ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

+19
hega
முரளிராஜா
dhilipdsp
அசுரன்
ரா.ரா3275
சிங்கம்
இரா.பகவதி
பிரசன்னா
balakarthik
ராஜா
மகா பிரபு
தர்மா
கே. பாலா
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
பிஜிராமன்
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
23 posters

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 6:10 am

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் :வணக்கம்: கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.

ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை சோகம் எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.

எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! 20120423201634

சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! 20120423205845

பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! 20120423205901

எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! 20120423205925

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by சிவா Fri Apr 27, 2012 6:32 am

//இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.//

குச்சிமிட்டாய் வாங்கி வரேன்னு சொன்னீங்களோ?

//மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.//

இரண்டு பேருக்கும் பகலிலேயே பசுமாடு தெரியாது......!!!

///மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு.///

நினைக்கும் பொழுதே மனதில் மகிழ்ச்சி ஆனந்தத் தாண்டவமாடது துவங்கிவிட்டது.

///பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்///

ஆம, உண்மைய மட்டும்தான் சொல்லனும்!

///கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ///

எப்படி பாஸ், பிளான் சக்சஸ்தானே! இன்னும் எத்தனை நாள்ல முடிச்சிடுவீங்க..!

///ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்///

பாவம் அண்ணா நீங்கள், உள்ளதையும் மறந்துவிடப் போகிறீர்கள். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

///கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.///

உங்களுக்குத் தெரியாதா அண்ணா, அதான்.... அந்த உக்கடம் பஸ் ஸ்டாப்பில படுத்திருப்பாங்களே...!!!

மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.


கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by பிஜிராமன் Fri Apr 27, 2012 7:13 am

பதிந்து விட்டீர்களா ஐயா, மிக்க மகிழ்ச்சி ஐயா.. ஜாலி ஜாலி நான் கடந்த இரண்டு நாட்கள் தர்மபுரி மற்றும் ஹோகேனக்கல் நண்பர்களுடன் சென்றிருந்தேன், தாங்கள் இந்த பதிவை இரண்டு நாட்களில் பதிவதாக கூறியிருந்தீர்கள், நான் கைபேசியில் ஈகரையை திறந்து பார்த்தேன் பதிவு என் கண்ணுக்கு புலப் படவில்லை, உடனே பகவதிக்கு தொடர்பு கொண்டு ஐயா எந்த பகுதியில் பதிவு ஈட்டிருக்கிறார் என்று கேட்கலாம் என்று நினைத்து, தொடர்பு கொண்டேன், ஐயா இன்று இரவு பதிவதாக கூறியுள்ளார் என்று பகவதி கூறினார், பின் நாங்கள் இருவரும் சற்று உரையாடிவிட்டு இணைப்பை துண்டித்தோம்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு.


ஐயா, நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது எனக்குள் எழுந்த எண்ணத்தை அப்படியே கூறிவிட்டீர்கள், நாம் சாப்பிட டைனிங் டேபிள் இல் அமர்ந்திருந்த பொழுது நான் தங்களை அப்பா என்று அழைக்கலாமா என்று யோசித்தேன், இருந்தாலும் ஐயா என்றே அழைத்து பழகிவிட்டதால், அப்படியே தொடர்வோம் என்று ஐயா என்றே அழைத்து பேசினேன். தங்களை அப்பா என்று அழைக்கலாமே என்று சில முறையும் அப்பா என்று அழைக்காமல் விட்டு விட்டோமே என்று பைக் இல் திரும்பி செல்லும் பொது சில முறையும் எண்ணி பார்த்தேன். இனி அப்பா என்றே அழைக்க ஆசைப்படுகிறேன் அப்பா. புன்னகை

இனி நம் சந்திப்பை பற்றி கூறுகிறேன்

அப்பா என்னை தொலைபேசியில் ஒரு முறை அழைத்திருந்தார், நான் அப்பொழுது வெளியே இருந்ததால், எடுக்க முடியவில்லை, வந்து என் கைபேசியில் அப்பாவின் அழைப்பை கண்டதும் அச்சச்சோ என்று உடனே அப்பாவிற்கு தொடர்பு கொண்டு பேசியதும், அவர் கோவை வருவதாகவும் நாம் சந்திக்கலாமா என்றும் கூறினார், எனக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது, உடனே சம்மதம் தெரிவித்து, பகவதியையும் தொடர்பு கொண்டு எங்கள் திட்டத்தை வகுத்துக் கொண்டோம். (எதையும் பிளான் பண்ணி பண்ணனும்) சில தவிர்க்க முடியாத சூல்நிலைகளால் அந்த பிளான் ஐ சரியாக நிறைவேற்ற இயலவில்லை.

நானும் பகவதியும் குறித்த இடத்திற்கு செல்ல கால தாமதம் ஆனது, நாங்கள் கரும்பு ஆராய்சியாளர்கள் தங்கும் விடுதிக்கு உள்ளே, செக்யூரிட்டி இன் அனுமதியோடு சென்று பார்த்தால், அப்பா எங்களுக்காக, தன்னுடைய குறுகியகால துணைவனான (அப்பாவின் ஊன்றுகோலை பற்றியும் நாங்கள் பேசினோம் புன்னகை ) தன் ஊன்றுகோலுடன் எங்கள் வருகைக்காக காத்திருந்து, நாங்கள் சென்றதும் வரவேற்றது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து விடுதியின் முகப்பிற்கு சென்றோம், அங்கு அம்மா நின்று எங்கள் இருவரையும் புன்சிரிப்புடனும் அன்புடனும் வரவேற்றார்கள்.

பின், விடுதிக்குள் நுழைந்து அப்பாவின் அறைக்கு சென்று, சிறந்த உரையாடலுக்கு முன் ஒத்திகை எடுப்பது போல சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம், உடனே அப்பா, உண்டு விட்டு வந்து ஆர அமர உரையாடலாம் என்று கூறினார், நாங்களும் அதை ஆமோத்திது உண்பதற்கு சென்றோம். அங்கே பற்பல வகையராக்கள், சிலபல தட்டுகளில் எடுத்து வைக்கப் பட்டிருந்தது, நானும் பகவதியும் அதை ஓரக்கண்ணில் பார்த்து விட்டு, டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்தோம். சப்பாத்தி, அன்னம், பருப்பு, ரசம், சப்பாத்தி குருமா, சாம்பார், தயிர், கேரட் பொரியல் என பல ஐட்டங்கள். அப்பா எங்களுக்காக நறுக் முறுக் எலும்பு வகை செயலாம் என்று எதிர்பார்திருக்க அது நிகழாமல் போகவே, எங்களுக்காக உணவு தயாரிப்பவர்களிடம் ஆம்ப்ளேட் செய்ய பணித்திருந்தார் அதேபோல் எங்களுக்கு வெங்காயமும் மிளகாயும் தூக்கலாய் ஆம்ப்ளேட் பரிமாறப் பட்டது. நானும் பகவதியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்பாத்தியையும் அன்னத்தையும் பொரியலையும் விழுங்கினோம். ஒவ்வொரு உணவும் மிகவும் அருமையான சுவையுடன் இருந்தது. திரிஸ் மோர் ஃபோர்ஸ் மோர் என கேட்க தோன்றுகிறது.

நாங்கள் சரியாக உண்டு எழுந்து கை களுவ செல்லும் நேரத்தில், ஒரு சிங் கூட்டம், உணவை வேட்டையாட உள்ளே நுழைந்தார்கள், அப்பொழுது அப்பா நல்ல வேலை நாம் முதலிலேயே உண்டுவிட்டோம் இல்லையென்றால் என்ன ஆவது என்று நகைச்சுவையாக கூறியது எங்களுக்கு மெல்லிய சிரிப்பை உண்டாக்கியது. (கனத்த சிரிப்பு தான் வந்தது நாங்கள் இடம் பொருள் ஏவல் தெரிந்து அடக்கிக் கொண்டோம்). பின், உரையாடல் அப்பாவின் அறையில் துவங்கியது. மிகவும் அருமையான உரையாடல்கள்.

இங்கு நான் கூற விரும்பும் இன்னொரு விஷயம், நாங்கள் பேச பேச எங்களை அருமையாக புகைப்படம் எடுத்தது அம்மா தான். அம்மாவும் எங்களுடன் அம்மாவிற்கே உரித்தான அன்போடு பேசி உபசரித்தார்கள். நேரம் 9 ஐ தாண்டி இருந்தபொழுது அம்மா எங்களிடம் வந்து, நான் உறங்க செல்கிறேன், பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறி விடைபெற்று உறங்கச் சென்றார். அம்மா எப்பொழுதும் விரைவில் தூங சென்று காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் உடையவர்கள். இதை வைத்தும் எங்களின் உரையாடல் தொடர்ந்தது.

இந்த உரையாடலில் இருந்து நான் ஒரு மிகப் பெரிய விஷயத்தை தெரிந்து கொண்டேன், அது என்னவென்றால், எழில்மலர் அக்கா தன் தேர்விற்காக காலை நேரத்திலேயே எழுந்து படிக்கும்பொழுது ஐயாவும் அம்மாவும் எழில் அக்காவுடனேயே எழுந்து தாங்களும் ஏதாவது படிப்பதோ அல்லது தங்கள் வேலைகள் எதையாவதயோ பார்பார்க்கலாம், இது மிகவும் அருமையான செயல், குழந்தை படிக்கும் பொழுது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தாள், குழந்தைக்கும் தூக்கம் வரவே வாய்ப்பு உள்ளது. ஆக, நாமும் அவர்களுடன் எழுந்து அந்த நேரத்தில் ஏதாவது பணியை செய்தோம் என்றால், இதுவே அவர்களுக்கு படிக்க மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும். பிற்காலத்தில் நானும் இதை பின்பற்ற வேண்டும் என்று அப்பொழுதே நான் முடிவெடுத்து விட்டேன்.

மொத்தத்தில், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அப்பா, தங்களுடன் அந்த மாலைப் பொழுதை கழித்தது. மீண்டும் இதுபோன்றதொரு வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளேன். புன்னகை

இன்னும் நிறைய கூறலாம், இன்னும் பகவதி வந்து தான் அனுபவத்தை கூற வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தை இத்துடன் முடிக்கிறேன்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by பிஜிராமன் Fri Apr 27, 2012 7:58 am

இரண்டு பேருக்கும் பகலிலேயே பசுமாடு தெரியாது......!!!


உங்களுக்கு மட்டும் அப்டியே தெரிஞ்சிட்டாலும், வாரத்துக்கு எழு நாள் கண் டாக்டர் அ போயி பார்க்கிறவருக்கு குசும்ப பாரு...... நான் ரெடி, நீ ரெடியா சிரி

ஆம, உண்மைய மட்டும்தான் சொல்லனும்!


எப்டி அண்ணா, உங்க கூட சேர்ந்ததுக்கு அப்றம் எங்க கிட்ட இருந்து மட்டும் எப்டி இப்டி எதிர்பார்க்கிறீங்க...குரு எவ்வழியோ சீடர்களும் அவ்வழி தான......உண்மையா சொல்லனுமாம் உனமைய, நாங்க பாட்டுக்கு உண்மையா சொல்ல போயி அதுல யாராவது நாலு பேரு கோவப்பட்டு எங்கள போட்டு தள்ள பிளான் போட்டா நீங்களா வந்து காப்பாத்துவீங்க......

உங்களுக்குத் தெரியாதா அண்ணா, அதான்.... அந்த உக்கடம் பஸ் ஸ்டாப்பில படுத்திருப்பாங்களே...!!!


ச்சே ச்சே, குருக்கு இணையா நாங்க படுக்குறது இல்லை, அதுனால ஏதாவது ஏ‌சி ஹோட்டல் ல ரூம் போட்டு தான் படுக்குறது அண்ணா...... சிரி


மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.

ஃபுல் ஆ கலாய்சிட்டு, கடைசில இப்டி சொன்னா நாங்க விற்றுவோம் நு நினைப்பா அண்ணா... கோபம்

மிக்க மகிழ்ச்சி அண்ணா, அருமையான பின்னூட்டம் நக்கல் நாயகம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 9:46 am

சிவா wrote:
[b]மூவரும் சந்தித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற உறவுகளின் சந்திப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும். நம் உறவுகள் பலப்பட்டுக் கொண்டே இருக்கட்டும்.
மிகவும் நன்றி சிவா மகிழ்ச்சி விரும்பினேன் உங்களின் கலாய்ப்பை மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by யினியவன் Fri Apr 27, 2012 10:07 am

அருமையான பதிவு அய்யா. நாங்களும் உங்களுடன் இருந்த உணர்வைத் தந்தது.

ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.

பகவதியும் சரியான நேரத்தில் வராததற்கும் அதே காரணம் தான். இள ரத்தங்கள் நம் நாட்டை விவசாய நாடென அறிந்து அல்லும் பகலும் அயராது கடலை சாகுபடி செய்கிறார்கள்.

என்னைப் பற்றியும் பேசினேன் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது. சிவா சொல்ற மாதிரி என்னை போட்டுத் தள்ள பேசி இருந்தாலும் உங்கள் நாவிலும், எண்ணங்களிலும் நான் மின்னி மறைந்தது சந்தோஷமே.

ராமன் சொன்னாரே அம்மா இரவு 9 மணிக்கு உறங்க சென்று விடுவார்கள் என்று - நீங்கள் வெண்பா இயற்றும் சமயம் தானே அது? உங்களோடும் வெண்பாவோடும் மாரடிக்க முடியாது என்று உறங்க சென்று விடுவார்களோ?

படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் போனதால் தங்கள் மகளுடன் சேர்ந்து படிப்பது மிக நல்ல விஷயம் அய்யா.

என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?


Last edited by கொலவெறி on Fri Apr 27, 2012 11:09 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by பாலாஜி Fri Apr 27, 2012 11:00 am

அருமையான பதிவு . நாங்களும் உங்களுடன் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது.

கொலைவெறி மற்றும் சிவாவின் பின்னூட்டம் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by ஹர்ஷித் Fri Apr 27, 2012 11:19 am

மனதை நெகிழ வைத்தது ஐயாவின் பதிவும் பி‌.ஜி - இன் பதிலும்..., வாய்ப்பை தவறவிட்ட எண்ணம் என்னில்
விரைவில் சந்திப்பேன் அனைவரையும்.,

பதிவிர்க்கு நன்றி ஐயா.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by பிஜிராமன் Fri Apr 27, 2012 12:57 pm

ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.

இளைஞர்கள் விவசாயத்தை மறந்து விட கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நானும் பகவதியும் இப்படி கடலை சாகுபடியில் குதித்துள்ளோம்

என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?

இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் செய்ய வில்லை அண்ணா, தாங்களாக இருந்தால் தான் கொலைவெறியுடன் சில காரியங்களை செய்வோம்.....நீங்க சிக்காமயா போயிருவீங்க......அப்பா வச்சிக்கிறோம்...... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by கே. பாலா Fri Apr 27, 2012 9:03 pm

ஆஹா ....ரகசியமாய் ஒரு "மினி "பதிவர் மாநாடு நடந்துடுச்சே !... மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல பதிவுகள் !..பின்னூட்டங்கள் ....தொடரட்டும் சந்திப்பு... சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! Empty Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum