Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!
5 posters
Page 1 of 1
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!
‘துங்குஸ்கா நிகழ்வு’
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக்
காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன்
எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து
சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது
காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மப்பொருள்
பொட்காமென்யா துங்குஸ்கா ஆற்றின் அருகே பெரிய சத்தத்துடன் வெடித்துச்
சிதறியது.வெடிச்சத்தம் ஏறக்குறைய 10 முறை சீரான இடைவெளியுடன் கேட்டதாக கூறப்பட்டது. நேரில் பார்த்தவர்கள் இச்சத்தத்தை பீரங்கி வெடிப்புடனும்,
இடியுடனும் ஒப்பிடுகின்றனர்.
இந்த வெடிப்பின் ஆற்றல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 1000 மடங்கு அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட ஆற்றல் 5 லிருந்து 30 மெகாடன் டிஎன்டி ஆகும். (டிஎன்டி என்பது ட்ரை நைட்ரோ பொலுவீன் என்ற வெடிபொருளைக்குறிக்கும். இது வெடிப்பின் போது வெளிப்படும் ஆற்றலின் அளவாகும்) இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்வு அப்பகுதியில் மட்டுமல்லாது பலநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளக்கப்பயன்படும் ரிக்டர் அளவுகோல் அன்று கண்டறியப்பட வில்லை என்றாலும், சுமார் 5 புள்ளிகளாக அந்த அதிர்வு பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வளிமண்டல அழுத்தத்திலும் இந்த நிகழ்வு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் கூட இத்தகைய அழுத்த வேறுபாடு உணரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து காந்தப்புயல் ஒன்று வீசியது. 4 மணி நேரம் நீடித்த இந்த காந்தப்புயல்
பொதுவாக அணுகுண்டு வெடிப்புக்குப்பின்பு ஏற்படும் மாற்றங்களை
ஒத்திருந்தது. பின்னர் பல நாட்களுக்கு வானம் வெள்ளிநிற மேகங்களுடன்
காட்சியளித்தது. சைபீரியப் பகுதி முழுவதும் அதையொட்டிய ஐரோப்பிய
எல்லைப்புறங்களிலும் இந்த மேகங்கள் உலாவந்தன. இந்த மேகங்களால் இரவு நேரம் கூட வெளிச்சமாகக் காணப்பட்டதால் அந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்றே பெயர் பெற்றன. வெடிப்பின் போது சிதறிய விண்பொருளின் துணுக்குகள் வானத்தில் பரவியிருந்ததாலேயே இந்த வெளிச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.
1921 ம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு
ஆய்வுக்குழுக்கள் துங்குஸ்கா நிகழ்வு பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. வெடித்துச்சிதறிய அந்த மர்மமான விண்பொருள் பல
மைல்கள் வானில் பயணம் சென்றதை உறுதிப்படுத்திய அவ்விஞ்ஞானிகள் அது
விண்கல்லா அல்லது வால்மீனா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக்
கொண்டிருந்தனர். விண்கல்லாக இருந்தால் வெடித்துச் சிதறிய போது அதன்
துகள்கள் பூமியில் சிதறியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட துகள்கள் எதுவும்
ஆய்வுக்குழுவினரின் கண்ணில் படவில்லை. மிகக்குறைவான அளவில் சில
விண்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றாலும் அவற்றைக்கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.
அந்த மர்மமான விண்பொருளானது முற்றிலும் படிக அமைப்பு கொண்ட விண்கல்லாக இருக்க முடியாது என்று இதிலிருந்து தெளிவானது. ஏனெனில் விண்கல்லாக இருந்திருப்பின் நிச்சயமாக அதன் துணுக்குகள் பூமியில்
சிதறியிருக்கும். 1970 ல் ஆய்வு மேற்கொண்ட சோவியத் அறிவியல் மைய
விஞ்ஞானி ஜார்ஜ் பெட்ரோவ் என்பவர் துங்குஸ்கா நிகழ்வு குறித்த தனது
ஆய்வுமுடிவுகளை வெளியிட் டார். அந்த விண்பொருளானது வால்மீனின் அமைப்பை பெருமளவில் ஒத்திருந்ததாக அவர் தெரிவித் தார். (அதற்கு முன்பே வால்மீன் கொள்கை ஒன்று அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது). அதன் அடர்த்தி 0.01 கிராம்/கன செ.மீ (புதிதாகப்
பெய்யும் பனிக்கட்டியைக் காட்டிலும் 5-10 மடங்கு குறைவு) ஆக இருந்
திருக்கும் என்றுகூறிய பெட்ரோவ், அது முழுக்க, முழுக்க வாயுவால் ஆன
பொருளல்ல என்று கூறினார். பனிக்கட்டிகளாலும், சிலிக்கேட் மற்றும்
இரும்புத்துகள்களாலும் அது ஆக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தார்.
வால்மீன் கொள்கை ஓரளவு சரியாக துங்குஸ்கா நிகழ்வை விளக்கினாலும் பல அம்சங்களை விளக்கவில்லை. உதாரணமாக வெளிச்சம் நிறைந்த வானம், வெடிப்புப் பகுதியில் விண்துகள்கள் இல்லாதது குறித்து சரியான விளக்கமளிக்கும் இக்கொள்கை, நில அதிர்வைப்பற்றியோ, உயிரினங்கள், குறிப்பாக தாவரங்களில், ஏற்பட்ட ஜீன் மாறுபாடுகள் குறித்தோ விளக்கவில் லை. அதனால் ‘துங்கஸ்கா நிகழ்வு’ 100 ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே உள்ளது. இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக கடந்த ஜூன் மாதம் 26 முதல் 28 வரை ரஷ்யாவின் கிராஸ்னாயார்ஸ்க் நகரில் நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!
இதுவரை அறிந்திராத அதிசயச் செய்தி வழங்கியுள்ளீர்கள் சரண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!
ஓஓஓஓ அப்படியா..இதெல்லாம் நமக்கு தெரியல..இப்போது தெரிய வைத்த சரண் அவர்களுக்கு நன்றிகள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
Re: நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்..!!
என்ன இன்று எல்லாம் மிகவும் பயனுள்ள அரியதகவலால் ஈகரை நிறைந்து வழிகிறது சுட்டுப்போட்டாலும் சூப்பரா போடுறாங்க
Similar topics
» நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!
» 10 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்தவர் பூட்டிய வீட்டில் சாவு
» ஜனாதிபதிகளின் மர்மம்
» மூலிகை மர்மம்
» நெப்போலியன் மர்மம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum