புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:36 pm

First topic message reminder :

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 TN_120430134507000000

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.

நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.

பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.

தெரிந்து கொள்வோம் குருவை!

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -ராஜகிரகம்
வழிபாட்டுபலன் -நல்லபிள்ளைகள், புத்திசாலித்தனம், கவுரவம்

குரு ஸ்லோகம்

குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

வியாழநோக்கம் வந்தாச்சா: குரு இருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் இடங்களுக்கே பலம் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பூர்ணசுபகிரகம் ஆவார். இவருக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. ரிஷபத்தில் இருந்து 5,7,9 பார்வைகளால் கன்னி, விருச்சிகம்,மகர ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினர் ஓராண்டுகாலத்திற்கு குருவின் பார்வையால் அனுகூலம் பெறுவர். இதை அடிப்படையாகக் கொண்டே ஜாதகம் பார்க்கும்போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று கேட்கும் வழக்கம் ஏற்பட்டது. ராசி, லக்னத்தை குரு பார்க்கும் போது தான் ஒருவருக்கு வாழ்வில் திருமணயோகம் உண்டாகும். திருமணம் மட்டுமின்றி, குழந்தைப்பேறு, நல்ல குடும்பம், செல்வம், பொன்பொருள்சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களை குருபகவானே தருகிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:52 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 TN_120430152506000000

அற்புதம் நிகழ்த்துவார் ஐந்தாமிட குரு 80/100

சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து செயல்படும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் மன ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வளர்ச்சியும் மனதிற்கு நெகிழ்ச்சியும் கிடைக்கும். கல்வி, நிதி நிறுவனம், பால்பண்ணை, ரியல் எஸ்டேட், அரிசி ஆலை, டிராவல்ஸ், , லாட்ஜ், மருத்துவமனை நடத்துபவர்கள், ஆட்டோமொபைல், கிரானைட், அச்சகம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், மினரல் வாட்டர், மின்சார, மின்னணு பொருட்கள் தயாரிப்போர் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அதிகம் பெறுவர். மற்ற தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், சமையலறை சாதனங்கள், பால்பொருட்கள், வாசனை திரவியம், மீன்கள், தோல் பொருட்கள், ஸ்டேஷன, பூஜை பொருள் வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும். லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணி இலக்குகளை எளிதாக நிறைவேற்றுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் முக்கியத் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்வீர்கள். வருமானம், பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள். கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். பணி இலக்கு சிறப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்த்த சலுகைகள் சுணக்கமின்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து ஒற்றுமை குணத்துடன் செயல்படுவர். குடும்பத்தின் முக்கிய தேவை தாராள செலவில் நிறைவேறும். மங்கல நிகழ்வுகளும் உண்டு. ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், தொழில்நுட்பம், பியூட்டீஷியன், ஆசிரியர் பயிற்சி, வணிகம், கலைத்துறை, கேட்டரிங், ஆடிட்டிங், இதழியல் துறை மாணவர்கள் படிப்பில் கவனம், ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படித்து பரிசு, பாராட்டு பெறுவர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: சிறிய அளவில் செய்கிற பணியும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையும் பிரமிப்பையும் உருவாக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைத்து புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது. புத்திரர்கள் சொல்லும் யோசனை உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் தாராள உற்பத்தி, விற்பனை அமைந்து உபரி பணவரவு பெறுவர்.

விவசாயிகள்: விவசாய பணிகள் சிறந்து நல்ல மகசூல் தரும். பயிர்களுக்கு எதிர்பார்ப்பைவிட கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. நில விவகாரங்களில் சாதகமான தீர்வு ஏற்படும்.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் வாழ்வில் சகலவளமும் ஏற்படும்.

செல்ல வேண்டிய தலம்: சென்னை அஷ்டலட்சுமி கோயில்

பரிகாரப்பாடல்: உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே!
உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே!
உன் பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு சம அந்தஸ்து உள்ள கிரகமான குரு, சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் வக்ரகதி பெறுகிறார். இதனால் நடை, உடை பாவனையில் வசீகர மாற்றம் ஏற்படும். வெகுநாள் திட்டமிட்ட செயல்களை உரிய வகையில் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரித்து குடும்பத்தின் முக்கிய தேவை பெருமளவில் நிறைவேறும். சமூகத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் முன்னேற தேவையான உதவி வழங்குவீர்கள். எதிரியின் கெடுசெயலை மன்னித்து சமரச போக்கை பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. பணியில் உள்ளவர்கள் கூடுதல் அந்தஸ்து பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:54 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 TN_120430153033000000

கனவு நிறைவேறும் வருமானம் தடுமாறும் 55/100

உறவினர், நண்பரை உபசரித்து மகிழும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடமான ரிஷபத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் நான்காம் இட அமர்வு (அர்த்தாஷ்டம குரு) வாழ்வில் சில சிரம பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள், பத்தாம் இடமான தொழில், பன்னிரெண்டாம் இடமான விரயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், இரும்பு, டிராவல்ஸ் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மினரல் வாட்டர், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு பொருள் உற்பத்தி செய்வோர் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும். புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், விவசாயக் கருவிகள், இடுபொருட்கள், மருந்து, பூஜைப்பொருள், எண்ணெய், பேக்கரி பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை அறிந்து நிறைவேற்றுவர். அன்றாடப்பணி சிறந்து நன்மதிப்பை பெற்றுத்தரும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்பநலம் பாதுகாப்பதில் கவனத்துடன் செயல்படுவர். உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். குடும்பச்செலவிற்கு போதுமான பணம் இராது. சிக்கனம் பின்பற்றுவீர்கள். நகை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, மேனேஜ்மென்ட், கலை, வணிகம், அறிவியல் துறை மாணவர்கள் படிப்பில் சிறக்க ஆசிரியர்கள் தகுந்த உதவிபுரிவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் நன்றாகப் படிப்பர். படிப்புக்கான செலவில் சிக்கனம் நல்லது. படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.

அரசியல்வாதிகள்: அரசியல் பணி சிறக்க புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகள் உதவிகரமாக செயல்படுவர். பதவி பொறுப்பை தக்கவைத்துக்கொள்வதில் சிறு குறுக்கீடுகள் வந்து பின்னர் சரியாகும். எதிரிகளிடம் எந்த வகையிலும் பிடிகொடுக்காத வகையில் சிரமம் தவிர்க்கலாம். புத்திரர்கள் அரசியல்பணிக்கு உதவமாட்டார்கள்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் பணியாட்களை நியமித்து அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், தாராள மகசூல் கிடைத்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. நில விவகாரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால் சிரமம் தவிர்க்கலாம்.

பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

செல்ல வேண்டிய தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்.

பரிகாரப்பாடல்: ஆடியபாதம் மன்றாடிய பாதம்
ஆடியபாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு பகை கிரகமான சந்திரனின் சாரத்தில், குரு வக்ரகதி பெறுகிறார். உங்களைச் சார்ந்தவர்களின் தகுதி, குணம் அறிந்து பழக வேண்டிய நேரம் இது. குடும்பத் தேவைகளை நிறைவேற்ற சேமிப்பு பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் செயல் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். இதனால் விபத்து, துன்பம் வராமல் தவிர்க்கலாம். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை அளவுடன் கண்டிப்பது மட்டுமே நற்பலன் பெற உதவும். உடல்நிலை சிறிது பாதிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதக தீர்வு பெற தாமதம் ஏற்படும். தம்பதியர் குடும்ப நலன் சிறக்க தேவையான நற்குணங்களைப் பின்பற்றுவர். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள், தமக்குரிய பொறுப்பை திறம்பட நிறைவேற்றி நற்பெயர் பெறுவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:56 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 TN_120430153755000000

பொறுமையா இருங்க சாமி! 60/100

அன்பும் கருணையும் நிறைந்த மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அனுகூலக் குறைவாக, குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். போதாக்குறைக்கு அஷ்டமச் சனி காலம் வேறு. கடந்த வருடங்களில் குருவின் அமர்வினால் கிடைத்த பணவரவு கரைய ஆரம்பிக்கும். அதேநேரம், குடும்பச் செலவுகளுக்கு கைகொடுப்பதாக இருக்கும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 பார்வைகளால் முறையே ராசிக்கு ஏழாம் இடமான களத்திரம், நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்களிடம் நன்றாகப் பேசி பழகுபவர்களிடமிருந்து கூட விலகிப்போகிற எண்ணம் மேலிடும். பேச்சு, செயலில் இருந்த ஆர்வம் குறையும். தம்பி, தங்கைகள் சொல்லும் நல்ல ஆலோசனைகள் கூட உங்களுக்கு எதிர்மறையாக தோன்றும். இதனால், அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவர். புத்திரர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்புரிந்து படிப்பில் தேர்ச்சியும் கலைகளில் ஆர்வமும் வளர்ப்பர். பூர்வ புண்ணிய பலன் தாமதமாக வந்து உதவுகிற கிரகநிலை உள்ளது. பூர்வ சொத்திலும், பிற வருமானங்களும் குறையும். ஆடம்பரச் செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். இதனால் கடன்பட நேரிடும். எதிரிகள் உங்களை அவமானப்படுத்துகிற செயல்களைச் செய்வர். பொறுமை தேவை. உடல்நிலை பலவிதத்திலும் சிரமம் தரலாம். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். குடும்பப் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும். புதியவர்கள் அறிமுகமாகி நண்பராவர். வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டாலும் குருவின் அருள்பார்வையால் குடும்பத்தின் முக்கியத் தேவை நிறைவேறும். தொழில் சார்ந்த வகையில் குளறுபடி ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதால் மட்டுமே பணி வாய்ப்புக்களை தக்கவைக்க இயலும். வெகுநாட்களாக தாமதமான நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக வந்துசேரும். விலைமதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், லாட்ஜ், ஓட்டல், பால்பண்ணை, மாவுமில், அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், தோல், இரும்பு, காகிதம், மின்சார, மின்னணு சாதனங்கள், மினரல் வாட்டர் உற்பத்திசெய்யும் தொழிலதிபர்கள் தகுதியான பணியாளர் கிடைப்பதிலும் உற்பத்தி, தரத்தை உயர்த்துவதிலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பர். நண்பர்களின் உதவியால் நிலைமையை ஓரளவு சமாளிக்கலாம். கிடைக்கிற லாபம் போதுமென்ற நிலை இருக்கும்.புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு இது உகந்த காலம் அல்ல.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஸ்டேஷனரி, அழகுசாதனம், மீன், பால்பொருள், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு சாதனம், பேக்கரி, மருந்து வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திப்பர். மற்ற வியாபாரிகளுக்கு சுமாரான விற்பனை, அளவான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை அனுசரித்து பேச வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் குளறுபடிகளால் பணிகளை விரைந்து முடிப்பதில் தாமதமடைவர். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பதவி நீக்கம் போன்ற எதிர்மறை பலன்களைச் சந்திக்க நேரும். சக பணியாளர்கள் உதவுகிற மனப்பாங்குடன் நடந்துகொள்வர். வீடு, வாகனம், பணியிட வகையில் மாற்றம் இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றவதில் சில குளறுபடிகளைச் சந்திப்பர். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையால் மனதில் சஞ்சலம் ஏற்படும். கூடுதல் பயிற்சி பணித்தரத்தை உயர்த்தும். சலுகைகள் பெறுவதில் தாமதம் உண்டு. குடும்பப் பெண்கள் சுயகவுரவ சிந்தனை, செயல்பாடுகளால் உறவினர்களிடம் அதிருப்தி அடைவர். கணவரின் பாசம் ஆறுதல் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமிட்டால் போதும். கடும் உழைப்பினால் தான் தொழில் வியாபாரத்தை தக்கவைக்கலாம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, இதழியல், தொழில்நுட்பம், வணிகவியல், கலைத்துறை மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் குறைய வாய்ப்புண்டு. டிவியில் பொழுது போக்குவதை அறவே தவிர்க்கவும். ஆசிரியரின்அதிருப்திக்குஉள்ளாகும்சூழல் உள்ளது. கவனம். படிப்புக்கான பணவசதி பெறுவதில் தாமதம் இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு பிற துறை சார்ந்த பணி கிடைத்து திருப்தியின்றிஇருக்கும்.

அரசியல்வாதிகள்: கவனக்குறைவான செயல்களால் சிலரது அதிருப்தியை சந்திக்க நேரிடும். ஆதரவாளர்களின் நம்பிக்கை குறையும். பதவி, பொறுப்பில் இருந்து சிலர் விலக நேரலாம். எதிரிகளின் கெடுசெயல்களை சமாளிக்க நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். அரசியல்பணிக்கு புத்திரர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிக செலவு, தாமதம் ஆகிய நிலைமை இருக்கும். அளவான பயிர் மகசூல் அமைந்து அதற்கேற்ற பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு உண்டு. நிலம் தொடர்பான விவகாரங்களில் தீர்வுபெற இன்னும் சில காலம் தேவைப்படும்.

பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி ஏழுமலையான் கோயில்

பரிகாரப்பாடல்: செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். இதனால் பலகாலம் பாதுகாத்த முக்கிய பொருள்களை விற்க வேண்டியும், கடைப்பிடித்த சில கொள்கைகளை விட்டுக் கொடுக்கிற நிலையும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் சொல்கிற நல்ல ஆலோசனை கூட எதிராகத் தோன்றும். வீடு, வாகன வகையில் சுமாரான நிலையே இருக்கும். புத்திரர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சாதனை நிகழ்த்துவர். எதிரிகளின் தரம் குறைந்த பேச்சுக்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நலம் குறைவதால் மனதில் நம்பிக்கையும் குறையும். அதே நேரம் நண்பர்களின் ஆதரவு கிடைத்து தெம்பை உருவாக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பர். தொழில் வளம் சிறக்க கூடுதல் அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கணிசமான தொகை ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:57 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 2 TN_120430155413000000

குரு பெயர்ச்சியாகும் வேளையில் பிரசித்தி பெற்ற சில குரு தலங்கள் குறித்த தகவல்கள் தந்துள்ளோம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இத்தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.

சென்னை

திருவலிதாயம் குரு : சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். குரு பெயர்ச்சியை ஒட்டி இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். போன்: 04426 - 560 706.

சென்னை ரெட்ஹில்ஸ் பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில் கோவில் பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயிலில் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள ஆணைகட்டி ஆர்ஷ வித்யா ஆசிரமத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளார் மேதா தட்சிணாமூர்த்தி.

மதுரை: குருவித்துறை குரு : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுரகுருவான சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்கிராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்கிராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக்காணாத குருபகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
போன்: 99656 70975, 97902 95795.

காண்பதற்கரிய தெட்சிணாமூர்த்தி : வழக்கமாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான் தெட்சிணாமூர்த்தி காட்சி தருவார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோயிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். சிவனின் குரு வடிவமான தெட்சிணாமூர்த்தியிடம் ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர். இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் உள்ளனர். இத்தகைய அமைப்பில் தெட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், தெட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு. இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு அருகிலேயே ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் கோயிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோயிலும் உள்ளது. போன்: 97919 94805

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கு அருகில் மேதா தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதுதவிர எங்கெல்லாம் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளதோ அங்கிருக்கும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பது வழக்கம்.

மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மதுரை ஆரப்பாளையம் புட்டுசொக்கநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோகாசன தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி: சப்த குரு தரிசனம் : குருவைப் பற்றிய ஸ்ரீகாண்டேயா என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இக்கோயிலில், பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது. நவக்கிரக குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது. போன்: 0431- 259 1466.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.

திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலிலும் தட்சிணாமூர்த்தி வீணை ஏந்திய நிலையில் வீணா தட்சிணாமூர்த்தியாக இருக்கின்றார்.

திருவாரூர்: ஆலங்குடி ஞானகுரு : நவக்கிரக தலங்களில் குருவுக்குரியதாக போற்றப்படுவது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இது திருவாரூரிலிருந்து 30கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கு குரு பகவான் சிவபெருமானை வழிபட்டுள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, ஞானம் தரும் குருவாக அருள்பாலிக்கிறார். திருத்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது, அருகிலுள்ள வெட்டாற்றில் சிவன், வெள்ளப்பெருக்கு ஏற்படும்படி செய்தார். சுந்தரர் ஆற்றின் மறுகரையில் நின்றார். அங்கு வந்த ஓடக்காரர் ஒருவர், தான் அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாகச் சென்றார். பாதி வழியில் ஓடம் கவிழும் நிலையை உருவாக்கினார். கலங்கிய சுந்தரர் சிவனை வேண்டினார். அப்போது, அவருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரனாக வந்ததை உணர்த்தினார். பின், கோயிலுக்கு வந்த சுந்தரருக்கு சிவன், குருவாக இருந்து ஞானஉபதேசம் செய்தார். இதனால், இவருக்கு ஞான தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு விசேஷமாக நடக்கும். போன்: 0437 - 4269 407

மன்னார்குடி பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

தஞ்சாவூர்: மேற்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி : தெட்சிணாமூர்த்தி, சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோயிலில் இவரை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.

தஞ்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி அம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார்.

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோயிலிலும் காணமுடியாது.

தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்த ரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர் திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயிலில் இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

தஞ்சாவூர் மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 8:00 pm

கடலூர்: சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி : அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். உமாதேவியாருக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் தெட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் திருச்சோபுரம் சோபுரநாதர் கோயிலில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

மயிலாடுதுறை காவிரிக்கரை வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி. நந்திமீது அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர்.

நாகை திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.

சிவகங்கை : கிழக்கு நோக்கிய குரு : கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம். போன்: 98424 80769

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

தேனி: தேனி வேதபுரி தெட்சிணாமூர்த்தி கோயிலில் ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன.

தேனி உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயிலில், தெட்சிணாமூர்த்தி, கல்லால மரம், முயலகன், சீடர்கள், கைகளில் உடுக்கை, அக்னி என எதுவும் இல்லாமல் காட்சி தருகிறார். இடது காலை மடக்கி யோகப்பட்டை அணிந்து, சின்முத்திரை காட்டும் இவர், மேல் இரு கரங்களில் மலர் வைத்திருக்கிறார். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவரை வழிபட குருவின் நல்லாசி கிடைக்கும்.

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலதுகாலை தொங்கவிட்டு, இடதுகால் குத்துக்காலிட்ட நிலையில் கையில் கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார்.

திருவள்ளூர்: திருவொற்றியூர் தெட்சிணாமூர்த்தி : கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தெட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும். பரிகார ராசியினர் இவரது சன்னதியில் அதிகளவில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் கேசரி, பூந்தி போன்ற இனிப்பு பதார்த்தங்கள் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

காஞ்சிபுரம்: மூலஸ்தானத்தில் குரு : மகாவிஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக்கராயுதத்தை ததீசி என்ற முனிவர் மீது எய்து விட்டார். இதனால், அவரது சக்கரம் பலமிழந்தது. சக்கரம் வலிமை பெற சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து அருள் செய்தார். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில், 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் கோவிந்தவாடி என்று பெயர் பெற்றது. மூலஸ்தானத்தில் தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி இருக்கிறார். இவருக்குப் பின்புறம் கைலாசநாதர் லிங்கம் இருக்கிறது. ஒரே விமானத்தின் கீழ் சிவனும், தெட்சிணாமூர்த்தியுமாக அமைந்த கோயில் இது. இங்கு பஞ்சாசனத்தின் கீழ் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி நெற்றியில் கங்கை, பிறைச்சந்திரன் சூடி, நெற்றியில் மூன்றாம் கண்ணுடன் இருப்பது சிறப்பு. போன்: 044 - 2729 4200

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

வேலூர்: வேலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் கோயிலின் கொடிமரத்தில் தென்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து அருட்காட்சி தருகிறார்.

அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆலமரத்தின் கீழ் தன் துணைவியை மடியில் அமர்த்தியபடி தெற்கு பார்த்து காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலது கால் மடித்து, இடதுகால் தொங்கவிட்ட நிலையில் கால்மாறிய தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்திருபுவனம் புஷ்பவனநாதர் திருக்கோயிலில், வழக்கத்துக்கு மாறாக வலக்காலை மடித்து இடது தொடைமேல் வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்தில் அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி: நவகைலாய குரு கோயில் : தாமிரபரணி நதிக்கரையில் உரோமசர் வழிபட்ட ஒன்பது சிவாலயங்கள், நவகைலாய தலங்கள் எனப்படுகின்றன. இதில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழ பகவானுக்குரிய அதிபதியாக அருளுகிறார். தன்னைத் தரிசித்த உரோமசருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்ததால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலைஅணிவித்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதற்கு தட்சிண கங்கை என்று பெயர். நவகைலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, நடு கைலாயம் என்றும் பெயருண்டு. போன்: 98425 16789

பிரதான குரு தலம் : குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

குரு சிஷ்யன் : 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள மூன்று தட்சிணாமூர்த்திகளையும் வழிபடுவது சிறப்பு.

திண்டுக்கல்: மானூர் பெரியாவுடையார் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கரூர்: குளித்தலை புஷ்பவனேஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் சிம்மம் தாங்கும் குரு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

கிருஷ்ணகிரி: ஓசூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் உள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே இவர் சம்ஹார தெட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

நீலகிரி: ஊட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.

புதுக்கோட்டை: திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணாதர தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விருதுநகர்: சிவகாசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் அருள்பாலிக்கின்றனர்.

திருவண்ணாமலை: பனங்காட்டூர் தாளபுரீஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்தபடி வித்தியாசமாக காட்சி தருகிறார்.

சேலம்: சேலம் காயநிர்மாலேஸ்வரர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும்.

நவகிரக சன்னதிகள் பெரும்பாலும் சிவன் கோயில்களில் தான் இருக்கும். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் போன்ற மிக முக்கிய பெருமாள் தலங்களில் மட்டுமே நவகிரக சன்னதி இருக்கும். ஆனாலும் மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆதிநாத பெருமாள் போன்ற பெருமாள் தலங்கள் சிறந்த குரு ஸ்தலமாக விளங்குவது சிறப்பு.

புதுச்சேரி: காரைக்கால் யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

கேரளா: மூலவர் தட்சிணாமூர்த்தி : தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோயில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகம் இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில் தான் என தல புராணம் கூறுகிறது. தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் தெட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இருக்கிறது. இந்த தெட்சிணாமூர்த்தியே தமிழகத்தில் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா: அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார். கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.

கர்நாடகா: நஞ்ன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் உள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 10:09 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:11 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 10:13 pm

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை

ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 10:15 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை

ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது

நான் மீனம் எனக்கும் அதே மதிப்பெண்கள் தான் புன்னகை நிங்களும் மீனமா பாலாஜி ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 10:17 pm

திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக