புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
2 Posts - 1%
prajai
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
2 Posts - 1%
சிவா
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
435 Posts - 47%
heezulia
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
30 Posts - 3%
prajai
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_m102012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

2012 டிசம்பர் உலகம் அழியும் ! [264Vote ]

  • 1. நான் நம்புகிறேன்,

    7428%
  • 2. நான் நம்பவில்லை

    13451%
  • 3. எனக்கு தெரியவில்லை

    5621%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 11:39 pm

பகுதி 1

மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது மயான் மக்கள் என்பதை அறிந்து வியப்பும் அடைந்திருக்கிறோம்.

இத்தகைய மயான் மக்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்றால் அதிசயப்பட வேண்டாம். அமெக்காவில் தான் வாழ்ந்தார்கள் முகத்தில் பல வண்ண கோடு போட்டு தலையில் பறவையின் இறகுகளானால் தொப்பி அணிந்து மிருக தோல்களை ஆடையாக அணிந்து அமெக்காவின் பழங்குடி மக்கள் என காட்டப்படுவார்களே செவ்விந்தியர்கள் அவர்கள் தான் மாயர்கள்,

அவர்களின் நாகரீகம் தான் மயான் நாகரீகம் அவர்கள் காலத்தை கி.மு. 2600-ல் தொடங்கியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2600 எல்லாம் இல்லை, மாயர்களின் காலம் அதற்கு முன்பே துவங்குகிறது என்று ஒரு சாரர் கருதுகிறார்க்ள. அப்படி சொல்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாக போப்பல் வூ என்ற மாயர்களின் இதிகாச புத்தகத்தை காட்டுகிறார்கள். எது எப்படியோ மாயர்களின் காலம் என்பது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது பல அரசியல் காரணங்களால் மாயர்கள் வாழ்ந்த அமெரிக்க பகுதி மெக்சிகோ, கௌத மாலா, பெலிஸ், ஹோண்டுராஸ், எல் சார் வாடார், என்று தனிதனியாக பிரிந்து கிடக்கிறது.

விண்வெளியில் பால்வழி என்ற ஒரு பகுதியியை நாம் அறிவோம். இந்த பால்வழி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது ரேடார் கருவிகள் உருவான பிறகு அதாவது 1945-ல் பிறகு தான். ஆனால் மாயர்கள் 5000-வருடத்திற்கு முன்பே பால்வழி மண்டலத்தை நன்கு அறிந்து அதை பற்றிய விவரங்களை குறித்து வைத்து இருக்கிறார்கள்.

மேலும் 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரியன் நெபுல்லா என்ற விண்வெளி கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1880-ல் தான் இந்த விண்மீன்கள் தொகுப்பு புகைபடமாக எடுக்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் வயதுடைய மாயன் ஒவியங்களிளும் சுவர் சிற்பங்களிளும் இந்த விண்வெளி கூட்டத்தை துல்லியமாக வரைந்து செதுக்கி வைத்துள்ளனர்.

பண்டைய இந்திய வானியல் ஆய்வாளர்களும் இதற்கு பிரஜாபதி என பெயரிட்டு அழைத்துள்ளனர். ஆனால் நவீன விஞ்ஞானம் பல கருவிகளை வைத்து கண்டுபிடித்த ஒரியன் நெபுலாவை மாயர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் கண்டறிந்து உள்ளது விடை கிடைக்காத அதிசயமாக இன்று நிற்கிறது.

மெக்சிகோவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமிடு ஒன்று உள்ளது. அது சீசென் யீட் என்ற நகரில் இன்றும் உள்ளது. இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த பிரமீட்டின் நிழல் இரண்டு சிறகுகள் முளைத்த பாம்புபோல வருடம் தோறும் மார்ச் 21-ம் தேதியும், செப்டம்பர் 23-ம் தேதியும் பூமியின் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை காண உலகெங்கும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் அந்த நகரத்தில் குவிகிறார்கள்.

பிரமீட்டின் நிழல் சிறகு முறைத்த பாம்பாக விழும்படி மாயர்கள் கட்டிடத்தை ஏன் உருவாக்க வேண்டுமென்று கேட்டால் ஆதிகால மாயன் மதத்தின் கடவுளான கேட்ஸல்கோயாட்டல் என்பவரின் உருவம் சிறகு உள்ள பாம்பு வடிவம் தான். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. வேண்டு மென்றால் மாயர்களின் கட்டிட கலையின் திறமையை பாராட்டலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை இதையும் தாண்டிய அதிசயமாகும், அதாவது ஒர வருடத்தில் பகலும் இரவும் சமமாக இருக்கும் நாட்கள் மார்ச் 21-ம் செம்டம்பர் 23-ம் தேதியும் தான் மாயர்கள் காலத்தை அளப்பதில் எத்தனை திறமைசாலிகளாக இருந்தால், இது சாத்தியம்,

சூரியன் இயக்கத்தை மிக நூணுக்கமாக ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே சம நோக்கு நாளையும், நிழல் உருவம் வரும்படியான தோற்றத்தையும் உருவாக்க முடியும். சூரியனுடைய இயக்கத்தை மட்டுமல்ல சந்திரனின் சலனத்தையும் அவர்கள் நன்கு அறிந்து நாட்களை பற்றிய கணிதத்தை ஏற்படுத்தி இன்று நாம் உபயோகப்படுத்துகின்ற நாட்காட்டி போன்ற காலண்டரையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காலண்டரின் பெயர்தான் ஒரியன் காலண்டர்.

ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன் காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான். ஆனால் மாதங்கள் பதினெட்டு, ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும். இந்த காலண்டருக்கு ஹாப் என்று பெயர்.

இந்த மாதத்தின் நாட்களை கூட்டினால் 360 நாட்கள் தான் வரும். மீதமுள்ள ஐந்து நாட்களை அதிஸ்ட்டமில்லாத நாட்கள் என்று மாயர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். மேலும் இந்த ஹாப் காலண்டர் சாதாரணமக்கள் உபயோகபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான்.

தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு, இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம், அதாவது இருநூற்றி அறுபது நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப், இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்,

அந்த இணைப்பு ஏற்படும் வருடத்தல் உலகில் மாபெரு மாற்றங்கள் ஏற்படும் என மாயர்கள் சொல்கிறார்கள் இதுவரை உலகில் ஏற்பட்ட பெரிய யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், மாபெரும் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்துமே இத்தகைய வருட சந்ததியில் தான் நடந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். இந்த இஸல்கின் காலண்டர்தான் 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ம் தேதியோடு முடிவடைகிறது. அந்த தேதியில் உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கும் என்று மாயன் தீர்க்கதரிசனம் சொல்கிறது.

இந்த மாயன் தீர்க்க தரிசனம் கண்டிப்பாக பலிக்குமா? இதுவரை மாயன் தீர்க்க தரிசனத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எதாவது உண்டா? என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு அடுக்கடுக்கான பதில்களை தீர்க்க தரிசனத்தின் ஆதாரவாளர்கள் தருகிறார்கள். அந்த ஆதாரங்கள் இயேசுநாதர் பிறப்பதற்கு முந்தைய காலத்திலிருந்து, ஒபாமா காலம் வரையில் நீளுகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை பார்த்தாலே நெஞ்சை அடைத்து கொண்டுவரும்.

தொடர்ச்சி பகுதி 2 ல்

தமிழ் சோர்ஸ் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 18, 2012 11:47 pm

மாயன் தீர்க்க தரிசனங்களில் நல்லவைகள் ஏதுவுமே இல்லையா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 11:51 pm

இளமாறன் wrote:மாயன் தீர்க்க தரிசனங்களில் நல்லவைகள் ஏதுவுமே இல்லையா சோகம்
இருந்தாலும் சொல்லமாட்டார்கள் இளா!..2012 போன்ற திரைப்படங்களின் வியாபாரம் தானே முக்கியம் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 18, 2012 11:57 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:மாயன் தீர்க்க தரிசனங்களில் நல்லவைகள் ஏதுவுமே இல்லையா சோகம்
இருந்தாலும் சொல்லமாட்டார்கள் இளா!..2012 போன்ற திரைப்படங்களின் வியாபாரம் தானே முக்கியம் சிரி

இரன்டு நாள்களுக்கு முன்பு சூரியனின் ஒரு பகுதி வெடித்து சிதறிய காட்சி பார்த்த பொழுது உலகம் அழியும் என்று தான் நினைக்க சொல்கிறது ..ஆனால் எங்கெங்கும் உலகம் ஒரு பகுதி அழியும் பொழுது .. இன்னொரு பக்கம் மனிதர்களின் மிக உயர்ந்த நல் உள்ளம் வெளிப்பட்டு உதவிகள் பெருகி ஈடு செய்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2012 உலகம் அழியுமா? நம்பாதீர் ! பகுதி-7 Ila
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Apr 19, 2012 12:10 am

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 19, 2012 12:14 am

பகுதி-2
மாயர்களின் அழிவு யாரால் ஏற்படும் அந்த இனம் அழிந்த பிறகு அவர்கள் வாழ்ந்த பகுதியான அமெரிக்கா எப்படி வளரும்? உலகத்தை எப்படி ஆட்டிவிக்கும்? அமெரிக்க, ரஷ்ய பனிப்போர், செங்கிஸ்கான், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின் மா.சே.தூங், மகாத்மா காந்தி போன்றோர்களை பற்றியும் மிக துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.

உலகம் அழிய போகும் காலத்தில் மனிதர்களின் மனோநிலை எப்படி மாறி அமைந்திருக்கும்? இயற்கை சூழல் எப்படி மாறும்? அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை எவ்வாறு சுருக்கும். என்ற விவரங்கள் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் ஒரளவு நடந்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ஒரியன் தீர்க்கதரிசனம் நடந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால் இந்த தீர்க்க தரிசனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது.

அது என்ன சிக்கல் என்று சிறிது நேரம் கழித்து பார்ப்போம். அதற்கு முன்பாக தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லப்படுபவைகள் என்ன? அது மனிதர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பதை பார்ப்போம். தீர்க்க தரிசனம் என்ற வார்த்தைக்கு நேரிடையான தமிழ் பொருள் உறுதியான பார்வை என்பதாகும் இந்த சக்தி கடந்த காலம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்ந்தவர்களுக்கே ஏற்படும் என்று யோக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

யோக சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் எழுதிய பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல் எந்தயோகி தனது மனதை நினைத்த மாத்திரத்தில் புறப்பொருளிலிருந்து விடுவித்து கொள்கிறானோ அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் பார்க்கும் தகுதி பெற்றிருக்கிறானோ அவனே முக்காலத்தையும் உணர முடியும் என்று கூறி அதற்கான மனபயிற்சியும் உடல் பயிற்சியையும் விரிவாக கூறி செல்கிறது.

அதன் படி நடந்தால் நிச்சயம் சாதாரண மனிதன் கூட யோகி ஆகிவிடலாம். என்பது நடைமுறை உண்மை. ஆனால் இப்படி பயிற்சி செய்து முக்காலத்தை அறிவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட பிறக்கும் போதே இந்த தகுதியோடு பிறப்பவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் கார்கி, மைத்ரேயி கௌதம புத்தர், இயேசுநாதர் என்று தொடங்கி சமீபத்தில் முக்தி பெற்ற காஞ்சி மகாபெரியவர் வரை சொல்லலாம். ஆனால் இவர்களில் உலகத்தில் நடக்க போகின்றவைகளை சொன்வர்கள் மிகவும் குறைவு, அப்படி குறைவான தீர்க்க தரிசிகளில் நாஸ்டர்டாமஸ் ஒருவர் இவர் ஜோதிடரோ, குறி சொல்பவரோ அல்ல, பிறப்பிலிருந்தே அதீத ஆற்றல் பெற்ற அதிசய மனிதர்.

நாஸ்டர்டாமஸ் ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் 1984-ம் வருடம் அக்டோம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற போகும் ஒரு சோக சம்பவத்தை முன்கூட்டியே சொல்கிறார் உலகத்தின் தென்பகுதியில் மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பத்தில் இரும்பு பெண்மணி இரண்டாம் முறையாக சிம்மாசனம் ஏறுவார். அந்த நூற்றாண்டு முடிய பதினாறு வருடங்கள் பாக்கி இருக்கும் போது தன் பாதுகாவல்களாயே கொல்லப்படுவார். என்று சொன்னார். அதாவது இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு மிகபெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய திருமதி, இந்திரகாந்தி அம்மையாரின் படுகொலையை தான் இப்படி குறிப்பிடுகிறார்.

பிரெஞ் புரட்சிக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் அரசனாக நெப்போலியன் வருவதையும் அவன் ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொள்வதையும், கடைசி காலத்தல் ஹெலினா தீவில் சிறைப்பட்டு பைத்தியமாகி மாண்டு போவதையும் நெப்போலியன் தோன்றுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டர்டாமஸ் சொல்லி வைத்துள்ளார்.

இது மட்டுமல்ல ஹிட்லரின் தலைமையில் ஜெர்மன் வீறுகொண்டு எழுவதையும் வல்லரசுகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்வதையும் பின்னர் ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு படுதோல்வியடைந்து கண்ணுக்கு தெரியாமலேயே மாண்டு போவதையும் ஹிட்லரின் காலத்திற்கு பிறகு ஜெர்மன் நாடு கிழக்கு மேற்கு என இரண்டாக பிளவு படுவதையும் நாஸ்டர்டாமஸ் முன்கூட்டியே சொல்லி வைத்துள்ளார்.

ரஷ்யாவில் ஜார்மன்னனின் ஆட்சி வீழ்ந்து பொதுவுடமை அரசு மலரும் என்பதை கூறிய நாஸ்டர்டாமஸ் அந்த பொதுவுடமை அரசு முன் மண்டையில் தேள் போன்ற மச்சம் உடைய தலைவரால் அதிகாரத்தை கைவிடும் என்று கூறினார். சோவியத் யூனியனில் முன்னந்தலையில் மச்சம் கொண்ட தலைவர் மிகையில் கோப்பச்சேவ் ஆவார். இவர் தான் பொதுவுடமை அதிகாரத்ததை விலக்கி கொண்டு ரஷ்யாவில் ஜனநாயம் ஏற்பட வழி வகுத்தார் என்பதும் உலகில் பெரும் வல்லரசுகளுக்கிடையில் நடைபெற்று கொண்டிருந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார். என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

உலகம் முழுவதும் நாஸ்டர்டாமஸ் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் பல தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களின் தீழ்க்கதரிசனமும் பல நேரங்களில் சரியாக இருந்திருக்கிறது. 1986-ல் குஜராத் மாநிலத்தில் பாபுராம் பட்டேல் என்ற ஒரு அதிசய மனிதர் இருந்தார். அவர் இந்தியாவை பற்றி ஏராளமான தீர்க்க தரிசனங்களை சொல்லியிருப்பதாக கேள்வி. அதில் மிக முக்கியமானது இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க பகுதியில் அயல்நாட்டு பெண்மணி ஒருவர் இந்தியாவின் அரசாங்கத்தை திரைமறைவிலிருந்து இயக்குவார் என்றும், அவருக்கு பிறந்த வாரிசு கூட இந்தியாவின் தலைமை பதவிக்கு வரும் என்றும் சொல்லி இருக்கிறராம். இந்த வார்த்தையின் சாயலே சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சுட்டி காட்டுவதை உணரலாம்.

நான் மிகவும் சிறியவனாக இருக்கும் போது எனது சொந்த கிராமத்தில் மிக வயதான பெண் பூசாரி ஒருவர் இருந்தார் அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு குறி சொல்லமாட்டார். திடிரென்று அவருக்கு வரும் ஆவேசத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகளை சொல்வார். அப்படிதான் ஒருமுறை கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது திடிரென ஆவேசம் வந்தவராய் நல்லதலை ஒன்று விழப்போகிறது. நாடு கெடப்போகிறது என்று கூறிவண்ணம் மயங்கி விழுந்தார். அவர் அப்படி சொல்லிய ஒரு மாதத்திற்குள்ளேயே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திடிரென காலமானார்.

இப்படி ஏராளமான தீர்க்கதரிசிகளும், தீர்க்க தரிசனங்களும் உலகம் முழுவதும் உண்டு, ஆனால் இவர்களிலிருந்து நாஸ்டர் டாமஸ் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எழுதி வைத்த தீர்க்க தரிசனங்கள் அனைத்துமே தெளிவானவைகள். மிக துல்லியமான கணக்கின் விடைபோல தெரியகூடியவைகள்.

ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எழுதி வைத்துள்ள பாடல்களை சாதாரணமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. சம்பவம் நடந்த பிறகு அடடா இதை தான் அவர் அப்படி சொன்னாரா? என்று துன்பப்படவைக்கும. ஏன் அவர் தெரிந்த புரிந்த பாஷையில் தெரியாத வகையில் எழுதிவைத்துள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆச்சர்யமான ஒரு உண்மை தெரியவருகிறது.

இந்த உலகத்தில் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எல்லாமே கடவுள் என்ற மகாசக்தியின் எண்ணப்படி நடந்து வருகிறது. இதை இறைவனின் திரு உள்ளம் என்று மெய்ஞானி கருதுகிறான், இயற்கையின் ஒழுங்குமுறையான செயல்பாடு என்று விஞ்ஞானி நம்புகிறான். இரண்டிலும் கருதுகோள்கள் வேறுவேறு என்றாலும் அடிப்படை உண்மை என்னவோ ஒன்று தான்.

நம்மை சுற்றி நடைபெறுகின்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தாலே அடுத்து நடக்கப்போவதை நான் கூட கணித்துவிடலாம். ஆனால் அப்படி கணித்ததை எல்லாம் வெளிபடையாக சொல்லி விட்டால் சகஜமான உலக இயக்கத்திற்கு குந்தகம் ஏற்பட்டுவிடும். அதே நேரம் வீணான மன சஞ்சலங்களும் ஏற்படலாம். தவிர்க்கவே முடியாத ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதை தவிர்த்து விடலாம் என்று நினைப்பது அறிவீனம். ஒரு வழியில் இல்லை என்றாலும் இன்னொரு வழியில் அது நடந்தேதீரும். என்பதை அனுபவபூர்வமாக அவர் உணர்ந்ததினால் தான் மறைபொருளாக சொல்லி சென்றிருக்கிறார். இனி அவரின் துல்லியமான தீர்க்கதரிசனம் ஒன்றை பார்ப்போம்.

உலகில் அமெரிக்கா என்ற ஒரு கண்டத்தை கண்டுபிடிக்காத காலத்தில் நாஸ்டர்டாமஸ் சுகந்திரமாக வாழ விரும்பிய சிலர் தனியாக ஒரு நாட்டை உண்டாக்குவர்கள். அது உலகின் முதல்தர பணக்கார நாடாக திகழும் என்று கூறினார். அவர் குறிப்பிட்டது அமெக்காவை தான் என்பது சொல்லாமலேயே விளங்கும். மேலும் அந்த நாட்டில் இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்திலேயே நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரத்தியே ஆக்கிரமிக்கும், பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான், அவன் எதனிடமும் இரக்கம் காட்டமாட்டான். என்று சொல்வதோடு இல்லாமல், வானில் இரண்டு இரும்பு பறவைகள் போதும் புகையும் நெருப்பும் புது நகரத்தையே மூடும் என்கிறார்.

இந்த தீர்க்க தரிசனத்தை படித்த பலர் பூவியின் அட்சரேகை நாற்பத்தி ஐந்தாவது டிகிரியில் நியூயார்க் நகரம் இருக்கிறது. இதைத் தான் அவர் புது நகரம் என்று அழைக்கிறார் எனவே வானத்திலிருந்து இரண்டு விண்கற்கள் வந்து அந்நகரை தாக்க கூடும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்கள் யார் கண்ணிலும் பயங்கரவாதத்தின் பேரரசன் என்ற வாசகம் தட்டுபடவில்லை போல்தெரிகிறது. நாஸ்டர்டாமஸ் அந்த பயங்கரவாத அரசன் யார் என்பதை பற்றியும் அவனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றியும் சிறிய விளக்கங்கள் கொடுத்துள்ளார்.

மாபெரும் அராபிய நாட்டிலிருந்து வருவான். வலிமை கொண்ட தலைவனாக உருவெடுப்பான் அவனினும் கொடியவன் அதற்கு முன் யாரும் உலகில் இருந்திருக்க மாட்டார்கள். மானிட வர்க்கமே அவனை கண்டு அஞ்சும் அவன் நீலதலைபாகை அணிந்திருப்பான், அவனால் உருவாகும் போர் இருபத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சொல்கிறார்.

ஆக நாஸ்டர்டாமஸ் சொல்லும் பயங்கரவாதத்தின் பேரரசன் ஒசாமா பின்லேடனாக இருக்கலாம். அல்லது அவனது கருத்துக்களால் உருவாகும் புதிய கொடியவானாகவும் இருக்கலாம். ஆனால் இரண்டு இரும்பு பறவை என்று அவர் குறிப்பிட்டது உலகவர்த்தக மையத்தையும், பெண்டகனையும் தாக்கிய விமானம் என்ற இரும்பு பறவைகள் என்பது மட்டும் என்பது சர்வ நிச்சயமான உண்மை.

சரி இவர் இத்தனை தீர்க்க தரிசனங்கள் சொல்லியிருக்கிறார். 2012-ல் உலகம் அழியும் என்று சொல்லியிருக்கிறாரா? நிச்சயம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் இரண்டாயிரத்தில் துவங்கும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் இருபத்தியேழு வருடங்கள் தொடர்ந்து நடக்கும் என்று எப்படி சொல்வார். பன்னிரெண்டு வருடங்கள் தான் நடக்கும் என்று சொல்லிருக்கலாமே எனவே ஒரியன் காலண்டர் விஷயம் சரியான முடிவு அல்ல என்ற முடிவுக்கு தான் வரவேண்டியுள்ளது.

அந்த முடிவை நாம் எடுப்பதற்கு முக்கிய காரணம் உண்டு, புகழ் பெற்றிருந்த மாயன் நாகரீகம் கிறிஸ்த்துவ மத வெறியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சில எச்சசொச்சங்கள் தான் மீதம் கிடைக்கிறது. ஆதிகால ஐரோப்பாவிலும், அரேபியாவிலும் ஒரு மூடதனம் மிக கொடுரமாக ஆட்சி செய்து வந்தது. அதாவது பைபிளில் சொல்லப்படாத கருத்துக்களோ அல்லது கூர்-ஆனில் இல்லாத கருத்துக்களோ எந்த தனிமனிதனோ அல்லது புத்தகமோ அல்லது நிறுவனமோ சொன்னால் அதை சாத்தானின் வேலை என்று கருதி முற்றிலும் அழித்துவிடுவார்கள்.

அவர்களால் அழிக்கப்பட்ட அறிவு கருவூலங்கள் ஏராளம். இதனால் உலகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் ஏராளும் என்று அடித்து சொல்லலாம். கி.பி. 1517-ம் ஆண்டு நாடு பிடிக்கும் ஆசையில் மாயர்கள் மீது போர் தொடுத்த ஸ்பெயின் நாட்டு கிறிஸ்த்துவர்கள் 90% மாயன் மக்களையும், 95% மாயன் கலாச்சார அறிவியல் சின்னங்களையும் பல அரிய நூல்களையும் அழித்தே விட்டார்கள் அப்படி அழிக்கப்பட்ட பல பொருட்களின் ஒரியன் காலெண்டன் சில பகுதிகளும் அடங்கியிருக்கலாம். சென்ற வருடத்தில் என்னை சந்திக்க வந்த எல்சால்வடார் நாட்டை சேர்ந்த திருமதி, ஒக்ளெடியா என்ற அம்மையார் மாயன் நாட்காட்டியில் பல பகுதிகள் இன்று கிடைப்பதில்லை என்றும் தற்போது கிடைத்திருப்பது முழுமையானதாக இருக்க வாய்ப்பில்லையென்றும் சொன்னார். பல வரலாற்று ஆதாரங்களையும் புதைபொருள் ஆய்வாளர்களின் கூற்றுகளையும் கைதேர்ந்த சோதிடர்களின் கருத்துக்களையும் ஒருங்கினைத்து பார்க்கும் போது அந்த அம்மையார் சொன்னப்படி பாதி காலண்டரை வைத்துகொண்டு கணக்கு போடுகிறோம் என்று நினைக்கிறேன்.

இந்து மதத்தினுடைய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்துமத கால கணக்குப்படி நான்கு யுகங்கள் உண்டு என்று நமக்கு தெரியும்.

இதில் கிரேதா யுகத்திற்கு 17,28,000 ஆண்டுகள் உண்டு, திரேதாயுகத்திற்கு 12,95,000 ஆண்டுகள் உண்டு, துவாபரயுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள் உண்டு, தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு மொத்த வயது 4,32,000 ஆண்டுகள் ஆகும். கலியுகம் பிறந்து இப்போது 5,110 வருஷம் தான் ஆகிறது. இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும். அப்போது தான் பிரம்மாவிற்கு பகல்முடிகிறது இரவு வரும். அதாவது பிரம்மாவின் இரவு என்பது உலகத்தின் அழிவு அல்லது செயல்படாத நிலை என்பதாகும். அதனால் அதுவரை இயற்கை நியதிப்படி உலகம் அழியாது, நாமாக அணுகுண்டை போட்டு கொண்டால் தான் உண்டு அதற்கு இயற்கையும், இறைவனும் பொறுப்பு ஏற்க முடியாது.




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 19, 2012 6:08 am

இன்னும் சில மாதங்களே உள்ளன... ஜாலி
உலகம் அழிந்து விட்டால் உறங்கி விடுவோம் இல்லை என்றால் மீண்டும் ஒரு புதிய நாளை தேர்ந்தெடுப்போம் தொடருவோம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 19, 2012 7:51 am

அப்ப உலகம் அழியாதா? நடனம் நடனம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 19, 2012 8:12 am


பகுதி -3
அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

1. மாயன் காலண்டர்:
மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.



2. சூரியப் புயல்கள்:
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.





3. அணு சிதைவு:
ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.



4. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…
விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.
இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.



5. சூப்பர் வல்கனோ:
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!



6. கணிதவியல் அடிப்படையில்…
அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.

7. புவியின் காந்தப் புலம்
வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.
-இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.




ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
இதோ ஒரு பாஸிடிவ் பதில்:
சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள், மேலே கூறப்பட்ட 7 காரணங்களையுமே உடான்ஸ் என்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.
உலக மக்களின் தேவைக்காக சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே மின்சாரத்திற்காகவோ, குடிநீருக்காகவோ எதிர்காலத்தில் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு மனித உடலின் செல்லில் இருந்து அல்லது மிருகத்தின் ஒரு செல் அணுவில் இருந்து குளோனிங் முறை செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகள் சோதனையாக மட்டுமே உள்ளது. இதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். ஆகவே இது ஆய்வுடன் நின்று விட்டது.
பூமி வெப்பமாவதை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக மாசு கட்டுப்பாடு செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்…” என்றார்.
நாமும்.. சாதகமானதையே நம்புவோமே!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 9:51 am

ஆக மயன்ஸ் போட்டியா அதை விட வேகமா விருவிருப்பா இந்த பதிவு இருக்கே நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக