Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
சென்னை, மே.8: தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து புதிதாக 9 வட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், கட்டுக்கோப்பான சமுதாய முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது, மக்களை நாடிச் சென்று உதவிக் கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த் துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிர்வாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக்கைகள் எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்படுகின்றன.
மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் வருவாய்த் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், தற்போதைய மக்கள் தொகையின் எண்ணிக்கை, மக்களின் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, வருவாய் வட்டங்களை சீரமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும்; திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்; பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும்; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில் ஒரு புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும்; ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்தியூரில் ஒரு புதிய வட்டமும்; நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும்; ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும்.
இது தவிர, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, காலவிரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நான்கு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும். இக்குழு இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும்.
இக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், அரசு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெறுவர்.
மேலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னர் உரிய நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பொருட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்பதையும், இந்த நிலையம் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நிலையமாகவும் செயல்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
எங்கள் மணப்பாறை வட்டம் மிக பெரியது. இதை பிரித்து துவரங்குறிச்சி என ஓன்று உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை நிலவியது. ஆனால் இது அறிவிப்பில் வரவில்லை..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|