ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

+8
பிஜிராமன்
ரா.ரா3275
ராஜா
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 4:28 am

First topic message reminder :

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்

விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.

காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.

இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.

ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.

என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.

திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.

எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.

அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?

அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.

போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.

அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.

எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.

லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.

சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.

நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.

அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.

நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.

சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.

அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.

சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.

நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.

அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.

இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.

ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.

என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.

என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.

உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.

அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.

அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.

உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by Aathira Sat May 12, 2012 12:14 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:ரேவதி அப்படிப்பட்டவங்களா... உடம்பெல்லாம் வீங்குமா... நம்மால முடியாதுப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரசிக்கும்படியாக எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுதுன்னு தெரியல. மூளையை அன்னன்னக்கி கொத்தி புண்ணாக்கெல்லாம் போட்டு வளக்கிறீங்களா கொ.வெ. :அடபாவி:
அது மட்டுமில்ல...எருவெல்லாம் போடுறாரு...
மொத்தத்துல , அண்ணன் topla களிமண்ணோட தான் அலையுராருன்னு நீங்க ரெண்டு பெரும் சொல்லலன்னு எனக்கு தெரியும்
இப்படி வந்து குட்டைய குழப்பினால் கட்டைதான் பேசும் அப்படீன்னு நாங்கல்லாம் சொல்ல மாட்டோம். ரிலாக்ஸ்


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Tஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Hஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Iஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ராஜா Sat May 12, 2012 12:17 pm

Aathira wrote:இப்படி வந்து குட்டைய குழப்பினால் கட்டைதான் பேசும் அப்படீன்னு நாங்கல்லாம் சொல்ல மாட்டோம். ரிலாக்ஸ்
வரவர உங்க அலும்பு தாங்க முடியல , விடுமுறை முடிந்து பள்ளி திறக்கட்டும் இருங்க கத்தியோட வரேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 12:23 pm

முரளிராஜா wrote:பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள் சோகம்
இதைத் தான் போரிட்டு வீழ்த்த நினைக்காதே
விருந்தோம்பி வீழ்த்துன்னு சொல்லி இருக்காங்க பெரியவங்க முரளி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by பாலாஜி Sat May 12, 2012 12:31 pm

முரளிராஜா wrote:பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள் சோகம்

அதை நீங்க உணர்வுபூர்வமாக உணர வேண்டுமானால் நீங்களும் சாப்பிட்டு பாருகளேன் .. புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 1:12 pm

இரா.பகவதி wrote:
உங்களை போன்ற பொறியாளர்கள் இருக்கும் போது நான் எதற்கு?

பொறியாளர் என்றால் பொறியல் (சமையல் சைடிஸ்)செய்பவர் தானே நான் அவியல் கூட நல்லா செய்வேன் ஜாலி
மகளிர் அணி செயற சமையலையே சாப்பிட முடியலை..

இதுல உன்னோட சமையலை நினைத்தாலே பயம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 1:14 pm

அசுரன் wrote:அடப்பாவி கொலவெறி அண்ணா! இன்னைக்கு ரேவதி அக்கா தான் மாட்டினாங்களா? அவங்க பாயாசம் இவங்க கொழுக்கட்டையா... உங்களுக்கு வருது இருடி உருட்டுக்கட்டை குதூகலம்
உங்க பிரம்படிக்கு அது பெட்டர் அசுரன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by முரளிராஜா Sat May 12, 2012 1:16 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள் சோகம்

அதை நீங்க உணர்வுபூர்வமாக உணர வேண்டுமானால் நீங்களும் சாப்பிட்டு பாருகளேன் .. புன்னகை
என்ன உங்க நல்ல மனசு அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by பாலாஜி Sat May 12, 2012 1:20 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள் சோகம்

அதை நீங்க உணர்வுபூர்வமாக உணர வேண்டுமானால் நீங்களும் சாப்பிட்டு பாருகளேன் .. புன்னகை
என்ன உங்க நல்ல மனசு அழுகை

எனக்கு புகழ்ச்சி பிடிக்காது .. சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by இரா.பகவதி Sat May 12, 2012 1:24 pm

மகளிர் அணி செயற சமையலையே சாப்பிட முடியலை..

இதுல உன்னோட சமையலை நினைத்தாலே


பயப்படாதிங்க நீங்க பண்ற மொறுக்கை விட நல்லா இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by இரா.பகவதி Sat May 12, 2012 1:24 pm

மகளிர் அணி செயற சமையலையே சாப்பிட முடியலை..

இதுல உன்னோட சமையலை நினைத்தாலே


பயப்படாதிங்க நீங்க பண்ற மொறுக்கை விட நல்லா இருக்கும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 4 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum