புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:36 pm

First topic message reminder :

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 TN_120430134507000000

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.

நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.

பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.

தெரிந்து கொள்வோம் குருவை!

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -ராஜகிரகம்
வழிபாட்டுபலன் -நல்லபிள்ளைகள், புத்திசாலித்தனம், கவுரவம்

குரு ஸ்லோகம்

குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

வியாழநோக்கம் வந்தாச்சா: குரு இருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் இடங்களுக்கே பலம் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பூர்ணசுபகிரகம் ஆவார். இவருக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. ரிஷபத்தில் இருந்து 5,7,9 பார்வைகளால் கன்னி, விருச்சிகம்,மகர ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினர் ஓராண்டுகாலத்திற்கு குருவின் பார்வையால் அனுகூலம் பெறுவர். இதை அடிப்படையாகக் கொண்டே ஜாதகம் பார்க்கும்போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று கேட்கும் வழக்கம் ஏற்பட்டது. ராசி, லக்னத்தை குரு பார்க்கும் போது தான் ஒருவருக்கு வாழ்வில் திருமணயோகம் உண்டாகும். திருமணம் மட்டுமின்றி, குழந்தைப்பேறு, நல்ல குடும்பம், செல்வம், பொன்பொருள்சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களை குருபகவானே தருகிறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 10:18 pm

krishnaamma wrote:
நான் மீனம் எனக்கும் அதே மதிப்பெண்கள் தான் புன்னகை நிங்களும் மீனமா பாலாஜி ?

நானும் மீனம்தான் ஜாலி ஜாலி ஜாலி , அப்படியே மந்திரகளையும் சொல்லி நீங்க வேண்டும் போது எனக்காக கொஞ்சம் வேண்டிங்கா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 10:18 pm

குரு உச்சத்தில இருக்காருன்னா நானு டெரஸ்ல இருக்க
குடித்தனக் காரருன்னு நெனச்சுப்பேன் - நமக்கு அவ்ளோதான் தெரியும்ப்பா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 10:19 pm

வை.பாலாஜி wrote:
ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது
நீங்க தேர்வில்கூட இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில்லையே தல சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 10:21 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது
நீங்க தேர்வில்கூட இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில்லையே தல சிரி

இதிலையும் 60க்கு மேல் வரலையே என்பதுதான் எனது வருத்தமும் ... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:26 pm

மகா பிரபு wrote:
திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.
சூப்பருங்க

ஒ... அப்படியா சங்கதி? புன்னகை "Q" வில் இருக்கேளா? வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:26 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
நான் மீனம் எனக்கும் அதே மதிப்பெண்கள் தான் புன்னகை நிங்களும் மீனமா பாலாஜி ?

நானும் மீனம்தான் ஜாலி ஜாலி ஜாலி , அப்படியே மந்திரகளையும் சொல்லி நீங்க வேண்டும் போது எனக்காக கொஞ்சம் வேண்டிங்கா ..

நிச்சயமாக பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 30, 2012 2:11 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Guru-peyarchi-2012-2013

மேஷம்:

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Mu_Mesham-1
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு , சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
`கோடி நன்மைகள் தேடி வரும்!'

தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு தக்க விதத்தில் வாழ்க்கை நடத்தும் மேஷ ராசி நேயர்களே!
எந்த காரியத்தையும் சீக்கிரத்திலேயே நீங்கள் செய்து முடிப்பீர்கள், அதன் முடிவைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். ஆன்ம பலம் உங்களுக்கு அதிகம் உண்டு. அதனால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லி பிடிவாதம் செய்யும் குணமும் பெற்றிருப்பீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், மற்றவர்கள் உங்களை நாடிவந்து, `நீங்கள் தான் இதை முடித்துக் கொடுக்க வேண்டும்' என்று சொன்னால், அடுத்த கணம் புயலாகப் புறப்பட்டு செயலாற்றி முடித்த செய்தியோடு வந்து சேர்வீர்கள்.

ராஜ கிரகத்தின் உச்சத்திற்கு இடம் கொடுக்கும் ராசி உங்கள் ராசி என்பதால், அரசியல்வாதிகளின் அரவணைப்பும், அரியணை ஏறும் யோகங்களும் கூட உங்களுக்கு அமையும்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 17-5-2012 முதல் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாக்கு வளம் ஏற்படுமா? வசதிகள் பெருகுமா? தனவரவு தாராளமாக வந்து சேருமா? குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் குழப்பமின்றி நிறைவேறுமா? என்பதைப் பற்றியெல்லாம் உங்கள் சிந்தனை ஓட்டம் இருக்கும்.
குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும், பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். குரு உங்கள் ராசியை பொறுத்த வரை 9, 12 க்கு அதிபதியாக விளங்குவதால் அதன் காரகத் தொடக்கத்திற்கு ஏற்ற விதத்தில் தான் பலன்களை வழங்குவார்.

கோச்சாரம் எப்படியிருந்தாலும், உங்களுக்கு கணிக்கப்பட்டிருக்கும் சுய ஜாதகமும், அதற்கு ஏற்றவிதத்தில் தசா புத்திகளை நடத்த வேண்டும். அப்போது தான் ஒருமித்த பலன் உங்களை தேடி வந்து சேரும். வங்கியில் பணம் இருந்தும், அதனை எடுத்து அனுபவிக்கும் விதத்தில் உடல் நலம் இல்லாவிட்டால் பலன் கிடைக்காது அல்லவா? அதைப்போல ஒரு காரியத்தை செயல்படுத்த கோச்சாரமும், சுய ஜாதகமும் சேர்ந்து ஒத்துழைப்பு செய்ய வேண்டும்.
உங்கள் ராசியை விட்டு 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் குருவை வரவேற்க, முன்னதாகவே சிறப்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே ஞாயிறும், அவிட்ட நட்சத்திரமும் கூடும் நன்நாளில் நடைபெறும் ஹோமங்களில் நீங்கள் கலந்து கொண்டு குரு வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும், அது போன்ற நாள், நட்சத்திரங்கள் இணையும் பொழுது குருப்பீரித்தி செய்து கொள்வதன் மூலமும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும், எல்லையில்லாத நன்மைகளும் வந்து சேரும்.

கவலைகள் தீர வேண்டும் என்றால் கவசங்களைப் பாடி வழிபாடு செய்ய வேண்டும். எனவே `வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே' என்ற கவசத்தை சன்னதியில் பாடி முல்லைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் வஸ்திரம் சாற்றி சுண்டலை நைவேத்யம் செய்து கொடுத்து, பெயர்ச்சியாவதற்கு முன்னரே நீங்கள் வழிபாடு செய்தால் வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும், வசதி அதிகரிக்கும்.

பொதுவாக 2-ம் இடத்திற்கு வரும் குரு திரண்ட செல்வத்தை வழங்கும் என்பார்கள். எனவே நீங்கள் பண மழையில் நனையப் போகிறீர்கள்.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை

பொதுவாக 2-ம் இடத்திற்கு வரும் குரு வறண்ட காலத்தை வசந்த காலமாக மாற்றும். பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டு பதவிகளையும் கிடைக்க வைக்கும். மறந்து செயல் பட முடியாத காரியங்களை எல்லாம், மறுபரிசீலனை செய்து, செயல்படுத்துவீர்கள்.
`இரண்டில் குரு வந்தால்
இல்லத்தில் மகிழ்ச்சி வரும்!
திரண்ட செல்வத்துடன்
தேனான வாழ்வமையும்!
உறவினர்கள் பகை மாறி
உற்சாகம் குடி கொள்ளும்!
குருவின் வழிபாட்டால்
குதூகலமாய் வாழ்ந்திடலாம்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அடிப்படையில் 2-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் போது இனிய பலன்களே உங்களுக்கு நடைபெறும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கும் குருவின் அருள்தான் தேவை. அந்த அடிப்படையில் பார்க்கும் போது அதிக பலன் கிடைக்கும். இருந்தாலும் அது இருக்கும் இடத்திற்கும், அதில் பாதி அளவாவது பலன் கிடைக்க வேண்டும். எனவே குருவை வழிபட்டு அதன்மூலம் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் 2-ம்மிடம் வலுப்பெறும் போது, வாக்குவாதம் செய்தவர்கள் சரணடைவர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் உங்களுக்கு பொருளாதார நிலை மேலோங்கும். அதை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து உதவி செய்வீர்கள்.
இப்படிப்பட்ட ஆதியபத்தியங்களுக்கு அதிபதியான குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவாகிறது. விதியை மாற்றுகிற ஆற்றல் வியாழனின் பார்வைக்கு உண்டு. அதன்படி எதிர்ப்பு, வியாதி, கடன், வழக்கு, உடல்நிலை, இடமாற்றம், தொழில்மாற்றம் போன்ற அனைத்திலும் மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றங்களைக் கொடுக்கப் போகிறார்.
கடன் சுமை குறையும், கவலைகள் மாறும், கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த தொல்லைகள் இனி அகலும். உற்றார் உறவினர்கள் உங்களது முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள். இந்த நேரத்தில் பொன்-பொருள் வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறி உங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
குருவின் பார்வை பலத்தால் செய்யும் செயல் ஸ்தானம் புனிதமடைவதால் செயல்களில் வெற்றி கிட்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எல்லையில்லாத அளவிற்கு வருமானம் உயரும். புதிய தொழில்கள் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டும் என்று நீங்கள் கண்ட கனவு கண்டிப்பாக நிறைவேறும்.
அப்படிப்பட்ட குரு இந்த முறை பெயர்ச்சியாகும் போது பகைக் கிரகமான சுக்ரன் வீட்டில் சஞ்சரிப்பதாலும் கேதுவுடன் கூடியிருக்கப் போவதாலும் சர்ப்ப சாந்தியை முறையாக யோகபலம் பெற்ற நாளில் உங்கள் ஜாதகத்திற்கு பொருத்தமான அனுகூல ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து செய்யும் பரிகாரங்கள் மூலமாகவே பலன்களை நற்பலன்களாகவே அதிகம் பெற முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பும், நாணய பாதிப்பில்லாத வாழ்க்கையையும், நடக்கும் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடையவும், தேர்ந்தெடுத்த இறைவழிபாடுகளே கை கொடுக்கும். சுக்ரன், ராகு, கேது திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

வாட்டத்தை போக்குமா வக்ர குரு

ரிஷப ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 12-10-2012 முதல் 6-2-2013 வரை வக்ர கதியில் இயங்குகிறார். உங்கள் ராசியை பொருத்தவரை குரு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். இதன் வக்ர இயக்க காலத்தில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறியே வந்து சேரும்.
விரயாதிபதி வக்ரம் பெறுவதால் தேவைப்படும் போது எல்லாம் பணம் வந்து கொண்டே இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். தங்கம், வெள்ளி மட்டுமல்லாமல் மின்சாதன பொருட்களான, கணிப்பொறி, மிக்சி, கிரைண்டர், டி.வி. போன்ற தொகை கூடுதலாக கொடுத்து வாங்கும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
9-ம் இடத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் தந்தை, பங்காளிகள் வகையில் கிடைக்கும் நன்மைகள் குறைவாகவே இருக்கும். அன்பு காட்டுவதை அதிகம் காட்டினால் தான், இன்பங்களை மட்டுமே எதிர் கொள்ள இயலும். அருகில் இருப்பவரை அனுசரிப்பதன் மூலமே ஆதரவு கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக இட மாற்றம் வரும் பொழுது யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால் வக்ர இயக்கம் முடிந்த பின்பு மீண்டும் பழைய இடத்திற்கே வரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு...

இந்த குரு பெயர்ச்சி உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் செயல்பட வைக்கப் போகிறது. உள்ளத்தில் நினைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் தெள்ளத்தெளிவாக தெரிந்து கொண்டு அவை நிறைவேற குடும்ப பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பணி நியமனம் செய்து பலநாட்கள் ஆகியும், ஊதிய உயர்வு கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பணவரவை கூட்டப் போகிறது. வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க தூரத்து உறவினர்களும், சிநேகிதிகளும் பக்கபலமாக இருப்பர். குழந்தைகளின் கல்யாண கனவுகள் நனவாகும். வீடு கட்டும் வாய்ப்பு கூடிய விரைவில் நிறைவேறும். குலதெய்வ வழிபாடும், குறிப்பிட்ட நாளில் சர்ப்ப சாந்தியும் செய்வது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு

2-ம் இடத்து குருவால் இனிய பலன்கள் வந்து சேர முல்லைப்பூ மாலை அணிவித்து வாரந்தோறும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வாருங்கள். அதன் அருகில் உள்ள திருப்புன்கூர் நந்தியையும் வழிபட்டு நல்ல திருப்பங்களை காணுங்கள்.

-தினத்தந்தி

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 30, 2012 2:16 pm

ரிஷபம்

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 10224d1320837565t-2012-rishabam2

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீர்ஷம்1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ, உள்ளவர்களுக்கும்)

குடும்ப சுமைகள் கூடும்
சுக போகங்களை வழங்கும் சுக்ரனுக்குரிய வீட்டை ராசியாக கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

உங்களின் கவர்ச்சியான தோற்றமும், கனிவான பேச்சும் காரிய வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. உங்களை சார்ந்தவர்களுக்கு, பிரச்சினை என்று வந்து விட்டால் அதை உங்களுக்கு வந்த பிரச்சினை போல் நினைத்துக் கொண்டு, உடனடியாக தீர்க்க முன் வருவீர்கள்.

சந்திரன் உச்சம் பெறும் ராசி உங்கள் ராசி. `மதி' உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். சமூகத்தில் துதிக்கப்படுபவர்களில் ஒருவராக இருப்பீர்கள். தூது சென்று ஒரு காரியத்தை முடிக்க சொன்னால் அதை பாதகமின்றி முடித்து கொடுப்பீர்கள்.

வாழ்க்கையில் இன்பமும்-துன்பமும், ஏற்றமும்-இறக்கமும், உறவும்-பகையும், எழுச்சியும்-வீழ்ச்சியும் கலந்தே வந்து கொண்டிருக்கும். உங்களுக்கு இந்த நந்தன வருட யோகம் செயல்பட வேண்டுமானால் நிகழ்காலத்தில் நடைபெறும் தெசாபுத்திக்கேற்ப தெய்வங்களை தேர்ந்தெடுத்து, தக்க பரிகாரங்களை தடையின்றி செய்தால் அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட அதிக பலன் கிடைக்கும்.

இத்தனை மகத்துவம் வாய்ந்த உங்கள் ராசிக்கு இதுவரை 12 ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 17-5-2012 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். குரு, உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரனுக்கு பகைவன். எனவே குரு நமக்கு எதிரி என்று நீங்கள் நினைக்கலாம். எதிரி இல்லம் தேடி வருகிறாரே; என்ன செய்யப்போகிறாரோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம். எதிரியாக இருந்தாலும், எதிரில் வரும் பொழுது கும்பிட்டால், உதிரியாக ஆக்காமல் ஒன்று சேர்ந்து வாழ வழி வகுப்பார்.

அந்த குருவை முறையாக கும்பிட்டு சன்னதியில் கவசம் பாடி கை தொழுவதோடு, அவிட்டம் நட்சத்திரம் வரும் நாட்களில் குரு ப்ரீதி செய்வதன் மூலமும், அன்றைய தினம் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொண்டு குருவின் அருளுக்கு பாத்திரமாவதன் மூலமும் வாழ்க்கை பாதையில் வளர்ச்சி மீது வளர்ச்சி வந்து கொண்டே இருக்கும்.

ஜென்ம குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 8, 11 க்கு அதிபதியாக குரு விளங்குகிறார். அப்படிப்பட்ட குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, அதுவும் கேதுவுடன் கூடுவதால் விபரீத ராஜயோகத்தை செயல்படுத்தப்போகிறார். சுய பலமற்ற கிரகமான கேதுவும், சுக்ரனுக்குரிய பலன்களையே அள்ளிக் கொடுக்கப்போவதால் சர்ப்ப சாந்தியையும், ராகு-கேது பிரீதியையும் தகுந்த நாட்களில் செய்ய வேண்டியது அவசியமாகும்.

`ஜென்மத்தில் குரு வந்தால்
செலவுகளே அதிகரிக்கும்!
பொன்-பொருள்கள் வாங்குவதும்
பூமிகளின் சேர்க்கைகளும்
மண்பதையில் மேற்கொண்டால்
மனம் இனிக்கும் வாழ்வமையும்!
வந்திணைந்த குருவை
வழிபட்டால் வளர்ச்சி தரும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

உங்கள் ராசிக்கு 8, 11 க்கு அதிபதியான குரு 12-ல் சஞ்சரிக்கும் பொழுது, வெற்றிக்கனியை நீங்கள் எட்டிப்பிடிப்பதற்கு இடைïறாக இருந்தவர்கள் இனி விலகுவர். குடும்ப சுமை கூடும். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டா விட்டால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள். ஒரு சில நூதன நோய்கள் தோன்றலாம்.

மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம்.

குருபார்க்க கோடி நன்மை!

பொதுவாக ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்க போகிறார். அதன் பார்வை பலத்தால் பக்க பலமாக இருப்பவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள்.

அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் பெரிதும் வெற்றி பெறும். வி.ஐ.பி.க்களின் நட்பால் விரும்பிய காரியங்களை, விரும்பியபடியே செய்து முடிக்கும் வாய்ப்பு உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். வாரிசுகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவை நடைபெறும்.

வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுதல், விவசாய பணியில் ஆர்வம் செலுத்துதல் போன்றவை அனுகூலம் தரும். இல்லறத்தில் இருந்த விரிசல்கள் மறையும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். புதிய இடத்தில் பூமி பூஜை போட முயற்சிப்பீர்கள். பெரியப்பா, சித்தப்பா, பங்காளிப் பகைகள் மாறும். எந்த விதத்திலும் எதிர்ப்புகள் உங்களுக்கு ஏற்படாத வண்ணம் சிந்தனை அனைத்தையும் குருவின் மீது செலுத்துங்கள். சிறப்பு ஸ்தலங்களை தேடிச்சென்று வழிபாடு செய்வதுடன் பவுர்ணமியன்று கிரிவலம் வருதல் நற்பலன்களை கொடுக்கும்.

ஜென்ம குரு சிரமங்களை கொடுக் காமல் சிறப்புகளை கொடுக்கவும், கரங்குளிர பொருள் குவிக்கவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவும் வழிபாடுகளை முறையாக மேற்கொள்வது நல்லது. குறிப்பாக ராகு-கேதுக்களின் திசை, புத்தி நடப்பவர்கள், குருதிசை, புத்தி நடப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ஜென்மகுருவின் ஆதிக்கம்
ஜென்ம ராமர் வனத்திலே,
சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே

துரியோதனன் படை மாண்டதும், என்று ஒரு பழம் பாடல் எடுத்துரைக்கிறது. இதை நினைத்து ஜென்மத்தில் குரு வரும்பொழுது பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

நல்ல எண்ணத்தோடும், பிறருக்கு தீங்கு நினைக்காமலும் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்தும், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களுக்கு கிரகங்களால் எந்த தீமையும் வராது.

அதே நேரத்தில் எந்த கிரகம் நமக்கு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லையோ, அந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதமிருப்பதும், அந்த கிரகத்திற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும் சிறப்பான பலனை தரும்.

அது மட்டுமல்ல; அன்ன தானங்களின் மூலமும் அற்புத பலன்களை பெற முடியும். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது வியாழ பகவானின் அருள்பெற குரு ப்ரீதி செய்யும் இடங்களில் குருவிற்குரிய ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் அன்ன தான வைபவங்களை முன்னின்று நடத்தலாம். அல்லது அன்ன தான கைங்கரியங்களில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். பசி தீர்ந்த மக்களின் வாழ்த்துகள் உங்கள் வாழ்க்கை பாதையை வசந்தமாக மாற்றும்.

வாட்டத்தை போக்குமா வக்ர குரு

ரிஷப ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 12.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ர கதியில் இயங்குகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 8, 11 க்கு அதிபதியாக குரு விளங்குவதால் வக்ர காலத்தில் சில நல்ல பலன்களையும் வாரி வழங்குவார்.

அஷ்டமாதிபதி வக்ரம் பெறும் பொழுது `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க வைப்பார். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்ய முன்வருவர். கட்டளைக்கு அடிபணியும் ஆட்களில் சிலரை மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீடு கட்ட, வேறு முக்கிய நிகழ்வுகளுக்காக கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். வளமோடு வாழ்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். அவற்றை வாங்கி சுப விரயமாக்க செய்த ஏற்பாடுகள் பலன் தரும்.

அதே நேரத்தில் பதினொன்றுக்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் வக்ர இயக்கத்தில் ஒரு சில இடைïறுகளும் வரலாம். அலைச்சல்கள் கூடும், கடல் பயண வாய்ப்புகள் கை நழுவிப்போகலாம். அன்னிய தேசத்தில் இருந்து ஆர்டர் மூலம் தொழில் செய்ய ஏற்பாடு செய்தவர்கள் கிடைத்த ஆர்டரை செயல்படுத்த முடியாமல் போகலாம். பொதுவாக இளைய சகோதரத்தோடும், இணைந்திருக்கும் மாற்றினத்தவரோடும் அனுசரித்து செல்வது நல்லது.

வாகன பழுது செலவுகள் அதிகரிக்கும். பழைய வாகனங்கள் பலமுறை செலவு வைக்கிறதே என்று சொல்லி, அதை விற்றுவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். இது போன்ற கிரகங்களின் வக்ர இயக்க காலங்களில் சுப விரயங்களை மேற்கொண்டால், வீண் விரயங்களிலிருந்து விடுபடலாம். புதிய வாகன சேர்க்கை அனுகூலம் தரும்.

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு...

இந்த குரு பெயர்ச்சி, பயணங்களை அதிகரிக்க செய்யலாம். பண வரவு எவ்வளவு வந்தாலும், வந்த மறு நிமிடமே செலவாகலாம். இனம்புரியாத கவலை, உள்ளத்தில் இடம்பிடிக்கும். மனக்குழப்பங்கள் அகல எதையும் ஒருமுறைக்கு பலமுறை மறுபரிசீலனை செய்வது நல்லது. குருவின் பார்வை பலத்தால் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில், கலைத்துறையில், விளையாட்டு துறைகளில் முதன்மையாக வந்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவர்.

கல்யாண வாய்ப்புக்காக காத்திருக்கும் ரிஷப ராசி பெண்களுக்கு திடீர் யோகம் வந்து சேரும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்போடு ஒரு தொழில் செய்யவும் முன்வருவீர்கள்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஜென்ம குருவால் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும் செல்வ நிலை திருப்தியளிக்கவும், வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு, வெள்ளிதோறும் அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். சிறப்பு வழிபாடாக, யோக பலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் இசைபாடும் கற்றூண்களுக்கு நடுவில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, இனிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

-தினத்தந்தி..

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 5:02 pm

அப்படின காலையில் கிருஷ்ணம்மா பதிவிட்டது வேற ,இது வேறயா ??? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
Neerajah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

PostNeerajah Fri Nov 30, 2012 5:18 pm

தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் இல்லையா அச்சலா அக்கா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக