ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்சத்தின் தோற்றம்

+5
யினியவன்
Manik
ராஜா
மகா பிரபு
ஆத்மசூரியன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by ஆத்மசூரியன் Mon May 07, 2012 3:04 pm

நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.


பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.


பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:

இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.

புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:

இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :

இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.


பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :

ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.

பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :

விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)

இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.

(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)










Last edited by ஆத்மசூரியன் on Mon May 07, 2012 9:01 pm; edited 1 time in total
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by மகா பிரபு Mon May 07, 2012 4:45 pm

சரி நண்பா. 2012 ல உலகம் அழியுமா அழியாதா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by ராஜா Mon May 07, 2012 5:32 pm

பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.

அடபோங்கப்பா , தூக்கம் தூக்கம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by Manik Mon May 07, 2012 7:40 pm

ஒன்னுமே புரியலையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by ஆத்மசூரியன் Tue May 08, 2012 12:35 am

ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.

அடபோங்கப்பா , தூக்கம் தூக்கம்
ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.

அடபோங்கப்பா , தூக்கம் தூக்கம்

இந்த கோட்பாடு நான் கூறியது அல்ல. இது ஹப்பில், ஐன்ஸ்டீன் முதலானவர்களால் கூறப்பட்டு ப்ரீட்மன், பென்சியாஸ், வில்சன் ஆகியவர்களால் நிருபிக்கப்பட்டது. மேலும் 1978 , 2006 , 2008 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட இயற்பியலுக்கான நோபெல் பரிசுகளும் இந்த கொள்கை தொடர்பானவையே. மேலும் தெரிந்து கொள்ள இங்கிலீஷ் விக்கிபீடியாவில் big bang தொடர்பான கட்டுரையை படிக்கவும். மேலும் Stewphen Hawking ன் A Brief History of Time மற்றும் பிரபஞ்ச தோற்றம் தொடர்பான அறிவியல் புத்தகங்களை படிக்கவும்.
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by ஆத்மசூரியன் Tue May 08, 2012 12:38 am

Manik wrote:ஒன்னுமே புரியலையே

அறிவியல் கட்டுரைகளை எழுதும் பொது அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டியது எழுதுபவர்களின் கடமை. புரியாதபடி எழுதியது என்னுடைய தவறே. நேரம் கிடைத்தால் இந்த கட்டுரையை எளிமையாக தர முயற்சிக்கிறேன்.
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by யினியவன் Tue May 08, 2012 12:51 am

எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.

அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.

பகிர்வுக்கு நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by ஆத்மசூரியன் Tue May 08, 2012 12:52 am

கொலவெறி wrote:எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.

அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.

பகிர்வுக்கு நன்றி.
நன்றி நண்பரே
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by tkaru Tue Sep 25, 2012 6:58 pm

பகிர்வுக்கு நன்றிகள் ..
tkaru
tkaru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 7:33 pm

மிகவும் நல்ல கட்டுரை ஆத்மசூரியன். the nebular hypothesis , the Super Nova போன்றவற்றிக்கு அழகிய படங்களும் கிடைக்கிறது. அவைகளையும் பதிந்தால், புரியாதவர்களுக்கும் கொஞ்சமாவது புரியலாம். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிரபஞ்சத்தின் தோற்றம்  Empty Re: பிரபஞ்சத்தின் தோற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum