஆவது என்ன என்று பலர் நினைக்கிறார்கள் வேறு சிலரோ அவைகளை பற்றி பேசினாலே தீங்கு வந்து விடும். என்று நினைக்கிறார்கள் அந்த அளவிற்கு மாந்திரிகத்தை பற்றிய அச்சமும் பயமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

பயப்படாமல் என்ன செய்வது கிராமத்தில் நன்றாக மளிகைக்கடை வியாபாரம் நடத்தி வந்தேன் ஆள் சம்பளம் போக்குவரத்து செலவு போக தினசரி கையில் ஐநூறு ரூபாய் கண்டிப்பாக நிற்கும் குடும்பத்தை நடத்துவதற்கு கஷ்டபட்டதே கிடையாது. பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன் தாய்தகப்பனுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்து கொண்டேன் மிக முக்கியமாக பெண்டாட்டியின் தேவைகள் எதுவோ அத்தனையையும் தட்டாமல் செய்து வந்தேன் ஒரு வெள்ளிகிழமை குடுகுடுப்பைகாரன் ஒருவன் வந்து பிச்சை கேட்டான் வெள்ளிகிழமை அதுவுமாய் காலையில் வந்து பிச்சை கேட்கிறாயே கடையில் எதவது போனி ஆகட்டும் பிறகு வா என்றேன் அதெல்லாம் முடியாது இப்போதே பிச்சை போடு என்றான் அதிகாரமாக எனக்கு கோபம் வந்துவிட்டது போடா வெளியே என்று அவனை படித்து தள்ளிவிட்டேன் இன்னும் பதினைந்து நாளில் என்ன நடக்கிறது பார் நடுத்தெருவுக்கு நீ வருவாய் என்று சபித்துவிட்டு போனான்.

இவனென்ன ஊசியை நாட்டி அதன் மேல் தலைகீழாக நின்று தவம் செய்யும் யோகியா சாபம் கொடுப்பான் அது பலிக்குமென்று நான் கவலைபடுவதற்கு அவன் சாபத்தை நான் பொருட்படுத்தவே இல்லை மறந்தும் போய்விட்டேன் கடேசியில் அடுத்த வெள்ளி கிழமை அதாவது எட்டாவது நாள் கடையில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது ஒரு சொம்பு தண்ணீரில் அணைந்து போகவேண்டிய நெருப்பு என் கடையே சாம்பலாக்கி விட்டுதான் அணைந்தது அவன் சொன்னபடி பதினைந்து நாளில் அல்ல எட்டே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் பத்து பேருக்கு வேலை கொடுத்த நான் இன்று கோயம்பேடு பஸ்டாண்டில் மூட்டை தூக்கி பிழைப்பை நடத்துகிறேன் இப்படி மாந்திரிகத்தால் ஒருவர் அல்ல பலரும் பாதிக்கப்படும் போது அதில் நன்மை இருக்கிறதா? தீமை இருக்கிறதா? என்றா ஆராய முடியும். என்று உங்களில் யாரோ ஒருவர் பேசுவது என் காதில் விழாமல் இல்லை.


வாஸ்தவம் தான் மாந்திரிகத்தில் எவ்வளவோ நல்ல சங்கதிகள் இருந்தும் அதை முழுமையாக அறிந்தவர்கள் கூட கெட்ட விஷயங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அல்லது கெட்ட காரியங்களால் ஏற்படும் தீய பலன்களை தடுப்பதற்கே தங்களது மாந்திரிக சக்தியை பயன்படுத்துகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள் கதையே இப்படி இருக்கும் போது தெரியாதவர்களை பற்றி குறைகூறுவதில் அர்த்தமில்லை பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.

பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.

அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.


தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.

இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.

அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இப்படி பட்ட தீய காரியங்கள் மாந்திரிகத்தில் ஏராளமாக இருக்கிறது.

இதை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரும் இவைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட மனிதர் மீதோ குடும்பத்தின் மீதோ பிரயோகம் செய்வதற்கு என்னென்ன தேவைப்படும் என்பதாகும் அதாவது நாம் தாக்க வேண்டிய எதிரிகளிடமிருந்து. என்னென்ன பொருள்களை எடுத்து பிரயோகம் செய்ய வேண்டும் என்பதே இந்த சந்தேகத்தின் அர்த்தமாகும் ஒருவருக்கு தீய மந்திரங்களால் பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் புகைப்படமோ வியர்வை மற்றும் ரத்தம் படிந்த துணிகளோ தலைமுடியோ காலடி மண்ணோ விந்தனுவோ வேண்டுமென்று மாந்திரிகர்கள் சொல்கிறார்கள். அந்த பொருள்களை வைத்து என்னென்ன காரியங்களை செய்யலாம் என்பதை இனி வரும் பகுதிகளில் சிந்திப்போம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 1357389பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 59010615பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images3ijfபில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2 Empty Re: பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum