புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_m10உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை மிரட்டிய ஹிட்லர் !!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:08 pm



அடால்ஃப் ஹிட்லர் 1889-ல் ஆஸ்திரியாவில் பிறந்தார்.
ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் ஜேர்மனி ராணுவத்தில் சேர்ந்தார்.


ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.
மெய்ன் காம்ஃ என்பது ஹிட்லரின் சுயசரிதை.

‘மெய்ன் காம்ஃ’ என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.
தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.
எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம்.
நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.
நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.
ஹிட்லர் (தலைவர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ஹிட்லரின் இனவெறிக்குச் சுமார் 6 மில்லியன் யூதர்கள் பலியாயினர்.
ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானது.


1945 ஏப்ரல் 29‍-ல் ஹிட்லர் இவா பிரான் என்பவரை மணந்தார்.

1945 ஏப்ரல் 30‍ல் ஹிட்லர் தன் மனைவியோடு தற்கொலை செய்து கொண்டார்.ஹிட்லரின் தோல்விப் பயமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது

உலகை மிரட்டிய ஹிட்லர்
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.

இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.


வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். (நேருவை விட 7 மாதம் மூத்தவர்)இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர்.பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.



தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிžர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். பிறகு அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார்.மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.



1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார். தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.



இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.1907-ல் ஒரு ஓவியப் பள்ளியில் சேர முயன்றார். இடம் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.\



ஹிட்லரின் தாயார் கிளாரா குழந்தை பருவத்தில் ஹிட்லர்அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார்.இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடையவே, ராணுவத்தில் சேர்ந்தார்.
1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.



"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வன்மை மிக்கவர். தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து, தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர். இது உலகப் புகழ் பெற்ற நூல்.1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.



தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.



எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார்.யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்.முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன.உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.



பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம்.இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.




ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.

ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க்.


1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.




தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.



மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.




கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.




அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார்ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர்."அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.




காதலியுடன் ஹிட்லர் தற்கொலை 1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார்.முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.




1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை.எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். பூப்பறிக்கும் ஈவாபிரவுன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.




பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.



ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.அங்கே அவர்கள் கண்ட காட்சி:ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.


ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர்.ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.



ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள்.சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...



60 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டிகடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்...



இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?


ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை.


கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல.



குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ்,"குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்...)



ஒரு நாள்... மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும்.



(குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.



இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தவுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார்.



அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள்.



ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார்.



ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா... போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை.



அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.அடுத்து என்ன நடந்தது?உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள்.



நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.




கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான "டவுன்பால்' எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.

தினமலர்-


யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:முலாவது சட்டம் :


ஆடி.4.1933யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )


சட்டம் 195:யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)சட்டம் 242:யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொருஅரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்கதடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாகநிறுவினார்கள்.



சட்டம் 329:யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்

http://www.panithulishankar.com/2009/08/blog-post_6930.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகை மிரட்டிய ஹிட்லர் !!! 1357389உலகை மிரட்டிய ஹிட்லர் !!! 59010615உலகை மிரட்டிய ஹிட்லர் !!! Images3ijfஉலகை மிரட்டிய ஹிட்லர் !!! Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu May 03, 2012 9:15 pm

நம் நாட்டிலும் பல சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 12:32 am

ஹிட்லரின் கதை பகிர்வுக்கு நன்றி கே௭.

நமக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறான் - அடுத்தவரை அடக்கி ஆள நினைத்து.

அது அன்பால், காதலால், நட்பால், பாசத்தால் என்று பல உருவமில்லாத ஹிட்லர்.

அது அதிகாரத்தால் என்றால் ஹிட்லரைப் போல்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 04, 2012 8:26 am

தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் ஹிட்லர் பல்லாயிர்கனக்கான மக்களை கொன்று குவித்தார். அதை உலக நாடுகளால் தடுக்க முடியாதது எதார்த்தம்.

ஆனால் இன்று உலகமே கைய்யடக்கத்தில் மாறிவிட்ட பின்னரும் ஈழ மக்கள் பல லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்த நம்மையெல்லாம் என்ன செய்வது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த ஹிட்லரை விடவும் மோசமானவன் இந்த ராஜபக்சே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக