ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சியால் வெற்றி கொள்!

2 posters

Go down

காட்சியால் வெற்றி கொள்! Empty காட்சியால் வெற்றி கொள்!

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:39 pm

காட்சியால் வெற்றி கொள்! BT_1334880358காட்சியால் வெற்றி கொள்! E_1334910735

ஓர் அழகான பெண் என்று உங்களிடம் சொன்னால் உங்களுக்கு யார் ஞாபகம் வரும்? ஒரு சினிமா நடிகை, ஒரு சீரியல் நடிகை - இப்படி யாராவதுதான், அல்லவா? நீங்கள் திருமணமமாகாதவராக இருந்தால் இது ஓ.கே. ஆனால் திருமணமானவராக இருந்தால் இது ரொம்பத் தப்பு என்கிறார்கள் மனைவிமார்கள் (கணவன்மார்களும்தான்)! இது ஒரு முக்கியமான பிரச்னைதான். இது பற்றி “சினிமாவுக்குப் போன சித்தாளு’ என்று ஜெயகாந்தன் ஒரு கதையே எழுதியிருக்கிறார். ஒரு நடிகரை நினைத்துக் கொண்டு அவர் உருவம் பதியப்பட்ட பனியனை அணிந்திருக்கும் கணவனின் நெஞ்சில் விழுந்து புரளும் சித்தாளு-மனைவி பற்றி! போகட்டும், இங்கே நான் சொல்ல வருவது அது பற்றியல்ல. ஆனால் அது தொடர்பானது.

ஒரு வார்த்தையைச் சொன்னவுடன் நமக்கு அநத வார்த்தை மனத்தில் தோன்றுவதில்லை. அந்த வார்த்தை எந்தப் பொருளைக் குறிக்கிறதோ, அந்தப் பொருள்தான் நம் மனத்தின் திரையில் தோன்றுகிறது. குழந்தை என்று சொன்னால், நமக்கு தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் நம் மனத்தில்விரியும். ஜனநாயகம், அழகு, அரசியல் என்று அரூபமான விஷயங்களைக் குறிப்பிடும் வார்த்தைகளைச் சொன்னாலும் அது தொடர்பாக நம் மனத்தில் பதிந்த காட்சிகள்தான் உடனே நினைவுக்கு வரும்.
“ஜனநாயகம்’ என்று சொன்னவுடன், பெங்களூருவில் சட்டசபை உறுப்பினர்கள் அலை பேசியில் நீலப்படம் பார்த்தது நினைவுக்க வரலாம்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் வார்த்தைகளில் சிந்திப்பதில்லை. காட்சிகள் வழியாகத்தான் சிந்திக்கிறான். ஏனெனில் அதுதான் உலகளாவிய, காலம் கடந்த, மொழி கடந்த, ஜாதி, இனம் என்று எல்லாவற்றையும் கடந்த, எல்லாருக்கமுõன உண்மையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை விஷûவலைசேஷன் என்று கூறுகிறார்கள். இந்த உண்மையை, இந்த நன்மையை நாம் அனைவரும் நமது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவதில்லை.

ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பெருவெற்றி பெற்ற, சாதனை படைத்த யாருடைய வாழ்விலும் இந்தக் காட்சிப்படுத்திப் பார்க்கும் பண்பு பெரும் பங்கு வகித்திருப்பது புரியும்.

அவர் பெயர் மோரிஸ் குட்மேன். பெயருக்கேற்றாற்போல் நல்ல மனிதர். ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஏஜன்டாக வேலை. நல்ல வருமானம். பணம், புகழ் எல்லாம் கிடைத்தது. கூடவே சொந்தமாக ஒரு விமானமும். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. ஏதோ ஓர் இடத்தில் இறங்கும்போது அது விபத்துக்குள்ளானது. அது மோரிஸின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கழுத்தெலும்பு இரண்டு இடங்களில் உடைந்து போனது. முதுகுத்தண்டு முற்றிலுமாக நசுங்கிப் போனது. அவருடைய சிறுநீரகம், குடல்கள், வயிறு, உதரவிதானம் எல்லாமே செயலற்றுப்போயின. அவரால் சாப்பிடவோ, குடிக்கவோ, பேசவோ முடியாது. உயிர் மட்டும் மீதியுள்ள பிணம்போல அவர் மருத்துவமனையில் கிடந்தார். அவரால் செய்ய முடிந்ததெல்லாம் இரண்டு காரியங்கள்தான். வேண்டும் என்றால் ஒரு முறையும், வேண்டாமென்றால் இரண்டு முறையும் கண்களை முடித்திறப்பார். அவ்வளவுதான் அவரது இயக்கம்.

ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அவருக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்திருந்தது. ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பதுதான் அது. எனவே அவரும் நினைக்க ஆரம்பித்தார். காட்சி வடிவத்தில். நமக்கிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கலாம் என்ற முடிவோடு.

அவரது முதல் முயற்சி தம் மீது பொருத்தியிருக்கும் வேண்டிலேட்டரை எடுத்துவிட்டு இயற்கையாக மூச்சு விடுவதுதான். அதற்கான முதல் முயற்சியாக கொஞ்சம் காற்றை அந்த யந்திரம் மூலம் உறிஞ்சி உள்ளே இழுக்க முயன்றார். அப்படி அவர் ஒவ்வொரு முறை முயன்றபோதும் அவரத நுரையீரல் எதிலோ போய் இடித்தக் கடுமையான வேதனை கொடுத்தது. என்றாலும் அவர் விடவில்லை. கடுமையாக முயன்று நூறு முறை மூச்சு விட்டார். பிறகு 200 முறை, பிறகு 300 முறை! அப்படிச் செய்த போது அவரது நுரையீரல் மூன்று மடங்கு பெரிதானது! வெண்டிலேட்டரை மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள். ஆனால், எப்படி அவரால் மூச்சுவிட முடிந்தது என்ற அதிசயம் மட்டும் அவர்களுக்குப் புரியவே இல்லை.

அவரது அடுத்த ப்ராஜக்ட் கிறிஸ்துமஸுக்கு முன் எழுந்து நடப்பதுதான்! அதற்காக அவர் தினமும் செய்தது ஒன்றுதான். நடப்பது மாதிரி கற்பனை செய்தார். ஆனால், அவர் காட்சி வடிவத்தில் நினைத்தது போலவே, அடுத்த கிறிஸ்துமஸில் அவர் எழுந்து நடமாடவும் செய்தார்! டயஃப்ரம் எனப்படும் அவரது உதரவிதானம் முழுமையாகக் கெட்டுக் கிடந்ததால், தனது மன உறுதியின் மூலமும், காட்சிப்படுத்துதலின் மூலமும் அதற்கு பதிலாக தன் வயிற்றுத் தசையை அவர் பயன்படுத்தினார்! இப்படி இந்த உலகில் செய்ய முடிந்த ஒரே மனிதர் இவர்தானாம்! ஒரு வாக்கியத்தைப் பேச அவருக்கு இரண்டு ஆண்டுகளானது. ஆனால் பிடிவாதமாக, காட்சிப்படுத்திப் பார்த்தலின் மூலமாக மட்டுமே குணமடைந்த இவர் “அற்புத மனிதர்’ என்று மிகச் சரியாக வர்ணிக்கப்படுகிறார்.
“தளபதி’ திரைப்படத்தில் மம்மூட்டி கடுமையாக வெட்டுப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்துவிட்டு வரும் அவரது தளபதி ரஜினி, அவர் மனைவி கீதாவிடம் போய், “தேவா பிழைத்துக் கொள்வான்’ என்று கூறுவார். “டாக்டர் சொன்னாரா’ என்று மனைவி கீதா கேட்பார். அதற்கு ரஜினி, “இல்லை, அவனே சொன்னான்’ என்று சொல்வார். அதைக் கேட்ட ஆடியன்ஸ் சிரித்தார்கள். ஆனால் அது சிந்திக்க வேண்டிய அற்புதமான வசனம். எண்ணம்தான் வாழ்வு. இன்னும் சரியாகச் சொன்னால், காட்சி ரீதியான எண்ணம்தான் வாழ்வாக மலர்கிறது.

கூடைப்பந்து மேதை மைக்கேல் ஜோர்டான் உடலை இரண்டு முறை முழுமையாக 720 டிகிரி திருப்பி, பின்பு பந்தை கூடைக்குள் செலுத்தி “கோல்’ போடுவார். அவர் கையில் பந்து போய்விட்டதென்றால் அடுத்தது “கோல்தான்’. தினசரி, அடிக்கடி, பந்து கோலில் விழுவது போன்ற காட்சியைத் தன் மனத்திரையில் பார்த்ததுதான் அவரது அபார விளையாட்டின் ரகசியமாக உள்ளது.
கால்ஃப் பந்து விளையாட்டில் உலகில் முதல் இடத்தில் இருக்கும் டைகர் உட்ஸ் என்பவர் பயன்படுத்தியதும் இந்த உத்திதான். பந்து எங்கே போய், எந்தக் குழியில் விழ வேண்டுமோ அதில் விழுவதாக அவர் அடிக்கடி கற்பனை செய்வார்.

எதை நாம் காட்சி ரீதியாக மனத்தில் அடிக்கடி ஓட்டுகிறோமோ அதுதான் நடக்கிறது. விரைவாகவோ தாமதமாகவோ. நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். விடாப்பிடியாக ஒரு காரியத்தைத் தொடர்ந்து நாம் செய்து வரும்போது, நமக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் காட்சிப்படுத்தும் திறமையும் வேகமாக வளரும். ஆனால், அதற்கு சில மனத்தடைகளைத் தாண்டி வந்தாக வேண்டும்.

- நாகூர் ரூமி

கல்கி செய்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

காட்சியால் வெற்றி கொள்! Empty Re: காட்சியால் வெற்றி கொள்!

Post by முஹைதீன் Sat Apr 21, 2012 2:46 pm

அருமையான பதிவு பிரசன்னா சூப்பருங்க

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று உணர வைத்திருக்கிறார்.


யார் முயற்சி செய்கிறாரோ அவர் அதை பெற்றுக்கொள்வார்(அரபி பழமொழி)
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காட்சியால் வெற்றி கொள்! Empty Re: காட்சியால் வெற்றி கொள்!

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:51 pm

முஹைதீன் wrote:அருமையான பதிவு பிரசன்னா சூப்பருங்க

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று உணர வைத்திருக்கிறார்.

யார் முயற்சி செய்கிறாரோ அவர் அதை பெற்றுக்கொள்வார்(அரபி பழமொழி)

நன்றி முஹைதீன் மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

காட்சியால் வெற்றி கொள்! Empty Re: காட்சியால் வெற்றி கொள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum