புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10பிரிவினைப் படிப்பினைகள் Poll_m10பிரிவினைப் படிப்பினைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவினைப் படிப்பினைகள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 1:46 pm

பிரிவினைப் படிப்பினைகள்
எம்.மணிகண்டன்First Published : 21 Apr 2012 05:36:29 AM IST

புதிதாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும்போது முதலில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? ராணுவத்துக்கா? இல்லை. புதிய நாணய முறைக்கா? அதுவும் இல்லை. வெளிநாட்டு உறவு? இல்லவே இல்லை.
பிறகு எதுதான் மிக முக்கியம் என்று கேட்கிறீர்களா? உலகின் பொதுவான நடைமுறை வேறு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தெற்கு சூடான்காரர்களைக் கேட்டால், எல்லாவற்றையும்விட நாட்டின் தேசிய கீதம்தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள்.

இனப்படுகொலை, உள்நாட்டுப் போர், எண்ணெய்ச் சண்டை, வறுமை என ஆப்பிரிக்காவின் வழக்கமான எல்லாச் சாபக்கேடுகளையும் கொண்ட நாடுதான் சூடான். இந்த நாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஜூலையில் பிரிந்து சென்றபோது, தெற்கு சூடானில் முழுமையாக இருந்தது புத்தம் புதியதாக ஒரு தேசிய கீதமும் நிறைய கனவுகளும் மட்டும்தான்.
சேர்ந்து இருப்பதால் காட்டப்படும் அலட்சியத்தின் வலியைவிட பிரிவினையால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாட்டினர் முடிவுக்கு வந்தார்கள்.

இதையடுத்து, கார்டோமை தலைநகராகக் கொண்ட சூடான் அதே பெயரிலேயே தொடர, ஜுபாவை தலைநகராக்கி தெற்கு சூடான் உதயமானது.

பிரிவினைக்கு முதல் காரணம் மதம். வடக்கின் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமான முஸ்லிம்கள் என்றால், தெற்கில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.

வானத்தில் இருந்து பார்த்தால், தெற்கு பச்சை நிறமாகவும், வடக்கு பழுப்பு நிறமாகவும் தெரியுமாம். காரணம், தெற்கு முழுவதும் காடுகளும் மலைப் பகுதிகளும் நிறைந்திருக்கின்றன. வடக்கின் பெரும்பகுதி பாலைவனம். இப்படி இயற்கையே இரு நாடுகளையும் பிரித்து வைத்திருக்கிறது.

பிரிவினையில் ஏற்பட்ட பிரச்னைகள் இன்றைக்கும் தொடர்ந்து வருவதற்கு எண்ணெய் வளங்கள்தான் முக்கியக் காரணம். தன்னாட்சி பெற்ற காலத்திலிருந்தே தெற்கு சூடானின் பட்ஜெட் வருவாயில் 98 சதவிகிதம் எண்ணெயின் மூலமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கு கடல்பகுதி கிடையாது என்பதால், நேரடி ஏற்றுமதி சாத்தியமில்லை.

வடக்கின் நிலப்பகுதி வழியாக அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாகத்தான் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகத்துக்கு கொண்டு சென்று எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வடக்கைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் தெற்கு சூடானுக்கு இருக்கிறது.

விடுதலையின்போது தேசிய கீதத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள், ப்ளூ நைல், தெற்கு காடஃபோன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தெளிவான எல்லைக் கோட்டைக் குறிக்கவில்லை.

ஒருபுறம் தெற்கு சூடான் விடுதலை ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, நாடுகளைப் பிரிப்பது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த அபியே பகுதியில், தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எண்ணெய் வருவாயைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான உறுதியான உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நாடு கோரிப் போராடுவோருக்கு மிக முக்கியமான இன்னொரு படிப்பினை தெற்கு சூடான் விவகாரத்தில் இருக்கிறது. பிரிவினைக்கு முன்னதாக தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் வடக்கிலும், அங்குள்ளவர்கள் தெற்கிலும் லட்சக்கணக்கில் வசித்து வந்தார்கள். வேலைக்காகவும், தொழில் செய்யவும் இடம்பெயர்ந்த அவர்களை இரு நாடுகளும் இப்போது மிக மோசமாக நடத்துகின்றன.

இவர்களில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் அடங்குவார்கள் என்பதுதான் விசேஷம். அதாவது, சூடானுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்கள் தெற்கு சூடானிலும், தெற்குக்கு ஆதரவானவர்கள் வடக்கிலும் இருந்து அந்தந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசுகளின் ஆசியும் உண்டு. இன்றைய பிரச்னைகளுக்கு இதுதான் முக்கியக் காரணம்.

விடுதலைக்கு முன்பும் பின்பும் எல்லா வகையிலும் பொறுப்புடன் நடந்து கொண்டதாகக் கருதப்படும் தெற்கு சூடான், இப்போது வடக்குப் பகுதியிலுள்ள ஹெக்லிக் எண்ணெய் வயலை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கிறது. இதனால், தீவிரமான யுத்தம் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.

தெற்கு சூடான் பிரிந்து சென்றதிலிருந்து இன்று வரைக்கும் அந்நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் எந்தக் குறையும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் தெற்கு சூடான் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் தனிநாடு கோரிப் போராடுவோருக்கு நம்பிக்கையளிக்கும் உந்து சக்தியாக தெற்கு சூடான் இருந்து வந்தது. ஆனால், தனி நாடு கோரும் எத்தனையோ இனங்களுக்கு அடக்குமுறைகள் மட்டுமே பதிலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஒரு அருமையான வாய்ப்பை தெற்கு சூடான் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் புதிய ஆட்சியாளர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சியிருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அதற்கான தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.

கருத்தறியும் தேர்தலில் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள், வெறும் இனப் பெருமையையும் கெüரவத்தையும் மட்டும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்றாவது ஒரு நாள் போர்கள் ஓய்ந்து அமைதி ஏற்படும் என்கிற கனவும் அவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்தக் கனவு என்றைக்கு மெய்ப்படுகிறதோ, அந்த நாள்தான் புதிய நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைத்த நாளாக இருக்க முடியும். வெறும் தனிநாட்டுப் பெருமையால் மட்டுமே ஆகப்போவது என்ன?

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக