புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
171 Posts - 79%
heezulia
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
2 Posts - 1%
prajai
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
1 Post - 0%
Pampu
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
336 Posts - 79%
heezulia
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
8 Posts - 2%
prajai
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_m10சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் )


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 20, 2012 1:31 pm

சந்திர பாபு எனும் ஒரு கலைஞனை ரசிக்காதவர்கள் இல்லை. வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் ஒளிர்ந்தவர். நான் மிகவும் ரசித்த இவரது பாடல்கள் சில ஒரு மினி தொடராக.

‘தாங்காதம்மா தாங்காது’ சந்திரபாபு பாடல்களில் பெரிய ஹிட் எனச் சொல்லமுடியாது. சிலருக்கு இந்தப் பாடலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்திரபாபு பாடல் என்றாலே நமக்கு ‘பம்பரக்கண்ணாலே’ அல்லது ‘குங்குமப் பூவே’ தான் நியாபகம் வரும்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தியின் (வி-ரா) இசையில் தாங்காதம்மா தாங்காது அரிய மெட்டு. இடையிடையே ஹம்மிங் செய்யும் பெண்ணும் கலக்கலாக பாடியிருப்பார். உச்சக் குரலில் கர்நாடக இசயில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு சந்திரபாபுவின் குரல் இனிய மாற்று. இவர் பாடிய எள்ளல் பாடல்களில் இதுவும் ஒன்று.

வி-ரா இசையில் மேற்கத்திய இசைக்கருவிகளின் தாக்கமிருக்கும் இந்தப் பாடலும் ‘செலோ’வில் ஆரம்பிக்கிறது.வழக்கமான ‘க்ளாரினட்’ இசை பல இடங்களில். கித்தாரில் ஒரு கார்ட் (Chord) தாளத்தோடு சேர்கிறது.

பாடல் வரிகளோ ‘சம்சாரம்’ எப்படி கடினமானது என்பதைச் சொல்கிறது.


சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமல் மாலையிட்டாலும்
அடியேன் மனசு தாங்காது..

கையில் காசுமில்லே
கடனும் கிடைக்கவில்லை
வீடும் சொந்தமில்லே
ஆண்டி மடத்தில் இடமுமில்லை
ஈயும் ஊயும் ஈயும் ஊயும் வே – (அழகாய் பாடுகிறார் பெண்)
அவசரமாக தாலி கட்டினா அடுத்தநாள்வரை தாங்காது
சபலத்தினாலே ஜோடியச் சேர்த்தா சம்சாரம்போல் ஆகாது
தாங்காது தாங்காது தாங்காது.

இருந்தால் ஒருவீடு
இல்லே பலவீடு
கிடைத்தால் சாப்பாடு அம்மா
இதுதான் என்பாடு
காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் காவியமாக முடியாது
பாத்து சிரிச்ச பாவத்துக்காக பத்தினியாக்க முடியாது
தாங்காது தாங்காது தாங்காது.



தொடரும் ..
நன்றி
சிறில் அலெக்ஸ்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 20, 2012 1:43 pm

நல்ல பதிவு , நான் இந்த பாடலை கேட்டுயிருக்கின்றேன் .. அவரின் அனைத்து பாடல்களுமே சிறப்பாக இருக்கும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 20, 2012 6:55 pm

மணம் முடித்து ,மண நாள் இரவு, கட்டிய( மோதிரம் மாற்றிய ) மனைவி, தான் வேறு ஒருவனை விரும்புவதாக கூற, அவள் விரும்பியவனுக்கே மணம் செய்து வைத்தவர் சந்திரபாபு. திறமை பல இருந்தும் பிழைக்க தெரியாதவர். அதீதமான தன்னம்பிக்கையோ?
ரமணியன்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 7:36 pm





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) 1357389சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) 59010615சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Images3ijfசந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 7:42 pm

சந்திரபாபு (J.P.Chandrababu) (ஆகத்து 4, 1927 - மார்ச் 7, 1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.


இளமைப் பருவம்

சந்திரபாபு தூத்துக்குடியில் கிருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கை க்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."
திரையுலக வரலாறு

1937ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.

கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்

wikipedia



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) 1357389சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) 59010615சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Images3ijfசந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Images4px
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 10:47 am

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக் கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெரு மை சந்திரபாபுவையே சாரு ம். அவர் உடை அணியும் அழ கே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்து கொள்ளும்படி உடை அணிவார்.

சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை – வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டை யின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்தி ருப்பார்.

Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume – Channel 5. பட பிடி ப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் – ‘ரெவ்லான்’ என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்து கொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.

‘ஓ Jesus’ என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகு நேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார்.

வீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியை த்தான் அணிந்தி ருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழு க்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தா ன்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார்.

சோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிக ரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.

ரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அமெ ரிக்க, ஸ்பானிய, Mexican இசைத்தட்டுக்களை போட்டு ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தா லும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங் காக ஈடு கொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட் டுவார்.

ஷூட்டிங்கின்போது, துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பச்சை காரட்களையும் வெள்ளரிகளையும் ஒரு தட்டு நிறைய வை த்து சாப்பிடுவார் சந்திரபாபு.

யாருக்கு போன் பண்ணினாலும், வெளியில் இருந்து அழைப்பு வரும்போதும், ‘ஹலோ’ என தொடங்காமல், ‘சந்திரபாபு’ என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி உரையாடலை அழ காக தொடங்குவார்.

யாரையும் ‘சார்’ போட்டு அழைக்கமாட்டார் சந்திரபாபு. எவ் வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் ‘மிஸ்டர்’, ‘மிஸ்’, ‘மிஸ்ஸஸ்’ சேர்த்து அழைப்பதே சந்திர பாபுவின் பழக்கம்.

வீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, சப்பாத்தி களை போட்டு சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள பதார்த்தமும் ஏதாவது செய்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற் றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி ஸ்டைலாக உண் பார் சந்திரபாபு.

சந்திரபாபு – ராஜா அண்ணாமலைபுரத்தில் (அந்நா ளில் கேசவபெருமாள்புரம்) சொந்த மாக வீடு ஒன்று கட்டினார். இரண்டு மாடிகள் கொண்ட வீடு இது. தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரி லேயே செல்லும்படியாக கட்டப்பட்டது.

ஒருமுறை-தொலைபேசியில் மனோரமாவிடம், ” நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக் குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்” என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு. இந்த வீடு, ‘மாடி வீட்டு ஏழை’ படத்தால் ஏற்பட்ட கடனால், அவர் கையை விட்டுப்போனது.

சந்திரபாபு, கார் ஓட்டுவதில்கூட ஒரு வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். அவர் தனது பியட் காரை ஒட்டி செல்லும்போது பார்ப்பவர்கள் – ஒன்று பயப்படுவார்கள், இல் லை சிரிப்பார்கள். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து காரை வளைத்து திரும்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிபார்க்க வைக் கும். இப்படி ஒட்டி சிறிய விபத்துக்கள் சிலவற்றையும் சந்தித்துள்ளார்.

”எனக்குமேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல் வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணிய வை ப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ் ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திர பாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோப த்திலும் குடிப்பான்” என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ் வநாதன்.

‘யார்டிலிங்’ (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நா ட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டி லிங் செய்வார். சந்தோஷமாக பாட ப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார் கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திர பாபுவையே சாரும்.

‘குங்கும பூவே…’ பாடல் ‘சபாஷ் மீனா’ படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலு வை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை ‘மரக தம்’ படத்துக்காக பாடிவிட்டார்.

பாக்யராஜின் மிக சிறந்த திரைக்கதை அம்சம் உள்ள படமான ‘அந்த 7 நாட்கள்’ – சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமய த்தில் வந்தது.

ஒரு நடிகனுக்கு பெயர் என்பது, அவனுக்கென்று ஒரு தனி பாணி உருவாக்கி கொள் வதுதான். பிற்கா லத்தில் வேறு யாராவது அந்த பாணியை பின்பற்றி நடிக்கவேண்டும். அதைபார்த்து இது அந்த நடிகரின் பாணி என மற்றவர்கள் கூறவேண்டும். சந்திர பாபு வும் அப்படி தனக்கென தனி பாணி உருவாக்கி கொ ண்டவர் தான். ஆனால் அவரது பாணியை பின்பற்றி நடிப்பது என்பது யாராலும் இயலாத காரியம். ஒரு ரிக்க்ஷாகாரன் பாத்திரம் என்றால் அதற்கு ஏற்றாற் போல் தன் நடை, உடை, பாவனைகளை மாற்றி அச த்துவார். அதேபோல் ஜெர்ரி லூயிஸ் போன்ற ஹை-கிளாஸ் காமெடிக்கும் பொரு ந்திவந்த நபர் சந்திரபாபு.

தன் திறமைமீது அவருக்கு கர்வம் உண்டு. அதற்காக அதை திமிர் என்று சொல்ல முடியாது. ஆனால், பலரால் ‘திமிர் பிடித்தவன்’ என தவறாக புரிந்து புரிந்து கொள்ளப் பட்டவர். தன் புதுமையான ஐடியாக் களை தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர்களில் செயல் படுத்தி பார்க்க நினைப்பவர் சந்திரபாபு. தன் நினைப்பதை, செயல்படுத்த நினைத்த ஐடியாக்களை செயல்படுத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத குணம் உண்டு. தான் சொல்வது தவறு என்று தெரிந்தால், தயங்காமல் ஒப்புக்கொள்வார். அத ற்காக வருத்தம் தெரிவிப்பார்.

1958-இல் சந்திரபாபுவுக்கு ‘நடிகமணி’ என்றொரு பட்டம் கொடு க்கப்பட்டது. பட்டத்தை அளித்தவர், அப்போதைய அமைச்சர் லூர்த்தம்மாள் சைமன்.

ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய ‘சோக கீதங்கள்’ பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபு பாடல்களை மட்டும்தான்.

இன்றும் பெரும்பாலான லைட் மியூசிக் குழுக்களில் – யாராவது ஒருவர், சந்திரபாபுவின் குரல், மேனரிசம், நடனம் என அவரது பாடல்களை இந்த தலைமுறைனரிடமும் பரப்பி வருகின்றனர். அவரது பாடல்களுக்கு இந்த தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

‘சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்’ சார்பாக ஆண்டு தோறும் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கப் பட்டு வந்தது. அதில் 1957 முதல் ‘சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை’ என விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில் முதல் விருதை பெற்றவர் சந்திரபாபு தான். படம்: ‘மணமகன் தேவை’.

தன்னம்பிக்கை ஒரு மில்லிலிட்டர் கூடிப்போனாலும் தலைகனம் ஆகிப்போகும். சந்திரபாபுவிடம் இருந் தது தன்னம்பிக்கை மட்டுமே. அதற்கு உதாரணம், இலங்கை வானொலியில் அவர் பே ட்டி கொடுக்கும்போது – ‘உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்?’ என பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, ‘There is only one சந்திரபாபு. அடுத்து சிவாஜி கணேசன் நல்லா நடிக்கிறான்’ என்று பேட்டி கொடுக்க, சிவாஜி கணே சனின் வெறித்தன மான ரசி கர்களின் வெறுப்பை சம்பாதி த்துக் கொண்டார் சந்திரபாபு.

நடிகை சாவித்திரி ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்த போது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விரு ந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறு த்தலால் விருந் தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகி விட் டார். மாலை நேரங்களில் மது அருந்த சாவித்திரிக்கு ‘கம் பெனி’ கொடுத்தவர் சந்திரபாபு தான். இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது என்று சொல்லப்பட்டது. ‘சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான்’, ‘சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டாள்’ என்றும் சொல்லப்பட்டது.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த நபருக்கு எதிரான உண்மையான கருத் துக்களை கூற சந்திரபாபு தயங்கியதே இல்லை. அதனால் வரும் பின் விளை வுகளை பற்றி அவர் யோசித்ததும் இல்லை. மனதில் தோன்றியதை உதட்டில் பேசி விடுவார். இதனால் அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.

ஒருமுறை சந்திரபாபு மது அருந்தியிருந்த நிலையில், ஒரு பத்தி ரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி, அவருக்கு திரை உல கில், பலரது வெறுப்பை சம்பாதித்து கொடு த்தது. அந்த பேட்டியில்…

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் ‘தாய் உள்ளம்’ படத்துல நடிச்சி கிட்டிருந்தான். அப்பா அவனு க்கு நான் காமெடி எப்படி பண்ண னும், பேத்தாஸ்னா எப்படி பண்ண னும், லவ் சீன எப்படி பண் ணனும்னு நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன் னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் நல்லா நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.

MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப் பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.

அந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச்செல்ல காரணமாக அமைந்தது இந்த பேட்டி தான்.

மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க் கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடி கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரை யுலகினரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்த காலத்து முன்னணி கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனு பவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளி ப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண் ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை மட் டுமே.

தகவல்கள்:

‘கண்ணீரும் புன்னகையும்’ புத்தகம், கிழக்கு பதிப்பகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 11:04 am

இவரின் சில அதிகபிரசிங்கிதனமான கருத்துக்களால் அவரின் கடைசி காலத்தில் அப்ப இருந்த உச்ச நடிகர்களால் வஞ்சம் தீர்க்கபட்டு மிக ஏழ்மையான நிலையில் மரணமடைந்தார் என கேள்விபட்டுள்ளேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 21, 2012 12:32 pm

‘கண்ணீரும் புன்னகையும்’ புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 12:40 pm

http://www.thiraipaadal.com/singer.php?SGRID=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81&lang=ta

சந்திரபாபுவின் பாடல்களை இங்கு கேட்கலாம்.



சந்திரபாபு ஒரு சகாப்தம் (சில உண்மைகள் ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக