புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
432 Posts - 48%
heezulia
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
29 Posts - 3%
prajai
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் பத்து -2 தொகுப்பு - கிரிகாசன்

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 24, 2012 2:33 pm

1 . விடியாத வாழ்வு வேண்டாம்

தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயாத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 5:04 pm

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை.

................................நாடு போற்றும் நல்ல வரிகள். மனித மனங்களைக் கூறுபோட்டு படிப்பினை கூறும் வழிகள். தங்களின் கவிதை சிறப்பு. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தங்களின் கவிதைகளைப் படிக்கும் போது.
தங்களின் கவிவளத்தில் சிலப்பதிகார செய்திகளை வடித்தால் சுவையாக இருக்கும்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 24, 2012 7:13 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை.

................................நாடு போற்றும் நல்ல வரிகள். மனித மனங்களைக் கூறுபோட்டு படிப்பினை கூறும் வழிகள். தங்களின் கவிதை சிறப்பு. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தங்களின் கவிதைகளைப் படிக்கும் போது.
தங்களின் கவிவளத்தில் சிலப்பதிகார செய்திகளை வடித்தால் சுவையாக இருக்கும்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
தங்கள் அன்புக்கு என்றும் தலை வணங்குகிறேன். மிக்க நன்றிகள் !
இதோ அந்த தமிழ் இனி.. வீடியோ பார்த்தபோது எழுந்த கவிதை!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 24, 2012 7:16 pm

நதியாக ஓடு

தமிழே நீ நதியாக ஓடு - இந்தத்
தரைமீது வழிமாறித் தொலையாம லோடு
எமதாசை மனம்மீதும் ஓடு - உனை
இசைபாடித் தொழுவோரின் இதயத்தில் ஓடு
அமர்ந்தே நில் ஆற்றுப்படுக்கை - இன்னும்
அகல்வாவி குளமென்று அலைகொண்டு ஆடு
நிமிர்ந்தோடு நேராக ஓடு - நீ
நெடுந்தூரம் நடந்தாலும் புவிகண்டு வாழு

நிமிர்ந்தாலும், புவிகொண்ட மொழிகள் - பல
நினையுண்டு தலைதூக்க நெருங்கு மப்போது
துமிதூறச் செல்வங்களோடு - நீ
தொலையாது பெரிதாகு மழைகொண்டதாகு
சுமந்தோம் உன் புகழ்தன்னை ஆண்டு - பல
சொல்லவும் முடியாத பெருந்துன்பங் கொண்டு
எமதன்பின் தமிழென்று கண்டோம் - இனி
எதிர்காலம் உண்டோவென் றோரச்சம் கொண்டோம்

அழிகின்ற மொழிநூறு உண்டு - இந்த
அகிலத்தில் தொலைகின்ற மொழியோடு சேர்ந்து
வழிகண்டு தமிழ்போகின் தீது - இது
வருங்காலம் நடைபெறக் குறி கொண்டதேது
செழிக்கின்ற மரம்வேண்டும் நீரும் - நீ
திரும்பும் உன் வழியெங்கும் தமிழ்பேச வேண்டும்
தெளிவோடு ஒளிதோன்ற வேண்டும் - இதில்
தேவையெனில் புதுப்பாதை நாம்காண வேண்டும்

மொழிஎன்ப துயிருக்கு நேராம் - இந்த
மூச்சில்லை யென்றிடில் முழுவாழ்வும் போமாம்
பொழிகின்ற மழை நின்றுபோனால் - கொண்ட
பசுமைக்கு புவிமீது இடமேது கூறு
எழில்கொண்ட தமிழ்வாழ வேண்டும் - இதற்
கெமதன்பு இதயத்தில் இடம் நல்கவேண்டும்
வழிஉண்டு வகை செய்ய வல்லோம் - இந்த
வையத்தில் தமிழ்என்ற பெருமையும் கொள்ளோம்

உருள்கின்ற கல்லென்ப குன்றின் - நிலை
யுயர்நின்று விழும்போது உடன் கையிலேந்து
வருகின்ற கல்வீழும் பாதை - அது
வரவர வேகமும் பெரிதாகும் கொள்ளு
பெரும் வீழ்ச்சி கொண்டோடி அருவி - நிலை
பிறழ்வுண்டு விழமுன்புதடையொன்று போடு
தருமின்பத் தமிழ்காத்து வெல்லு - இன்றேல்
தரைவீழும் அருவிக்குப் பெயராழி யென்று !!

********

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 24, 2012 8:40 pm

அழகான கவிதை,

பாயும் அருவியெனப் பாய்ந்த வார்த்தைகள் மிக்க நன்று...

தொடருங்கள்

சதாசிவம்
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 26, 2012 11:28 pm

சதாசிவம் wrote:அழகான கவிதை,

பாயும் அருவியெனப் பாய்ந்த வார்த்தைகள் மிக்க நன்று...

தொடருங்கள்
மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்!’

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 26, 2012 11:32 pm

இல்லாததென்றில்லை
(ஈழத்தில் இருப்பாரா இல்லையா என்னும் மாபெரும் கேள்வி)

இருக்குமோ இல்லையோ இருப்போர்தம்மில்
இருந்தது இதுவொன்றாய் இருந்தபோதும்
இருப்ப தில்லாமையே இருந்துபார்நீ
இருக்கின்ற தீதொன்றாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதா இல்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இருபாரென் றிரும்புவாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார் இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும் தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை இருத்தல்மெய்யாம்
இருந்துபார் என்றிட இருப்புக்கொள்ளா
இருக்கிறோம் இருப்பது இருக்குமாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 09, 2013 5:57 am

4. தமிழன் வீரம்

கடலலையும் ஓங்கியெழும் காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும் கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும் தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம் புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும் கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில் வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள் மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர் மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள் வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள் வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப் பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம் முகம் கறுத்து கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ் மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில் சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம் அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன் அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில் பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர் தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும் தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப் பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

***********

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 09, 2013 7:33 pm

5. மாறாத துயர்

கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
கழனி எழில் காணுது
எதிரில் இளவானின் ஒளியைத் தரமேக
இடையில் வெயில் ஓடுது
புதரின் அயலோடு போகும்வழி தன்னில்
பயந்து முயலோடுது
விதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்
விடிவை மனம் தேடுது

மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளை தாவுது
விதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்
விரிந்து தொலையாகுது
பதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்
பணிந்து தலையாட்டுது
புதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்
பொங்கி மனமேங்குது

எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்து மலை நின்றது
முகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு
மலையின் மடிதூங்குது
அகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ
அவனும் படைத்தானன்று
பதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்
பரமன் சிரித்தானங்கு

உயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ
எளியோர் மனமேங்குது
பயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்
பயனை விதி மாற்றுது
வயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள
வாழ்வில் உயிர்போகுது
கயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்
காணும் துயரோ இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jan 09, 2013 7:57 pm

சொல்ல வார்த்தைகள் எனக்குள் இல்லை கிரிகாசன் சார். இவை கவிதைகளா.... மடைதிறந்த வெள்ளமாய் கவி யோட்டம்.... தமிழ்ச்சுவையைத் தருக தொடர்ந்து...

கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Aகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Aகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Tகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Hகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Iகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Rகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Aகவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக