Latest topics
» அப்பாக்களின் தேவதைகள்by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையாலங்கானத்துப் பெரும் போர்
+5
சதாசிவம்
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சாமி
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தலையாலங்கானத்துப் பெரும் போர்
First topic message reminder :
தலையாலங்கானத்துப் பெரும் போர் (கி.வா.ஜகந்நாதன் எழுதியது)
௧) 1 )
அரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம்பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுக்கட்டிலில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக் கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!
‘இவனுடைய அறிவையும் குலப்பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே!
மூதூர் வாயிலிற் பனிக்கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டு விட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா?
அவர்கள் அனைவரையும் இன்றைப் பொழுதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களே? என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர்கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.
மூதூர் வாயிற் பனிக்கயம் மன்னி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
த்ண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல்தவச் சிறிதே!
(தொடரும்)

Last edited by சாமி on Mon May 21, 2012 10:31 pm; edited 5 times in total
Re: தலையாலங்கானத்துப் பெரும் போர்
௫) 5 )
பாண்டி நாட்டுப்படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக்கண்டு படைவீரர் அத்தனைப்பேரும் ஊக்கமுற்றனர். “வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம்பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித்தரவேண்டியது நம் கடமை” என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.
முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்து வந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கி வந்தான். அந்தப்போரில் அவர்களுக்கு தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான்.
வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன. சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப்போராக இருப்பினும் அவனுடைய போர்த்திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் ஊண்டாக்கியது.
மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அதுகண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.
எருமையூரன் படைவீரர்களுக்குதான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. “நம்முடைய ஊர் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத்தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆளமுடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்?

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Re: தலையாலங்கானத்துப் பெரும் போர்
நன்று
[You must be registered and logged in to see this link.]

௬) 6 )
பல நாடுகள் இடைப்பட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக்கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்? இப்படி அவர்களுக்குள் ஊக்கக்குறைவு தலைநீட்டியது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?
அங்கங்கே பகைப் படைகளில் உள்ள வீரர்கள் கைவாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக் கூட ஊக்கம் குன்றிவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று பொருத்தது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.
பாண்டியன் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிமகளைக் கைப்பற்றினான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டார்கள்.
தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.
நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வழங்கினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர்.
போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

சாமி wrote: தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.
தோற்றவர்களும் மறக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய வெற்றி !!!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: தலையாலங்கானத்துப் பெரும் போர்
சாமி !
இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?

ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: தலையாலங்கானத்துப் பெரும் போர்
தமிழ் மன்னர்களின் வீரம் பற்றி அறிய முடிந்தது நன்றி ... நெடுஞ்செழியனின் வீரம் வியப்பில் ஆழ்த்தியது ...பதிவுக்கு நன்றி ...
arjunsugu- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
Re: தலையாலங்கானத்துப் பெரும் போர்
ஆரூரன் wrote:சாமி ! இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?
மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ (சிவகங்கை போகும் வழியில்) தொலைவில் உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதே பெயரில்தான் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum