புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
68 Posts - 55%
heezulia
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
35 Posts - 28%
mohamed nizamudeen
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
7 Posts - 6%
prajai
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 2%
mini
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
1 Post - 1%
E KUMARAN
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
115 Posts - 49%
heezulia
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
88 Posts - 38%
mohamed nizamudeen
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
11 Posts - 5%
prajai
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
6 Posts - 3%
mini
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
3 Posts - 1%
சுகவனேஷ்
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
3 Posts - 1%
Saravananj
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_lcapகங்கையெனப் பொங்கியது கவிதை! I_voting_barகங்கையெனப் பொங்கியது கவிதை! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையெனப் பொங்கியது கவிதை!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:20 pm

கங்கையெனப் பொங்கியது கவிதை! BT_1334737609கங்கையெனப் பொங்கியது கவிதை! E_1334738111

அக்கா ஆதியை நோக்கி, இன்னும் கொஞ்சம் பணம் கேட்கிறாள் அந்தக் கணிகை. நீ ரகசியமாக எங்காவது பணம் வைத்திருப்பாயே? எடு பணத்தை! என்று உறுமினான்.

ஆதி, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த முருகன் படத்தையே வெளித்துப் பார்த்தாள். அருணகிரியைத் திருத்த வேண்டுமானால் சொல்லத் தகாத அந்த வாக்கியத்தை அவள் சொல்லித்தான் ஆக வேண்டும் என முருகன் அவள் மனத்திலிருந்து தூண்டினான். தம்பியை உற்றுப் பார்த்த ஆதி, அந்த முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்க வாக்கியத்தைச் சொன்னாள்.

“என்னிடம் பணம் இல்லையப்பா! வேண்டுமானால் நான்தான் இருக்கிறேன்!’ என்றாள் விரக்தியுடன்!

அதைக்கேட்ட அருணகிரியின் தலை கிறுகிறுவெனச் சுற்றியது. அவன் விக்கித்துப் போய் திண்ணையில் செயலோய்ந்து உட்கார்ந்தான்.

என்ன கொடுமை இது! இப்படியொரு வாக்கியத்தை கேட்கவா பிறப்பெடுத்தேன்? தாய் முத்தம்மா இறந்த பிறகு, தன்னை தாய்க்கும் மேலாகக் காத்த ஆதியம்மை அல்லவா இவள்? இவள் என் அக்கா மட்டுமல்ல; வளர்த்த தாய் மட்டுமல்ல; என் தெய்வமே அல்லவா?

தன் சின்னஞ்சிறு வயதிலேயே என்னைத் தன் மகனாக ஏற்று எத்தனை சிரமப்பட்டு என்னை வளர்த்தாள்! நான் புத்திகெட்டுப் போனேனே! சேர்வார் சேர்க்கையால் மிருகங்களை விட கேவலமாக மாறினேனே? என்னைவிடக் கெட்டழிந்தவர்கள் புவியில் வேறு யார் இருக்ககூடும்?

முருகன் அதற்குத் தண்டனையாகத் தொழுநோயைத் தந்த பிறகும் முருகக் கடவுளைத் தொழவேண்டும் என்று ஏன் எனக்குப் புத்தி வரவில்லை? இப்படியொரு வாக்கியத்தை என் அக்கா சொல்லுமளவு எந்தப் பிசாசு உடலின்பத்தில் வேட்கை ஏற்படுத்தி என்னைப் பிடரியைப் பிடித்து உந்தியது? கணிகை காசு! இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வாழ்வில் வேறென்ன தெரியும் எனக்கு?

என் தாய் மத்தம்மை காலமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவளது அபரிதமான முருக பக்தியைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறது. என் தாயின் முருக பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்காவது எனக்கு இருக்க வேண்டாமா?

முருகா! உன்மேல் பக்தி வந்திருந்தால் இந்த ஒழுக்கக் கேடான வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேனா? செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல என் அக்கா சொன்ன இந்த வாக்கியத்தை நான் கேட்டிருப்பேனா? என்மேல் பாசம் வைத்த என் அக்காவுக்கு என்னால் எத்தனை துன்பங்கள்! நான் என் அக்காவை விட்டு விலகிச் செல்வதே நல்லது. இனியேனும் அவள் நிம்மதியாக வாழட்டும்.

அருணகிரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் வீட்டை விட்டு நிரந்தரமாக இறங்கி வெளியில் நடந்தான். ஒரு கசந்த சிரிப்போடு அவனையே விரக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதி.

வீட்டை விட்டு வந்த அருணகிரிக்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. காசில்லாத அவனுக்கு எந்தக் கணிகை வீட்டிலும் நிரந்தரமாக இடம் கிடைக்கப் போவதில்லை. திக்குத் திசை புரியாமல் கால்போன போக்கில் நடந்தான். திருவண்ணாமலை கோபுரம் வா வா என அவனை அழைப்பதுபோல் தோன்றியது. கோபுரத்தை நோக்கித் தன்னிச்சையாக நடந்தன அவன் கால்கள்.
செல்லும் வழியெல்லாம் பற்பல தாசி வீடுகள். அவன் பார்க்காத தாசி வீடா? அவர்கள் அவரவர் வீட்டு வாசலில் வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். காசில்லாத இவன் பிச்சைக்காரனைப் போல் நடந்து செல்வதைப் பார்த்து அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாடை செய்து கிளுக் எனச் சிரித்தார்கள்.

அவர்களின் கேலிச் சிரப்பு அருணகிரி காதுகளில் விழத்தான் செய்தது. ஏற்கெனவே நொந்திருந்த அவன் அவன் மனம் தாசிகளுடனான வாழ்வு இவ்வளவுதான் என்றறிந்து, மேலும் நொந்தது.

தன்மேல் உயிரையே வைத்து தனக்காகக் காசை பொருட்டாகக் கருதாத தன் அக்காவின் தூய பாசம் எங்கே? காசைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத இந்த தாசிகளின் அற்பமான மோகம் எங்கே? அக்காவின் உன்னதப் பாசம் தன்னை வளர்த்து ஆளாக்கி கோபுர உயரத்தில் ஏற்றியது. தாசிகளின் தொடர்போ தன்னை அதலபாதாளத்தில் தள்ளி, தனக்குத் தொழுநோயைத் தான் பரிசாகத் தந்தது.

அவன் பின்னால் கணிகையரின் ஏளனச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, அவன் அதன் ஒலியில் கூனிக் குறுகி நடந்துகொண்டே இருந்தான். வா வா என்று தன்னை அழைத்த கோபுரத்தை நோக்கி நடந்தான். இனி இத்தனை அவமானங்களைச் சுமந்துகொண்டு வாழத்தான் வேண்டுமா என்று அவன் மனம் சிந்தித்தது.

என் அன்னை முத்தம்மையின் மனத்தில் பக்தியை விதைத்த முருகா! என்னை ஏன் கைவிட்டாய்? சிரழிந்து கெட்டதெல்லாம் போதும். பாவம் செய்த இந்த உடல் இனி எனக்கு வேண்டாம். விறுவிறுவென நடந்து அண்ணாமலை கோயிலின் வல்லாள ராஜன் கோபுரத்தின் உச்சியில் ஏறினான் வாலிபன் அருணகிரி.

வீட்டிலிருந்த அக்கா ஆதி சிறிதுநேரம் சிந்தித்தாள். தம்பி தளர்ந்த நடையோடு சென்றது அவள் கண்ணில் நின்றது. அவனுக்கு புத்தி வந்திருக்கும் என்றே நம்பினாள். ஆனால் அவன் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியும் சோர்வும் அவளை யோசிக்க வைத்தன. ஏதாவது விபரீதமான முடிவுக்கு அவன் வந்துவிட்டால்? அவனை இழந்து அவளால் வாழ முடியுமா?
திடீரென எழுந்த உணர்வெழுச்சியோடு அவன் மனத்தில் எழக்கூடிய முடிவை ஊகித்தவளாய் “தம்பீ தம்பீ’ என்று கதறியவாறே அவள் திருவண்ணாமலைத் தெருக்களில் ஓடினாள். கோபுரத்தின் உச்சை நோக்கி தம்பி ஏறுவதைப் பார்த்தாள். “தம்பி வேண்டாம், என்னை விட்டு போய்விடாதே’ என்று அலறியவாறே அதே கோபுரத்தை நோக்கி ஓடலானாள்.

அக்காவின் கூக்குரல் அவன் செவியில் விழுந்ததாய்த் தெரியவில்லை. விழுந்தாலும் அதை அவன் லட்சியம் செய்து தன் முடிவை மாற்றிக் கொள்வான் என்றும் தோன்றவில்லை. கோபுர உச்சியில் அவனைச் சுற்றி ஏராளமான தாசிகள் நின்று கைகொட்டி சிரிப்பதுபோல் பிரமை தோன்றியது அவனுக்கு. “முருகா! என் அன்னை முத்தம்மைக்கு அருள்புரிந்த கடவுளே! என்னையும் ஏற்றுக்கொள்! என் எல்லாத் தவறுகளையும் மன்னித்துவிடு!’ என்றவாறே...

ஆ! என் தம்பி என்ன செய்கிறான் இப்போது? கோபுரத்தின் மேலிருந்து குதித்தால் உடல் பொடிப்பொடி ஆகிவிடுமே? எலும்பு கூட கிடைக்காதே? முருகா! என் தாயான உன் பக்தை முத்தம்மைமேல் ஆணை! என் தம்பியைக் காப்பாற்று!

ஆதி உரத்த குரலெடுத்து அலறினாள். அதற்குள் அந்த விபரீதம் நடந்தே விட்டது. அருணகிரி கோபுர உச்சியிலிருந்து சடாரெனக் குதித்தே விட்டான்.

கீழே விழும் எந்தப் பொருளையும் இழுக்கும் இயற்கையான புவிஈர்ப்பு விசை அவனையும் இழுத்தது. செங்குத்தாக அவன் மண்ணை நோக்கி விழுந்துகொண்டிருந்தான். அவன் மேனி தரையை எட்டித் தூள்தூளாகப் போகிற நேரம்.
இதென்ன! ஆயிரம் கோடி நிலவுகள் சேர்ந்தாற்போல் ஒரு குளுமையான வசீகர ஒளி வானில் தோன்றுகிறதே! அந்த ஒளி சரசரவென ஒருங்கிணைந்து பன்னிரண்டு தாமரைப் பூங்கரங்களாக மாறுகிறதே! அருணகிரி அந்த ஆச்சரியத்தை அனுபவித்தவாறே திகைத்திருந்தான்.

பன்னிரண்டு கரங்களும் அவன் தேகத்தை அப்படியே பூப்போல் தாங்கிக் கொண்டன. மெல்ல ஒரு சின்னச் சிராய்ப்பும் இல்லாமல் அவனை அவை பத்திரமாக மண்ணில் புல்வெளியில் கிடத்தின. பின்னர் அந்தக் கரங்கள் மீண்டும் ஒளியுருவம் பெற்று விண்ணில் மறைந்தன.

முருகனின் பன்னிரு அருட்கரங்களால் தீண்டப்பெற்ற அருணகிரியை இனி நாம் அவன் என்று எப்படி அழைப்பது? முருகனது பக்தராக அருணகிரியார் புதுப்பிறவி எடுத்துவிட்டார்.

விழுந்த நிலத்திலிருந்து எழுந்து மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டார் அருணகிரிநாதர். தன் மேனியை வியப்போடு பார்த்துக் கொண்டார். முருகனைத் தொழுததால் அவரது தொழுநோய் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவரதுமேனி முழுமையான ஆரோக்கியத்துடன் பொன்வண்ணத்தில் புதுப்பொலிவு பெற்று ஒளிவீசியது.

“என்னைக் காத்தருளிய கந்தா! எனக்குக் காட்சி தரலாகாதா?’ அவர் விம்மினார். அடுத்தகணம் ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட கந்தக் கடவுள் கோலமயில் வாகனனாய் அவர் முன் தோன்றினான். ஜல் ஜல் எனக் கால் கொலுசுகள் ஒலிக்க, அவரை நோக்கி நடந்து வந்தான். அருணகிரிநாதரின் நெற்றில் திருநீரு பூசினான். காதருகே வந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை அவருக்கு உபதேசித்தான் ஆறுமுகன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையன். எங்கே நாக்கை நீட்டு எனச் சொல்லி, வேலால் அருணகிரியாரின் நாவில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதினான்.

அன்பனே! இறப்பதென முடிவுசெய்தாய். அப்போதும் உன் அன்னை முத்தம்மையை நீ மறக்கவில்லை. அவளை நினைத்தாய். அன்னையை நினைப்பவர்களும், அன்னையின் மனம்கோணாமல் வாழ்பவர்களும் என் அருளைப் பெறத் தகுதி உடையவர்கள்! என் அன்னை உமையம்மை கொடுத்த சக்திவேலால் உன் நாவில் பிரணவத்தை எழுதியிருக்கிறேன். இனி அற்புதமாகக் கவிதை பாடும் சக்தி உனக்கு வரும். இனி உன் நாவிலிருந்து பக்தி தமிழ் பொங்கி பெருகும். எங்கே என் பக்தையான உன் அன்னை முத்தம்மையின் பெயரில் முத்து எனத் தொடங்கி ஒரு பாடல் பாடு!

முருகப்பெருமான் அருணகிரியைப் பாடல் பாடப் பணித்தான். அருணகிரியின் நாவிலிருந்து தமிழ்க் கவிதை கங்கையெனப் பொங்கி பெருகத் தொடங்கியது. “முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர!’ என்ற முதல் திருப்புகழ் பாடல் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்பட்டது. அதை முழுமையாய்க் கேட்டு மனம் மகிழ்ந்த முருகன் அவருக்கு ஆசி வழங்கி மறைந்தான்.

கண்ணீரோடு தன் தம்பியின் உடலைத் தேடி ஓடோடிவந்த அக்கா ஆதி, தம்பி முற்றிலும் புதியவனாய் மாறியிருக்கும் அநத அதிசயத்தைக் கண்டாள். தொழுநோய் நீங்கிய புது உடலைப் பார்த்து வியந்தாள். விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வீட்டுக்கு வருமாறு வேண்டினாள்.

அருணகிரியார் கனிவுடன் தமக்கையைப் பார்த்தார். அந்தப் பார்வையே அல்லவா மாறிவிட்டது! இப்போதைய அவர் பார்வையில் அருள் பொங்கியது.

“அக்கா! நீ என் அக்கா மட்டுமல்ல. தாயும் கூட. அதுமட்டுமல்ல. நீ எனக்கு குருவும் ஆகிறாய். உன்னால்தான் முருக தரிசனம் பெற்றேன். தமிழ்ப்பாடல் பாடும் ஆற்றல் பெற்றேன். என்னை வீட்டுக்கு அழைக்காதே. நான் வீடுபேற்றை நாடும் மனநிலையில் இருக்கிறேன். உறவைத் துறந்து நான் துறவு பூண்டுவிட்டேன். இனி என் கால்கள் வீட்டுக்கு வராது. முருகனது ஆலயங்களுக்கே செல்லும். என் நா முருகன் திருப்புகழையே பாடும். எனக்கு ஆசி வழங்கு.’

தமக்கையும் தாயும் குருவுமான ஆதியைப் பணித்தார் அருணகிரியார். தாய் முத்தம்மையின் இறுதி வேண்டுகோளை முருகன் நிறைவேற்றிவிட்டான் என உணர்ந்து ஆதி சமாதானமடைந்தாள். “தம்பீ. நம் தாய் முத்தம்மையைப் போல் நானும் இனி முருக பக்தியில் ஈடுபட்டு முக்தியடைவேன்!’ என்றவாறே அவள் விழிகளைத் துடைத்துக் கொண்டு விடைபெற்றாள். அவ்வாறு குடும்ப பந்தம் முற்றிலுமாய்த் தன்னை விட்டு அகல அருணகிரியார் துறவியானார்.

- திருப்பூர் கிருஷ்ணன்

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக