புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவெஞ்சர்ஸ்(AvEnGeRs) திரைப்படம் ஒரு பார்வை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை துவங்குகிறது. 1922ல் ந்யூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 89 வயது ஆகியும், உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். ஸ்பைடர் மேன், X Men, Fantastic Four, Daredevil ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கிய மனிதர் இவர். காமிக்ஸ் பிதாமகர் என்று இன்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் - ஸ்டான் லீ.
முப்பதுகளில், ஹாலிவுட்டில், எர்ரால் ஃப்ளின் என்ற நபர் படுபாப்புலராக இருந்தவர். எம்ஜியாரின் முன்னோடி என்றே இவரைச் சொல்லலாம். கத்திச்சண்டைகளில் கைதேர்ந்தவர். அக்காலப் படங்களில் ராபின்ஹூட்டாக நடித்துப் புகழ்பெற்றவர். இவரது படங்கள் என்றால் சிறுவன் ஸ்டான் லீக்கு உயிர். இவரது படங்களைப் பார்த்து, ஃபாண்டஸி உலகில் மிதந்தான் குட்டி ஸ்டான் லீ. அக்காலகட்டத்தில் அவனிடம் யாராவது அவனது வாழ்க்கை லட்சியத்தைப் பற்றிக் கேள்வி கேட்டிருந்தால், இதே போன்று படங்கள் எடுக்க வேண்டும்; அல்லது நாவல்கள் எழுத வேண்டும் என்றே சொல்லியிருப்பான். அவனது இந்த ஆசையை, பெரியவன் ஆனபிற்பாடும் அணையாது பாதுகாத்து வந்தான்.
பள்ளியை முடித்த பதினாறரை வயது ஸ்டான் லீ, 'டைம்லி காமிக்ஸ்' என்ற அலுவலகத்தில், ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தான். அக்காலத்தில் - 1939ல் - காமிக்ஸ் வரையும் ஆர்டிஸ்ட்கள், இங்க் புட்டிகளில் பேனாக்களை அவ்வப்போது தோய்த்தே படங்கள் வரைவது வழக்கம். அந்த இங்க் புட்டிகளை நிரப்புவது இளைஞன் ஸ்டான் லீயின் பிரதான வேலையாக இருந்தது. கூடவே, ஆர்டிஸ்ட்களுக்கு உணவு வாங்கி வருவது, அவர்களது பென்ஸில் ஆர்ட்வொர்க்கை முடிந்துவிட்ட பிரதிகளிலிருந்து அழிப்பது, அவ்வப்போது ப்ரூஃப் பார்ப்பது ஆகியவையும் அவனது வேலைகளாக இருந்தன.
'Filler' என்ற பதம், காமிக்ஸ் உலகில் வெகு சாதாரணமாக அடிபடும் ஒன்று. அதாவது, குறிப்பிட்ட ஆர்டிஸ்டோ அல்லது கதை எழுதுபவரோ, வேலையை முடித்த பின்னர், சில சமயம், காமிக்ஸின் ஓரிரு பக்கங்களோ அல்லது அதற்கு மேலோ, பக்கங்களை நிரப்புவதற்கு மேலும் மெடீரியல் தேவைப்படும். அப்போது யாரையாவது அழைத்து அந்தப் பக்கங்களை நிரப்பச் சொல்வது வழக்கம் (நமது லயன் காமிக்ஸில் அவ்வப்போது தலைகாட்டும் ரிப் கிர்பி கதைகள் இந்த ரகமே. மெயின் கதை முடிந்தபின்னர் ரிப் கிர்பி கதைகள் அந்தக் காமிக்ஸில் இருப்பதை எத்தனை முறை கண்டிருக்கிறோம்?). அப்படி ஒரு வாய்ப்பு, ஸ்டான் லீக்கு, அவரது 19வது வயதில் கிடைத்தது. அவரது துறுதுறுப்பைப் பார்த்த நிர்வாகிகள், 'Captain America Foils the Traitor’s Revenge' என்ற சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர். இந்தக் கதை, மே மாதம் 1941ல், கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் கதை # 3றாக வெளிவந்த காமிக்ஸில் இருக்கிறது. கிடைத்த மிகச்சிறு வாய்ப்பை அட்டகாசமாக உபயோகித்துக்கொண்டார் லீ. எப்படியென்றால், பின்னாளில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தின் மிக முக்கிய மூவ் - தனது கேடயத்தை எதிரிகளை நோக்கி வீசி, அது அவர்களைத் தாக்கிய பின்னர் திரும்ப இவரிடமே வந்து சேர்வது - ஸ்டான் லீயாலேயே உருவாக்கப்பட்டது. அவரது சிறிய ஃபில்லர் கதையில். அந்த மூவ், பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது (லீயின் பதினெட்டரையாவது வயது).
இதன்பின் வெகுசீக்கிரமே, அடுத்த மூன்றே மாதங்களில், மெயின் காமிக்ஸ் உலகில் நுழைந்தார் லீ. 'டெஸ்ட்ராயர்' (Destroyer) என்ற கதாபாத்திரத்தை 1941 ஆகஸ்டில் உருவாக்கினார். அதே மாதத்தில், 'ஜாக் ஃப்ராஸ்ட்' (Jack Frost) மற்றும் 'ஃபாதர் டைம்' (Father Time) ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் படைத்து, காமிக்ஸ் உலகில் நடமாட விட்டார் லீ.
ஸ்டான் லீ என்ற மனிதனை, காமிக்ஸ் ரசிகர்கள் புரிந்துகொண்ட காலகட்டம் உருவானது அப்போதுதான்.
அதே வருடத்தில் (1941), லீயின் வேகத்தைப் பார்த்து பிரமித்துப்போன டைம்லி காமிக்ஸ் நிறுவனர் மார்ட்டின் குட்மேன், இடைக்கால எடிட்டராக பதினெட்டரை வயது லீயை நியமித்தார் (அப்போது குட்மேனுக்கு வயது முப்பது). வேலைக்குச் சேர்ந்த இரண்டே வருடங்களில், அந்தப் பிரிவுக்கு எடிட்டராக லீ மாறியதற்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, அப்போதைய எடிட்டர் குட்மேனுடன் சண்டையிட்டுப் பிரிந்ததும் ஒரு காரணம். ஆக, உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் லீயைப் பார்த்துப் புன்னகைக்கத் துவங்கியிருந்தன.
இதன்பின் லீ திரும்பியே பார்க்கவில்லை (படுபயங்கர க்ளிஷேடான ஒரு வாக்கியம் இது). இடையே சில வருடங்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பி வந்த வேகத்தில் பல்வேறு வகையான கதைகளை எழுதிக் குவித்தார் லீ. 1947ல் திருமணம். அந்தக் காலகட்டத்தில், டைம்லி காமிக்ஸ் நிறுவனம், அட்லஸ் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1950களில், அதுவரை சரமாரியாகக் கதைகளை எழுதிவந்த லீ, ஒரே போன்று சென்றுகொண்டிருந்த வாழ்க்கையினால் அலுப்படைந்தார். பணத்துக்கு எந்தக் குறைவுமில்லாமல் இருந்தாலும், எத்தனை காலம்தான் சண்டை, வெஸ்டர்ன்ஸ், வில்லன்கள், ஹீரோக்கள் ஆகியவர்களால் ஆன உலகத்தில் உழல்வது? ஆகவே, வேலையை விட்டுவிட்டு, வேறு ஏதாவது வேலையில் ஈடுபடலாம் என்பது லீயின் முடிவாக இருந்தது.
அப்போதுதான் விதி லீயைப் பார்த்து மறுபடியும் புன்னகைத்தது (இதுவும் மற்றொரு க்ளிஷே தான்).
வருடம் - 1956. அமெரிக்காவின் புகழ்பெற்ற DC காமிக்ஸ் நிறுவனம், ஃப்ளாஷ் (Flash) என்ற ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை தூசிதட்டி எடுத்து உலவ விட்டிருந்த காலம். அந்த சீரீஸ் நன்றாகவே வெற்றியடைந்ததால், உடனேயே 'ஜஸ்டிஸ் லீக்' (Justice League) வெளியே விடப்பட்டது. அதுவும் வெற்றியடைந்தது. அப்போதுதான் லீயின் திறமை பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்த குட்மேன், லீயிடம் வந்து, போட்டி நிறுவனமான DC காமிக்ஸுக்கு சவால் விடும்வகையில் ஏதாவது ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். லீக்கு அதில் இஷ்டமில்லை. வேலையையே விட்டுவிடும் முடிவுக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அவரது மனைவி Joanன் வற்புறுத்தலுக்கு இணங்கி, ஒருமுறை எதையாவது செய்துபார்ப்போமே என்று அவர் உருவாக்கிய ஹீரோ கும்பலின் பெயர் - Fantastic Four.
ஏனோதானோவென்று அமர்ந்தாலும், இந்த ஹீரோக்களின் படைப்பில் லீ செய்த மாற்றம் ஒன்று இன்றளவும் பல ஹீரோக்களின் உருவாக்கத்தில் உதவி செய்துள்ளது. அந்தக் காலகட்டம் வரை, சூப்பர் ஹீரோ என்றால் நிஜமாகவே ஹீரோதான். அதாவது, அந்த ஹீரோவிடம் எந்தக் குறையும் இருக்காது. நல்லவனாக, அபரிமிதமான சக்தியுடன், அடக்கமானவனாக, மக்களை வில்லனிடமிருந்து காப்பவனே அபோதைய சூப்பர் ஹீரோ. உதாரணத்துக்கு: சூப்பர்மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா. ஆனால், வில்லனை அடி பின்னியபின் ஹீரோ என்ன செய்வான்? இங்குதான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்தது. லீயின் ஹீரோக்கள், தங்களின் சக்திகளைப் பற்றி ஜம்பம் அடித்தனர். தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்தனர். ஹீரோயின்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தனர். தங்களுக்குள்ளேயே ஈகோ மிகுந்து அடித்துக்கொண்டனர். நோய்வாய்ப்பட்டனர்.
இந்த Fantastic Four கதாபாத்திரங்களைப் படமாக வரைந்தவர் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் ஜாக் கிர்பி.
வெளிவந்தவுடன், அட்டகாச ஹிட்டாக மாறியது இந்த சீரீஸ். பயங்கர நல்லவர்களாக இல்லாமல், சாதாரண மனிதர்களாக இருந்த இந்தக் கதாபாத்திரங்கள், காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. அக்காலகட்டம் வரை (1956), அமெரிக்க காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியது, DC காமிக்ஸ் நிறுவனம்தான். ஆனால், தொடர்ந்து ஸ்டீரியோடைப் நல்ல ஹீரோக்களையே உற்பத்தி செய்துவந்ததால், அந்நிறுவனம் ஒருவித மந்தநிலையில் விளங்கிவந்த நேரத்தில், லீயின் கதாபாத்திரங்கள் புயலைப் போல் காமிக்ஸ் மார்க்கெட்டில் நுழைந்தன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றன.
காமிக்ஸ் ரசிகர்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழலாம். DC காமிக்ஸ் என்றாலே டக்கென்று நினைவு வருவது Batman ஆயிற்றே? பேட்மேன் கூடவா DC காமிக்ஸை காப்பாற்ற முடியவில்லை?
பேட்மேன், பாப் கேனால் 1939லேயே உருவாக்கப்பட்டு, ஐம்பதுகளில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமாக இருந்துவந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில், தொடர்ந்து ராபினோடு சேர்ந்து பேட்மேன் செய்த சாகசங்களால், பேட்மேனும் ராபினும் gayக்கள் என்று ரசிகர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடும் அளவு அந்தக் காமிக்ஸ் மாறிவிட்டிருந்தது. ஆகையால், Batwoman (1956) போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, இந்த இமேஜை மாற்றுவதற்காக எத்தனம் செய்யப்பட்டுவந்த காலம் அது. என்ன செய்தாலும், பேட்மேனின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இந்த வீழ்ச்சி, 1986ல், ஃப்ராங்க் மில்லர் 'The Dark Knight Returns' வெளியிட்டபின்னர்தான் மாறியது. அது வேறு கதை. இப்போது வேண்டாம்.
ஆக, ஸ்டான் லீ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னராக விளங்கினார் என்பது வரலாறு. அப்போது லீ செய்த இன்னொரு காரியம், காமிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பிற கலைஞர்கள் இவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் காரணமாக இருந்தது. காமிக்ஸ் தயாரிக்கும்போது எழுத்தாளர், ஆர்டிஸ்ட் ஆகிய இருவர் மட்டுமல்லாது, வண்ண இங்க்களைப் பதிப்பவர், லெட்டரர் எனப்படும் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி வசன பலூனுக்குள் பொருத்துபவர் ஆகியவர்களின் உழைப்பும் சம அளவில் இருந்துவந்தது. ஆனால், ஐம்பதுகளின் இறுதிவரை, வசனகர்த்தா மற்றும் ஆர்டிஸ்ட் ஆகியவர்களின் விபரங்களே காமிக்ஸின் creditsல் வெளியிடப்பட்டு வந்தன. இந்த முறையை மாற்றி, Creditsகளில் இங்க்கர் மற்றும் லெட்டரர்களின் விபரங்களும் இடம்பெறுமாறு செய்தார் ஸ்டான் லீ. இது மட்டுமல்லாது, மார்வெலின் (ஆம். 1961ல், அட்லஸ் காமிக்ஸ் என்பது மார்வெல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது) நிர்வாகக் குழுமத்தில் நடைபெறும் மீட்டிங்குகள், இனிவரப்போகும் கதைகளின் ட்ரெய்லர்கள் ஆகியவைகளையும் காமிக்ஸ்களில் இடம்பெறச் செய்தார் லீ. இது, அப்போதைய காலகட்டத்தில் ஒரு வெல்கம் சேஞ்சாக அமைந்தது.
லயனின் 'ஹாட்லைன்' போல, ஸ்டான் லீயின் பத்தி, ஒவ்வொரு காமிக்ஸிலும் இடம்பெற்றது. அதன் பெயர்: Stan's Soapbox. அந்தக் காலகட்டத்தில், தனது வேலைப்பளுவின் காரணமாக, பழைய காமிக்ஸ் தயாரிப்பு முறை ஒன்றை தூசிதட்டி எடுத்தார் லீ. அதன் பாப்புலாரிட்டி காரணமாக, 'Marvel Method' என்றே புகழடைந்தது அந்த முறை. ஒவ்வொரு காமிக்ஸ் தயாரிப்பின்போதும், ஆர்டிஸ்டுடன் ஒரு மீட்டிங் போடுவார் லீ. அந்த மீட்டிங்கில், கதையின் ஒன்லைன் ரெடியாகிவிடும். கூடவே, கதையின் பிரதான சம்பவங்களும் (Plot Points??). இதன்பின், ஆர்டிஸ்ட் விரிவாக படங்களை வரைந்து லீக்கு அனுப்புவார் (storyboards). அதன்பின் லீ டயலாக் எழுதுவார். கூடவே, ஆர்டிஸ்டின் படங்களிலும் சில திருத்தங்கள் சொல்லுவார். அதன்பின் காமிக்ஸ் கடைசியாக ரெடியாகும். இதன்மூலம், ஆர்டிஸ்ட்களும் காமிக்ஸ் தயாரிப்பில் நேரடிப் பங்கு பெற்றனர் (இதனால், ஸ்பைடர்மேன் மற்றும் Fantastic Four திரைப்படங்களில், இணை உருவாக்கம் என்றுதான் லீயின் பெயர் இருக்கும். இவரோடு திரையில் இணை உருவாக்க Credits பெற்றது அப்போதைய காமிக்ஸ் ஓவியங்களை வரைந்த ஜாக் கிர்பி மற்றும் ஸ்டீவ் டிட்கோ).
இந்த முறையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதபோதும், மிக மிக ஆச்சரியகரமாக, பீட்டர் ஜாக்ஸன், 'லார்ட் ஆஃப் த ரிங்ஸ்' படங்களை அச்சாக இதே முறையில்தான் உருவாக்கினார் என்பது ஆச்சரியகரமான தகவல்தானே?
இதன்பின் லீயின் வளர்ச்சி அபரிமிதமான ஒன்று. மார்வெல் காமிக்ஸின் தலைமைப் பொறுப்பிலும் அமர்ந்தார் லீ. மார்வெல் என்றாலே லீதான் ரசிகர்களுக்கு நினைவு வந்த அளவு பாப்புலர் ஆனார்.
தற்போது வாழ்க்கையை என்ஜாய் செய்துகொண்டிருக்கும் இந்த எண்பத்தொன்பது வயது கிழவர், இப்போதும் பல காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு கடவுள் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். பல படங்களிலும் ஜாலியாக முகத்தைக் காட்டி கௌரவ வேடங்களில் நடித்தும் இருக்கிறார் லீ.
சரி. லீக்கும் Avengersக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்பவரா நீங்கள்? பொறுமை அவசியம் நண்பரே...
தொடரும் . . . .
பி.கு - இதில் உள்ள அனைத்து விபரங்களும் இணையத்திலிருந்தும் விகிபீடியாவிலிருந்தும் எடுக்கப்பட்டவையே. சொந்தமாக என் மூளையில் உதித்த தகவல்கள் அல்ல.
நன்றி : கருந்தேள்
- GuestGuest
சென்ற பாகத்தில், ஐம்பதுகளில் Fantastic Four காமிக்ஸ்கள் சக்கைப்போடு போட்டன என்று படித்தோம் அல்லவா? இதன்பின்னர், கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக்கினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு சரியான வகையில் தீனிபோடும் திறமையும் ஸ்டான் லீயிடம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே, இந்த சீரீஸை உருவாக்கியபின், சரமாரியாக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தார் லீ. அவற்றில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இன்றளவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தால், அவரது புத்திசாலித்தனம் புரியும்.
1962. பனிப்போரின் உச்சகட்டம். ஒரு புதிய காமிக்ஸ் கதாபாத்திரத்தை ஸ்ருஷ்டிக்க விரும்பினார் லீ. எப்படிப்பட்ட கதாபாத்திரம்? அவரே சொல்கிறார் கேட்போம்.
“எப்போது வேண்டுமானாலும் ந்யூக்ளியர் குண்டுகள் வீசப்படலாம் என்ற சூழல். இந்தப் பயம் மட்டுமல்லாது, அணு ஆயுதங்களால் பல ஆபத்தான உயிரினங்கள் உருவாக்கப்படலாம் என்றும் மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு மான்ஸ்டரை உருவாக்க விரும்பினேன். இந்த பூதத்தை உருவாக்குவதற்காக எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது, Dr Jeykill & Mr. Hyde கதாபாத்திரம் (பள்ளி நாட்களில் ஆங்கிலத் துணைப்பாடமாக அமைந்த இந்தக் கதையைப் பலர் படித்திருக்கலாம். சுருக்கமாக: பகலில் மருத்துவர். இரவில் பூதம்). கூடவே, நாற்பதுகளில் அமெரிக்கத் திரைப்படங்களின் டார்லிங்காக விளங்கிய ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களைக் கலந்தே நான் உருவாக்க விரும்பிய பூதத்தை உருவாக்கினேன். ஆனால், அந்த பூதம் கெட்ட பூதம் அல்ல. அது பாட்டுக்கு அதன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அதனைச் சுற்றியுள்ள மனிதர்கள் இந்தப் பூதத்தைப் பார்த்து பயந்து, இதனை ஆத்திரப்படுத்தும்போது அதன் சக்தி அதிகரித்து, பேரழிவை அப்பூதம் உருவாக்கும்”.
அப்படி மே மாதம் 1962ல் உருவாக்கப்பட்டு அறிமுகமான கதாபாத்திரம் தான் 'The Incredible Hulk'. முதன்முதலில் அறிமுகமான காமிக்ஸ் அட்டையைக் கவனித்தால், தத்ரூபமாக ஃப்ராங்கென்ஸ்டைன் போலவே ஹல்க்கின் முகம் இருப்பதைக் காண முடியும். மட்டுமல்லாது, ஹல்க்கின் நிறம், சாம்பல் நிறமாக இருக்கும். அதுதான் ஹல்க்கின் ஒரிஜினல் நிறம். பச்சை வண்ணம், பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.
1963ல், ஹல்க் கதாபாத்திரம், Fantastic Four கதைகளில் கௌரவ வேடத்துடன் இடம்பெற்றது. அந்தக் காலகட்டத்தில், ஹல்க் கதைகளுக்குப் படம் வரைபவரான ஜாக் கிர்பிக்கு ஒரு கல்லூரியிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. தங்கள் கல்லூரியின் டார்மிட்டரிக்கு ஹல்க்கின் படத்தையே வைத்து ஒரு சின்னம் உருவாக்கியிருப்பதாக. அப்போதுதான், ஹல்க், கல்லூரி மாணவ மாணவியரிடையே பிரபலமாக இருந்தது ஸ்டான் லீக்குத் தெரியவந்தது.
இதன்பின்னர் பல ஹல்க் கதைகள் வெளிவந்துவிட்டன. இக்கதைகளை மையமாக வைத்து, 2003ல், The Hulk என்ற படமும், 2008ல் The Incredible Hulk என்ற படமும் வெளிவந்தும்விட்டன (இப்படங்களைப் பற்றி, அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய இனிவரும் கட்டுரையில் விபரமாகப் பார்க்கலாம்).
ஹல்க் எப்படி உருவாகியது?
ஒரு விஞ்ஞானப் பரிசோதனையின்போது, ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத்திலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றுகையில், அந்தக் கதிரியக்கத்துக்கு முழுமையாக ஆட்பட்டுவிடுகிறார் விஞ்ஞானி ப்ரூஸ் பேன்னர் (Bruce Banner). உடனடியாக மயக்கமும் அடைந்துவிடுகிறார். அன்று இரவு, ராணுவ முகாமிலிருந்து பிரம்மாண்டமான சாம்பல் நிற ஜந்து ஒன்று சுவரைத் தாண்டிக் குதித்து ஓடுகிறது. விஞ்ஞானி பேன்னர்ஸையும் காணவில்லை. அதன்பின்னர்தான் அதிகாரிகளுக்கு உண்மை புரிகிறது. ப்ரூஸ் தேடப்படுகிறார். இதனை மையமாக வைத்தே ஹல்க் கதைகள் உருவாக்கப்பட்டன.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அக்கதாபாத்திரத்தின் பிரதான எதிரி ஒருவன் இருப்பான். எதிரி என்று எடுத்துக்கொண்டால், பலபேர் பல காமிக்ஸ்களில் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள், பெரிய வில்லன் ஒருவன் இருந்தே தீருவான். அப்படிப்பட்ட மெயின் வில்லன், இந்த ஹீரோவுடன் எப்படியெல்லாம் மோதுகிறான் என்பதைவைத்து கதையின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் இல்லையா? அப்படி ஹல்க்கின் பிறவி எதிரி யாரென்றால், ஜெனரல் தாட்டியஸ் ‘தண்டர்போல்ட்’ ராஸ் (Thaddeus 'Thunderbolt' Ross) என்ற ராணுவ அதிகாரி. 'The Incredible Hulk' படத்தின் கடைசியில், அதிபயங்கர ஜந்துவாக மாறி ஹல்க்குடன் மோதுவாரே, அதே கதாபாத்திரம்தான் இந்த ராஸ். (திருத்தம்:23rd Apr 2012: உண்மையில், திரைப்படத்தில், எமில் ப்ளான்ஸ்கி என்ற ராணுவ வீரன் தான் க்ளைமாக்ஸில் அபாமிநேஷன் என்ற பெரிய உருவத்தில் ஹல்க்குடன் மோதுவான். திருத்தத்தை, பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டிய நண்பர் இரா.தீபக்குக்கு நன்றி). இவரைத்தவிர, பல்வேறு சைடு வில்லன்களும் ஹல்க்கின் கதைகளில் உண்டு.
ஹல்க்கின் கோபம் வளரவளர, அவனது பூதாகாரமான தோற்றம் வெளிப்படும். ஆரம்பகால காமிக்ஸ்களில், ப்ரூஸ் பேன்னரிடம் ஒரு கருவி இருந்தது. அக்கருவியின் மூலமாகத் தனது பூத உருவை அவர் எடுப்பார். பிந்நாட்களில் அக்கருவி மறைந்து, கோபத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறை அறிமுகமானது.
ஆகஸ்ட் 1962. ஏற்கெனவே ஹல்க்கை உருவாக்கிய லீ, இன்னொரு புதிய ஹீரோவை உருவாக்க நினைத்தார். இம்முறையும், லீயே இந்தப் புதிய கதாபாத்திரத்தைப் பற்றி விளக்குகிறார்:
”இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் உலகின் அதிபயங்கர பலசாலியை (ஹல்க்) உருவாக்கியிருந்தேன். இப்போது, இன்னொரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தபோது, இந்தப் பலசாலியை விட பலமுள்ளவனாக எப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்று யோசித்தேன். மிகவும் எளிய வழி தோன்றியது. அதாவது, மனிதனாக அக்கதாபாத்திரம் இருக்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். மனிதனாக இருக்கக்கூடாது என்றால், அவன் ஒரு கடவுளாக இருத்தல் மட்டுமே சரியானதொரு வழியாகத் தோன்றியது. கடவுள் என்றால், எந்தக் கடவுள்? கிரேக்க மற்றும் ரோமன் கடவுளர்களைப் பற்றி மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆகையால், மக்களுக்கு அதிகம் தெரியாத நோர்ஸ் கடவுலர்களைப் பற்றி ஆராய்ந்தேன். நோர்ஸ் கடவுளர்கள், வைக்கிங்குகளைப் போல் இறக்கை வைத்த கிரீடம், பெரிய தாடி, ஆயுதமாக சுத்தியல் ஆகியவற்றை வைத்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இப்படி அவதரித்த கதாபாத்திரம் தான் தோர் (Thor)".
தோர் என்ற இந்தக் கதாபாத்திரத்தின் ஒரிஜினல் இடம், ‘அஸ்கார்ட்’ (Asgard) என்ற கிரகம். அந்தக் கிரகத்தில், ‘ஓடின்’ (Odin) என்ற தலைவரின் மகனே தோர். தோருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ‘லோகி’ (Loki). தோர் மிகவும் கர்வமுள்ளவனாக இருந்ததால், அவனுக்குப் பணிவைக் கற்றுக்கொடுக்க விரும்பி, ஓடின், பூமியில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனான ‘டொனால்ட் ப்ளேக்’ என்பவனின் உடலில் தோரின் நினைவுகளை அழித்து, புகுத்திவிடுகிறார். அப்போது எதேச்சையாகத் தன்னைத் துரத்தும் சில ஏலியன்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஓடும் ப்ளேக்கின் கையில் கிடைக்கிறது, தோரின் ஆயுதமான சுத்தியல். இந்த சுத்தியலின் பெயர், ‘மயோல்நிர்’ (Mjolnir). இந்த ஆயுதம் கிடைத்ததும், ப்ளேக்குக்கு சுயநினைவு வந்துவிடுகிறது. ஏலியன்களை அடி துவம்சம் செய்கிறார் தோர். அதன்பின், சூப்பர்மேன் போல, பல நேரங்களில் சாதுவான மனிதன் போலவும், பூமிக்கு ஆபத்து நேர்கையில் தோராகவும் அவதரித்துக்கொண்டிருக்கிறார் தோர்.
தோரின் பிரதான எதிரி, தோரின் அண்ணன் லோகி. இதைப்பற்றியும், சென்ற வருடம் வெளிவந்த Thor(2011) திரைப்படத்தைப் பற்றியும், இதோ என்னுடைய பழைய கட்டுரை.
அதிபயங்கர பலமே தோரின் ப்ளஸ் பாயிண்ட். கூடவே, அவனது சுத்தியல். அளவுக்குமீறி ஆத்திரப்படுத்திவிட்டால், தோர் வெறித்தனமாக எதிரில் இருப்பவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கிவிடுவான். அப்போது அது நண்பர்களா எதிரிகளா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது.
ஆண்டு 1963. ஹல்க் மற்றும் தோர் காமிஸ்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரம். ஸ்டான் லீதான் ஒரே வேலையை திரும்பத்திரும்ப செக்குமாடு போல் செய்பவர் அல்லவே? எதிலுமே ஒரு வெரைட்டி தேவைப்படும் ஆளாயிற்றே? ஆகவே, புதியதாக ஒரு ஹீரோவை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
“1963ல், மக்கள் அதிகம் வெறுக்கக்கூடிய விஷயம் என்னவாக இருந்தது என்றால், அது ராணுவம்தான். பனிப்போரின் உச்சகட்டம். ஆகவே, என் வழக்கப்படி, மக்கள் அதிகமாக வெறுத்த ஒரு விஷயத்தையே அவர்களின் மீது அளவுக்கதிகமாகத் திணித்து, அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் பிடிக்கவைக்க விரும்பினேன். ஆகவே, ஒரு ஆயுத வியாபாரியாக எனது ஹீரோவை உருவாக்கினேன். எப்போது பார்த்தாலும் ஆயுதங்களையே சிந்தித்து ஆயுதங்களையே வாழ்ந்து வந்த நபராக என் ஹீரோ இருந்தான். கூடவே, அவன் ஒரு பெரும் பணக்காரனாகவும் இருந்தான். பெண்களுடனேயே காலம் கழிக்கும் மனிதன். பிறரின் கவலைகளைப் பற்றிக் கவலையில்லாத மனிதன். ஆயிரம் இருந்தும்.... வசதிகள் இருந்தும்...நிம்மதி இல்லாமல் அவனை அலைக்கழிப்பதற்கென்றே அவனது உள்மனதில் ஒரு ரகசியம் உண்டு. ஆம். அவனது இருதயம் அழிந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து தன்னை அவன் எப்படிக் காத்துக்கொள்கிறான்?
இந்தப் பணக்கார கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஹோவார்ட் ஹ்யூஸ் (Howard Hughes - The Aviator பட நாயகனாகக் காண்பிக்கப்பட்ட மனிதர்). மிகப்பெரும் பணக்காரர். கூடவே நட்டு கழண்ட கேஸ். ஆனால், என் கதாபாத்திரம், நட்டு கழண்டவன் அல்ல. அது ஒன்றுதான் இருவருக்கும் வித்தியாசம். அப்படி நான் உருவாக்கிய அந்தக் கதாபாத்திரம், அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது”.
இப்படியாக, டோனி ஸ்டார்க் (Tony Stark) அலையாஸ் Iron Man உருவானான். முதல் காமிக்ஸில் இந்த அயர்ன் மேன் கதாபாத்திரம், நமது லயன் காமிக்ஸின் சட்டித்தலையன் ஆர்ச்சியைப் போலவே இருந்ததை, போஸ்டரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதன்பின் சிறுகச்சிறுக அவனது உடை வியக்கத்தக்க மாறுதல்களை அடைந்தது.
இந்த மூன்று கதாபாத்திரங்களையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவர்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும், இவர்கள் சந்தித்த மற்றொரு கதாபாத்திரம் பற்றியும்.........
தொடரும் . . .

சென்ற கட்டுரையில் நாம் பார்த்த மூன்று மான்ஸ்டர்கள்தான் அறுபதுகளில் அமெரிக்க காமிக்ஸ் உலகின் மிக விரும்பப்பட்ட கதாபாத்திரங்களில் சிலர். இந்த மூவரையும் உருவாக்கிய பிரம்மா ஸ்டான் லீ, ஒரு பிரம்மாண்டமான ஹீரோக்கள் குழுமத்தை உருவாக நினைத்தார். அப்படி ஏற்கெனவே DC காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக்குக்குப் போட்டியாக அவர் உருவாக்கியிருந்த Fantastic Four, பலத்த வெற்றியடைந்திருந்தது. ஆனால், ஃபண்டாஸ்டிக் ஃபோர் கதையின் நாயகர்கள், பிரம்மாண்ட ஹீரோக்கள் அல்லர். ஒரு வெற்றிகரமான ஹீரோ என்றால், அவனுக்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. அப்படி சில குணாம்சங்களோடு அதன்பின் அவர் உருவாக்கிய மூன்று கதாபாத்திரங்களை ஒருங்கிணைத்து, ஒரு அதிரடி குழுமம் அமைப்பது ஸ்டான் லீயின் யோசனை. அதனால், ஜஸ்டிஸ் லீக்கில் இருக்கும் இரண்டு பிரம்மாண்ட ஹீரோக்களைக் (Batman & Superman) கொஞ்சமாவது ஈடுகட்டும் வகையில் ஒன்றிரண்டு நபர்கள் வேண்டும் என்று அவர் நினைத்தபோது, கிட்டத்தட்ட பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் உருவான காலகட்டத்திலேயே உருவான மற்றொரு கதாபாத்திரத்தின் நினைவு ஸ்டான் லீக்கு வந்தது. அந்தக் கதாபாத்திரத்தோடுதான் ஸ்டான் லீயின் காமிக்ஸ் வாழ்க்கை தொடங்கியிருந்தது.
ஆம். 1941 மே மாதத்தில், தனது பதினெட்டரையாவது வயதில், அந்தக் காமிக்ஸில், ஃபில்லராக ஒரு மிகச்சிறிய கதையின் மூலம்தான் அறிமுகமாகியிருந்தார் ஸ்டான் லீ என்பது இந்தத் தொடரின் முதல் பகுதியைப் படித்த நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
September 1963. இந்த மூன்று மெகா ஹீரோக்கள் ஒன்றுசேர்ந்து மிரட்டிய முதல் கதை வெளிவந்தது. இந்த மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து, Ant-Man என்று இன்னொரு ஹீரோவும், The Wasp என்ற ஒரு ஹீரோயினும் அக்கதையில் இடம்பெற்றிருப்பார்கள். இந்த இருவருமே ஸ்டான் லீயின் உருவாக்கங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?
இந்தக் கும்பலின் பெயர் - The Avengers. கதையின் வில்லன் - தோரின் சகோதரன் லோகி
இந்தக் கதை பலத்த வரவேற்பு பெற்றது. இக்கதையோடு ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. இதன்பின் தொடர்ச்சியாக இந்த சீரீஸ் வெளிவரவும் ஆரம்பித்தது.
இந்த சீரீஸின் இரண்டாவது காமிக்ஸில், இந்தக் கும்பலிலிருந்து ஹல்க் வெளியேறிவிடுகிறான். அவனது நிலையில்லாத ஆளுமை, பிற ஹீரோக்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவனாகவே நினைத்ததே காரணம். அப்படி வெளியேறிய ஹல்க்கைத் தேடி, மற்ற கதாநாயகர்கள் பயணம் மேற்கொள்ளும்போது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹீரோதான் இந்த கும்பலின் நான்காவது மற்றும் தலையாய ஹீரோ. அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் சீரீஸின் நான்காவது காமிக்ஸில்தான்.
உண்மையில், இந்த ஹீரோக்களுக்கெல்லாம் சீனியர் அவர். இந்த ஹீரோ உருவான ஆண்டு - 1941 மார்ச். ஒரு கடுமையான தேசபக்த ஹீரோ வேண்டும் என்று ஜோ சைமன் என்ற பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் நினைத்தபோது - அந்த ஆண்டையும் மனதில் வையுங்கள். இரண்டாம் உலகப்போரின் உச்சம் - உருவான கதாநாயகனே நமது புதிய ஹீரோ. மனிதர்களின் உச்சபட்ச தாங்கும் திறனும் செயல்புரியும் திறமையும் ஒருங்கே உடையவனாக இந்த ஹீரோ உருவாக்கப்பட்டான். இவனது ஆயுதம் - மிகவும் சக்திவாய்ந்த கேடயம். கைகலப்பில் தோற்கடிக்கமுடியாத திறன் படைத்தவன். இன்றுவரை, IGN காமிக்ஸ் ஹீரோக்கள் பட்டியலில், ஆல்டைம் நம்பர் ஆறு. அமெரிக்காவின் டாப் ஹீரோக்களில் ஒருவன். இத்தனை திறன்கள் இருந்தும், உலகப்போர் முடிந்து, நாற்பதுகளின் இறுதியில் மெல்ல மெல்ல மக்களால் மறக்கப்பட்டு மறைந்துபோய் விட்டான் இவன்.
ஆகவே, மறுபடியும் ஸ்டான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்த பலன், ஹல்க்கைத் தேடிச் சென்ற ஹீரோக்கள், இந்த ஹீரோவைக் கண்டுபிடித்ததாக ஒரு கதையை அமைப்பதில் முடிந்தது. அது டக்கராக வேலை செய்தது. தனியாக இருந்தபோது மக்களால் விரும்பப்படாத ஹீரோ, கும்பலில் சேர்ந்தவுடன் மறுபடி மக்களால் விரும்பப்பட்டான்.
இங்கே ஒரு பெர்ஸனல் கருத்து: நான் படித்த வரையில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரே ஹீரோ இந்த ஹீரோதான். அடுத்த இடம்: சூப்பர்மேன்.
இப்படித்தான் அவெஞ்சர்ஸ் காமிக்ஸின் வரலாறு ஆரம்பித்தது. அந்தப் பழைய ஹீரோ - யெஸ். கேப்டன் அமெரிக்கா.
1942ல், ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற காமிக்ஸ் புத்தக எழுத்தாளர், அமெரிக்க ராணுவத்தில் சேர முயற்சிப்பதிலிருந்து கேப்டன் அமெரிக்காவின் கதை துவங்குகிறது. ஆள் மிகவும் ஒல்லியாகவும் வீக்காகவும் இருப்பதால், ராணுவத்திலிருந்து ரிஜக்ட் செய்யப்படுகிறார். அப்போது, ஜெனரல் செஸ்டர் பில்லிப்ஸினால், ஒரு குறிப்பிட்ட பரிசோதனைக்காக ரோஜர்ஸ் செலக்ட் செய்யப்படுகிறான். மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீனின் கண்டுபிடிப்பான ஒரு மருந்து, இவனது உடலில் செலுத்தப்படுகிறது. இதனால், மனிதர்களிலேயே மிகச்சக்திவாய்ந்தவனாக மாறிப்போகிறான் ரோஜர்ஸ். ஆனால், மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீன் கொல்லப்பட்டுவிடுவதால், இந்த மருந்தின் ஃபார்முலா யாருக்கும் தெரியாமல் அழிந்துவிடுகிறது. எனவே, அமெரிக்க அரசாங்கமே ரோஜர்ஸுக்கு ‘கேப்டன் அமெரிக்கா’ என்ற பெயரை அளித்து, கேடயம், ஹீரோ உடை அகியவற்றையும் அளிக்கிறது. அதே சமயம், ரோஜர்ஸ், அமெரிக்க ராணுவத்தின் சோனி சிப்பாயாகவும் வேடமிடுகிறான்.
இதுதான் கேப்டன் அமெரிக்காவின் கதை. உலகப்போரின் முடிவில், வட அட்லாண்டிக்கில் ரோஜர்ஸ் பயணித்த விமானம் வெடித்து, கடலில் ரோஜர்ஸ் வீசப்பட்டு, அதன்பின் தொலைந்துபோய்விட்டதாக ஒரு காமிக்ஸ் கதை இருக்கிறது. இக்கதைதான் கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டது.
சென்ற ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில், மேலே சொன்ன கதை பெரும்பாலும் அப்படியே சொல்லப்பட்டிருக்கும். கூடவே, கேப்டன் அமெரிக்கா, 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் துயில் எழுவதாக அதன் க்ளைமேக்ஸ் முடிந்திருக்கும்
இப்படி ஆரம்பித்த அவெஞ்சர்ஸ் வரலாறு, பழைய ஹீரோக்கள் விலகி, பல புதிய ஹீரோக்கள் அறிமுகம், மறுபடியும் பழையவர்களில் சிலர் திரும்பி வந்தது, சிலரின் கௌரவ வேடம் என்றெல்லாம் போய், ’புதிய அவெஞ்சர்கள்’, ‘பலம்வாய்ந்த அவெஞ்சர்கள்’, ‘இருண்ட அவெஞ்சர்கள்’ என்பதுபோல பல அவதாரங்கள் எடுத்துள்ளது.
இந்த அவெஞ்சர்களின் பொதுவான நோக்கம் என்னவெனில், எந்த ஒரு தனிப்பட்ட ஹீரோவினாலும் முறியடிக்கமுடியாத சக்தியை அனைவரும் சேர்ந்து எதிர்ப்பதுதான். இவர்களை ஒன்றுசேர்க்கும் கோஷம் - ’Avengers Assemble!’ என்பதே.
இத்தனை வெற்றிகரமான ஒரு காமிக்ஸ் சீரீஸை ஹாலிவுட் விட்டுவிடுமா? அவெஞ்சர்ஸ் காமிக்ஸை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள், எப்போதோ துவங்கிவிட்டன. இனிவரும் கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது, இதோ இன்னும் ஐந்து நாட்களில் வெளிவர இருக்கும் திரைப்படம் பற்றி. ஹாலிவுட் இதுவரை கண்டிராத பிரம்மாண்டத்தோடு வெளிவர இருக்கும் இப்படம் பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் - விரைவில்.. வெகு விரைவில் !

இதுவரை வெளிவந்துள்ள அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களான 'Iron Man', 'The Incredible Hulk', 'Iron Man 2', 'Thor' மற்றும் 'Captain America: The First Avenger' படங்களிலெல்லாம் ஒரு பொதுவான இழை உண்டு. அந்த இழையைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையை எழுதாமல் Avengers திரைப்படத்தைப் பற்றி எழுத இயலாது.
அதற்குமுன், இந்தக் காட்சியைப் பார்த்துவிடுங்கள். இதுவரை வந்திருக்கும் இந்தப் படங்களில், டைட்டில்கள் முடிந்தபின்னர் வரும் சிறிய ஸீன்களின் தொகுப்பு இது.
இந்த அத்தனை காட்சிகளிலும் வரும் அந்த ஒற்றைக்கண்ணன் யார்? அந்த நபரின் வேலை என்ன?
அதைத்தான் இன்றைய கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
மே 1963ல் ஸ்டான் லீயும் ஓவியர் ஜாக் கிர்பியும் உருவாக்கிய S.H.I.E.L.D. என்ற ஏஜென்ஸியின் தலையாய துப்பறிவாளனே இந்த நிக் ஃப்யூரி. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்துமே, வயது ஏறாத ஒரு கதாபாத்திரம். Infinity ஃபார்முலா என்ற மருந்தை அவ்வப்போது குடித்துவருவதால் சாகாவரம் பெற்றவராக இருக்கிறார் இவர். முதல் உலகப்போரின் சாகஸவீரரான ஜாக் ஃப்யூரியின் மூத்த மகனாக, 1917லிருந்து 1923க்குள் பிறந்த நிக் ஃப்யூரி, தந்தையைப் போலவே ஒரு சாகஸ விரும்பியாகவே திகழ்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது ஹவாயில் அமெரிக்க ராணுவத்தின் வீரராக அமர்த்தப்பட்ட நிக் ஃப்யூரியின் நெருங்கிய நண்பன் ரெட், பேர்ல் ஹார்பர் தாக்குதலில் உயிரிழந்துவிட, அன்றிலிருந்து நாஜிக்களும் ஜப்பானும் நிக் ஃப்யூரியின் எதிரிகளாக மாறுகின்றனர். இதன்பின், ஒரு அதிரடிப்படையின் தலைமைப்பொறுப்பை ஏற்கும் நிக் ஃப்யூரி, போலந்தை ஜெர்மனி தாக்கிக்கொண்டிருந்த பல்வேறு பகுதிகளில், பல அஸைன்மென்ட்களில் ஈடுபடுகிறார்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த தருணங்களில், ஃப்ரான்ஸில், ஒரு குண்டுவெடிப்பில் மரண காயம் அடைகிறார் நிக் ஃப்யூரி. அப்போது, ஸ்டெர்ன்பெர்க் என்றவரால் காப்பாற்றப்பட்டு, அவர் கண்டுபிடித்து வைத்திருந்த Infinity ஃபார்முலாவைப் பரிசோதிக்கக்கூடிய சோதனை எலியாக மாறி, அந்த ஃபார்முலா ஃப்யூரியின் உடலில் செலுத்தப்படுகிறது. அதுதான் ஃப்யூரியின் சாகாவரத்துக்குக் காரணம். ஆனால், அந்த மருந்து அவரது உடலில் சீரான இடைவெளிகளில் செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால், வெகுவிரைவில் மரணம் சம்பவிக்கும்.
இதன்பின், CIAவில் சேர்கிறார் ஃப்யூரி. கொரியாவில் பல சாகஸங்களில் ஈடுபடும் ப்யூரியைத் தேடிவருகிறது கர்னல் பதவி. இந்தச் சமயத்தில்தான் ரிச்சர்ட் பார்க்கர் மற்றும் அவரது மனைவி மேரி பார்க்கர் ஆகிய இரண்டுபேரை CIAவில் சேர்த்துக்கொள்கிறார் ஃப்யூரி (இந்த இருவரின் மகன், பிந்நாட்களில் உலகப்பிரசித்தி அடையப்போகிறான். அவன் பெயர் - பீட்டர் பார்க்கர்). இதன்பின், மெல்ல மெல்ல CIAவின் தொடர்பாளராக அந்தச் சமயத்தில் உருவாகியிருந்த பல சூப்பர்ஹீரோ கும்பல்களோடு பேச்சுவார்த்தையும் நடத்திவந்தார் ஃப்யூரி (குறிப்பாக Fantastic Four).
அப்போதுதான் தனது இடது கண்ணில் கறுப்புத்திரை அணிய ஆரம்பித்தார் ஃப்யூரி. ஒரு குண்டின் துகள் அவரது கண்ணில் புகுந்து, கண்பார்வையை 95% பறித்துவிட்டதால் இந்த கறுப்புத்திரை. எந்தவித ஆபரேஷனும் செய்துகொண்டு கண்பார்வையை மீட்க மறுத்துவிடுகிறார் ஃப்யூரி.
இந்தச் சமயத்தில்தான் அவரை அணுகுகிறான் டோனி ஸ்டார்க் என்ற மனிதன். Iron Man என்ற அவதாரமும் இவனுக்கு உண்டு. S.H.I.E.L.D. என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவும், அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறான். அதனை ஏற்று, அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பில் அமர்கிறார் ஃப்யூரி.
S.H.I.E.L.D. என்றால், Supreme Headquarters, International Espionage, Law-Enforcement Division என்று அர்த்தம். இது ஆரம்ப நாட்களில். இதன்பின் Strategic Hazard Intervention Espionage Logistics Directorate. என்று மாற்றப்பட்டு, அதன்பின், திரைப்படங்களில் Strategic Homeland Intervention, Enforcement and Logistics Division என்று பெயர்சூட்டப்பட்ட அமைப்பு இது. இதன் வேலை? தீயவர்களை வேட்டையாடி, நாட்டில் அமைதி நிலவச் செய்வதே.
ஃப்யூரியின் நிர்வாகத்தில், இந்த அமைப்பு, உலகின் மிகசக்திவாய்ந்த சுதந்திரமான அமைப்பாக உருவெடுத்தது. இதன்பின், அரசுத்தரப்பில் சூப்பர் ஹீரோக்களைத் தொடர்பு கொள்வது, ஃப்யூரியின் மூலமாகவே நிறைவேறியது. பல வருடங்கள் இப்படிக் கழிந்தபின், ஒரு தீய அமைப்பு, ஷீல்டின் பல ஏஜென்ட்களை விலைக்கு வாங்கி, ஃப்யூரியையே வேட்டையாடத் தூண்டுகிறது. மனமொடிந்த ஃப்யூரி தலைமறைவாகிறார். இதன்பின் மறுபடி வெளிவரும் ஃப்யூரி, இம்முறை இன்னமும் பலமாக ஷீல்டைக் கட்டமைக்கிறார். இதன்பின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன (ப்யூரி மறுபடி தலைமறைவாவது, டோனி ஸ்டார்க் ஷீல்டின் தலைவராவது, அதன்பின் டோனியின் உதவியோடு மறுபடி ஃப்யூரி வெளிவருவது).
இப்படியாக, உலகின் அதிசக்திவாய்ந்த ஒரு அமைப்பின் தலைவராக எப்பொழுதும் இருந்துகொண்டு, தீயவர்களை வேட்டையாடுவதே ஃப்யூரியின் வேலை.
ஃப்யூரியால் செய்யமுடியாது எதுவுமே இல்லை. கைகலப்பில் எக்ஸ்பர்ட். மூன்று பெரும்போர்களில் பங்காற்றியவர் (இரண்டாம் உலகப்போர், கொரியப்போர், வியட்நாம் போர்). அதிபுத்திசாலி. பல்வேறு ராணுவ மூவ்களில் சாணக்கியர். குண்டுகளைக் கையாள்வதில் கில்லாடி. பல்வேறு வாகனங்களைக் கையாள்வதில் வல்லவர். விமான வீரர். எப்பொழுதும் குண்டுதுளைக்காத உடுப்பு போட்டுக்கொண்டு நடமாடுபவர். துப்பாக்கி சுடுவதில் நம்பர் ஒன். ஷீல்டில், ஃப்யூரிக்கு மட்டுமே தெரிந்த பல்வேறு ரகசிய மறைவிடங்களும், ஆயுதத்தளவாடங்களும் எக்கச்சக்கம். அவரால் மட்டுமே இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்.
ஃப்யூரியின் நிறம் வெளுப்பு
இப்போது, அவெஞ்சர்ஸ் படம் வெளிவரும்போது, உலகெங்கும் காமிக்ஸ் ரசிகர்களுடைய நம்பர் ஒன் பிரச்னையாக இருப்பது என்னவெனில், ஒரிஜினல் காமிக்ஸின்படி, ஃப்யூரி ஒரு வெள்ளையர். ஆனால், இப்படங்களில் நிக் ஃப்யூரியாக நடிப்பவரோ கறுப்பின நடிகரான ஸாமுவேல் ஜாக்ஸன். இதுதான் ரசிகர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணம். இதை நம்மூர் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும்போது, வந்தியத்தேவனாக வில் ஸ்மித் நடித்தால் நம்மால் ஒத்துக்கொள்ளமுடியுமா?
ஃப்யூரி கதாபாத்திரம் உருவாக்கப்படும்போதே, தங்க நிறத்தில் முடியுடன், எப்போது பார்த்தாலும் சுருட்டை வாயில் வைத்துக்கொண்டு, ஸ்டைலான ஒரு கதாநாயகனாகத்தான் உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட உருவத்துடனேதான் பல ஆண்டு காலம் இக்காமிக்ஸ் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கும்போது, இடையில் கொஞ்ச காலம் அமுங்கியிருந்துவிட்டு, இந்த நிக் ஃப்யூரி கதாபாத்திரத்தை மறுபடியும் வெளிக்கொணரும்போது, தடாலென்று ஒரு கறுப்பின கதாபாத்திரமாக வெளியிட்டனர் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார். அப்போதுகூட இந்தக் கதாபாத்திரம் யாரையும் ஒத்திருக்கவில்லை. ஆனால், 2002ல் வெளிவந்த ’The Ultimates' காமிக்ஸில், ஃப்யூரி, அப்படியே ஸாமுவேல் ஜாக்ஸனை உரித்துவைத்திருந்தார். ஜாக்ஸனிடம் இந்த விஷயம் கூறப்பட்டு, அவரது அனுமதி பெறப்பட்டே இந்த மாற்றம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர்தான் மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்கள் திரையில் உருவெடுத்தபோது, ஜாக்ஸனே மார்வெலிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இக்கதாபாத்திரத்தை ஏற்றார்.
இந்தப் புதிய கறுப்பின நிக் ஃப்யூரியின் கதாபாத்திரத்தின் பெயர் - அல்டிமேட் நிக் ஃப்யூரி’. இக்கதாபாத்திரம், கல்லூரியை இந்தியாவில் படித்ததாக ஒரு புதிய துணுக்குச்செய்தியும் உண்டு.
மேலே நாம் பார்த்த வீடியோவில், ஒவ்வொரு ஹீரோவிடமும் சென்று இந்த மொட்டை ஒற்றைக்கண் நிக் ஃப்யூரி பேசுவதைக் கேட்டாலே, இவர் என்னமோ செய்ய முனைகிறார் என்பது தெரிந்துவிடும். ஐயர்ன் மேன் வெளிவந்ததிலிருந்து, இந்த post-credit ஸீன்களை நான் தவறவே விட்டதில்லை. படத்தில் என்ன வருகிறது என்பதைவிட, இந்த சில செகண்ட் காட்சிகளில் என்ன வருகிறது என்பதில்தான் என் ஆர்வம் முழுக்க இருக்கும். குறிப்பாக, ஐயர்ன் மேன் இரண்டில், கடைசியில், பள்ளத்தாக்கில் ஒரு சுத்தியலைக் காண்பிக்கும் அந்த கடைசி ஷாட்டைப் பார்த்ததும் தோர் படத்தின் மீது ஒரு ஆர்வம் வந்துவிட்டது.
பி.கு:
1. டேவிட் ஹேஸல்ஹாஃப் (Baywatch புகழ்) நடித்து, Nick Fury: Agent of S.H.I.E.L.D. என்று ஒரு தொலைக்காட்சிப் படம் உண்டு.
2. அடுத்த கட்டுரையில், திரைப்படம் !
தொடரும் . . .
- GuestGuest
முன்குறிப்பு - இந்தக் கட்டுரையை நிதானமாகப் படிக்கும்படி நண்பர்களைக் கெட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை நன்கு புரிந்துகொள்ளமுடியும்.
'The Avengers' காமிக்ஸ் சம்மந்தப்பட்ட அத்தனை பிரதான விபரங்களையும் பார்த்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இனிமேல், இந்தக் கட்டுரையில், இந்தத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம். அடுத்த கட்டுரை, இப்படத்தின் விமர்சனம். அத்தோடு இந்த சீரீஸ் நிறைவுறுகிறது (கருந்தேளில் முதன்முதலில் நிறைவடைந்த சீரீஸ் என்ற பெருமையும் இதற்கு உண்டு(???!!??). அடுத்து வெகுவிரைவில் நிறைவுறப்போவது LOTR).
அவெஞ்சர்ஸ் கதையைத் திரைப்படமாக எடுப்பதில் இருந்த பிரதான சிக்கல் என்னவென்றால், இக்கதையில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்ததே. ஒவ்வொரு சூப்பர்ஹீரோவின் கதையையும் படத்தில் காண்பிக்கவே நான்கைந்து மணி நேரம் ஆகிவிடும். இதில் அவெஞ்சர்ஸ் கதையை எப்படி திரையில் காண்பிப்பது? ஆகவே, மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார், ஒரு யோசனையை செயல்படுத்திப்பார்க்க முடிவுசெய்தனர். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒவ்வொரு திரைப்படம் எடுத்து வெளியிட்டால் என்ன?
இந்த யோசனையின் பேரில் முதன்முதலில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படம், ’Iron Man'. 2008 மேயில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியடைந்த படம் இது. இப்படத்தின் கூடவே எடுக்கப்பட்டு, இப்படம் வந்த அடுத்த மாதம் வெளியிடப்பட்ட படம், 'The Incredible Hulk'. ஹல்க் திரைப்படத்தை வெளியிடும் முன்னர் மார்வெல் நிறுவனத்தாருக்கு இருந்த சிக்கல் என்னவெனில், ஏற்கெனவே 2003ல், ’Hulk' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்தப் படம் சுமாராக ஓடியிருந்தது வேறு கதை. இருந்தாலும், இந்த ஒரிஜினல் படம், அவெஞ்சர்ஸ் கதையில் சம்மந்தப்படுத்திப் பார்க்கக்கூடிய ஹல்க்கின் ஆளுமைக்கு சரியான வெளிப்பாடாக இருக்கவில்லை என்றே மார்வெல் நிறுவனத்தார் கருதினர். எப்படியும் ஒரிஜினல் படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் வெளிவரவேண்டும் என்றும் ஏற்கெனவே மார்வெல் முடிவு செய்திருந்தது. ஆகவே, அவெஞ்சர்ஸ் படம் வெளிவருவதற்காக, அதற்கு முன்னர் ஹல்க்குக்கு ஒரு சரியான ட்ரெய்லராக, 2008ல் வெளியான Incredible Hulk இருந்தது.
இதன்பின்னர், 2010ல் Iron Man 2 வெளியானது. அதுவுமே மெகா வெற்றி அடைந்தது.
அவெஞ்சர் சீரிஸில் அடுத்த படமாக வந்தது, 'Thor'. மே 2011ல் வெளியிடப்பட்ட இப்படம், அவெஞ்சர்களில் ஒருவனான 'தோர்' என்ற கடவுளைப் பற்றிய கதையாக இருந்தது. பாக்ஸ் ஆஃபீசில் பெருவெற்றியடைந்த 2011ன் பதினைந்தாவது படமாக இருந்தது இப்படம்.
இதன்பின்னர், ஜூலை 2011ல் 'Captain America: The First Avenger' என்ற அடுத்த அவெஞ்சர் படம் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவில் சுமாராக வசூல் அனாலும், உலகெங்கும் இப்படம் குவித்த பட்ஜெட்: 368 மில்லியன்கள் (பட பட்ஜெட் 140 மில்லியன்).
இப்படியாக, அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் ஒரு படம் என்ற மார்வெல் கனவு பலித்தது.
சரி. இதெல்லாம் ஒகே. ஆனால், மக்களுக்கு இந்த அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய பில்டப்பை எப்படி ஏற்றுவது? ஒரே வழி என்னவெனில், இந்த ஒவ்வொரு படத்திலும், மற்ற படங்களைப் பற்றிய மிகச்சிறிய க்ளூவை எதாவது ஒரு ஷாட்டில் வைத்துவிடுவது. இதை மக்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம் என்று நினைத்தனர் மார்வெல் நிர்வாகத்தினர்.
இதன்படி, இனிமேல் வரிசையாக சூப்பர் ஹீரோ படங்கள் வரப்போகின்றன என்பதற்கு ஒரு க்ளூவாக, Iron Man படத்தின் முதல் பாகத்தின் பாதியில், ஒரு காட்சியின் பின்னணியில், மொத்தம் மூன்றே செகண்டுகளுக்கு கேப்டன் அமெரிக்காவின் கேடயம் காட்டப்பட்டது.
கீழேயுள்ள சிறிய வீடியோவில், கேடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள மற்ற விஷயங்களையும் கவனியுங்கள். Iron Man வெளிவந்த காலத்தில் இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்த மிகச்சில ரசிக வெறியர்களில் இவரும் ஒருவர் என்பது புரியும்.
அதேபோல், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் பெரும்பாலானவர்கள் செட்டில் இல்லாத சமயத்தில், ரகசியமாக ஸாமுவேல் ஜாக்ஸன் வழவழைக்கப்பட்டு, இப்படத்தின் டைட்டில்களுக்குப் பின்னர் நிக் ஃப்யூரி டோனி ஸ்டார்க்கை சந்தித்துப் பேசும் மிகச்சிறிய காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்குழுவினருக்கே தெரியாத இந்த ரகசியம், படம் வந்தபின்னர்தான் அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் புரிந்தது. அந்தக் காட்சி மறுபடியும் உங்களுக்காக இங்கே. இந்தப் படம் வெளிவந்ததும், எப்படியும் எல்லா அவெஞ்சர்களையும் பற்றிய படங்கள் வரப்போகிறது என்று ரசிகர்களுக்கு ஒரு ஹேஷ்யமாக அமைந்த காட்சி இது.

இந்தக் காட்சியில், டோனி ஸ்டார்க்கை சந்திக்கும் நிக் ஃப்யூரி, உலகில் இருக்கும் ஒருசில சூப்பர்ஹீரோக்களில் ஸ்டார்க்கும் ஒருவன் என்று சொல்லி, அவெஞ்சர்கள் என்ற ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகவும் சொல்கிறார். எப்படியும் பின்னால் ஒரு நாள் Avengers என்ற படம் வரப்போகிறது என்பதற்கு ஒரு அத்தாட்சியாக இந்தக் காட்சி அமைந்தது. ரசிகர்கள் குஷியடைந்தனர்.
இதன்பின், உடனேயே வெளியான 'The Incredible Hulk' படத்திலும் ஒரு க்ளூ வைக்கப்பட்டது.
படத்தின் இறுதியில், டைட்டில்களுக்குப் பின்னர், டோனி ஸ்டார்க், ஜெனரல் ராஸுடன் பேசுவது போன்ற ஒரு காட்சி உண்டு. அதில், ஒரு டீமை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஸ்டார்க் சொல்லும் வசனம் பிரசித்தியானது. இதன்மூலம், அவெஞ்சர்ஸ் படத்துக்கான அடுத்த க்ளூவும் கிடைத்ததால், ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
கூடவே, இப்படம் டிவிடியில் வெளியானபோது, படத்தின் தொடக்கத்தில், ஒரு முப்பது நொடிக் காட்சி இடம்பெற்றது. அதில், பனியில் உறைந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா காட்டப்பட்டார். இதோ கீழேயுள்ள வீடியோவில் அதைக் காணலாம். Incredible Hulk படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்கும் நண்பர்கள், இந்தத் துவக்கக்காட்சியைக் கண்டிருக்க முடியாது. இது டிவிடி எக்ஸ்க்ளூஸிவ். தற்கொலை செய்துகொள்ள ஆர்க்டிக் செல்லும் ப்ரூஸ் பேன்னரின் (ஹல்க்) அறிமுகத்தோடு, அவன் ஹல்க்காக மாறும் காட்சி, அதன்பின் அவனது கோபத்தால் ஒரு பெரிய பனிப்பாறை சிதறுவது என்ற காட்சியோடு இந்த ஓபனிங் ஸீக்வென்ஸ் முடியும். இப்போது, இரண்டாம் வீடியோவை நோக்குங்கள். தனது சிவப்பு உடையோடு, பனியினுள் புதைந்திருக்கும் கேப்டன் அமெரிக்காவின் உடல், ஹல்க்கின் அதிரடியால் வெளிப்படுவதைக் காணலாம். இது, ஹல்க் பட இயக்குநர் லூயிஸ் லெடெரியராலேயே உறுதிப்படுத்தப்பட்ட காட்சி.
இதன்பின் வெளிவந்தது Iron Man 2. இம்முறை, க்ளூக்களை அதிகமாகவே அள்ளித்தெளித்திருந்தனர். ஒரு உதாரணமாக, இரண்டாம் பாகத்தில் நிக் ஃப்யூரியும் டோனி ஸ்டார்க்கும் S.H.I.E.L.D. அலுவலகத்தில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில், பின்னணியில் வீடியோக்கள் சில ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஒன்றுதான், கல்வர் பல்கலைக்கழகத்தில் நடந்த பெரும் அழிவு. ஹல்க் படம் பார்த்தவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி நன்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கல்வர் பல்கலைக்கழகத்தில்தான் ப்ரூஸ் பேன்னர் என்ற விஞ்ஞானி ஹல்க்காக மாறிய நிகழ்ச்சி நடந்தது. பேன்னர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மறுபடி வரும்போதுதான் ஜெனரல் ராஸின் படைகளால் தாக்கப்படுவார். இந்தத் தாக்குதல்தான் Iron Man 2 படத்தில் ஃப்யூரியும் ஸ்டார்க்கும் பேசும் காட்சியின் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல், அதே காட்சியில், இன்னொரு திரையில், ஒரு பெரிய பாலைவனத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஒன்றும் காட்டப்பட்டிருக்கும். Thor படத்தில், தோரின் சுத்தியல் பூமியில் விழும் நிகழ்வு நினைவிருக்கிறதா? பூமியில் விழுந்த சுத்தியல், இப்பாலைவனத்தில் ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி, ஐயர்ன் மேனில் ட்ரெய்லராகக் காண்பிக்கப்பட்டது. அதேபோல், ஐயர்ன் மேன் முதல் பாகத்தில் நாம் இரண்டு நொடிகளே பார்த்த கேப்டன் அமெரிக்காவின் கேடயம், இந்த இரண்டாவது பாகத்திலும் தெளிவாகவே காட்டப்பட்டது.
இதோ இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தால், Iron Man மற்றும் Iron Man 2 ஆகிய படங்களில் மொத்தமாக ஒளிந்துள்ள அத்தனை க்ளூக்களையும் பார்க்கலாம்.
மேலே உள்ள வீடியோக்களில், Easter Egg என்றால், ரகசியம் என்று பொருள். அதேபோல், member of ten rings என்பது, Iron Man காமிக்ஸில் வரும் வில்லன் கும்பல்.
இதற்கடுத்து வெளிவந்தது, Thor. அதிலும் மிகச்சில க்ளூக்கள் இருந்தன. ஆனால் அதிலிருந்த க்ளூக்கள், இதுவரை வந்திருந்த தோர் காமிக்ஸ்களைப் பற்றியனவாகவே இருந்தன. இருந்தாலும், அந்தக் க்ளூக்களையும் பார்ப்போம் என்று நினைப்பவர்கள், இந்த வீடியோவைப் பார்க்கலாம்
இதன்பின்னர் கடைசியாக வெளிவந்த Captain America திரைப்படத்தில், வழக்கப்படி கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் சம்மந்தப்பட்ட க்ளூக்கள் இருந்தன. அவற்றையும் கீழே பார்க்கலாம்.
இந்த எல்லா வீடியோக்களின் பொதுவான அம்சமும், இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீயின் சில நொடி கேமியோக்கள்தான். இந்த அத்தனை படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அதனையும் இந்த வீடியோக்களில் பார்க்கலாம்.
சரி. இதுவரை நான்கே கதாநாயகர்களைத்தானே பார்த்திருக்கிறோம் (Iron Man, Hulk, Thor & Captain America). ஆனால் அவெஞ்சர்ஸ் படத்தில் மொத்தம் ஆறு நாயகர்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகிறதே? அது என்ன சங்கதி என்று வினவுபவர்களுக்கு, தோர் படத்தில் Hawkeye என்ற நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டான் என்று சொல்லலாம். தோரை வேட்டையாட வில் அம்பு கொண்டு அலையும் மனிதன் ஒருவனை நினைவிருக்கிறதா? மேலே தோர் வீடியோவிலும் அவன் வருவான். அதேபோல், ஆறாவது ஹீரோ, ஒரு பெண். Iron Man படத்தில், டோனி ஸ்டார்க்கின் அஸிஸ்டெண்டாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், ‘நடாஷா ரோமனாஃப் (அல்லது) கறுப்பு விதவை (Black Widow) என்ற ஹீரோ(யின்) வேடத்தில் நடித்திருக்கிறார்.
பெர்ஸனலாக, இந்த அவெஞ்சர்ஸ் படத்தில் எனக்குப் பிடித்த நடிகை ஒருவர் இம்முறை நடித்திருக்கிறார். Cobie Smulders என்ற அந்த நடிகை, தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர். நிக் ஃப்யூரியின் அஸிஸ்டெண்ட்டான Maria Hill என்ற வேடத்தில் நடித்திருக்கும் இவர், How I met your Mother தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமானவர். எனக்கு மிகப்பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று.
இத்தனை சிறப்புக்களோடு வெளிவர இருக்கும் The Avengers படத்தின் மையக்கருவானது, வில்லனை ஒழிப்பதில் இல்லை. மாறாக, இந்த ஒவ்வொரு ஹீரோவுமே, பயங்கரமான ஈகோ உடையவர்கள் என்று இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்ததை நினைவுகொள்ளுங்கள். ஒருபக்கம் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனான டோனி ஸ்டார்க். இவனுக்கு, உலகைக் காக்கும் சூப்பர்ஹீரோ Iron Man தான்தான் என்று ஒரு ஈகோ உண்டு. மட்டுமல்லாமல், எவரது பேச்சையும் இதுவரை ஸ்டார்க் கேட்டதே இல்லை. தான் செய்வதே சரி என்ற கோட்பாடு உடையவன். இந்த ரோலுக்கு ராபர்ட் டௌனி ஜூனியரை விடப் பொருத்தமானவர் யார்?
அதேபோல், அடுத்து ஹல்க். இது ஒரு மிருகம். கோபம் வந்தால் பெரிய ராட்சதனாக மாறி, எதிரில் இருப்பதையெல்லாம் அடித்து உடைப்பவன். அத்தகைய கோபத்தில் யார் பேச்சைக் கேட்கப்போகிறான்?
அடுத்து தோர். இவன் மனிதனே அல்ல. ஒரு கடவுள். கடவுளாக இருக்கும் ஒரு நபர், யார் பேச்சைக் கேட்பான்? இவனும் ஹல்க் போல ஒரு மகா கோபக்காரன். போதாக்குறைக்கு, உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதமான ஒரு சுத்தியலை வேறு எப்போதுமே வைத்துக்கொண்டு அலைபவன்.
கேப்டன் அமெரிக்கா மட்டுமே கொஞ்சம் சாதுவான நபர்.
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு ஓடும் எருமைகளின் மேய்ப்பர், நிக் ஃப்யூரி. எப்படி இவர்களை மேய்க்கப்போகிறார் என்பதே படத்தின் பிரதான அம்சம். இவர்கள் ஒவ்வொருவரும், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் முதலில் முரண்டு பிடித்து, பின்னர் நட்பாகி உதவிக்கொள்வது திரைக்கதையில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது என்று படித்தேன். ஆகையால், அதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.
வெள்ளியன்று இப்படத்தைப் பார்க்கிறேன். ஆகவே, இந்த சீரீஸை இத்துடன் முடித்துக்கொள்வோம் நண்பர்களே. இதுவரை இந்த சீரீஸைப் பொறுமையுடன் படித்துவந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வெள்ளியன்றே படத்தின் விமர்சனம் வெளிவந்துவிடும்.
இதோ The Avengers படத்தின் முழுநீள trailer.
- GuestGuest
பி.கு
1. The Incredible Hulk படத்தில் ஹல்க்காக நடித்த எட்வர்ட் நார்ட்டன், இப்படத்தில் இல்லை. அதற்குப் பதில், மார்க் ரஃபேலோ (Mark Ruffalo) ஹல்க்காகியிருக்கிறார்.
2. அவெஞ்சர்கள் ஏதேனும் ஆபத்தின்போது ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வது ‘Avengers Assemble!' என்ற கோஷத்தின் மூலமாகவே.
3. The Avengers படம், இதுவரை வெளியாகியுள்ள அத்தனை விமரிசனங்களிலும் அதிகபட்ச நட்சத்திரங்கள் வாங்கி, இது ஒரு அட்டகாசமான படம் என்று நிரூபித்துள்ளது.
4. நண்பர்கள், இப்படத்தை எனக்கு முன்னர் பார்க்க நேர்ந்தால், ஈகரையில் படம் எப்படி என்று தெரியப்படுத்த மறவாதீர்கள்.
5. படத்தைத் தமிழில் பார்த்தால், தமிழ் காமிக்ஸ் படித்த டக்கரான உணர்வு கிடைக்கும்.
6. The Avengers படத்தின் பட்ஜெட் - 220 மில்லியன் டாலர்கள். அதாவது, இதுவரை வெளிவந்துள்ள மிக அதிக பட்ஜெட் படங்களில், இதற்கு எட்டாவது இடம் (1. Pirates of the Caribbean: At World's end - $300m, 2. Tangled - $260m & 3. Spider Man 3 - $258m).
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத்தன மில்லியன் செலவு பண்ணி எடுக்கறது நம்ம புத்திக்கு மில்லி மீட்டர் அளவுக்கு கூட புரியரதில்ல.
புரட்சிக்கு புரிஞ்சா நமக்கு புரிஞ்ச மாதிரின்னு வீட்டுடலாம்.
புரட்சிக்கு புரிஞ்சா நமக்கு புரிஞ்ச மாதிரின்னு வீட்டுடலாம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
படம் பார்த்து விட்டேன் அண்ணா...
படம் அருமையாக அதிரடியாக நகைசுவையாக சிறப்பாக இருந்தது இந்த தொடரை படிக்கும் முன் தோர் படத்தின் தொடர்சி தான் அவெஞ்சர்ஸ் என்று நினைந்து இருந்தேன்...
தோர்,ஹல்க்,ஐயர்மேன் தவிர மற்ற மூவரையும் படம் பார்க்கும் போது தெரியவில்லை இப்பொழுது தான் தெரிந்தது.அனைவருக்கும் சமமான காட்சி அமைப்புகளையும் முக்கியதுவத்தையும் கொடுத்து படத்தை எடுத்து இருக்கிறார்கள்...
டோனி ஸ்டார்க்கின் நகைசுவை வசணங்களும்(தமிழில் பார்த்தேன்),சூப்பர் ஹீரோகளின் அறிமுக காட்சிகளிலும்,ஹல்க் இறுதியில் லோகியை துவைத்து எடுக்கும் போதும் திரையரங்கம் ரசிகர்களின் சத்தங்களில் அதிர்கிறது...
ஹல்க் இறுதியில் எப்படி கோபத்தை கட்டுபடுத்தி மற்றவர்களுடன் இனைந்தார் என்பது மட்டும் விடை தெரியாமலே உள்ளது...
இறுதியாக தோர்,லோகியை அவர்களது கிரகத்திற்க்கு கைது செய்து அழைத்து சென்று விடுகிறார் தண்டனைகள் கொடுப்பது அல்லது இதன் தொடர்சி அடுத்த பாகமாக வெளிவரும் என்று நினைக்கிறேன்...

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
ரா.ரமேஷ்குமார் wrote:படம் பார்த்து விட்டேன் அண்ணா...
படம் அருமையாக அதிரடியாக நகைசுவையாக சிறப்பாக இருந்தது இந்த தொடரை படிக்கும் முன் தோர் படத்தின் தொடர்சி தான் அவெஞ்சர்ஸ் என்று நினைந்து இருந்தேன்...
தோர்,ஹல்க்,ஐயர்மேன் தவிர மற்ற மூவரையும் படம் பார்க்கும் போது தெரியவில்லை இப்பொழுது தான் தெரிந்தது.அனைவருக்கும் சமமான காட்சி அமைப்புகளையும் முக்கியதுவத்தையும் கொடுத்து படத்தை எடுத்து இருக்கிறார்கள்...
டோனி ஸ்டார்க்கின் நகைசுவை வசணங்களும்(தமிழில் பார்த்தேன்),சூப்பர் ஹீரோகளின் அறிமுக காட்சிகளிலும்,ஹல்க் இறுதியில் லோகியை துவைத்து எடுக்கும் போதும் திரையரங்கம் ரசிகர்களின் சத்தங்களில் அதிர்கிறது...
ஹல்க் இறுதியில் எப்படி கோபத்தை கட்டுபடுத்தி மற்றவர்களுடன் இனைந்தார் என்பது மட்டும் விடை தெரியாமலே உள்ளது...
இறுதியாக தோர்,லோகியை அவர்களது கிரகத்திற்க்கு கைது செய்து அழைத்து சென்று விடுகிறார் தண்டனைகள் கொடுப்பது அல்லது இதன் தொடர்சி அடுத்த பாகமாக வெளிவரும் என்று நினைக்கிறேன்...
நன்றி ரமேஷ்
நானும் நேற்று பார்த்தேன் ... 3டி யில் மிக அற்புதமாக இருந்தது ,,,
முத்த காட்சி , ரத்த காட்சி ஏதும் இல்லை.. குடும்பதுடன் பார்த்து வரலாம்
2 மணி நேரம் 20 நிமிடம் தூள் கிளப்புகிறார்கள் ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2