ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 22 - உலக புவி தினம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 6:24 pm

ஏப்ரல் 22 - உலக புவி தினம் 524484_209915982444285_127040440731840_261153_1653012346_n

வாங்க கொண்டாடுவோம்!

இன்று.. ஏப்ரல் 22 - உலக புவி தினம். பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகளும், உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன.

பூமி தோன்றியதிலிருந்தே, பல்வேறு இயற்கை நிகழ்வுகள், பேரிடர்களால் பூமிக்கு ஆபத்தும் அழிவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்த பின்தான்... பூமிக்கு ஏராளமான பாதிப்புகள் பலபல பரிமாணங்களில் உருவானது.

பூமி வெப்பமடைந்து கொதித்துச் சுழலும், வளிமண்டலமும் சிதைவுற்று உயிர்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்தைத் தவிர்க்கவும் குறைக்கவும்... மக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்ய உருவானதுதான் உலகப் புவிதினம்!

உலகப் புவி தினம், 1970 முதல் ஏப்ரல் 22-ம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை அமெரிக்க செனட்டரான கேலார்ட் நெல்சன் (Gaylord Nelson) என்பவர் வசந்தகால சமகால நாளான மார்ச் 20-ஐ ஒட்டி கொண்டாட வேண்டும் என நிறுவினார்.

பூமியின் வடபகுதியில் வசந்தகால சமநாளிலும், தென்பகுதியில் இலையுதிர்வு சமகால நாளான செப்டம்பர் 21-ம் நாளும் கொண்டாடினர். பிறகு சூழல் பிரச்னை தொடர்பாக முதலில் குரல் கொடுத்த கிறித்துவ பாதிரியாரான பிரான்சிஸின் நினைவாக... அவரது பிறந்த நாளான ஏப்ரல் 22-ல் கிட்டத்தட்ட 190 நாடுகளில் புவிதினம் கொண்டாடப்படுகிறது.

இந்தப் புவி தினத்தில்... மறுசுழற்சி, மறுபயன்பாடு, தூய்மையான ஆற்றல், வெப்பம் குறைப்பதற்கான முயற்சிகளை அனைவரும் செய்ய வேண்டும்.

ஒரு சிறிய செயல் முறை: முட்டை ஓடு / மரப் பெட்டி எடுத்து, அதில் பாதியளவு மண் போடவும். அதன் மேல் புல்/ கோதுமை / கேழ்வரகு/கடுகு விதைகளைப் போட்டு, மேலே கொஞ்சம் மண் தூவவும். கொஞ்சம் நீர் விட்டு, சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும். தினமும் கொஞ்சம் நீர் ஊற்றவும். சில நாட்களில் மெலிதான பச்சைத் துளிர்கள் வளர்ந்து வரும்.

விகடன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by பிரசன்னா Sun Apr 22, 2012 6:24 pm

பசுமை விகடன் இதழில் சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரையில் இருந்து...

ஏப்ரல் 22 - உலக புவி தினம் 538392_209923599110190_127040440731840_261171_1794551423_a

முன்பெல்லாம்... மழை எப்போது பெய்யும்? கோடைவெயில் எப்படி இருக்கும்? என்றெல்லாம் பொதுவாக அனைவருமே தெரிந்து வைத்திருப்பார்கள். குறிப்பாக, விவசாயிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இவையெல்லாம்... ஆண்டுதோறும் முறைப்படி நடக்கும் விஷயங்கள்தானே. அதை வைத்துதான் உழவுத் தொழிலுக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன.

ஆனால், இன்று..?

நிலைமையே தலைகீழாகிப் போய் கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தக் 'காலநிலை மாறுதல்’ எனும் விஷயம்தான் அறிவியலாளர்களை தீராத கவலைக்குள்ளாக்கி வருகிறது. இன்றையச் சூழ்நிலையில் மனிதஇனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய ஆபத்து... காலநிலை மாறுதல்தான். 'இது அணுகுண்டுப் போரைவிட கொடிய அபாயம்' என்கின்றனர் சூழலியலாளர்கள். அதனால்தான் இன்று, உலகம் முழுவதும் 'இதற்கு என்ன செய்வது?’ என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

'ஒன்றும் செய்யாவிடினும் பரவாயில்லை. பிரச்னை தீவிரமடையாமலாவது பார்த்து கொள்ள வேண்டும்’ என்பதுதான் பல நாடுகளின் கருத்து. இந்தியாவில்கூட, காலநிலை சார்ந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டி பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எதிராக கடந்த நூறு ஆண்டுகளாக செய்த தவறுகளின் மொத்த விளைவுதான் 'காலநிலை மாற்றம்'. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயு உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள்; பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்; பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளின் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன்... என பலவிதங்களில் நம்மால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நமது சுற்றுப்புறமும் வான்வெளியும் கடுமையாக மாசுபடுகின்றன. குறிப்பாக, கரியமில வாயு... பூமியைச் சுற்றிப் படர்ந்து கொண்டே வருவதால், உலகின் வெப்பநிலை அதிகரிக்கிறது. கரியமில வாயு பரவுவதற்கு காடுகளை அழிப்பதும் ஒரு காரணம்.

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு உறைவிடமாக இருந்து வரும் இப்பூமி, தாறுமாறாக சூடாக ஆரம்பித்தால்... கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பது நிதர்சனம்.

'கொஞ்சம் சூடு அதிகரித்தால் என்னவாகி விடும்?’ என்று சிலர் கேட்கலாம். காய்ச்சல் வந்து, நமது உடல் வெப்ப நிலை கொஞ்சம் கூடினாலும், படுத்து விடுகிறோமல்லவா! அதுபோலத்தான் பூமியும். பூமிக்குக் காய்ச்சல் வந்தால், உலகமே செயல் இழந்து விடும். பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரலாம். கங்கை போன்ற நதிகள் வற்றிப் போகலாம். வெள்ளமும், வறட்சியும் மக்களைத் துன்புறுத்தலாம். காலநிலை மாறுபட்டால், விவசாயம், உணவு உற்பத்தி, நீர் விநியோகம், காட்டு வளம்... எல்லாமே பாதிக்கப்படும். குறிப்பாக, மழையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும்.

இதன் விளைவுகளை பல இடங்களில் நாம் துல்லியமாகக் காண முடியும். கடந்த 14 ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை, வழக்கமான அளவைவிட அதிகமாக இருக்கிறது என்கிறது ஒரு கணிப்பு. கடல்மட்டம் உயர்ந்ததால் மேற்கு வங்காளத்திலுள்ள சுந்தரவனப் பகுதியில் மீன்வளம் குன்றி, மீனவர்கள் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. பலர் நிலத்தை இழந்திருக்கின்றனர்.

உலக நாடுகளில் இதுபற்றி பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், 'இது ஏதோ விஞ்ஞானிகள் பற்றிய விஷயம்போல இருக்கிறது. நமக்கேன் கவலை?’ என்று நாம் ஒதுங்கியே இருக்கிறோம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு உணர்வு வந்து, இதுபற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறோம். நம் ஊடகங்கள்கூட இந்த விஷயத்தில் சரியான முறையில் பங்களிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இது நம் அன்றாட வாழ்க்கையை அசைத்துப் பார்க்கக் கூடிய ஆபத்து என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை சீரழிக்கும் காரியங்களை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும். இயற்கையைச் சீண்டிப் பார்க்காத விவசாய முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கால்நிலை மாற்றத்தை சமன் செய்ய முடியும்.

காலநிலை மாற்றத்தை செய்வதற்கு மரம் நடுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. கரியமில வாயுவின் தாக்கத்தை மரங்கள்தான் பெருமளவில் குறைக்கின்றன. அதனால், கிடைக்கும் இடங்களிலெல்லாம் மரம் நடுவதை நமது வழக்கமாகக் கொள்வோம். பூமியைக் காப்போம்.

ஏப்ரல் 22 - இன்று.. உலகப் புவி தினம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by இளமாறன் Sun Apr 22, 2012 8:42 pm

இந்தப் புவி தினத்தில்... மறுசுழற்சி, மறுபயன்பாடு, தூய்மையான ஆற்றல், வெப்பம் குறைப்பதற்கான முயற்சிகளை அனைவரும் செய்ய வேண்டும்.

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏப்ரல் 22 - உலக புவி தினம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by T.N.Balasubramanian Sun Apr 22, 2012 9:30 pm

ஒவ்வொருவரும் மனது வைத்தால் , நிச்சயமாக செயல் படலாம். நம் வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்.
ஆளுக்கு ஒரு செடி வளர்த்து அதை பராமரித்து மரமாக்கினால் அதுவே போதும்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by அசுரன் Sun Apr 22, 2012 10:20 pm

இன்று எங்கள் திருமண நாள்..... இன்று உலக புவி தினம்... அற்புதம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 10:22 pm

அசுரன் wrote:இன்று எங்கள் திருமண நாள்..... இன்று உலக புவி தினம்... அற்புதம்
வாழ்த்துக்கள் அண்ணா. சொல்லவே இல்லை..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by அசுரன் Sun Apr 22, 2012 10:25 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:இன்று எங்கள் திருமண நாள்..... இன்று உலக புவி தினம்... அற்புதம்
வாழ்த்துக்கள் அண்ணா. சொல்லவே இல்லை..
13 வருடங்கள் ஆகிவிட்டது....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 10:27 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:இன்று எங்கள் திருமண நாள்..... இன்று உலக புவி தினம்... அற்புதம்
வாழ்த்துக்கள் அண்ணா. சொல்லவே இல்லை..
13 வருடங்கள் ஆகிவிட்டது....
மீண்டும் வாழ்த்துக்கள். பிரியாணி ட்ரீட் கொடுத்துர வேண்டியது தானே..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by அசுரன் Sun Apr 22, 2012 10:29 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:இன்று எங்கள் திருமண நாள்..... இன்று உலக புவி தினம்... அற்புதம்
வாழ்த்துக்கள் அண்ணா. சொல்லவே இல்லை..
13 வருடங்கள் ஆகிவிட்டது....
மீண்டும் வாழ்த்துக்கள். பிரியாணி ட்ரீட் கொடுத்துர வேண்டியது தானே..
அன்டா காலியாயிடுச்சி, இப்ப தான் விருந்தினர் எல்லாரும் சென்றார்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by மகா பிரபு Sun Apr 22, 2012 10:34 pm

அன்டா காலியாயிடுச்சி, இப்ப தான் விருந்தினர் எல்லாரும் சென்றார்கள்
ஓகே பரவா இல்லை சார். நான் எலி பிரியாணி உண்பதில்லை. ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏப்ரல் 22 - உலக புவி தினம் Empty Re: ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum