Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » கேள்வி பதில்
Page 1 of 1
தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » கேள்வி பதில்
கேள்வி: சாலிட் ஸ்டேட் டிஸ்க்கின் விலை குறைவது போல் தெரிகிறதே. இப்போது வாங்கிப் பயன்படுத்தலாமா?
- எஸ்.கே. மேரி ஜெபராஜ், சேலம்.
பதில்: சற்றுப் பொறுங்கள். விலை இன்னும் குறைய வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டளவில் இதன் விலை ஆண்டுக்கு 60% குறைந்து வருகிறது. இப்போது ஒரு ஜிபி ரூ.50 என்ற விலையில் உள்ளது. இது விரைவில் ரூ. 20க்கும் கீழாக வரும் வாய்ப்பு உண்டு. எனவே பொறுமையாக இருக்க வும். அதற்கு முன் சில தகவல்களைத் தருகிறேன். அவற்றின் அடிப்படையில் எஸ்.எஸ்.டிஸ்க் வாங்க உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளவும்.
உங்கள் கம்ப்யூட்டரில் சராசரியாக எவ்வளவு டிஸ்க் ஸ்பேஸ் பயன்படுத்தி வருகிறீர்கள் எனப் பார்க்கவும். அதனுடன் 20% இடக் கொள்ளளவு சேர்த்து அந்த அளவில் சாலிட் ஸ்டேட் டிஸ்க் வாங்கலாம். உங்கள் மொத்த பயன்பாடு 80 ஜிபியைத் தாண்டவில்லை எனில், உங்களுக்கு 120 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க் போதும். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கம்ப்யூட்டர் களிலும், எஸ்.எஸ்.டி. இருப்பது அவசியம். அப்போதுதான் மாற்றிக் கொண்டு பயன்படுத்த எளிது. ஏனென்றால் மற்ற கம்ப்யூட்டர்கள் எல்லாம் மிக மிக குறைந்த வேகத்தில் செயல்படுவது போல் தோன்றும். நோட்புக் கம்ப்யூட்டர்களில் எஸ்.எஸ்.டி. பொருத்தினால், அதனை நீங்கள் பயன் படுத்தாவிட்டாலும் பேட்டரி சக்தியைப் பெற்று பயன்படுத்தும். எனவே சரியான பேட்டரி மேனேஜ்மென்ட் இல்லை என்றால் சிக்கல். எஸ்.எஸ்.டி. பூட் செய்வது அதி வேகத்தில் நடைபெறும் என்பதால், தண்ணீர் குடிக்க எழுந்து செல்வதென்றாலும், கம்ப்யூட்டரை நிறுத்திச் செல்லலாம். எஸ்.எஸ்.டி.யின் நம்பகத்தன்மை அதனைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லாண்மையைப்பொறுத்தது. எனவே உடனுடக்குடனான பேக் அப் தேவையாக இருக்கும். இதற்கு நீங்கள் தயாராக வேண்டும். எஸ்.எஸ்.டிஸ்க்குகளை இன்ஸ் டால
் செய்து, டேட்டாவினை மாற்றுவது சற்று சிரமம். இந்த தகவல்களை மனதில் அசை போட்டு தயாராக இருங்கள். இன்னும் விலை குறைந்த பின்னர், இதற்கு மாறலாம். இந்த யோசனையைக் கொண்டிருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
கேள்வி: நிஜமாகவே விண்டோஸ் எக்ஸ்பிக்கு பாதுகாப்பு 2014ல் வாபஸ் பெறப்படுமா?
- சி.கே. அண்ணாமலை, மதுரை.
பதில்: பெரும்பாலான மக்களின் மன தைக் கவர்ந்தது எக்ஸ்பி என்பது உங்கள் பிரியமான நீண்ட கடிதத்தில் இருந்து தெரி கிறது. ஆனால், உங்கள் கேள்விக்கு கசப்பான பதிலாக "ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏப்ரல் 2014க்குப் பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பினைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்தவிதமான ஆதரவினையும், உதவியை யும் தராது. எனவே இன்டர்நெட் இணைப் பில்லாமல், வேறு பைல்களிலிருந்து வைரஸ் கொண்ட பைல்களை இணைக் காமல் பயன்படுத்துவதாக இருந்தால் மட்டு மே பயன்படுத்தலாம். எக்ஸ்பி சிஸ்டத்தில் வைரஸ் தாக்கும் அபாய வழிகள் உருவானால், ஏப்ரல் 2014க்குப் பின்னர் எந்த உதவியும் கிடைக்காது. ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பிக்கென வெளியிட்ட எஸ்.பி. பேக் 3 வைத்துள்ள சிஸ்டங்களுக்கு மட்டுமே பேட்ச் அப் பைல்களை மைக் ரோசாப்ட் உருவாக்கித் தந்து வருகிறது. எனவே எக்ஸ்பி கைவிடப்படுவது நிச்சயம். மேலே கூறியபடி நெட்வொர்க் மற்றும் பைல் காப்பி இல்லாமல் பயன்படுத்த மட்டுமே முடியும்.
கேள்வி: கீ போர்டில் டைப் செய்கையில், கேப்ஸ் லாக் கீயினை என்னை அறியாமல் அழுத்தி விடுகிறேன். இதனால் அடிக்கடி, டைப் செய்ததனை அழித்து, கீயை மீண்டும் சரி செய்து டைப் செய்திட வேண்டியுள்ளது. இந்த கீயை அழுத்தினால், மானிட்டரில் நிறம் மாறும் வகையில், அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிகப்பு வண்ணம் காட்டும் வகையில் அமைக்க முடியுமா? இதற்கான தனி புரோகிராம் ஏதேனும் உள்ளதா?
- சி.கே. கற்பகம், தேவகோட்டை
பதில்: கேப்ஸ் லாக் கீயினை மானிட்டரின் பின்னணி நிறத்துடன் இணைக்கும் வகை யில் எந்த புரோகிராமும் இல்லை. இதற்கென பிறர் முயற்சித்து வழங்கும் தனி புரோகிராமும் இல்லை. ஆனால், பலரும் இதற்கான நினைவூட்டுவதை ஆடியோவாகவே விரும்புகிறார்கள். விண்டோஸ் தொடக்கம் முதலே, கேப்ஸ் லாக் கீ மட்டுமின்றி, மற்ற டாகிள் கீகள் அழுத்துகையில் பீப் ஒலி ஒன்று ஒலிக்குமாறு சிறிய வசதியைத் தந்துள்ளது. எனவே நீங்களும் அதனையே அமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகளைக் கீழே தருகிறேன்.
1. கண்ட்ரோல் பேனல் செல்லவும்.
2. இதில் Accessibility Options என்ற ஆப்லெட் ஐகானில் கிளிக் செய்து அதனைத் தேர்வு செய்திடவும். இப்போது Accessibility Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் கீ போர்டு டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. இதில் இறுதியாக Toggle Keys என்ற தலைப்பின் கீழ் செக் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
5. இங்கு சில விண்டோஸ் பதிப்புகளில் Turn Off Accessibility Features After Idle எனக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் டிக் அடையாளம் இல்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செயல்பாடு இயக்கப்பட்டவுடன் Caps Lock, Num Lock, மற்றும் Scroll Lock ஆகிய கீகள் அழுத்தப்படும் போது பீப் என ஒலி கிடைக்கும். இதனைக் கொண்டு நாம் இந்த கீ அழுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து திருத்திக் கொள்ளலாம்.
கேள்வி: மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று கம்ப்யூட்டர் ப்ராசசர் வேகத்தைக் கூறுகிறோம். மானிட்டர் குறித்தும் பேசுகிறோம். இந்த அலகு எதனைக் குறிக்கிறது? இதற்கான விளக்கத்தினைத் தரவும்?
-தி. உத்தம் குமார், கோவை.
பதில்: ஹெர்ட்ஸ் (Hertz) என்ற அளவையே சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக 85 ஏத் என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mega Hertz (MHz): ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாக வோ அல்லது வேறு வழியாகவோ விளக்கு வது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பது தான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப்படுகிறது.
முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். ஆனால் இப்போது இந்த வேகம் எங்கோ சென்று விட்டது.
கேள்வி: வேர்ட் ஆவணங்களில் இன்டென்ட் அமைப்பதில் பலவகையான இன்டென்ட்கள் குறித்து படிக்கிறோம். பாரா, ஹேங்கிங் மற்றும் சில குறித்து டேட்டா தரவும்.
-என். கிருஷ்ணராஜ், புதுச்சேரி.
பதில்: இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.
Ctrl + M: கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத் தடுத்து கொடுக்கவும்.
Ctrl + Shift + M: கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடை வெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.
Ctrl + T: இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.
Ctrl + Shift + T: ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும். கீ போர்டு மூல மாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக இருக்கிறதா என சோதனை செய்து கூறவும்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » தெரிந்து கொள்ளுங்கள்
» தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » ஸ்பெஷல் தகவல்கள்
» 8-9-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
» 15-9-2014 -தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
» 29-12-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
» தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07) » ஸ்பெஷல் தகவல்கள்
» 8-9-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
» 15-9-2014 -தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
» 29-12-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|