ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

4 posters

Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 1:23 pm

தில்லி மாநகராட்சித் தேர்தல்கள் ஆச்சரியமான முடிவுகளைத் தந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியால் அதிருப்தி சூழலை தாண்டி வர முடிந்திருக்கிறது. மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் போலவே இந்தத் தேர்தலும் உள்ளது. தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் மீண்டும் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது.

இந்தப் பின்னடைவு தில்லி முதலமைச்சருக்கு அதிகம் தொடர்பற்றது என்றாலும், மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிம்பத்தை அதிகம் பாதிக்கக்கூடியது. தில்லித் தேர்தல் நடந்துள்ள நேரமும் மிகச் சிக்கலானது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படாத நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. ராணுவம் தொடர்பான விவகாரம் பரவலாகி மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடு குறித்த உணர்வுகள் வளர்ந்துகொண்டிருந்த நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

சென்னை, பெங்களூர், மும்பை மாநகராட்சித் தோல்விகளுக்குப் பிறகு தில்லியின் 3 மாநகராட்சிகளையும் காங்கிரஸ் இழந்துள்ளது. காங்கிரûஸ விட்டு நகர்ப்புற வோட்டுகள் நழுவிக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸின் உடனடி எதிர்காலத்தைப் பொருத்தவரை, இது மிக மிக கவலைக்குரிய விஷயமாகும்.

தில்லியின் முதல்வர் தனி ஆளாக இந்தத் தேர்தலில் போராடினார். தில்லி மாநகராட்சித் தேர்தல்கள் அத்தனை சுலபமானவையல்ல என்பது சோகமானதுதான். 2004-08-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸýக்கு இருந்த இமேஜ் போலன்றி, 2009-லிருந்து அந்தக் கட்சியின் நிலை மிகவும் வித்தியாசமாகிவிட்டது.

மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, முடிவற்ற அரசியல் விபத்துகளாலும் பலரின் சுய தண்டனைகளாலும் தொடர்ந்து அடிவாங்கியது.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற தென்னிந்திய மாநிலங்களில் நிலவும் போக்குகள் குறித்து நான் எழுதியிருந்தேன். 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் 25 முதல் 30 மக்களவைத் தொகுதிகளை இழக்கக்கூடும். காங்கிரஸில் நெருக்கடியான சூழ்நிலை இருப்பதை நான் காண்கிறேன்.

தில்லியில் (7-க்கு 7 தொகுதிகளிலும் வெற்றி), பஞ்சாப் (13-ல் 9 வெற்றி), ஹரியாணா (10-க்கு 9-ல் வெற்றி), ராஜஸ்தான் (25-க்கு 20-இல் வெற்றி) என்றிருந்த தேர்தல் முடிவுகளுக்கு அருகில் கூட காங்கிரஸ் வருவது இப்போது கடினம்தான். தில்லியில் 3 முதல் 4 மக்களவைத் தொகுதிகள் வரை பாரதிய ஜனதாவிடம் இழக்கக்கூடும். பஞ்சாபில் 4 முதல் 5 தொகுதிகளை அகாலி-பாரதிய ஜனதா கூட்டணியிடம் இழக்கலாம். ஹரியாணாவில் 4 முதல் 5 தொகுதிகளை இந்திய தேசிய லோக்தளம்-பாரதிய ஜனதா கூட்டணியிடம் காங்கிரஸ் பறிகொடுக்கக்கூடும். ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவிடம் 8 முதல் 10 தொகுதிகளைத் தாரைவார்க்க வேண்டியிருக்கும். காங்கிரஸýம் (206) பாரதிய ஜனதாவும் (116) சேர்ந்து 320 தொகுதிகளைக் கைப்பற்றும் என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இரு கட்சிகளும் மொத்தமாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 250 முதல் 270-க்குள் இருந்தால் என்ன ஆகும்? இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் குறையும். அப்போது காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள் 135 முதல் 145 ஆகக் குறையும். பாரதிய ஜனதா 125 முதல் 130 தொகுதிகள் வரை வெல்லும். இந்த எண்ணிக்கைதான் அடுத்த ஓராண்டுக்குள் மாற்றுக் கூட்டணியைத் தீர்மானிக்கும். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் குஜராத் தேர்தல் மிக மிக முக்கியமானதாகும். இது எதிர்காலத்துக்கான போக்கை உருவாக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்றாவது அணி ஆகியன குறித்து நாம் முடிவின்றி நிறைய விவாதித்துவிட்டோம். ஆனால், என்னைப் பொருத்தவரை இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் குஜராத், இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2014-க்கான அணி உருவாக்கத்தைத் தெளிவாக்கும். இந்த 2 மாநிலங்களிலும் அதிருப்தி அலைகளை பாரதிய ஜனதா சமாளித்துவிட்டால், 2013-ஆம் ஆண்டில் எப்போதேனும் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
ஊழல் என்பது மிகப் பெரும் விவகாரமாகத் தொடரும். 2ஜி அலைக்கற்றை விவகாரம் ஓய்கிற மாதிரி தெரியவில்லை.

காமன்வெல்த் விளையாட்டு விவகாரம் சிறிய முன்னேற்றத்துடன் விடாப்பிடியாகத் தொடர்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய தாத்ரா ஊழலும் (ராணுவத்துக்கு டிரக்குகள் வாங்கியதில் நடந்த முறைகேடு) உள்ளது. ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் தப்பிக்கும் தந்திரங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டு நான் வியப்படைகிறேன். இந்தத் தந்திரம், நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ( மகாராஷ்டிர அரசுக்கா - பாதுகாப்பு அமைச்சகத்துக்கா) ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவந்து விடுமா? மகாராஷ்டிரத்தின் நிலை சிக்கலாக உள்ளது. முன்னாள் முதல்வரும், அறக்கட்டளை நிறுவனங்கள் மூலம் சில மூத்த அமைச்சர்களும் நிலப்பறிப்பில் ஈடுபட்டது பற்றி சிஏஜி அறிக்கை குறிப்பிட்டிருப்பது, அண்ணா ஹசாரேக்கு தன் அணியை உயிர்ப்பிக்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் கய்க்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால் முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் ஏற்கெனவே நொந்துபோயுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 2 ஆட்சியில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.

புணேயில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு ஓய்வில்லம் கட்டப்போவதாகச் செய்தி வருகிறது. புணேயில் உள்ள ஏதேனும் ஒரு குழுவும் இதை எதிர்த்து வழக்குத் தொடராமல் இருக்காது. இது திருவாளர் பொதுஜனத்துக்கும் அதிமுக்கிய பிரமுகர் மனப்பான்மைக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கவே செய்யும். எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.

குடியரசுத் தலைவராக வரும்போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் பிரதிபா பாட்டீல். 2012-ஆம் ஆண்டு மத்தியில் அவரது பதவிக்காலம் நிறைவடையும்போதும் அவர் விவகாரங்களில் சிக்குவது பரிதாபத்துக்குரியது. இப்போதெல்லாம் நிலத்தைக் கையகப்படுத்துவதென்பது மிகக் கடினமானது. நிலப்பறிப்புச் செயல்களை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்துக்கோ அல்லது பொதுத்துறை பயன்பாட்டுக்கோ உரிய நிலத்தை அதிமுக்கிய பிரமுகரின் தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும்.

ஷாரூக் கான் ஒரு சூப்பர் ஸ்டார். சுங்கத் துறை தொடர்பாகவோ நிதிப் பரிமாற்றம் தொடர்பாகவோ எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில் அமெரிக்காவில் அவர் ஒருமுறைக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். இது "பயங்கரவாத' தொடர்பு பற்றிய பிழையான கணிப்பினால் ஏற்பட்டதாகும். அவரிடம் மன்னிப்பு கேட்கப்பட்டுவிட்டது. ஆனால், நூற்றுக்கணக்கானோர் - ஏன், ஆயிரக்கணக்கானோர் இதேபோன்ற அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாரூக்கானாக இருந்த காரணத்தாலும் அவரது அதிமுக்கிய பிரமுகர் அந்தஸ்தினாலும் ஓரளவு பரிகாரம் கிடைத்துள்ளது. என்றாலும், அவரது எதிர்கால பயணங்களின்போது இதே பிரச்னை மீண்டும் உருவெடுக்கலாம். ஆனால், தீர்வு அவ்வளவு சுலபமல்ல. பயங்கரவாத செயலுக்கு எதிரான நமது அணுகுமுறைக்கும் - நியூயார்க் நகரின் உலக வர்த்தகக் கட்டட தகர்ப்பால் ஆயிரக்கணக்கானோரை பலிகொடுத்த அமெரிக்காவின் அணுகுமுறைக்கும் இடையே வித்தியாசம் உண்டு. இதனைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினமாகக்கூட இருக்கும்.

பயங்கரவாதத்துக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தது. அதன் அனைத்து முடிவுகளையும் சரியென்று கூற முடியாது. ஆனால், பயங்கரவாத விஷயத்தில் அவர்கள் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை மேற்கொண்டனர். இராக்குக்கு எதிராகப் போர் தொடுத்தனர். ஆப்கனுக்கு எதிராகப் போர் நடத்தினர். பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்காவின் வான் தாக்குதல் தொடர்கிறது. அவர்களது கமாண்டோ அதிரடியில் ஒசாமா பின் லேடன் கொல்லப்படுகிறார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்பட்டது.

இந்தப் போர் அமெரிக்கத் தரப்பில் ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் போர்முனைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியிருக்கின்றனர். எனினும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், பயங்கரவாதக் குழுக்கள் கலைந்து போயிருக்கின்றன; பலமற்றதாய் ஆக்கப்பட்டுள்ளன. உண்மை என்னவெனில், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு எந்தத் தீவிரவாதத் தாக்குதலும் அமெரிக்காவில் நடைபெறவில்லை என்பதுதான்.
நான் ஷாரூக் கான் மீதும் அவரைப் போலவே பாதிக்கப்பட்டவர்கள் மீதும் பரிவு கொண்டிருக்கிறேன். அதேநேரத்தில், அமெரிக்காவில் உள்ளது போன்ற கடுமையான சோதனை நடைமுறைகளை இந்தியாவில் நாமும் அமல்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

நமது நடைமுறைகள் சிறிதேனும் சிறப்பாக இருந்திருந்தால், பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான டேவிட் ஹெட்லியின் ( இயற்பெயர்: தாவூத் சையத் கிலானி) தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும் அல்லவா!
ஹெட்லி சுலபமாக மும்பைக்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். நவம்பர் 26 தாக்குதலை மும்பையில் நடத்த ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். நம்மால் ஓர் உயிரைக் காக்க முடியுமெனில் - இப்போதும் எதிர்காலத்திலும் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருக்குமெனில், எப்போதேனும் நேரக்கூடிய அசெüகர்யங்களுக்காக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by மகா பிரபு Sat Apr 21, 2012 1:28 pm

ஊத்திக்கிச்சு கோவிந்தா கோவிந்தா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by பாலாஜி Sat Apr 21, 2012 1:29 pm

மிக்க மகிழ்ச்சி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by Guest Sat Apr 21, 2012 1:31 pm

ஆமா ஆமா ரொம்ப சரிவு ... டெத் எண்டு நு சொல்லலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by balakarthik Sat Apr 21, 2012 1:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சரிவுப் பாதையில் காங்கிரஸ்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by Guest Sat Apr 21, 2012 1:32 pm

காங்கிரஸ் என்று ஒன்று இல்லாமல் செய்வதே தமிழர்களின் வேலை (அமெரிக்காவில் இருந்து விட்டு போகட்டும் ) சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

சரிவுப் பாதையில் காங்கிரஸ்! Empty Re: சரிவுப் பாதையில் காங்கிரஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum