ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

+8
பிஜிராமன்
ரா.ரா3275
ராஜா
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 5:58 am

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்

விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.

காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.

இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.

ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.

என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.

திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.

எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.

அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?

அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.

போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.

அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.

எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.

லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.

சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.

நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.

அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.

நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.

சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.

அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.

சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.

நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.

அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.

இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.

ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.

என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.

என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.

உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.

அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.

அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.

உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 7:20 am

பாவம் ரேவதி... சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by முரளிராஜா Sat May 12, 2012 9:24 am

பாவம் அந்த சீன வீரர்கள் என்ன அவஸ்த்தை பட்டிருப்பார்கள் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by அசுரன் Sat May 12, 2012 9:29 am

அடப்பாவி கொலவெறி அண்ணா! இன்னைக்கு ரேவதி அக்கா தான் மாட்டினாங்களா? அவங்க பாயாசம் இவங்க கொழுக்கட்டையா... உங்களுக்கு வருது இருடி உருட்டுக்கட்டை குதூகலம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 12, 2012 10:11 am

இராணுவ ரகசியம் என்று சொல்லி விட்டீர்கள் இனி அடித்து கேட்டாலும் சொல்லமாட்டோம்... ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ராஜா Sat May 12, 2012 11:35 am

ரா.ரமேஷ்குமார் wrote:இராணுவ ரகசியம் என்று சொல்லி விட்டீர்கள் இனி அடித்து கேட்டாலும் சொல்லமாட்டோம்... ஜாலி
ஆமாம் ஆமாம் , ராணுவ ரகசியத்தை வெளியிடவே மாட்டோம். நாட்டாமை & ரேவதி இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்வோம் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 12:32 pm

மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 12:37 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ரா.ரா3275 Sat May 12, 2012 12:43 pm

கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பம்...ஆனா அந்த ஆட்டத்த பச்சப் புள்ளைங்க மேல ஆடுறதுதான் கொஞ்சம் ஓவரு...ஆமா நம்ம நாட்டாம பாலாஜி பச்ச மண்ணு...
அதுலேயும் ரேவதி பாவம் பச்சப் புள்ள...


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி 224747944

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Emptyஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ரா.ரா3275 Sat May 12, 2012 12:44 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி 224747944

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Emptyஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum